May 5, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-2

பகுதி 1

"எதுக்குடா அப்பரம் அவள கூப்பிட்ட.... பேச வேண்டியது தானா! சும்மா அமைதியாவே உட்கார்ந்து இருக்கீயே... எதுக்கு? நீயெல்லாம் சரியான....த்தூ...." என்று கண்ணாடியில் பார்த்து தன்னையே திட்டினான் செல்வம். ஒரு நிமிடம் கண்களை மூடி மறுபடியும் திறந்தான், பெருமூச்சு விட்டான். கண்ணாடியில் பார்த்து,

"இங்க பாரு... நீ இப்ப போற. பேசுற!" தனக்கு தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்றான். அஷ்விதா புன்னகையித்தாள். உட்கார்ந்தான் செல்வம்.

"ம்ம்...நான்..ம்ம்.." இழுத்தான் செல்வம். மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்த அஷ்விதா ஆரம்பித்தாள்,

"இங்க பாரு செல்வம்.... வோட்கா விலை என்னமா ஏறிபோச்சு? கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, பாதி விலையா தான் இருந்துச்சு?"

செல்வத்திற்கு ஆச்சிரியமாக இருந்தது. எப்படி இவளுக்கு எதெல்லாம் தெரியும் என்ற குழப்பம்.

"இந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீயா?"

"நான் யோசிச்சது எப்படி உனக்கு....?" மறுபடியும் குழம்பினான்.

'உன் மனசுல ஓடுறது தான் நேரடி ஒளிப்பரப்பா உன் முகம் காட்டி கொடுத்துட்டே?" என்று சொல்லி சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"காலேஜ் முதல் வருஷம் படிச்சப்போ.. முதல் செம்மஸ்ட்டர்... எல்லாம் பரிட்சையும் ஊத்திகிச்சு. என் குரூப்ல ஒருத்திகூட பாஸ் பண்ணல்ல. ரொம்ம்ப சோகமா போச்சு." என்று வருத்தமாக பேசினாள்.

தொடர்ந்தாள், "என்ன செய்யுறதுன்னு தெரியல.... மனசே விட்டு போச்சு... யாருக்கும் தெரியாம...." என்றவள் சுற்றுமுற்றும் பார்த்தவிட்டு செல்வத்தை அருகே வர சொன்னாள், அமைதியான குரலில்,

"எல்லாரும் வோட்கா அடிச்சிட்டோம்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் கலகலப்பாக பேசியதும் உண்மையை சொன்ன விதமும் அவள் மீது இருந்த ஆசையை அதிகப்படுத்தியது.

"ஆனா.. இந்த கருமத்த எப்படி தான் குடிக்கிறாங்களோ... குடிச்ச மறுநாளே, எங்க குரூப்ல எல்லாருக்கும் வாந்தி, பேதி... மயக்கம்னு ஒரு வாரம் தவிச்சு போயிட்டாம்... ஆமா... நீ தண்ணி அடிப்பீயா?" என்று திடீரென்று கேட்டவுடன் மிரண்டுவிட்டான் செல்வம்.

மிரண்டவன்," ஐயோ... எனக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது. இது வரைக்கும் எந்த பரிட்சையிலும் fail ஆனது இல்ல ." என்றான். அவன் சொன்னதை கேட்டு மறுபடியும் சிரித்தாள் தனது வெண்மையான பற்கள் தெரியும்படி. சிரிக்கும்போது கண்களில் ஒரு வசீகரம் வீசியது. 'oh man, she looks so cute' என்றது செல்வத்தின் மனம். அவளின் சிரிப்பு அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, முதன் முதலாக கேள்வி கேட்டான்.

"நீ இன்னிக்கு வந்தது உங்க வீட்டுல...." என்று கேள்வியை முடிப்பதற்குள், தண்ணீரை குடித்து கொண்டிருந்தவள்,

"ஓ நோ... தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான்!" தண்ணீர் லேசாக சிந்தியது. துடைத்து கொண்டே,

"எங்க வீட்டுல அப்பரம் அவ்வளவு தான்.... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க..." என்றாள். ஆஹா பொண்ணு நம்மை போலவே தான் என்ற ஒரு எண்ணம் வந்தது.

