May 10, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-6



தற்போது...தற்போது...தற்போது.... சரி மேட்டருக்கு வரேன்.... தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர் நம்ம ஆனந்த தாண்டவன் படத்தின் ஹீரோ சித்தார்த் வேணுகோபால்!

attractive feature- தாடி, புன்னகை, கண்கள்
இவர பத்தி அதிகமா அலசி ஆராய்ந்துவிட்டேன் சும்மா அரட்டையில். ஆக, அடுத்த நபரை பத்தி பார்ப்போம்(ஓ... ஓ.... சன் டிவி டாப் டென் பாத்த பாதிப்பு..சரி ஃவிரியா வுடுங்க.

rock on படத்தை பார்க்கவும்னு என் சின்ன தம்பி வானவில் வீதி கார்த்திக் சொன்னார். ஆனா ஒன்னே ஒன்னு சொல்லவில்ல... அந்த படத்தில் எம்புட்டு அழகான பசங்க இருப்பாங்கன்னு... படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 4 வாலிபர்கள். அதுல ரெண்டு பேரு...ம்ம்ம்.... செம்ம கியூட்ட்ட்ட்ட்!

farhan aktar


Purab kohil


இவர்களுக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன். படம் செம்ம...டாப்! ரொம்ம்ப யதார்த்தமான வசனங்கள்! அப்பரம் பசங்க...சொல்லவே வேண்டாம்...அசத்து அசத்துன்னு அசத்திட்டாங்க!! rock on man!!:)

May 7, 2009

சும்மா அரட்டை-4

வெட்டியாக இருந்த நானும் என் தோழியும் அடித்த அரட்டை...(குறுந்தகவல்கள் வழி...)

தோழி: ஏய் ஆனந்த தாண்டவம் படம் பாத்தீயா? 2nd half ரொம்ப மொக்கை.அந்த ஹீரோ not bad...i like.. haha...

நான்:பாத்தேன் பாத்தேன். நல்ல கதை தான். ஆனா.. எங்கேயோ ஆரம்பிச்சு... எங்கேயோ போன மாதிரி இருக்கு.... கடைசில முடியல....செம்ம சொதப்பல்ஸ். ஆனா.. i liked that hero's dad's role. wish all fathers in the world are like that. and oh god.. that hero looking dammmnnn cute!

தோழி: ஏய் ஆமா... அவன் details கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லேன்...

நான்: ஹாஹா..24 hrs டைம் கொடு.. கண்டுபிடிச்சு சொல்றேன்.

தோழி: ஆஹா... நீ தான் என் சினிமா encyclopedia!

(கொஞ்சம் நேரம் கழித்து..)

நான்: கண்டுபிடிச்சுட்டேன்...i saw his interview online... ஏய் நம்ம ஊர் ஆளு தான்.. i thought he was a north indian fellow! அழகா தமிழ் பேசுறேன் மேன்..கோய்ம்பத்தூர். engineering படிச்சவன். சென்னையில் software engineer வேலை ஒரு வருஷமா. இப்போ படத்துல.

தோழி: அப்போ...அவனுக்கு என்ன வயசு இருக்கும்?

நான்: ம்ம்...27 ப்ளஸ்...

தோழி: so old?? am so sad...

நான்: ஏய்... 27 உனக்கு வயசு அதிகமா? 27 is still young di!

தோழி: ஹாஹா... ஆமா... அதுவும் உண்மை தான்... சரி பரவாயில்ல.. adjust பண்ணிக்கலாம். மத்த details?

நான்: மத்த டீடேள்ஸ் என்ன வேணும்? அடுத்து அவன் ஜாதகத்த தான் தேடனும்..ஹாஹா...

தோழி: ஹாஹா... கடைசி வரைக்கும் அந்த மொக்கை படத்த பாத்தது அவனுக்காக தான்!

நான்: ஏய் மச்சி...வேட்...வேட்...அவனோட இன்னொரு பேட்டி பாத்தேன்... அவன் சொன்னான்...வெயில் படம் ரிலீஸ் ஆகும்போது அவன் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தான்னு! அப்போ...வெயில் படம் வந்தது 2006ல. சோ...அவன் காலேஜ் 1st இயரா இருக்க முடியாது. 2nd இயராகவும் இருக்க முடியாது. இஞ்சினியர்ங் 4 வருஷம் படிப்பு. சோ...2006 அவன் ஒன்னு 3rd இயர் or 4th இயர் இருக்கும்! ஆக...அவன் 2006... 20 அல்லது 21 வயசு தான் இருக்கும்! ஆக...இப்ப அவனுக்கு 23 அல்லது 24 தான் டி இருக்கும்!!!!!!!!

தோழி: ஐயோ முடியல! ஹாஹா...அப்போ ரொம்ப நெருங்கிட்டான்! u made my day!

நான்: நெங்கிட்டானா? அட பாவி...oh my god...oh my god... he is in facebook also... go and add him!!

தோழி: இந்த நேரம் பாத்து நான் வெளியே இருக்கேனே... சரி சரி..வீட்டுக்கு போனவுடனே add பண்ணிடுறேன்:)

நான்: நம்ம வெட்டியா இருக்கோம்னு இதுலேந்தே தெரியுது! we are slacking too much...


தோழி: பசங்களுக்கு திரிஷா ஸ்ரேயான்னா...நமக்கு இந்த மாதிரி! ஒன்னும் தப்பில்ல! பரவாயில்ல... லீவுல எஞ்ஜாய் பண்ணாம அப்பரம் எப்போ?அப்படியே cycle gapல சைட் அடிப்போம்.

நான்: cycle gap தானே? நோ....எனக்கு full time job அதுவே!

தோழி: அத தான்.... நான் கொஞ்சம் decentஆ சொன்னேன் :)

முந்தைய சும்மா அரட்டைகள்

May 5, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-2

பகுதி 1

"எதுக்குடா அப்பரம் அவள கூப்பிட்ட.... பேச வேண்டியது தானா! சும்மா அமைதியாவே உட்கார்ந்து இருக்கீயே... எதுக்கு? நீயெல்லாம் சரியான....த்தூ...." என்று கண்ணாடியில் பார்த்து தன்னையே திட்டினான் செல்வம். ஒரு நிமிடம் கண்களை மூடி மறுபடியும் திறந்தான், பெருமூச்சு விட்டான். கண்ணாடியில் பார்த்து,

"இங்க பாரு... நீ இப்ப போற. பேசுற!" தனக்கு தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்றான். அஷ்விதா புன்னகையித்தாள். உட்கார்ந்தான் செல்வம்.

"ம்ம்...நான்..ம்ம்.." இழுத்தான் செல்வம். மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்த அஷ்விதா ஆரம்பித்தாள்,

"இங்க பாரு செல்வம்.... வோட்கா விலை என்னமா ஏறிபோச்சு? கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, பாதி விலையா தான் இருந்துச்சு?"

செல்வத்திற்கு ஆச்சிரியமாக இருந்தது. எப்படி இவளுக்கு எதெல்லாம் தெரியும் என்ற குழப்பம்.

"இந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீயா?"

"நான் யோசிச்சது எப்படி உனக்கு....?" மறுபடியும் குழம்பினான்.

'உன் மனசுல ஓடுறது தான் நேரடி ஒளிப்பரப்பா உன் முகம் காட்டி கொடுத்துட்டே?" என்று சொல்லி சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"காலேஜ் முதல் வருஷம் படிச்சப்போ.. முதல் செம்மஸ்ட்டர்... எல்லாம் பரிட்சையும் ஊத்திகிச்சு. என் குரூப்ல ஒருத்திகூட பாஸ் பண்ணல்ல. ரொம்ம்ப சோகமா போச்சு." என்று வருத்தமாக பேசினாள்.

தொடர்ந்தாள், "என்ன செய்யுறதுன்னு தெரியல.... மனசே விட்டு போச்சு... யாருக்கும் தெரியாம...." என்றவள் சுற்றுமுற்றும் பார்த்தவிட்டு செல்வத்தை அருகே வர சொன்னாள், அமைதியான குரலில்,

"எல்லாரும் வோட்கா அடிச்சிட்டோம்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் கலகலப்பாக பேசியதும் உண்மையை சொன்ன விதமும் அவள் மீது இருந்த ஆசையை அதிகப்படுத்தியது.

"ஆனா.. இந்த கருமத்த எப்படி தான் குடிக்கிறாங்களோ... குடிச்ச மறுநாளே, எங்க குரூப்ல எல்லாருக்கும் வாந்தி, பேதி... மயக்கம்னு ஒரு வாரம் தவிச்சு போயிட்டாம்... ஆமா... நீ தண்ணி அடிப்பீயா?" என்று திடீரென்று கேட்டவுடன் மிரண்டுவிட்டான் செல்வம்.

மிரண்டவன்," ஐயோ... எனக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது. இது வரைக்கும் எந்த பரிட்சையிலும் fail ஆனது இல்ல ." என்றான். அவன் சொன்னதை கேட்டு மறுபடியும் சிரித்தாள் தனது வெண்மையான பற்கள் தெரியும்படி. சிரிக்கும்போது கண்களில் ஒரு வசீகரம் வீசியது. 'oh man, she looks so cute' என்றது செல்வத்தின் மனம். அவளின் சிரிப்பு அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, முதன் முதலாக கேள்வி கேட்டான்.

"நீ இன்னிக்கு வந்தது உங்க வீட்டுல...." என்று கேள்வியை முடிப்பதற்குள், தண்ணீரை குடித்து கொண்டிருந்தவள்,

"ஓ நோ... தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான்!" தண்ணீர் லேசாக சிந்தியது. துடைத்து கொண்டே,

"எங்க வீட்டுல அப்பரம் அவ்வளவு தான்.... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க..." என்றாள். ஆஹா பொண்ணு நம்மை போலவே தான் என்ற ஒரு எண்ணம் வந்தது.

"அப்பரம் என்ன சொல்லிட்டு வந்த?"

" mrs claire retire ஆக போறாங்க. அவங்க கடைசி நாள் ஆபிஸுல. அவங்களுக்கு farewell partyன்னு சொன்னேன்."

"யாரு அவங்க?"

"யாருக்கு தெரியும்... ஏதோ வாய்க்கு வந்த ஒரு பெயர்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் பேச்சு செல்வத்திற்கு ரொம்ப பிடித்து இருந்தது. இன்னும் சகஜமானான். இருவரும் நிறைய பேசினர். சாப்பாடு வந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் மேசையில் இருந்த செல்வத்தின் ஃபோன் ஒலித்தது. எடுத்து பார்த்தான் வாசுவிடமிருந்து மெசேஜ்

டேய், பரிச கொடுத்தீயா இல்லையா?

பார்த்துவிட்டு கடுப்பானான் செல்வம். பதில் எதுவும் அனுப்பவில்லை. மறுபடியும் தன்னை உசுபேத்திவிட்டானே என்ற கோபம் செல்வத்திற்கு.

"are you alright selvam?" மேசையிலிருந்த செல்வத்தின் கையின் மீது கை வைத்து கேட்டாள். அக்கணம் அவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. அந்த மாதிரி உணர்வு இதற்கு முன்னால் ஏற்பட்டதில்லை. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு. ஒரு வழியாய் சமாளித்து கொண்டவன்,

"i am ok. i am ok...." என்றான். புன்னகையித்தவள் அவள் கையை எடுத்தாள்.

'ஐயோ.. இவ்வளவு சீக்கிரம் கையை எடுத்துவிட்டாளே!" என்று அவன் மனம் ஏங்கியது.

"சரி டைம் ஆச்சு, போலாமா?" என்றாள்.

"வா... உன் வீட்டுக்கிட்ட drop பண்றேன்?" என்றான் செல்வம்.

"இல்ல இல்ல.... பரவாயில்ல. நான் பஸுல போய்டுவேன்..."

"mrs selvam இனிமேல பஸுலலாம் போக கூடாது."

புன்னகையித்தபடி அவன் பின் தொடர்ந்தாள். கார் அருமையாக உள்ளது என்பதை பற்றியும் செல்வம் நல்ல கார் ஓட்டுகிறார் என்பதை பற்றியும் பேசி கொண்டு வந்தாள். செல்வத்திற்கு சந்தோஷமாக இருந்தது. அவள் வீட்டு அருகே வந்தனர். கார் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது.

