Mar 2, 2013

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?



 

படிப்பெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா? என்று கவுண்டர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருது?

ஏன்? என்று நீங்கள் கேட்பது புரியது!

ஒரு காலத்தில் 21வது பிறந்தநாள் கொண்டாட்டம் சீசன் இருந்துச்சு. இப்ப அவ அவ வயசாகி கல்யாணம் சீசன் வந்துருச்சு!! யப்பா சாமி!!! எம்புட்டு செலவு?

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?

ஒவ்வொரு கல்யாணத்திற்கு சென்று மொய் பணம் ஈயாய் போனது தான் மிச்சம்! அந்த காலத்தில் கல்யாண விழா ஒரு தடவையோடு முடிந்துவிடும்.

இப்போது,

1)நிச்சயதார்த்தம்
2)bacherolette party
3)சங்கீத்
4)வளையல் விழா

5)கல்யாணம்
6)reception

சில நேரங்களில் யாருக்கு கல்யாணம், இது என்ன function என்ன நடக்குது எங்க போறோம், அப்படினு யோசிச்சு குழம்பி போன சமயம் எல்லாம் உண்டு.

"உனக்கு என்ன வந்துச்சு. அவங்களுக்கு பணம் இருக்கு. செலவு பண்றாங்க?" என்று நீங்கள் கேட்பது புரியது. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடட்டும்! பக்கத்துல நிக்குறவனை ஏன் வாங்கி தர சொல்றீங்க?

சமீபத்தில் ஒரு தோழி (நெருங்கிய தோழி அல்ல) கல்யாணத்துக்கு கூப்பிட்டாள்..இல்ல அது receptionனு நினைக்குறேன்...wait wait..அதுவா..ம்ம்... சரி ஏதோ ஒன்னு! அதுக்கு கூப்பிட்டால், போக முடியவில்லை. அதற்கு பெரிய சண்டை! அட பாவிகளா! என்ன கொடுமையா இது!

இந்த facebook பல விஷயங்களில் உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் பெரும் தொல்லையாக உள்ளது. 'event' என்று ஒன்றை ஆரம்பித்து அவர்கள் பட்டியலில் இருக்கும் 2034 பேரையும் கூப்பிடுவார்கள். சும்மா என்றோ ஒரு முறை 'ஹாய்' சொன்னவர்களெல்லாம் கூப்பிட்டால், என்ன பா நியாயம் இது! சரி, அவர்களை ஏன் நீ 'friend'ஆக சேர்த்துகிட்ட, அப்படினு கேட்குறீங்களா?

சரி தான் சரி தான்! என்னைய உதைக்கனும்!:((



வீட்டில் கச்சிதமாய் கொண்டாடும் பழக்கம் இருந்தாலும் பரவாயில்ல!! ஆ..ஊனா...ஹோட்டல்! மாளிகை! இப்போதைய trend- கப்பலில் கொண்டாடுவது! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அதில் சங்கீத் விழா கொண்டாடப்பட்டது (இது வடஇந்திய கலாச்சாரம், எப்போது நம்ம கடன் வாங்கி கொண்டோம்னு தெரியல)

அந்த விழாவில் மாப்பிள்ளை வீட்டார் 'flashmob' செய்தார்கள். அதவாது திடீரென்று நின்னு ஆடுவார்கள். பார்க்கும்போது எனக்கு 'குபீர்' சிரிப்பு தான் வந்துச்சு. நீங்க, சந்தோஷமா செய்யுங்க! தப்பில்ல. ஆனால், ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் நல்லா இருக்கும். அதற்கு பதில், ஏழைகளுக்கு உதவலாமே....(ஓ அது, நடிகர் நடிகைகள் பிறந்த நாள் அன்று செய்வாங்களா?)
http://farm4.static.flickr.com/3257/3140568438_b0628505e0.jpg?v=0
அப்பரம் அந்த நிகழ்ச்சில பேசிய பாட்டி சொன்னது, "மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோஷமா இருக்கனும். ஆசைக்கு ஒன்னு. ஆஸ்திக்கு ஒன்னு பெத்துக்கனும். ஏனா...என்ன தான் இருந்தாலும், பையன் வேணும். அப்ப தான் சொத்து விட்டு போகாது..." என்றார்.

ஹாஹாஹாஹாஹா.... பாட்டி போங்க பாட்டி! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க!!

3 comments:

Anonymous said...

நல்லா இருக்கு .
ஆனா திடீர்னு ௧ல்யான ஏற்பாடு நடக்குதா?
அதனால தான் இந்த போஸ்ட்டுனு ...
சரி பாஸ் ஸ்டோரி என்னா ஆச்சு..ௐ

shrek said...

//ஹாஹாஹாஹாஹா.... பாட்டி போங்க பாட்டி! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க!!//

கண்ணா பின்னா என்று வழி மொழிகிறேன். liked the post.

FunScribbler said...

anonymous://ஆனா திடீர்னு ௧ல்யான ஏற்பாடு நடக்குதா?//

யாருக்கு பாஸ்??

shrek: நன்றி பாஸ்!!