"அப்பரம் என்ன சொல்லிட்டு வந்த?"

" mrs claire retire ஆக போறாங்க. அவங்க கடைசி நாள் ஆபிஸுல. அவங்களுக்கு farewell partyன்னு சொன்னேன்."

"யாரு அவங்க?"

"யாருக்கு தெரியும்... ஏதோ வாய்க்கு வந்த ஒரு பெயர்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் பேச்சு செல்வத்திற்கு ரொம்ப பிடித்து இருந்தது. இன்னும் சகஜமானான். இருவரும் நிறைய பேசினர். சாப்பாடு வந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் மேசையில் இருந்த செல்வத்தின் ஃபோன் ஒலித்தது. எடுத்து பார்த்தான் வாசுவிடமிருந்து மெசேஜ்

டேய், பரிச கொடுத்தீயா இல்லையா?

பார்த்துவிட்டு கடுப்பானான் செல்வம். பதில் எதுவும் அனுப்பவில்லை. மறுபடியும் தன்னை உசுபேத்திவிட்டானே என்ற கோபம் செல்வத்திற்கு.

"are you alright selvam?" மேசையிலிருந்த செல்வத்தின் கையின் மீது கை வைத்து கேட்டாள். அக்கணம் அவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. அந்த மாதிரி உணர்வு இதற்கு முன்னால் ஏற்பட்டதில்லை. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு. ஒரு வழியாய் சமாளித்து கொண்டவன்,

"i am ok. i am ok...." என்றான். புன்னகையித்தவள் அவள் கையை எடுத்தாள்.

'ஐயோ.. இவ்வளவு சீக்கிரம் கையை எடுத்துவிட்டாளே!" என்று அவன் மனம் ஏங்கியது.

"சரி டைம் ஆச்சு, போலாமா?" என்றாள்.

"வா... உன் வீட்டுக்கிட்ட drop பண்றேன்?" என்றான் செல்வம்.

"இல்ல இல்ல.... பரவாயில்ல. நான் பஸுல போய்டுவேன்..."

"mrs selvam இனிமேல பஸுலலாம் போக கூடாது."

புன்னகையித்தபடி அவன் பின் தொடர்ந்தாள். கார் அருமையாக உள்ளது என்பதை பற்றியும் செல்வம் நல்ல கார் ஓட்டுகிறார் என்பதை பற்றியும் பேசி கொண்டு வந்தாள். செல்வத்திற்கு சந்தோஷமாக இருந்தது. அவள் வீட்டு அருகே வந்தனர். கார் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது.

"தேங்கியூ செல்வம்.. thanks for the treat too!" என்றபடி காரிலிருந்து இறங்கி சென்றாள்.

செல்வம் பின்னாடியிலிருந்து கூப்பிட்டான் அவளை. யாரும் இல்லாத தெரு. வெளிச்சம் அதிகம் இல்லை. அவள் அருகே சென்றான்.

"என்ன செல்வம்? ஏதாச்சு சொல்லனுமா?"

"இல்ல... ஒன்னு கொடுக்கனும்?"

"என்ன?" முழித்தாள்.

"இன்னிக்கு முதன் முதலா வெளியே போயிருக்கோம்... பேசியிருக்கோம்..." சொல்ல முடியாமல் தவித்தான்.

"ம்ம்....சோ?" என்றாள்.

"பரிசு ஒன்னு கொடுக்கனும்னு ஆசைப்படுறேன்...." என்றவன் முன்னால் சற்று சாய்ந்து அவளது வலது கன்னம் அருகே தன் முகத்தை கொண்டு சென்றபோது,

"செல்வம்... what are you trying to do man?" என்று அஷ்விதாவிற்கு கோபம் வர, செல்வத்தின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள்.

கார் பயங்கரமான சடன் பிரேக்குடன் நின்றது.

"என்ன ஆச்சு செல்வம்...are you ok?" பதற்றமாய் கேட்டாள் அஷ்விதா. சுயநினைவுக்கு வந்த செல்வத்தின் முகத்தில் அதிர்ச்சி. தான் கண்டது எல்லாம் நனவு இல்லை என்ற நிம்மதி ஒரு பக்கம் இருந்தாலும், பயம் இன்னொரு புரம் இருந்தது.

