Jul 16, 2017

பிக் பாஸ் ஆரம்பிச்சதுலேந்து வாழ்க்கை எப்படி மாறி போச்சு....

விவேக் காமெடி ஒன்னு இருக்கும். ஒரு பொண்ணு வந்து இன்னும் 10 second தான் இருக்கு. இன்னும் 5 second தான் இருக்குனு சொல்லும். அதுக்கு வெறுப்பாகிய விவேக் 'என்ன டி second கணக்கு' சொல்றனு கோபம் அடைவார். அந்த மாதிரி, கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி countdown ஆரம்பிச்சார்.

தொடக்கத்தில், நானும் என்ன பெரிய நிகழ்ச்சி. ஒரு கூட்டம் வீட்டில் இருப்பதை எப்படி தினமும் பார்க்கறதுனு சலிச்சுகிட்டேன். ஆனா, இப்போ 3 வாரம் முடிஞ்சிருக்கு. 
சூரியன் படத்துல கவுண்டர் சொன்ன மாதிரி, சும்மா இந்த ஃபோன எடுத்தால நச் நச் நச்சுனு ஒரே தொல்லை மாதிரி, fbயே தொறந்தாலே பிக்பாஸு தான். சரி அப்படி என்ன தான் இருக்குனு பார்க்க ஆரம்பிச்சா, தக்காளி நம்மளேயே கடைசில அரசியல்வாதி ஆக்கிட்டாங்கய்யா!வேலையிடத்தில் பார்க்கும் பல பிம்பிலிக்கா பிலாப்பிய இந்த நிகழ்ச்சியில் காட்டுவது ஒரு காரணம். இது scripted இல்லையா என்பதை தாண்டி, இது ஒரு 'twisted social experiment' என்று வகைப்படுத்தலாம். என்ன பெரிய experiment என்று நானும் நினைத்தேன். 

அப்பரம் தான் புரிந்தது, நம் சொந்த குடும்பத்தோட டீவி, ரேடியோ, wifi, internet, laptop இது எதுவுமே இல்லாமல் இருந்தால் ஒரு வேளை அடித்து கொண்டும் சண்டை போட்டு கொண்டும் இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதலாம் இருக்கும்போதே, பல சண்டைகள் வருது! ஒரு வகையில் நம்ம உசுரை காக்கும் குலசாமி technology!

படம், IPL, WWE போன்றவை எப்படியோ அதே மாதிரி தான் பிக்பாஸும். ஒரு பொழுதுபோக்கும் கொஞ்சம் வாழ்க்கை உண்மையும் கலந்த கலவை. அது என்ன வாழ்க்கை உண்மை?நீ நீயா இரு! ஓவியா மாதிரி! எத்தனையோ நேரத்துல நாம் நாமாக இருக்க முடியாமல் தவித்து இருக்கிறோம் ஆனா திரையில் ஒருத்தர் அப்படி வலுவாக இருக்கும்போது, நம்மை அறியாமலேயே ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அது ஓவியாக இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் சரி.

கணேஷ் மாதிரி நம்ம பாஸும் பக்குவமா எடுத்து சொன்னால், எவ்வளவு நல்லா இருக்கும்னு ஏங்கிய தருணங்களும் உண்டு. 

அப்பரம் பரணி பிரச்சனையெல்லாம், வேலையிடத்திலும் வாழ்க்கையிலும் நடக்காததா? இப்படி பிக்பாஸ் வாழ்க்கை நிகழ்வுகளோடு சம்மந்தம்படுத்தி பார்க்கும்போது, இன்னும் சுவாரஸ்சியமா போகுது.
இதுவரைக்கும் நடந்த episodeல, ஓவியா, சிநேகன், நமிதா உட்கார்ந்து குடும்பம், காதல் கதை, கவிதை பத்தி பேசியது தான் ரொம்ப ஆத்மாத்தமா இருந்துச்சு.  

அப்பரம் மீம்ஸ் போடுபவர்கள்- சும்மாவே வெடி வெடிப்பாங்க. தீபாவளி வந்தா சும்மாவா விடுவாங்க! ஆக மொத்தத்தில், பார்வையாளர்களுக்கு எல்லாம் பக்கமும் entertainment guaranteed! இப்ப வேற gst அது இதுன்னு தியேட்டர் பக்கம் போக முடியாத வருத்தத்தை பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்ய பார்க்கின்றன. 

**************************
என்னுடைய சில மீம்ஸ். நம்மளும் கோதாவில் இறங்கிட்டோம்ல!


No comments: