Mar 27, 2008

இது தான் தல-கனம்!

ஆச்சிரியம் ஆனால் உண்மை! இவர் ஒரு கூலி! பேருந்தில் பொருட்களை ஏற்றுபவர். இவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். இப்போது பேருந்துகள் பெரிய பொருட்களைகூட ஏற்றுமதி செய்கின்றன. பொதுவாக பேருந்து கீழே இருக்கும் பெட்டியில்தான் பொருட்களை வைப்பார்கள். ஆனால், அங்கே இடம் இல்லை என்றால், பேருந்திற்கு மேல் இருக்கும் இடத்தில் வைப்பார்கள். ஆனால்.. இவர் எதை எப்படி வைக்கிறார் என்று பாருங்கள்!!

இந்த மோட்டார் வண்டியின் இடை 200kg
ஆனால் ஒரு வண்டியை மேலே வைப்பதற்கு இவருக்கு கொடுக்கப்படும் கூலி Rs20 மட்டுமே!!

தலக்கனம் பிடித்தவர்கள் ஒரு புறம் இருக்கு. இவர் அனுபவிக்கும் தல-கனம் என்னவென்பது??

Mar 23, 2008

கல்லூரி திருவிழா(??)


"ஏய் மச்சி, மார்ச் 22nd 'அக்னி' ஷோ நடக்குது. நம்ம எல்லாம் போகனும். சீனியர்ங்கற முறையில நம்ம கல்லூரி ஷோ கண்டிப்பா போகனும். எல்லாரும் வந்துடுங்க. எல்லாருக்கும் டிக்கேட் புக் பண்ணியாச்சு"- என்று ஸ்ம்ஸ் அனுப்பினான் நண்பன் ஒருத்தன். இந்த நிகழ்ச்சி எங்க கல்லூரியில் இரு வருஷங்களுக்கு ஒரு முறை நடத்தும் நிகழ்ச்சி/போட்டி. இந்நிகழ்ச்சியில் பாட்டுப்போட்டி, நடனபோட்டி மற்றும் நாடகப்போட்டி இருக்கும். மற்ற கல்லூரிகள் பங்கேற்கும். அதற்கு எங்க கல்லூரிதான் ஏற்பாட்டாளர்க்ள் ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாம்.

சனிக்கிழமையாச்சே, கண்டிப்பா போகனுமா? ஏகப்பட்ட வேலை இருக்கே.. அப்படின்னு யோசிக்கும்போது 'இல்ல இல்ல.. நீ கண்டிப்பா போகனும். மூன்று வருஷத்துக்கு முன்னாடி நீ அங்கதான் படிச்சே.. உன் கல்லூரிக்கு நீ மரியாதை கொடுக்கனும்' அப்படியாக்கும் இப்படியாக்கும்னு என் மூளை கொஞ்சம் ஓவரா பீலிங்ஸ் வீட்டுச்சு! அதனால் கிளம்பி போனேன்.


நிகழ்ச்சி டிக்கெட் பார்த்தா.. அவ்வளவு பெரிசா இருக்கு. 4 பக்கம் புத்தகம் மாதிரி இருந்துச்சு. அதை படிக்க முயற்சி செய்தோம். முயற்சி முயற்சியாகவே தான் இருந்தது. அதை தாண்டி ஒன்னு செய்ய முடியல. ஏனா, கருப்பு backgroundல் light சிவப்பு கொண்ட எழுத்தில் வார்த்தைகள் இருந்தால் எப்படி படிப்பது? அதுவும் font size 11 மாதிரி தான் இருந்துச்சு!


டிக்கெட்-டை வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம். இருபது பேருக்கு மேல் யாரும் கிடையாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் 630. அப்ப மணி 620. ஆஹா கூட்டமே இவ்வளவுதானே என்று மனம் 'பக்'கென்றது. ஆனால் பரவாயில்லை... கூட்டம் நிறையவே வர ஆரம்பிக்க தொடங்கியது அதுக்கு அப்பரம். கொஞ்ச நேரத்தில house full ஆயிடுச்சு!! 630 நிகழ்ச்சி ஆரம்பிக்கவேண்டும், ஆனா நம்ம தமிழ்ர்கள் முறைபடி நிகழ்ச்சி 7 மணிக்கு கரக்ட்டா ஆரம்பிச்சுட்டாங்க!!

நிகழ்ச்சியில் ஒரு structure இருந்துச்சு. அதாவது ஒரு opening, closing.. இடையிடையே ஓரளவுக்கு சுமுகமாக நடந்தேறியது போட்டிகள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் அவர்கள் finale நடனம் ஒன்னு ஆடனும். அவர்களும் ஆடினார்கள். கடைசி பாடலாக 'secret of success' பாடலுக்கு ஆடியது நல்ல ஐடியா. ஆனால், மற்றபடி ரசிக்கும் வண்ணம் ஒன்னுமே இல்ல. மேடையே ரொம்ப சின்னதுதான். 5 பேருக்கு மேல ஆடமுடியாது. அதுலபோய் 25 ஆடின்னா என்ன அர்த்தம்!


மைக் செட், டிஸ்கோ effect lights என எவ்வளவோ செலவு பண்ணவங்க, அரங்கத்தை அலங்கரிக்க செலவு செய்யாதது ஏன் என்று தெரியவில்ல. அட, ஒன்னும் பண்ணாம இருந்தாலும் பரவாயில்ல. decoration என்ற பெயரில் 4 சேலையை கதவு ஓரமா தொங்கவிட்டது சரியான காமெடியா இருந்துச்சு. நான் முதல நினைச்சு ஏதோ அவங்க வீட்டு ஈரத்துணிய காய போட்டு இருக்காங்கன்னு!!


பார்வையாளர்கள் குறைந்த பச்சம் எதிர்பார்ப்பது, மேடையில் நடப்பதை கேட்க வேண்டும் என்பதே. ஆனால், அதுவே படு மோசமா இருந்துச்சு. ஒன்னுமே சத்தமா சுத்தமா கேட்கலை!! மைக்கை 2 km தூரத்துல வச்சு பேசினா இப்படி தான் ஆகும்!! எப்படியோ ஒரு சமயத்துல லேசா கேட்டுச்சு, மேடையில நடந்த நாடகத்தில் ஒரு பொண்ணு டையலாக் பேசினுச்சு "என் காதுல ஒன்னுமே விழலையே". என் பக்கத்துல இருந்த தோழி கொஞ்ச சத்தமா "எங்களும் தான்ய்யா!" என்றாள். ஹாஹாஹா... நாலு அஞ்சு வரிசைகளுக்கு முன்னாடி இருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்த்து சிரிச்சுட்டாங்க.

நிகழ்ச்சி ஆரம்பித்து 45 நிமிடங்களிலே படு 'போர்' ஆகிவிட்டது. முக்கி விக்கி சிக்கி நிகழ்ச்சிய பார்த்தோம். எழுந்துச்சு போயிடலாம்னு இருந்தோம். ஆனா, எங்க நண்பன் ஒருத்தன் 'அதுலாம் வேணாம். நல்லா இருக்காது. மரியாதையா இருக்காது' என்றான். சரி என்ன செய்ய, நட்புக்கும் படித்த கல்லூரிக்கும் மரியாதை கொடுத்து உட்கார்ந்து நிகழ்ச்சிய பாத்தோம்.

காலம் காலமா நடக்கும் நிகழ்ச்சி தான்! ஆனால் அதில் ஏதேனும் வித்தியாசம் காட்டியிருந்திருக்கலாம். வெறும் பாடல் போட்டி என்று இல்லாமல்.. for eg) ஒரு theme கொண்ட பாடல் போட்டியாக இருந்திருக்கலாம். போட்டியில் இருந்த ஆடல்களும் சரி பாடல்களும் சரி.. ரசிகர்களை ஆட வைக்காமல் தூங்க வைத்துவிட்டன!! என்ன கொடுமை சார் இது!

இது எல்லாம் பரவாயில்ல.. ஆனா மேடையில போட்டிக்கான வந்த நீதிபதிகளுக்கு அன்பளிப்பு கொடுத்தபோது நடந்த விஷயம்தான் ரொம்ப பாவம்!! நீதிபதிகளை மேடையில் கூப்பிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பு எங்கே என்று தெரியவில்லை. பாவம்!!

'என்ன ஒன்னும் இல்லை' என்று முகபாவத்துடன் நின்ற நீதிபதியையும் 'எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல' என்று முகபாவத்துடன் நின்ற கல்லூரி தலைமையாசிரியரையும் (இவர் தான் நீதிபதிகளுக்கு பரிசு கொடுக்கவேண்டியவர்) பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு!! ரொம்ப அவமானமா போச்சு!!


நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் பாணியில் சிறிது வித்தியாசம். சதாரணமா 2 host மேடையில் நின்னு பேசுவாங்க. ஆனா அப்படி இல்லாமல். ஒரு அரசருக்கு கலைகள் என்றாலே பிடிக்காது. அவருக்கு எப்படி இந்நிகழ்ச்சியில் வந்த பாடல்களையும் ஆடல்களையும் பார்த்து கலையின் மீது ஆர்வம் வந்தது என்பதுபோல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வித்தியாசமாக இருந்தது. ஆனால், பேசியது ஒன்னுமே கேட்காததால் சுத்தமா அடிப்பட்டு போச்சு!!

பேசாம நாங்க நண்பர்கள் எல்லாம் அஞ்சப்பர் கடையில போய் கோழி பிரியாணி சாப்பிட்டு இருக்கலாம், டிக்கெட் வாங்கிய காசுக்கு பதிலா. ஒரு மாதத்திற்கு முன்னால் இந்நிகழ்ச்சியின் விளம்பரத்தை பார்த்தேன் - "எல்லாரும் கண்டிப்பா வரனும். நிகழ்ச்சியி கடைசியில ஒரு twist இருக்கு!"

நிகழ்ச்சி நேரத்தில் முக்காவாசி சமயம் பக்கத்தில் இருந்த தோழியிடம் பேசி கொண்டே இருந்ததால்( அப்பரம்.. 'போர்' அடிச்சா.. இப்படி தான் ஆகும்), ஒரு பக்கமா உட்கார்ந்து பேசிட்டேன். அதனால, இடுப்பு ஒரு பக்கமா twist ஆயிடுச்சு!! இந்த twist தவிர வேற எந்த twistயை பார்க்கல... மனசுலையும் ஒன்னும் நிக்கல்ல!!

Mar 21, 2008

பள்ளிகூடம் குகைக்குள்ளே இருக்குய்யா!

























சீனாவில் இப்படி ஒரு அதிசயம். குகைக்குள்ளே சிங்கம் கேள்விப்பட்டு இருக்கோம். இங்க பாருங்க.. குகைக்குள்ளே ஒரு பள்ளிகூடம்!! ஆச்சிரியமாகவும் அதிசயமாகவும் இருக்கு!

Mar 16, 2008

இப்ப நான் என்ன செய்ய!!??

நல்லா இருந்த என்னைய கோபப்படவச்சவரை என்ன செய்யலாம்??

வெள்ளிக்கிழமை காலையில காலேஜ்க்கு போய்கிட்டு இருந்தேன் என் கார்ல. எப்போதும் போலவே காலையில 845 கிளம்பிவிட்டேன். ஆனா ஒரே traffic jam. ரொம்ப தூரத்துல ஒரு பெரிய crane வண்டி பழுத்தாயிபோச்சு. அதனால போகிற வண்டியல்லாம் அடுத்த laneக்கு மாத்திகொண்டு இருந்தான்ங்க. சரி மெதுவாகதான் நகருது. நாமும் மெதுவாகவே போவோம்னு. ரொம்ப கவனத்தோட இருந்தேன். சும்மா rear mirrorலில் எவ்வளவு தூரத்துக்கு பின்னாடி வண்டி நிக்குதுனு எட்டி பார்த்தேன். அப்ப பார்த்தா, பயங்கரமா புகை வந்துகிட்டு இருந்துச்சு. ரொம்ப பயந்து போயிட்டேன். என்னடாது நம்ம வண்டியிலவா புகை வருது?னு பயமா போச்சு.


இப்படியே சிந்தனை போய்கிட்டு இருக்க, திடீரென்று, பின்னாடியிலிருந்து "டங்' அப்படி ஒரு சத்தம். பின்னாடி வந்து கொண்டிருந்த வண்டிக்காரன் என் வண்டிய இடிச்சுட்டான்!!! பாவி பாவி!! ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது.