"ஐ எம் ஓகே...." ஏதோ சமாளித்தான்.

கார் அதே போல் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது. தான் விடைபெற்று கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றாள். யாரும் இல்லாத அதே தெரு. வெளிச்சமும் இல்லை. செல்வம் சத்தம் போடாமல் கூப்பிட்டான்,

"அஷ்விதா...."

அஷ்விதா திரும்பி பார்த்து மீண்டும் கார் அருகே வந்தாள். செல்வமும் காரைவிட்டு இறங்கி நின்றான். அதே படபடப்பு

"அஷ்விதா... thanks."

"எதுக்கு செல்வம்?"

"இல்ல... இன்னிக்கு.. நீ வந்தது... அதான்... thanks." உளறினான் செல்வம்.

"ஏய் இதுக்கு போய்.. எதுக்குப்பா நன்றிலாம் சொல்லிகிட்டு..." புன்னகையித்தாள்.
தொடர்ந்தாள்,

"ஏ.. சுத்தமா மறுந்துட்டேன்... உனக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு ஒன்னு வாங்கி வச்சு இருந்தேன்..." என்றவள் தனது கைபையில் பரிசை தேடினாள். அவள் தேடுவதை செல்வம் பார்த்து கொண்டிருந்த வேளையில்,

"இச்!" கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் அஷ்விதா.

செல்வத்திற்கு 150 அடி பூமிக்குள் போய், பிறகு வானத்திற்கு போவதுபோல் இருந்தது. கிறங்கடிக்க வைத்தது. அவனது கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

*
*
*
*

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

அச்சமயம் செல்வத்தின் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பேசலாமா வேண்டாமா என்று யோசித்தாள் அஷ்விதா. ஒலி அளவுக்கு அதிகமாக இருந்ததால், அதை 'கட்' செய்தாள். மறுபடியும் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பார்த்தாள், 'வாசு' என்று மின்னியது. 'கட்' செய்தாள். மறுபடியும் ஒலித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் எடுத்து பேசவதற்குள் மறுமுனையில் வாசு,

"டேய் மச்சி சொல்ல மறந்துட்டேன் டா.... நீ கிஸ் கொடுக்கும்போது வெளிச்சமான ஏரியாவுல இருக்கும்போது கொடுத்து தொலைச்சிடாத...atmosphere lighting கொஞ்சம் மங்கலா இருக்கனும். இந்த கிஸ பரிசா கொடுத்து அவள் அசத்தனும்.. சரியா... என்னடா பேச்ச காணும்... ஓ ஓ.. அவ முன்னாடி உட்கார்ந்து இருக்காளா? ஓகே மச்சி.... i shall not disturb you. enjoy machi!" என்று சொல்லி முடித்தான்.

அஷ்விதாவிற்கு புரிந்தது. கைபேசியை பார்த்து புன்னகையித்தபடி அதை மேசையில் வைத்தாள்.
*
*
*
"ம், இத கொடுக்க இவ்வளவு வெட்கம்.... அதுக்கு இவ்வளவு டென்ஷனா?" செல்வத்தின் மூக்கை செல்லமாக அசைத்தாள்.

"anyway, வாசுக்கு thanks சொல்லிடு... good night" என்று சொல்லிவிட்டு சென்றாள். அவள் சொன்னது எதுவுமே செல்வம் காதுகளில் விழவில்லை. மயக்கத்திலே இருந்தான்......

*முற்றும்*

16 comments:

Bhuvanesh said...

கலகலப்பா இருந்துச்சு.. (இந்த மாதிரி எல்லாம் கதைல மட்டும் நடக்குதா? உண்மையாவும் நடக்குதா? எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்க மாட்டீங்குதா? )

வந்தியத்தேவன் said...

ஆஹா சூப்பர் முடிவு அழகான திரைக்கதைபோல் இருந்தது. யாருடைய அனுபவம் எனச் சொன்னால் நன்றாக இருக்கும் யாவும் கற்பனையில்லை என நினைக்கின்றேன்

mvalarpirai said...

