Jun 12, 2013

காதல் கவ்வும்(பகுதி 1)- சிறுகதை

 நகை கடையில் ஷாபிங் முடிந்து காரில் வந்தார்கள் அஷ்வினும் அனிதாவும்.  காரில் ஒலித்து கொண்டிருந்தது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் 
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்

என்ற அலைபாயுதே பாடல். சத்தத்தின் அளவை, அஷ்வின் அதிகரித்தான். முறைத்தாள் அனிதா. பாடல் தொடர்ந்தது.

காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே........

சேர்ந்தபடி பாடலை முணுமுணுத்தான் அஷ்வின். அவன் வேண்டுமென்றே பாடினான். அது அறிந்த அனிதா, " ரேடியோவ கொஞ்சம் off பண்ணுறீயா?"

அவள் சொன்னது காதில் விழுந்தும் கேட்காததுபோல் இருந்தான் அஷ்வின். பாடலை முணுமுணுத்த அஷ்வின், இப்போது சத்தமாக பாட ஆரம்பித்தான்.

துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ


என்று ஒலித்தபோது, அஷ்வினும் "அப்போ!!!!!!!!!!!!" என பாடினான்   கத்தினான்.

"இப்ப மட்டும் வாய தொற! கடையில ரேவதி ஆண்ட்டி familyய பாத்தோமே. யாருகிட்டயும் பேசாம எதுக்கு டா இருந்த? I felt so awkard and embarrassed." என்றாள் அனிதா.

traffic junctionல் சிவப்பு லைட் வர, கார் நின்றது. அஷ்வின், " அந்த குடும்பத்தையே பிடிக்காது. அதுக்கு அப்பரமும் ஏன் வாய தொறக்கல. பல்லு விளக்கலனு கேட்டா நான் என்ன பண்ண முடியும்?"

அனிதா, "இப்ப மட்டும் வாய் கிழிய பேசு. வந்தவங்க எல்லாரும் கேட்டாங்க. அஷ்வின் ஏன் இப்படி இருக்காரு-னு? பதில் சொல்ல முடியல."

அஷ்வின், "சொல்ல வேண்டியது தானே. என் புருஷன் மூட் அவுட்ல இருக்கானு."

அனிதா, "இப்ப உனக்கு என்ன மூட் அவுட்?"

கார் முன்னாடி இன்னொரு கார் வேகமாய் புகுந்து செல்ல, கோபத்துடன் ஹார்னை அழ்த்தி, "ச்சே!" என்றான். அனிதாவின் கேள்விக்கு பதில் அளித்தான்,

"இன்னிக்கு தங்கம் வாங்கீயே ஆகனுமா? நான் வேலை முடிஞ்சு எவ்வளவு tired-a இருக்கேன் தெரியுமா? உன்னைய நகை கடைல விட்டுட்டு ஒரு மணி நேரமா பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சேன்! எனக்கு எப்படி இருக்கும்?"

அனிதா, " இன்னிக்கு தங்கம் வாங்கினா, நல்லதாம்."
  
ளை பார்த்து முறைத்துவிட்டு பேசாமல் ருந்தான் அஷ்வின்.   வீட்டை வந்து அடைந்தும், காரை விட்டு வேமாய் வெளியேறினாள் னிதா. இருரும் மின் தூக்கியில் நுழைந்னர்.

6 ஆம் நம்ரை அழ்த்திடி,  
ஷ்வின் "பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது. பெண்களே உலகில் இல்லையென்றால். ஆறுதலே தேவை இருக்காது" என்று மறுபடியும் அலைபாயுதே பட பாடலைப் பாடினான். 

கோபம் கொண்ட அனிதா, "stop singing that song!" என்றாள். 6ஆம் மாடியில் மின் தூக்கி கதவு திறந்தது. விறுவிறு என்று நடந்து வீட்டிற்குள் சென்றாள். வீட்டிற்குள் புகுந்த அஷ்வின் களைப்புடன் சோபாவில் விழுந்தான். தொலைக்காட்சியில், நேற்று முன் தினம் நடந்த கிரிக்கேட் மறு ஒளிப்பரப்பு ஆட்டத்தை பார்த்தான்.

ஆடையை மாற்றிவிட்டு அறை வெளியே வந்த அனிதா, அவன் கிரிக்கேட் ஆட்டத்தை பார்ப்பதை கண்டு, "இப்ப உனக்கு tiredஆ இருக்காத!"

அஷ்வின், "உன்கிட்ட, இன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லது-னு சொன்னவன் தான் என்கிட்டயும் சொன்னான்..."

புரியாமல் முழித்த அனிதா, " யாரு? என்ன சொன்னான்?"

அஷ்வின், "இன்னிக்கு கிரிக்கேட் பார்த்தால் நல்லதாம்."

அனிதா "stop irritating me ashwin!" என்றபடி சமையலறைக்குள் புகுந்தாள். கொஞ்ச நேரம் கழித்து அனிதா மீண்டும் சத்தம் போட்டாள்.

"அஷ்வின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!" என கத்தினாள். என்னமோ ஏதோ ஆகிவிட்டது என ஓடினான் சமையலறைக்கு.
பதற்றத்துடன் அஷ்வின், "என்ன மா ஆச்சு?"

கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள் அனிதா குளிர்பதன பெட்டி அருகில்.
"என்ன இது?" என்றாள் அனிதா, குளிர்பதன பெட்டிக்குள் இருக்கும் 2 பாத்திரங்களை பார்த்து.

"இதுக்கு தான் கத்தினீயா? நான் என்னமோ-னு பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு அறிவு இல்ல!!" என்று சீறினான் அஷ்வின்.

"உனக்கு இருக்கானு கேட்குறேன்." என்றபடி அந்த 2 பாத்திரங்களை எடுத்து அவன் கையில் வைத்து திறந்து காட்டினாள்.

ஒரு பாத்திரத்தில் அரை இட்லியும் இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் சட்னியும் இருந்தன. "காலைல சாப்பிட்டு முடிச்சீயே....இத ரெண்டும் முழுசா சாப்பிட்டு கழுவி வைப்பாங்களா? இல்ல fridgeல வைப்பாங்களா?" என்று அதட்டினாள் அனிதா.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் அஷ்வின். "காலைல நிறைய சாப்பிட முடியல." என்று சொல்லிகொண்டே ஹாலுக்கு நழுவ பார்த்தான். அவளுக்கு இன்னும் கோபம் வந்தது, "I am talking to you, ashwin."

எரிச்சல் அடைந்த அஷ்வின், "இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு ஏன் சண்டை போடுற?" மறுபடியும் சோபாவில் அமர்ந்தான் கத்தியவாறு.

சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்த அனிதா, "இது சின்ன விஷயம் இல்ல அஷ்வின். where is your responsibility?"

தொலைக்காட்சியில் இருந்த பார்வையை, அவள் மேல் திருப்பிய அஷ்வின், "இட்லிய வச்சா என் responsibilityய judge பண்ணுவ?" தொலைக்காட்சி சத்த அளவை கூட்டினான்.

இதற்குள் மேல் அவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என்று நினைத்தவள் வருத்தத்துடன் தலையை ஆட்டிவிட்டு அவளது வேலையை பார்க்க சென்றாள். அஷ்வினும் கண்டுகொள்ளாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிரிக்கேட் பார்க்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு சத்தம்! அனிதா studyroomல் நின்று கொண்டு கத்தினாள்.

"oh my god, what's wrong with you anita?" என்றபடி அறைக்குள் சென்றான் அஷ்வின். கைகளை கட்டி நின்று கொண்டிருந்தாள் அனிதா.

"இப்ப என்ன ஆச்சு உனக்கு?" என்றான் அஷ்வின்.

அனிதா, "ஏன் அஷ்வின், ஈர towelல chairலே போட்டு போற? எப்படி காயும்? chair வீணா போகாதா?"

பதில் ஏதும் சொல்லாமல், வெடுகென்று துண்டை எடுத்து கொண்டு வெளியே காய போட சென்றான். தொலைக்காட்சியை நிம்மதியாக பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் அஷ்வினுக்கு இருந்தது.

அனிதா சோபாவில் அமர, அவன் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான். சோபா மேசையில் சில கடிதங்களை தூக்கி வீசினாள். புருவங்கள் சுருங்கின அஷ்வினுக்கு.

"எதுக்கு இப்ப இத இங்க தூக்கி போடுற?"

"electricity bill, credit card bill, car loan. போன மாசமே உன்ன, இதலாம் கட்ட சொன்னேன். ஏன் இன்னும் கட்டாம வச்சுருக்க?"

எரிச்சலும் கோபமும் பொங்க அஷ்வின், "just stop it anita. don't treat me like a slave. நான் ஒன்னும் நாய் இல்ல. நீ சொல்றதெல்லாம் கேட்க."

அனிதா, "அப்பரம் இதலாம் யாரு போய் கட்டுவா? உன்னால போக முடியலனா, atleast சொல்லியிருக்கலாமே?"

அஷ்வின், "வந்ததுலேந்து நானும் பாக்குறேன். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாதே. இத செய்யாதே. நிம்மதியா இருக்க முடியுதா இந்த வீட்டுல. உன்னால...." என்று அஷ்வின் தனது அறைக்கு சென்று சட்டையை மாற்றிவிட்டு, வீட்டை வீட்டு வெளியே சென்றான்.

அப்போது அனிதா, "இப்ப இந்த ராத்திரி நேரத்துல எங்க போற?"

அஷ்வின், "சாக போறேன். முடிஞ்சா நீயும் செத்து தொல...." என கூச்சல்போட்டு விட்டு, வீட்டின் கதவை படார் என்று சாத்தினான்.

(பகுதி 2)

3 comments:

ANaND said...

அய்யாடி ... ஆரம்பமே அடிதடியா இருக்கே ... ஐம் வெய்டிங்

Anonymous said...

கதை ஆரம்பம் அசத்தல். ஆனா தொடர்கதை என்பது வாரத்திற்கு இரண்டு போஸ்ட் கண்டிப்பா போடனும் ப்ளிஸ்

Anonymous said...

i like your stories much...
continue