"தேங்கியூ செல்வம்.. thanks for the treat too!" என்றபடி காரிலிருந்து இறங்கி சென்றாள்.

செல்வம் பின்னாடியிலிருந்து கூப்பிட்டான் அவளை. யாரும் இல்லாத தெரு. வெளிச்சம் அதிகம் இல்லை. அவள் அருகே சென்றான்.

"என்ன செல்வம்? ஏதாச்சு சொல்லனுமா?"

"இல்ல... ஒன்னு கொடுக்கனும்?"

"என்ன?" முழித்தாள்.

"இன்னிக்கு முதன் முதலா வெளியே போயிருக்கோம்... பேசியிருக்கோம்..." சொல்ல முடியாமல் தவித்தான்.

"ம்ம்....சோ?" என்றாள்.

"பரிசு ஒன்னு கொடுக்கனும்னு ஆசைப்படுறேன்...." என்றவன் முன்னால் சற்று சாய்ந்து அவளது வலது கன்னம் அருகே தன் முகத்தை கொண்டு சென்றபோது,

"செல்வம்... what are you trying to do man?" என்று அஷ்விதாவிற்கு கோபம் வர, செல்வத்தின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள்.

கார் பயங்கரமான சடன் பிரேக்குடன் நின்றது.

"என்ன ஆச்சு செல்வம்...are you ok?" பதற்றமாய் கேட்டாள் அஷ்விதா. சுயநினைவுக்கு வந்த செல்வத்தின் முகத்தில் அதிர்ச்சி. தான் கண்டது எல்லாம் நனவு இல்லை என்ற நிம்மதி ஒரு பக்கம் இருந்தாலும், பயம் இன்னொரு புரம் இருந்தது.

"ஐ எம் ஓகே...." ஏதோ சமாளித்தான்.

கார் அதே போல் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது. தான் விடைபெற்று கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றாள். யாரும் இல்லாத அதே தெரு. வெளிச்சமும் இல்லை. செல்வம் சத்தம் போடாமல் கூப்பிட்டான்,

"அஷ்விதா...."

அஷ்விதா திரும்பி பார்த்து மீண்டும் கார் அருகே வந்தாள். செல்வமும் காரைவிட்டு இறங்கி நின்றான். அதே படபடப்பு

"அஷ்விதா... thanks."

"எதுக்கு செல்வம்?"

"இல்ல... இன்னிக்கு.. நீ வந்தது... அதான்... thanks." உளறினான் செல்வம்.

"ஏய் இதுக்கு போய்.. எதுக்குப்பா நன்றிலாம் சொல்லிகிட்டு..." புன்னகையித்தாள்.
தொடர்ந்தாள்,

"ஏ.. சுத்தமா மறுந்துட்டேன்... உனக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு ஒன்னு வாங்கி வச்சு இருந்தேன்..." என்றவள் தனது கைபையில் பரிசை தேடினாள். அவள் தேடுவதை செல்வம் பார்த்து கொண்டிருந்த வேளையில்,

"இச்!" கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் அஷ்விதா.

செல்வத்திற்கு 150 அடி பூமிக்குள் போய், பிறகு வானத்திற்கு போவதுபோல் இருந்தது. கிறங்கடிக்க வைத்தது. அவனது கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

*
*
*
*

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

அச்சமயம் செல்வத்தின் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பேசலாமா வேண்டாமா என்று யோசித்தாள் அஷ்விதா. ஒலி அளவுக்கு அதிகமாக இருந்ததால், அதை 'கட்' செய்தாள். மறுபடியும் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பார்த்தாள், 'வாசு' என்று மின்னியது. 'கட்' செய்தாள். மறுபடியும் ஒலித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் எடுத்து பேசவதற்குள் மறுமுனையில் வாசு,

"டேய் மச்சி சொல்ல மறந்துட்டேன் டா.... நீ கிஸ் கொடுக்கும்போது வெளிச்சமான ஏரியாவுல இருக்கும்போது கொடுத்து தொலைச்சிடாத...atmosphere lighting கொஞ்சம் மங்கலா இருக்கனும். இந்த கிஸ பரிசா கொடுத்து அவள் அசத்தனும்.. சரியா... என்னடா பேச்ச காணும்... ஓ ஓ.. அவ முன்னாடி உட்கார்ந்து இருக்காளா? ஓகே மச்சி.... i shall not disturb you. enjoy machi!" என்று சொல்லி முடித்தான்.

அஷ்விதாவிற்கு புரிந்தது. கைபேசியை பார்த்து புன்னகையித்தபடி அதை மேசையில் வைத்தாள்.
*
*
*
"ம், இத கொடுக்க இவ்வளவு வெட்கம்.... அதுக்கு இவ்வளவு டென்ஷனா?" செல்வத்தின் மூக்கை செல்லமாக அசைத்தாள்.

"anyway, வாசுக்கு thanks சொல்லிடு... good night" என்று சொல்லிவிட்டு சென்றாள். அவள் சொன்னது எதுவுமே செல்வம் காதுகளில் விழவில்லை. மயக்கத்திலே இருந்தான்......

*முற்றும்*

May 4, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-1

அவளை தனியாக பார்த்து பேச வேண்டும் என்ற ஆவல். சந்திக்க முடியுமா என்று குறுந்தகவல் அனுப்பினான் செல்வம். ஆனால், அனுப்பி வைத்த பிறகு தான் பயம் வந்தது. அவள் தவறாக எண்ணிவிடுவாளோ, கல்யாணத்திற்கு முன் இப்படி சந்திப்பது தவறு என்ற நினைப்பாளோ என்ற பயம் கவிகொண்டது. ரொம்ப டென்ஷனாக இருந்தான் செல்வம்.

அஷ்விதாவிடமிருந்து பதில் வந்தது.

'ஒகே செல்வம், மீட் பண்ணலாம். 7pm @ taaksha point."

படித்து முடித்தவுடன் தான் உயிர் வந்தது போல் இருந்தது. குறுந்தகவலை பார்த்து புன்னகையித்தபடி தனது பாக்கேட்டில் போட்டான் கைபேசியை. சந்தோஷ ரேகைகள் செல்வம் முகத்தில் பரவ, அதை கவனித்த வாசு,

"என்னடா மச்சி, ஆபிஸ் வந்தப்ப ஒரு மாதிரியா இருந்த.. இப்ப சந்தோஷமா இருக்க... இனிக்கு பாஸ் ஆபிஸுக்கு வரலையா என்ன?" என்று பாஸின் அறையை எட்டி பார்த்தான்.

"ஒன்னுமில்ல டா, அஷ்விதாவ தனியா பார்த்து பேசனும்னு நினைச்சேன். கல்யாணத்துக்கு முன்னாடி இதலாம் வேண்டாம்னு... என்னைய தப்பா நினைச்சுடுவாளோன்னு பயந்தேன்.. ஆனா ஒகேன்னு சொல்லிட்டா டா.. அதான்...." அசடு வழிந்தான் செல்வம்.

"ஆஹா... நிச்சயதார்த்தம் பண்ணி இப்ப தான் 3 வாரம் ஆகுது... அதுக்குள்ள இப்படி போகுதா கதை? ஏன்... நிச்சயதார்த்தம் அன்னிக்கு பேசவிடலையாக்கும்? வீட்டுல தெரியுமா இன்னிக்கு மீட் பண்ண போற விஷயம்? " சிரித்தான் வாசு. மடிகணினியை திறந்து தனது இமெயிலை பார்த்து கொண்டே பதில் அளித்தான் செல்வம்,

"ம்ஹும்.... எங்க பேசுனோம்? கொஞ்சம் நேரம்.. அதுவும் 5 நிமிஷம் தான்... அவ்வளவு கூட்டம்... ஒன்னும் ஃபிரியா பேச முடியல்ல...வீட்டுக்கு? ஐயோ... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க. போககூடாது, கட்டுபாடு, கலாச்சாரம், மத்தவங்க பாத்தா என்ன நினைப்பாங்க... அது இதுன்னு சொல்லி என்னையும் சேத்து குழப்பிடுவாங்க" சொல்லிகொண்டே தேவையில்லாத இமெயில்களை டிலிட் செய்தான்.