சத்தம் கேட்டு என் வண்டிய off செய்துவிட்டு இறங்குவதற்குள் ஆயிரம் பயங்கள் என் மனதில் மின்னல் அடித்தன- "எப்படி அப்பாகிட்ட சொல்றது? அம்மா திட்டுமே? அப்பா வேற ஊருல இல்ல. அவரு வந்தாருன்னா என்ன ஆகும்? இனிமேல காலேஜ்க்கு போக வண்டி கொடுக்கலைன்னா..? என்ன செய்ய? பேருந்துல போயிட்டு வரவே நாலு மணி நேரம் ஆகுமே? உடம்பு தாங்குமா?" என்ற கேள்விகள்!!

இறங்கி என் வண்டிக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். கடவுள் இருக்கான்ய்யா!! வண்டிக்கு ஒன்னும் ஆகல. கண்ணுக்கு தெரியாத ஒரு சின்ன கீறல். நல்ல வேளை!! வண்டி தயாரித்த toyota கம்பெனிக்காரன் நிஜமாகவே வாக்கு தவறாதவன் தான்! ரொம்ப ஸ்டார்ங்கா வண்டிய செய்து இருக்கான்.

புகை எங்கிருந்து வந்தது என்று பார்த்தால்... என் வண்டியை இடித்தவன் வண்டியிலிருந்து வந்தது. அவன் கார் என்ஜீன் ஏதோ கோளாறு. அதனால் புகை, அவனுக்கு வந்த பயத்தாலே.. உடனே பிரேக் போட முடியாமல் இடித்துவிட்டான். சற்று வயதானவர் தான்(இந்தியர் அல்ல). இருந்தாலும் தவறு அவர் மேலதான். ஒரு வண்டிக்கு பின்னால் இன்னொரு வண்டி போகும்போது அந்த இடைவேளை - 'இரு வண்டி gap' இருக்குமாறு ஓட்ட வேண்டும். இங்கு சிங்கையில் வண்டி ஓட்டும் உரிமம் எடுக்கும்போது கற்று கொடுக்கும் முதல் பாடமே இது தான்.

"என்னங்க இப்படி செய்து விட்டீங்க. சின்ன புள்ளைங்க நான். பயந்துட்டேன். பாத்து ஓட்டகூடாதா.. எனக்கு இப்ப காலேஜுக்கு லேட்டா போச்சு.." என்று கொஞ்சம் அதிகமாகவே உரத்த குரலில் அவரிடம் பேசினேன்(ஆங்கிலத்தில்). எனக்கு வந்த பரபரப்பில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரும் மன்னிப்பு கேட்டார். ஆனால், தவறு என் மேல் இல்லாமல் இருந்தாலும் என் அப்பா என்னை திட்டுவாரே என்ற பயத்தினால் எனக்கு பயம் கலந்த பரபரப்பு அதிகமாயிற்று. வண்டியில் சின்ன கோடு விழுந்தாலே எங்க அப்பாவுக்கு பிடிக்காது. சரி போலீஸ்க்கு போகும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும், அவருடைய கார் எண்ணையும் அவர் தொலைப்பேசி எண்ணையும் எடுத்து கொண்டேன்.

காலேஜ்க்கு ரொம்ப தாமதமாக சென்றேன். பாடத்தை கவனிக்க முடியவில்லை. அவரை அப்படி பேசி இருக்ககூடாது என்றது மனம். மன்னிக்க தெரிந்தவன் மனுஷன் மன்னிப்பி கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன் என விருமாண்டி டையலாக் மனசுல வர..சரி வீடு திரும்பியது அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர் வண்டி இப்ப எப்படி இருக்கு. மன்னித்துவிடுங்கள் நான் பேசியதற்கு என்று சொல்லலாம் என முடிவு செய்து அவர் கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். ஒரு பெண் பேசினாள். அவர் என்னிடம் சொன்ன பெயரை சொல்லி இவர் இருக்காரா என்று கேட்டதற்கு, "சாரி மேடம் அப்படி யாரும் இங்க இல்ல. ராங் நம்பர்" என்றாள்.

அட பாவி, தவறான நம்பரை கொடுத்து ஏன் என்னை ஏமாற்ற வேண்டும். நான் அவரிடம் நம்பர் வாங்கும்போதே சொன்னே. போலீஸ்க்கு போக மாட்டேன். சும்மா ஒரு தகவலுக்குதான் எடுத்து கொள்கிறேன் என்று. தவறு இப்போ யாரு மேல? இது நடந்த பிறகுதான் உண்மையாகவே அவர் மீது எனக்கு கோபம் வருகிறது. 'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??"