வெள்ளிக்கிழமை காலையில காலேஜ்க்கு போய்கிட்டு இருந்தேன் என் கார்ல. எப்போதும் போலவே காலையில 845 கிளம்பிவிட்டேன். ஆனா ஒரே traffic jam. ரொம்ப தூரத்துல ஒரு பெரிய crane வண்டி பழுத்தாயிபோச்சு. அதனால போகிற வண்டியல்லாம் அடுத்த laneக்கு மாத்திகொண்டு இருந்தான்ங்க. சரி மெதுவாகதான் நகருது. நாமும் மெதுவாகவே போவோம்னு. ரொம்ப கவனத்தோட இருந்தேன். சும்மா rear mirrorலில் எவ்வளவு தூரத்துக்கு பின்னாடி வண்டி நிக்குதுனு எட்டி பார்த்தேன். அப்ப பார்த்தா, பயங்கரமா புகை வந்துகிட்டு இருந்துச்சு. ரொம்ப பயந்து போயிட்டேன். என்னடாது நம்ம வண்டியிலவா புகை வருது?னு பயமா போச்சு.
இப்படியே சிந்தனை போய்கிட்டு இருக்க, திடீரென்று, பின்னாடியிலிருந்து "டங்' அப்படி ஒரு சத்தம். பின்னாடி வந்து கொண்டிருந்த வண்டிக்காரன் என் வண்டிய இடிச்சுட்டான்!!! பாவி பாவி!! ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது.
சத்தம் கேட்டு என் வண்டிய off செய்துவிட்டு இறங்குவதற்குள் ஆயிரம் பயங்கள் என் மனதில் மின்னல் அடித்தன- "எப்படி அப்பாகிட்ட சொல்றது? அம்மா திட்டுமே? அப்பா வேற ஊருல இல்ல. அவரு வந்தாருன்னா என்ன ஆகும்? இனிமேல காலேஜ்க்கு போக வண்டி கொடுக்கலைன்னா..? என்ன செய்ய? பேருந்துல போயிட்டு வரவே நாலு மணி நேரம் ஆகுமே? உடம்பு தாங்குமா?" என்ற கேள்விகள்!!
இறங்கி என் வண்டிக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். கடவுள் இருக்கான்ய்யா!! வண்டிக்கு ஒன்னும் ஆகல. கண்ணுக்கு தெரியாத ஒரு சின்ன கீறல். நல்ல வேளை!! வண்டி தயாரித்த toyota கம்பெனிக்காரன் நிஜமாகவே வாக்கு தவறாதவன் தான்! ரொம்ப ஸ்டார்ங்கா வண்டிய செய்து இருக்கான்.
புகை எங்கிருந்து வந்தது என்று பார்த்தால்... என் வண்டியை இடித்தவன் வண்டியிலிருந்து வந்தது. அவன் கார் என்ஜீன் ஏதோ கோளாறு. அதனால் புகை, அவனுக்கு வந்த பயத்தாலே.. உடனே பிரேக் போட முடியாமல் இடித்துவிட்டான். சற்று வயதானவர் தான்(இந்தியர் அல்ல). இருந்தாலும் தவறு அவர் மேலதான். ஒரு வண்டிக்கு பின்னால் இன்னொரு வண்டி போகும்போது அந்த இடைவேளை - 'இரு வண்டி gap' இருக்குமாறு ஓட்ட வேண்டும். இங்கு சிங்கையில் வண்டி ஓட்டும் உரிமம் எடுக்கும்போது கற்று கொடுக்கும் முதல் பாடமே இது தான்.
"என்னங்க இப்படி செய்து விட்டீங்க. சின்ன புள்ளைங்க நான். பயந்துட்டேன். பாத்து ஓட்டகூடாதா.. எனக்கு இப்ப காலேஜுக்கு லேட்டா போச்சு.." என்று கொஞ்சம் அதிகமாகவே உரத்த குரலில் அவரிடம் பேசினேன்(ஆங்கிலத்தில்). எனக்கு வந்த பரபரப்பில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரும் மன்னிப்பு கேட்டார். ஆனால், தவறு என் மேல் இல்லாமல் இருந்தாலும் என் அப்பா என்னை திட்டுவாரே என்ற பயத்தினால் எனக்கு பயம் கலந்த பரபரப்பு அதிகமாயிற்று. வண்டியில் சின்ன கோடு விழுந்தாலே எங்க அப்பாவுக்கு பிடிக்காது. சரி போலீஸ்க்கு போகும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும், அவருடைய கார் எண்ணையும் அவர் தொலைப்பேசி எண்ணையும் எடுத்து கொண்டேன்.