என்னங்க ..சமீபத்தில் 12பி படம் பார்தீங்கள..ரெண்டு கதை இருக்கு ! இல்ல எனக்குதான் சரியா புரியலையா..
anyway கதை நல்லாயிருந்த்து... இருட்டுக்குள் திருட்டு முத்தம்....ஹ்ம்ம்ம் இப்படி பெரு மூச்சு விட்டே பாதிவாழ்க்கை முடிந்திருச்சு ! :):):) nice romantic story ! :) ஆஞ்சனேய பக்தை romantic story நல்ல எழுதறாங்க ! :):)

ivingobi said...

"anyway, வாசுக்கு thanks சொல்லிடு... good night" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

வாசு ingathaan konjam idikkuthu..... paavam selvam...

Prabhu said...

கதை நல்லாருக்கு. அந்த கிஸ்ஸை நெனச்சா புல்லரிக்குது, நம்மளும் ட்ரை பண்றோம் ஒண்ணு சிக்க மாட்டேங்குதே!

Prabhu said...

just now i read other stories by. wow, they were great, i mean, i liked the little romance, naughtiness, mokkai, kadisn,... im a follower of u now. wherever u are-hutch

FunScribbler said...

@புவனேஷ்

//எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்க மாட்டீங்குதா?//

கதையில் கனவிலும் மட்டும் தான் இப்படிலாம் நடக்கும். நிஜத்துல.. ரொம்ம்ம்ம்பப கஷ்டம்!!:)

FunScribbler said...

@தேவன்

//ஆஹா சூப்பர் முடிவு அழகான திரைக்கதைபோல் இருந்தது.//

நன்றி நன்றி:)

//யாருடைய அனுபவம் எனச் சொன்னால் நன்றாக இருக்கும்//

யாருடைய அனுபவமும் கிடையாது! முற்றிலும் கற்பனையே!:)

FunScribbler said...

@கோபி

//ஆஞ்சனேய பக்தை romantic story நல்ல எழுதறாங்க ! :):)//

ஜெய் ஆஞ்சனேயா!:)

புதியவன் said...

//செல்வத்திற்கு 150 அடி பூமிக்குள் போய், பிறகு வானத்திற்கு போவதுபோல் இருந்தது. கிறங்கடிக்க வைத்தது. அவனது கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.//

ரொம்ப அழகு...

கதைய அருமையா முடிச்சிருகீங்க தமிழ்...வாழ்த்துக்கள்...

sri said...

//கலகலப்பா இருந்துச்சு.. (இந்த மாதிரி எல்லாம் கதைல மட்டும் நடக்குதா? உண்மையாவும் நடக்குதா? எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்க மாட்டீங்குதா? )

//

paavam bhuvanesh engey epdi ellam kadhai ezhudhi polamba vaikareenga ;)

Super touch, twist and the ending- Although I half expected she would have friend to push her to kiss him :) , neverthless this one was good too.

sri said...

//செல்வத்திற்கு 150 அடி பூமிக்குள் போய், பிறகு வானத்திற்கு போவதுபோல் இருந்தது //

Very good narration - anubavum erukko ;P

FunScribbler said...

@pappu

//கதை நல்லாருக்கு//

நன்றி:)

//i liked the little romance, naughtiness, mokkai, kadisn,... im a follower of u now//

நன்றி:) உங்கள் ஆதரவுக்கு நன்றி:)

FunScribbler said...

@ஸ்ரீ

//Very good narration - anubavum erukko ;P//

thanks for the wishes. அனுபவமா? ஏங்க.. இப்ப தாங்க நானே எல் கே ஜி முடிஞ்சு யூ கே ஜி போறேன்.. என்னைய போய்...எப்படிங்க இப்படி கேட்க உங்களுக்கு மனசு வந்துச்சு...mummy!!!அவ்வ்வ்வ்...

Divya said...

Feel good romantic story with wonderful narration :))

kalakkals........keep rocking!

இராவணன் said...

அருமையா இருக்கு உங்க வலைப்பூ.

முக்கியமா இந்த கதை ரொம்ப ்பிடிச்சது.

அப்புறம்

///Thamizhmaangani said...
@கோபி

//ஆஞ்சனேய பக்தை romantic story நல்ல எழுதறாங்க ! :):)//

ஜெய் ஆஞ்சனேயா!:)
//
;)))))))))))))))))))))))))))))))))))))