"ஓ... அப்ப...திருட்டுத்தனம் இப்பவே ஆரம்பிச்சுட்டீயா. வெரி குட். இப்படி தான் எல்லாம் ஆரம்பிக்கும். எஞ்ஜாய் மச்சி! அப்பரம்.. என்ன gift கொடுக்க போற?" வினாவினான் வாசு.

"யாருக்கு?" முழித்தபடி வாசுவின் முகத்தை பார்த்தேன் செல்வம்.

"டேய்.. இன்னிக்கு அஷ்விதாவ முதன் முதல வெளியே கூப்பிட்டு இருக்க...அவள பாக்க போற... பரிசு ஒன்னும் வாங்கி வைக்கலையா?" வாசு பதில் அளித்தான்.

"டேய்... சுத்தமா மறந்துட்டேண்டா... இப்ப என்ன செய்ய?" மறுபடியும் டென்ஷன் ரேகைகள் அவன் முகத்தில் மின்னல்கள் போல் தோன்றியது. தொடர்ந்தான் செல்வம்,

"flower bouquet வாங்கிட்டு போவா? how about chocolates... or.... why not just a simple card?" செல்வத்தின் உளறல்களை பார்த்து ரசித்தான் வாசு.

"ஓய்... நிறுத்து. என்னது சாக்கெலட்டா? .. இன்னிக்கு சுதந்திர தினமா என்ன? டேய் மச்சி... இந்த பூ கொடுக்குறது... கார்ட் கொடுக்குறது எல்லாம் ஒன்னாவது போற பசங்களே செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம ரேஞ்சுக்கு... சூப்பரா ஒன்னு செய்யனும் மேன்?" உட்கார்ந்து இருந்த செல்வத்தின் தோளை தட்டினான்.

"நீயே சொல்லேன்...?"

"ஒரு நிமிஷ வேட் பண்ணு.." என்று சொல்லிவிட்டு வாசு தனது கேபினுக்குள் சென்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வந்தான்.

செல்வம் நெற்றியில் கைவைத்து என்ன பரிசு வாங்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தபோது, புத்தகத்தை செல்வம் மேசையில் வைத்தான். "girls & fantasies" என்று எழுதியிருந்தது.

எதிரில் நின்று கொண்டிருந்த வாசு, "பக்கம் 27க்கு திருப்பு, அதுல மூணாவது paragraphஅ படி." கடகடவென்று படித்த செல்வம்,

"ஓ மை காட்.... what nonsense is this vasu? bullshit!" புத்தகத்தை மூடி வாசுவின் கையிலேயே திணித்தான்.

"ஏய்... கூல் டவுன் கூல் டவுன். எதுக்கு இந்த ஓவர் ரியேக்சன்? அதுல போட்டுருக்க மாதிரி செய்... the best unforgettable gift! நானும் இப்படி செஞ்சு தான் என் மனைவிய impress பண்ணேன்!" வாய்விட்டு சிரித்தான் வாசு.

"ஏய்.... நான் யாருக்கும் தெரியாம அவள பாக்குறதே அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ... அதுல... இப்படி செஞ்சா? நல்ல ஐடியா கொடுத்த போ... கல்யாணம் ஆகாமலே எனக்கு divorce வாங்கி கொடுத்துடுவ போல...." சலித்து கொண்டான் செல்வம்.
செல்வம் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியை இழுத்து அவன் எதிரே உட்கார்ந்தான் வாசு. மெல்லிய குரலில் வாசு, "it's just a kiss. what's wrong? இது தான் மச்சி, தி பெஸ்ட்டா இருக்க முடியும்?"

"என்ன ராங்கா? போடா போங்கு!!? நீயும் உன் ஐடியாவும்.... நான் எதாச்சும் மல்லிப்பூவோ அல்வாவோ வாங்கிட்டு போறேன். உன் ஐடியா ஒன்னும் வேணாம்?" மறுபடியும் தனது பார்வையை மேசையில் இருந்த கோப்புகளின் மீது திருப்பினான் செல்வம்.

அவனை தன் பக்கம் இழுத்தான் வாசு.

"என்னது மல்லிப்பூவும் அல்வாவுமா?? ஹாஹாஹா...." சத்தம் போட்டு சிரித்தான் வாசு. தொடர்ந்தான் தனது நக்கல் பேச்சை,

"டேய்... அதலாம் சின்ன வீடு வச்சுருக்குறவன் வாங்கிட்டு போற ஐட்டம் டா... ஹாஹா.... நீ மட்டும் அத அஷ்விதாகிட்ட கொடுத்தே... அவ்வளவு தான் உனக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு confirm பண்ணிடுவா... ஹாஹா.."

"ஐயோ.... என்னைய என்னடா செய்ய சொல்ற?

"just listen to me. sweet decent கிஸுக்கு நாலு இடம் இருக்கு. கை,நெத்தி, கன்னம்,லிப்ஸ். கையில....நோ நோ.. அது சரிபட்டு வராது... ஏதோ சின்ன புள்ளத்தனமா இருக்கும். நெத்தில கொடுக்குறது.... அது after marriage! லிப்ஸ்....ம்ம்ம்....." யோசித்தவாறு செல்வத்தை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்தான்.

வாசு, "ஹாஹா... லிப்ஸ்...ம்ஹும்... நீ ரொம்ப பயந்துடுவே! so, cheek is the only option."

தொடர்ந்தான், "rightல கொடு...அதான் girls' psychology படி தி பெஸ்ட்."

"டேய்... எனக்கு பயமா இருக்குடா?" மழையில் நனைந்து கோழி போல் உதறினான் செல்வம்.

"பயமா இருந்தா இப்பவே practice பண்ணிக்கோ... நம்ம கிளார்க் அஞ்சல ஆண்ட்டிகிட்ட!" என்று கிண்டல் செய்தான்.

"டேய்... ஏண்டா நீ வேற!" ஆழ்ந்த சிந்தனையில் செல்வம்.

"it is not merely an innocent display of affection. It is a display of passion machi! இங்க பாரு...கிஸ் பண்ணும்போது, நமக்குள்ள இருக்கும் neurotransmitters ரிலீஸ் ஆகி மூளைக்கு போகும். அப்படி போகும்போது, நமக்குள்ள ஒரு புத்துணர்ச்சி வரும். அந்த புத்துணர்ச்சி 'இவன் என்னுடையவன்; இவனுக்கு என்னை பிடிச்சுருக்கு' அப்படின்னு அவள் மூளைக்கு மெசேஜ் போகும். இந்த biological processல உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல chemistry work out ஆகும். அப்படி ஆச்சுன்னா...for every action, there is an equal and opposite reaction நடக்கும். அஷ்விதாவும் மறுபடியும் உனக்கு கொடுப்பா. அதுக்கு வாய்ப்பு இருக்கும். இது physics! இப்படி biology, chemistry, physicsனு.... டேய் மச்சி, எஞ்ஜாய் டா!" சிரிக்க ஆரம்பித்தான் வாசு.

"இந்த ஆர்வத்த நீ உன் வேலையில காட்டியிருந்தே... உனக்கு எப்போவோ promotion கொடுத்து இருப்பாங்க?" வாசுவின் lectureயை கேட்டவிட்டு சொன்னான் செல்வம்.

"அட போ டா... வேலை கிடக்குது. எனக்கு என் நண்பன் வாழ்க்கை தான் முக்கியம்." புன்னகையித்தான் வாசு. அச்சமயம் ஆபிஸுக்குள் பாஸ் நுழைந்ததால், வாசு தனது கேபினுக்குள் ஓடுவதற்குள் செல்வத்தின் காது அருகே, "டேய் நான் சொன்ன மாதிரி செய். ஆல் தி பெஸ்ட்"

அன்று முழுவதும் செல்வம் சற்று குழப்பத்துடன் இருந்தான். மாலை 6 மணி ஆனது. வாசு வீட்டிற்கு செல்வதற்கு முன் செல்வத்திடம் "டேய் மச்சி, results என்னான்னு இன்னிக்கு நைட் ஃபோன் பண்ணி சொல்லு!" கண் சிமிட்டியபடி கண்ணாடி கதவை திறந்து வீட்டிற்கு புறப்பட்டான்.