காலேஜ்க்கு ரொம்ப தாமதமாக சென்றேன். பாடத்தை கவனிக்க முடியவில்லை. அவரை அப்படி பேசி இருக்ககூடாது என்றது மனம். மன்னிக்க தெரிந்தவன் மனுஷன் மன்னிப்பி கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன் என விருமாண்டி டையலாக் மனசுல வர..சரி வீடு திரும்பியது அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர் வண்டி இப்ப எப்படி இருக்கு. மன்னித்துவிடுங்கள் நான் பேசியதற்கு என்று சொல்லலாம் என முடிவு செய்து அவர் கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். ஒரு பெண் பேசினாள். அவர் என்னிடம் சொன்ன பெயரை சொல்லி இவர் இருக்காரா என்று கேட்டதற்கு, "சாரி மேடம் அப்படி யாரும் இங்க இல்ல. ராங் நம்பர்" என்றாள்.
அட பாவி, தவறான நம்பரை கொடுத்து ஏன் என்னை ஏமாற்ற வேண்டும். நான் அவரிடம் நம்பர் வாங்கும்போதே சொன்னே. போலீஸ்க்கு போக மாட்டேன். சும்மா ஒரு தகவலுக்குதான் எடுத்து கொள்கிறேன் என்று. தவறு இப்போ யாரு மேல? இது நடந்த பிறகுதான் உண்மையாகவே அவர் மீது எனக்கு கோபம் வருகிறது. 'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??"
24 comments:
மன்னித்து அவர் முகத்தை மறக்காது இருங்கள்.
ஆஹா தமிழு........உங்களுக்கு கோபம் கூட வருமா???
மன்னிக்க நினைத்த உங்கள் குணத்தை பாராட்டுகிறேன்!
\\ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது. \\
எப்படிங்க இப்படி டைமிங்ல அழகாக நீங்க 'ஜிம்' போறதையும் கோடு போட்டு காட்டுறீங்க.......ஹாஹா!
நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழ்!
\\வண்டி தயாரித்த toyota கம்பெனிக்காரன் நிஜமாகவே வாக்கு தவறாதவன் தான்! ரொம்ப ஸ்டார்ங்கா வண்டிய செய்து இருக்கான்.\\
I totally agree.....!!
\\"எப்படி அப்பாகிட்ட சொல்றது? அம்மா திட்டுமே? \\
தமிழ்.....நட்பின் உரிமையில் சொல்கிறேன்....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில்,
எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!!
Hope u dont mistakeme!!
//மன்னித்து அவர் முகத்தை மறக்காது இருங்கள்.//
அப்படி தான்ங்க முடிவு பண்ணி இருக்கேன்!!
//உங்களுக்கு கோபம் கூட வருமா???//
எப்பவாச்சு இப்படி வரும்! ஹிஹி.. கோபம் என்பதைவிட ஆதங்கம், வருத்தம் எனலாம்.
//நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழ்!//
நன்றி திவ்ஸ்
//அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில்,
எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //
கண்டிப்பா மாற்றி கொள்கிறேன்.
//Hope u dont mistakeme!!//
கண்டிப்பா ஒன்னும் நினைக்க மாட்டேன். எடுத்து கூறியதற்கு நன்றி திவ்ஸ்!!
நல்லா இருந்த என்னைய கோபப்படவச்சவரை என்ன செய்யலாம்??///
ஐடியா நம்பர் 1) அந்த வண்டிய கண்டு பிடிக்க மாறு வேசத்தில் ரோடு ரோடா டிராபிக் போலீஸ் மாதிரி போகலாம்.
