ஓவியாவின் ரசிகைகளில் நானும் ஒருத்தி தான். ஆனா, நிஜ வாழ்க்கையில் எந்தளவு ஓவியாவாக வாழ முடியும்? facebook, twitter அனைத்திலும் ஓவியாவை தன் வீட்டில் ஒருத்தியாக கருதும் நம்மில் எத்தனை பேர் ஓவியாவை நிஜத்தில் ஆதரிப்பார்கள்?
குடும்பத்தில் ஓவியா
காயத்ரி மாஸ்டரிடம் பேசிகொண்டு இருக்கும்போது அவர் கண்டபடி பேச, ஓவியா டக்கென்று எழுந்து போய்விடுவார். அந்த எபிசோட் முடிந்த கையோடு டிவிட்டர் பக்கம் போனால், டிவிட்டரில் கபாலி ரஜினியை ஒப்பிட்டு வளம்வந்த படங்களைப் பார்க்கும்போது ஆச்சிரியமாக இருந்தது.
இதுவே நிஜவாழ்க்கையில் கணவரின் அம்மா, காயத்ரி மாஸ்டர் போல் பயங்கரமா திட்ட, மனைவி, ஓவியா போல் எழுந்து சென்றால், இந்த கைதட்டலும் பால் அபிஷேகமும் நடக்குமா? நெருப்புடா பாடலை வாசிப்போமா?
பிக்பாஸ் சக்தி, ஓவியா மீது கோபம்கொண்டு அறைய முற்பட்ட போது, தளபதி ரஜினி போல் எதிர்கொண்ட ஓவியா போன்ற பெண்களுக்கு நிஜ வாழ்க்கையில் கிடைக்கும் பேர் தான் என்ன? நிகழ்ச்சியில் காயத்ரி மாஸ்டர் பயன்படுத்தும் 'எச்ச' வார்த்தைகளைவிட மோசமான பெயர்களை பேசுவார்கள் என்பது தான் உண்மை சூழல்.
அங்க அடிச்ச ரத்தம், நமக்கு வந்த வெறும் தக்காளி தொக்கு தான் என்று நிஜ வாழ்க்கை சூழல் ஏதோ ஒரு வித பயத்தை தான் உண்டாக்குகிறது.
வேலை இடம் ஓவியாக்கள்
ஓவியா போன்ற பாஸ் இருந்தால் செம்மயா இருக்கும். ஏன் என்றால் நியாயமா பேசுவாங்க. நம்ம appraisal வரும்போது, நமக்காக வாதாடி நமக்கு நல்லது நடக்கும் வேண்டும் என்று நினைப்பார்கள். கடைசி வரை நமக்காக போராடுவார்கள். திட்டினாலும், உடனே வந்து சாரி கேட்பார்கள்.
எந்த ஊர்ல பாஸ் வந்து சாரி
ஆனா இதுவே ஓவியா போன்றோர் நமக்கு கீழே வேலை பார்த்தார். இத பத்தி நண்பர்களிடம் பேசும்போது வெவ்வேறு சிந்தனைகளை முன்வைத்தனர். ஆதாரவா இருப்போமா? இல்ல தலைவலி என்று நினைப்போமா? ஊருடன் ஒத்து வாழ் போன்ற conceptஎல்லாம் சரிபட்டு வரமாட்டாங்க என்ற வகையில் சேர்த்துவிடுவோமா?
அது மட்டும் இல்லாமல், ஓவியா புகைப்பிடிக்கும் அறைக்கு அவ்வபோது செல்வதை காட்டினாலும், உள்ளே புகைப்பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டது இல்லை இது வரைக்கும். அப்படி செய்து இருந்தால், இதே புரட்சி படை, ஓவியா கலாச்சார சீர்கேடு பண்ணிட்டாள், கலாச்சாரத்தை காப்பாத்தனும், கருப்பான்பூச்சியை காப்பத்தனும்னு வெடிச்சிருக்க வாய்ப்பு உண்டு.
ஒருவர் அவராகவே இருக்க விடுகிறோமா என்ற கேள்வியை முதலில் நாம் நம் மனசாட்சிக்குள் கேட்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உருவாகியுள்ளது. ஏன் என்றால், நம்ம வாய், பிக்பாஸ் நாய் மாதிரி. அடுத்தவன் நிம்மதியா தூங்கினால், குரைத்துகொண்டே இருக்கும்.
நான் எந்த அளவுக்கு ஓவியா?
'எல்லாத்தையும் பார்த்தாச்சு. அடிப்பட்டு அடிப்பட்டு தான் புரியும்' என்னும் ஓவியா பழமொழி போல், இப்போது அடங்காத காளை ஒன்று அடிமாடாக போகிறேன். பொறுமையா போகனும், பெரிய பருப்புகளுக்கெல்லாம் மரியாதை கொடுக்கனும் என்ற சூழ்நிலையில் சிக்கிய பிறகு வேறு வழியில்லை.
அதனால் எனவோ, ஓவியா திரையில் அடிடா பார்க்கலாம் என்று குமுறும்போது, அதிக அளவில் ரசிக்க முடிகிறது. என்னையே அந்த காலத்துல பார்த்த மாதிரி ஒரு உணர்வு.
*************
ஓவியாவாக வாழ்ந்து, கடைசில கணேஷாக மாறிவிட்ட கதை தான் என் கதை.
1 comment:
Super reviewer..neenga yen entha maari oru nigazhchila kalandhuka kudathu������
Post a Comment