செல்வம் 6.45pm சொன்ன இடத்தில் காத்திருந்தான். கொஞ்சம் பயம், கொஞ்சம் பரபரப்பு,கொஞ்சம் சந்தோஷம், வெளியே காட்டி கொள்ளாமல் இருந்த அதிகபடியான வெட்கம் என்று பல உணர்ச்சிகளால் செல்வம் நின்று கொண்டிருந்தான். தனக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வருவாள் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.

அஷ்விதா வந்தாள். பிங் நிறத்தில் ஒரு சட்டை, சாதாரண ஜீன்ஸில். தனது கற்பனை நனவாகவில்லை என்று சற்று ஏமாற்றம் அடைந்தான் செல்வம்.

கையசைத்தபடி அவனை நோக்கி வந்தாள் அஷ்விதா. அவன் முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தை கண்டு கொண்டவள் புன்னகையித்தபடி,

"என்ன ஆச்சு செல்வம்? யாரடி நீ மோகினி படத்துல நயன்தாரா introduction scene மாதிரி...வெள்ளை சுடிதார்ல வருவேன்னு நினைச்சீங்களா..நினைச்சீயா?" என்றாள்.

அவள் வெளிப்படையாக பேசியது அவனின் ஏமாற்றத்தை போக்கியது. புன்னகையித்தான். ஒரு உற்சாகம் பிறந்தது. அவள் இயல்பாய் 'நினைச்சீங்களா' என்பதிலிருந்து 'நினைச்சீயா' என்று மாற்றியது, உரிமை எடுத்து கொண்டது செல்வத்திற்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி குறைந்ததுபோல் உணர்ந்தான்.

தொண்டைக்குள் வார்த்தைகள் பிறந்து தவிழ ஆரம்பித்தது செல்வத்திற்கு, "ஹாய்.. ஓ அப்படி ஒன்னுமில்ல!" எச்சில் முழுங்கினான்.

"சரி செல்வம், இப்ப எங்க போகலாம்? this place is really big ah?" என்று சுற்றும்முற்றும் பார்த்தாள் அஷ்விதா. அவள் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தது அவன் வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளுக்கு புதிதாய் மீசை முளைத்ததுபோல் உணர்ந்தான்.

"எங்காச்சும்...உன் விருப்பம்?" அவன் பதில் அளித்தான்.

"சரி... இங்க நிறைய restuarants இருக்கு. அங்க போவோம்?" என்று சொல்லியபடி நகர்ந்தார்கள்.

"பரிச கொடுக்க மறந்துடாத!" மனசாட்சிக்கு பதில் வாசுவின் குரல்தான் செல்வத்துக்குள் ஒலித்தது. "சரி சரி.." என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான் செல்வம்.

தம்ரானா நார்த் இந்தியன் உணவகத்திற்குள் சென்றனர். கஸல் இசை ஒலிக்க, வெளிச்சம் அதிகமாய் இல்லாமல், நிறைய இந்திய ஓவியங்கள், சிற்பங்கள், அலங்காரங்கள் என உணவகம் ஒரு ரம்மியமான சூழலில் இருந்தது. ஓர் இடத்தில் உட்கார்ந்தார்கள்.

"நீ என்ன சாப்பிடுற?" அஷ்விதா கேட்டாள்.

மெனு கார்ட்டை பார்த்தபடி செல்வம்,

"ம்ம்... cheese naan with butter masala chicken."

"nice choice.." என்று புன்னகையித்தாள்.

"ஆம். உன்னைய மாதிரியே." என்று சொல்ல தைரியம் இல்லாமல் ஒரு புன்னகை மட்டும் வீசினான்.

தனது ஆர்டரை கொடுத்தாள் அஷ்விதா,

"plain naan with chilli prawns.... and one glass of lime juice....mm..2 glasses please." என்று கண்களாலே செல்வத்திற்கு தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு இரண்டு கிளாஸ் ஆர்டர் செய்தாள்.

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

(பகுதி 2)