ஐடியா நம்பர் 2: காரில் கோடு விழுந்த இடத்தில் லேசா உங்க நெயில் பாலீஸ் போட்டு கோட்டை மறைக்கலாம்:)
ஜடியா நம்பர் 3:
போலீஸ் ஸ்டேசன் போய் அந்த நம்பரை கொடுத்து அவர் போன் நம்பரை கண்டு பிடிக்கலாம்.
ஐடியா நம்பர் 4: பேசாமா புல் மீல்ஸ் சாப்பிட்டு விட்டு கவுந்தடிச்சு தூங்கலாம்.
'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??"///
இரவு சாப்பிட சிக்கன் வறுவலும், சப்பாத்தியும் செய்யுங்க:))
கூலிங்கா ஏதும் ஜூஸ் செய்யுங்க.
//....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில்,
எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //
என்னங்க திவ்யா அம்மாவை இப்படி மரியாதையாக வாங்க அம்மா போங்க அம்மான்னு என்று எல்லாம் சொன்னா என்னமோ யாரையோ கூப்பிடுவது போல இருக்காது.
எங்க பக்கம் எல்லாம் அம்மாவை வாங்க போங்க என்று கூப்பிடும் வெளியூர் பசங்களை எல்லோரும் வித்தியாசமாகதான் பார்ப்பாங்க.
//மாறு வேசத்தில் ரோடு ரோடா டிராபிக் போலீஸ் மாதிரி போகலாம்.//
என்னைய உள்ளே அனுப்பாம்ம விடமாட்டீங்க போல தெரியுது..
//போலீஸ் ஸ்டேசன் போய் அந்த நம்பரை கொடுத்து அவர் போன் நம்பரை கண்டு பிடிக்கலாம்.//
செய்யலாம்.. ஆனால் இங்க அது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.. நிறைய formalities உள்ளன..
//இரவு சாப்பிட சிக்கன் வறுவலும், சப்பாத்தியும் செய்யுங்க:))
கூலிங்கா ஏதும் ஜூஸ் செய்யுங்க.//
நீங்க செய்து அனுப்புங்க... நல்லா சாப்பிடுறேன் குசும்பன்...maybe அண்ணிக்கிட்ட சொல்லி கொடுத்து அனுப்ப சொல்லுங்க..ஹிஹிஹி..
//என்னங்க திவ்யா அம்மாவை இப்படி மரியாதையாக வாங்க அம்மா போங்க அம்மான்னு என்று எல்லாம் சொன்னா என்னமோ யாரையோ கூப்பிடுவது போல இருக்காது.//
எழுத்து வடிவில் வரும்போது மரியாதை தர வேண்டும் என்பதை அவங்க சொல்லி இருக்காங்க... :)))
பேச்சு வழக்கில்கூட வாங்க போங்கனு தான் சொல்வேன்.. இங்க சிங்கையிலும் இப்படிதான் சொல்வாங்க.. நான் சென்னைக்கு வந்தபோது அங்க உள்ளவங்க வா போ என்று சொல்வது எனக்கு வித்தியாசமாக இருந்தது!!
// Divya said...
ஆஹா தமிழு........உங்களுக்கு கோபம் கூட வருமா???
மன்னிக்க நினைத்த உங்கள் குணத்தை பாராட்டுகிறேன்!
\\ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது. \\
எப்படிங்க இப்படி டைமிங்ல அழகாக நீங்க 'ஜிம்' போறதையும் கோடு போட்டு காட்டுறீங்க.......ஹாஹா!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்.......:)))))
//
எப்படிங்க இப்படி டைமிங்ல அழகாக நீங்க 'ஜிம்' போறதையும் கோடு போட்டு காட்டுறீங்க.......ஹாஹா!//
இப்டியெல்லாம் நான் ஜிம்முக்கு போறேன் அது இதுன்னு என்னிய மாத்ரி சின்னப்புள்ளைங்கள மறைமுகமாக பயம்புறுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:P:P:P
//சின்னப்புள்ளைங்கள மறைமுகமாக பயம்புறுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:P:P:P//
சின்னப்புள்ளைங்களா?? யாருது.. அப்படின்னு யாரும் எனக்கு தெரியாதுய்யா!!ஹிஹி
\\ குசும்பன் said...
'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??"///
இரவு சாப்பிட சிக்கன் வறுவலும், சப்பாத்தியும் செய்யுங்க:))
கூலிங்கா ஏதும் ஜூஸ் செய்யுங்க.\\
enanga....intha kusumbanuku ovoru commentuku evlo pottinga kodutheenga, seri kummi kumirikaru??
Nice post,
flow of writing is very intresting :)
natpodu
Nivisha
//Nice post,
flow of writing is very intresting :)//
நன்றி நிவிஷா! வலைப்பூ வருகைக்கு நன்றி!!
New Template nalla iruku Tamil:)
chocolates koduthu welcome panreenga!!gud one!
\\ குசும்பன் said...
//....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில்,
எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //
என்னங்க திவ்யா அம்மாவை இப்படி மரியாதையாக வாங்க அம்மா போங்க அம்மான்னு என்று எல்லாம் சொன்னா என்னமோ யாரையோ கூப்பிடுவது போல இருக்காது.
எங்க பக்கம் எல்லாம் அம்மாவை வாங்க போங்க என்று கூப்பிடும் வெளியூர் பசங்களை எல்லோரும் வித்தியாசமாகதான் பார்ப்பாங்க.\\
ஹாய் குசும்பன்,
அம்மாவை 'இங்க வா ம்மா' , இதை 'கொடு ம்மா' அப்படி சொன்னா , அது பழக்க வழக்கம், உறவின் நெருக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம்,
'அம்மா திட்டுமே' அப்படி சொல்லும் போது, அங்கு அஃகிறினையில் அம்மாவை குறிப்பிட்டிருந்ததால் தான் என் கருத்தை தெரிவித்தேன்!!
//அவர் என்னிடம் சொன்ன பெயரை சொல்லி இவர் இருக்காரா என்று கேட்டதற்கு, "சாரி மேடம் அப்படி யாரும் இங்க இல்ல. ராங் நம்பர்" என்றாள்.//
//'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??" //
ஒரு க்வாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்து தூங்கு :))
மன்னிச்சிடு காயத்ரி.. என்னால சிரிப்ப அடக்க முடியலை... ஹாஹாஹாஹாஹா:)))))))))))))))))))
//தமிழ்.....நட்பின் உரிமையில் சொல்கிறேன்....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில்,
எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //
எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஊர்ஸ். அம்மாவை வா, போ என்று ஒருமையில் அழைக்கும் போது தான் அம்மா மீது இருக்கும் பாசம் தெரியும். வாங்க போங்க என்று அழைப்பதும் எழுதுவதும் எதோ ஒரு அந்நியமான உணர்வையே தான் உண்டாக்கும்.
//மன்னிச்சிடு காயத்ரி.. என்னால சிரிப்ப அடக்க முடியலை... ஹாஹாஹாஹாஹா:)))))))))))))))))))//
பரவாயில்ல சஞ்சய்.. எனக்கும் ஒரு காலம் வரும்! அப்ப நான் உங்கள பாத்து எப்படி சிரிக்கிறேன் மட்டும் பாருங்க! wait and see!:)))
//'அம்மா திட்டுமே' அப்படி சொல்லும் போது, அங்கு அஃகிறினையில் அம்மாவை குறிப்பிட்டிருந்ததால் தான் என் கருத்தை தெரிவித்தேன்!!//
//வாங்க போங்க என்று அழைப்பதும் எழுதுவதும் எதோ ஒரு அந்நியமான உணர்வையே தான் உண்டாக்கும்.//
அவ்வ்வ்வ்வ்... 'திட்டுமே' என்று எழுதியதுக்கு இப்படியா!! ஹாஹாஹா... இப்ப எல்லாம் நான் தினமும்
'காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா..'
'அம்மா என்று அழைக்காத உயிரில்லையே'
இந்த ரெண்டு பாடலையும் சுதி தாளம் சரியாக வராவிட்டாலும் எங்க அம்மாகிட்டு காலையில பாடிட்டுதான் காலேஜுக்கு போறேன் பா!!!
:)
Post a Comment