May 14, 2014

ஜஸ்ட் சும்மா (13/5/14)







அது போன மாசம். இது இந்த மாசம் என்ற வகையில் மாசத்துக்கு ஒரே ஒரு பதிவு போட்டு கொண்டிருக்கிறேன்.

தினமும் எழுத ஆசை. அந்த வார்த்த தான்... என்று அபிராமி கமல் போல் எழுத கஷ்டப்படுது மனசு!

சரி போகட்டும் அந்த கதை!
********************************************************************

இன்று நடந்த csk vs rr ஆட்டத்தை பார்த்தேன். யப்பா சாமிகளா!! வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு லட்சம் உருண்டைகள் உருண்டுச்சு. கடைசி இரண்டு ஓவர்களில் யப்பா!! டோனியும் ஜெடேஜாவும் திறமையான விளையாட்டாளர்கள். அதைவிட நல்ல performers/entertainers.

ராஜஸ்தான் ராய்லஸ்: "நீ படிச்ச ஸ்கூல நான் headmaster டா!"

சென்னை சூப்பர் கிங்ஸ்: "நீ நாளைக்கு படிக்க போற பேப்பர்ல, நான் headlines da!"

**************************************************************************

சமீபத்தில் கேட்ட பாடல்களில் பிடித்த வரிகள்.

படம்: கோச்சடையான்
பாடல்:  மணப்பெண்ணின் சத்தியம்
எழுதியவர்: வைரமுத்து

காலம் மாற்றம் நேரும்போது
கவனம் கொள்வேன்

கட்டில் அறையில் சமையலறையில்
புதுமை செய்வேன்


அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும் போது
உந்தன் தாய் போல் இருப்பேன்


சே...மனஷன் பின்னிட்டான்ய்யா!!!!

******************************************************************************

மகள்கள் அடம்பிடித்து
கேட்பதையெல்லாம்
கோச்சிக்காமல்
செய்து முடித்துவிடுகிறார்கள்
பல கோச்சடையான்-கள்!

(இப்புடி கவித கவித!)

******************************************************************************

இன்னொரு கவித

உன்னை பார்த்த பின்னே
குழம்பினேன் நான்.
உன் அழகின் மிச்சம் தானே
ஷாருக் கான்?? 

*****************************************************************************************************************************


No comments: