Mar 23, 2008

கல்லூரி திருவிழா(??)


"ஏய் மச்சி, மார்ச் 22nd 'அக்னி' ஷோ நடக்குது. நம்ம எல்லாம் போகனும். சீனியர்ங்கற முறையில நம்ம கல்லூரி ஷோ கண்டிப்பா போகனும். எல்லாரும் வந்துடுங்க. எல்லாருக்கும் டிக்கேட் புக் பண்ணியாச்சு"- என்று ஸ்ம்ஸ் அனுப்பினான் நண்பன் ஒருத்தன். இந்த நிகழ்ச்சி எங்க கல்லூரியில் இரு வருஷங்களுக்கு ஒரு முறை நடத்தும் நிகழ்ச்சி/போட்டி. இந்நிகழ்ச்சியில் பாட்டுப்போட்டி, நடனபோட்டி மற்றும் நாடகப்போட்டி இருக்கும். மற்ற கல்லூரிகள் பங்கேற்கும். அதற்கு எங்க கல்லூரிதான் ஏற்பாட்டாளர்க்ள் ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாம்.

சனிக்கிழமையாச்சே, கண்டிப்பா போகனுமா? ஏகப்பட்ட வேலை இருக்கே.. அப்படின்னு யோசிக்கும்போது 'இல்ல இல்ல.. நீ கண்டிப்பா போகனும். மூன்று வருஷத்துக்கு முன்னாடி நீ அங்கதான் படிச்சே.. உன் கல்லூரிக்கு நீ மரியாதை கொடுக்கனும்' அப்படியாக்கும் இப்படியாக்கும்னு என் மூளை கொஞ்சம் ஓவரா பீலிங்ஸ் வீட்டுச்சு! அதனால் கிளம்பி போனேன்.


நிகழ்ச்சி டிக்கெட் பார்த்தா.. அவ்வளவு பெரிசா இருக்கு. 4 பக்கம் புத்தகம் மாதிரி இருந்துச்சு. அதை படிக்க முயற்சி செய்தோம். முயற்சி முயற்சியாகவே தான் இருந்தது. அதை தாண்டி ஒன்னு செய்ய முடியல. ஏனா, கருப்பு backgroundல் light சிவப்பு கொண்ட எழுத்தில் வார்த்தைகள் இருந்தால் எப்படி படிப்பது? அதுவும் font size 11 மாதிரி தான் இருந்துச்சு!


டிக்கெட்-டை வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம். இருபது பேருக்கு மேல் யாரும் கிடையாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் 630. அப்ப மணி 620. ஆஹா கூட்டமே இவ்வளவுதானே என்று மனம் 'பக்'கென்றது. ஆனால் பரவாயில்லை... கூட்டம் நிறையவே வர ஆரம்பிக்க தொடங்கியது அதுக்கு அப்பரம். கொஞ்ச நேரத்தில house full ஆயிடுச்சு!! 630 நிகழ்ச்சி ஆரம்பிக்கவேண்டும், ஆனா நம்ம தமிழ்ர்கள் முறைபடி நிகழ்ச்சி 7 மணிக்கு கரக்ட்டா ஆரம்பிச்சுட்டாங்க!!

நிகழ்ச்சியில் ஒரு structure இருந்துச்சு. அதாவது ஒரு opening, closing.. இடையிடையே ஓரளவுக்கு சுமுகமாக நடந்தேறியது போட்டிகள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் அவர்கள் finale நடனம் ஒன்னு ஆடனும். அவர்களும் ஆடினார்கள். கடைசி பாடலாக 'secret of success' பாடலுக்கு ஆடியது நல்ல ஐடியா. ஆனால், மற்றபடி ரசிக்கும் வண்ணம் ஒன்னுமே இல்ல. மேடையே ரொம்ப சின்னதுதான். 5 பேருக்கு மேல ஆடமுடியாது. அதுலபோய் 25 ஆடின்னா என்ன அர்த்தம்!


மைக் செட், டிஸ்கோ effect lights என எவ்வளவோ செலவு பண்ணவங்க, அரங்கத்தை அலங்கரிக்க செலவு செய்யாதது ஏன் என்று தெரியவில்ல. அட, ஒன்னும் பண்ணாம இருந்தாலும் பரவாயில்ல. decoration என்ற பெயரில் 4 சேலையை கதவு ஓரமா தொங்கவிட்டது சரியான காமெடியா இருந்துச்சு. நான் முதல நினைச்சு ஏதோ அவங்க வீட்டு ஈரத்துணிய காய போட்டு இருக்காங்கன்னு!!


பார்வையாளர்கள் குறைந்த பச்சம் எதிர்பார்ப்பது, மேடையில் நடப்பதை கேட்க வேண்டும் என்பதே. ஆனால், அதுவே படு மோசமா இருந்துச்சு. ஒன்னுமே சத்தமா சுத்தமா கேட்கலை!! மைக்கை 2 km தூரத்துல வச்சு பேசினா இப்படி தான் ஆகும்!! எப்படியோ ஒரு சமயத்துல லேசா கேட்டுச்சு, மேடையில நடந்த நாடகத்தில் ஒரு பொண்ணு டையலாக் பேசினுச்சு "என் காதுல ஒன்னுமே விழலையே". என் பக்கத்துல இருந்த தோழி கொஞ்ச சத்தமா "எங்களும் தான்ய்யா!" என்றாள். ஹாஹாஹா... நாலு அஞ்சு வரிசைகளுக்கு முன்னாடி இருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்த்து சிரிச்சுட்டாங்க.

நிகழ்ச்சி ஆரம்பித்து 45 நிமிடங்களிலே படு 'போர்' ஆகிவிட்டது. முக்கி விக்கி சிக்கி நிகழ்ச்சிய பார்த்தோம். எழுந்துச்சு போயிடலாம்னு இருந்தோம். ஆனா, எங்க நண்பன் ஒருத்தன் 'அதுலாம் வேணாம். நல்லா இருக்காது. மரியாதையா இருக்காது' என்றான். சரி என்ன செய்ய, நட்புக்கும் படித்த கல்லூரிக்கும் மரியாதை கொடுத்து உட்கார்ந்து நிகழ்ச்சிய பாத்தோம்.

காலம் காலமா நடக்கும் நிகழ்ச்சி தான்! ஆனால் அதில் ஏதேனும் வித்தியாசம் காட்டியிருந்திருக்கலாம். வெறும் பாடல் போட்டி என்று இல்லாமல்.. for eg) ஒரு theme கொண்ட பாடல் போட்டியாக இருந்திருக்கலாம். போட்டியில் இருந்த ஆடல்களும் சரி பாடல்களும் சரி.. ரசிகர்களை ஆட வைக்காமல் தூங்க வைத்துவிட்டன!! என்ன கொடுமை சார் இது!

இது எல்லாம் பரவாயில்ல.. ஆனா மேடையில போட்டிக்கான வந்த நீதிபதிகளுக்கு அன்பளிப்பு கொடுத்தபோது நடந்த விஷயம்தான் ரொம்ப பாவம்!! நீதிபதிகளை மேடையில் கூப்பிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பு எங்கே என்று தெரியவில்லை. பாவம்!!

'என்ன ஒன்னும் இல்லை' என்று முகபாவத்துடன் நின்ற நீதிபதியையும் 'எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல' என்று முகபாவத்துடன் நின்ற கல்லூரி தலைமையாசிரியரையும் (இவர் தான் நீதிபதிகளுக்கு பரிசு கொடுக்கவேண்டியவர்) பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு!! ரொம்ப அவமானமா போச்சு!!


நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் பாணியில் சிறிது வித்தியாசம். சதாரணமா 2 host மேடையில் நின்னு பேசுவாங்க. ஆனா அப்படி இல்லாமல். ஒரு அரசருக்கு கலைகள் என்றாலே பிடிக்காது. அவருக்கு எப்படி இந்நிகழ்ச்சியில் வந்த பாடல்களையும் ஆடல்களையும் பார்த்து கலையின் மீது ஆர்வம் வந்தது என்பதுபோல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வித்தியாசமாக இருந்தது. ஆனால், பேசியது ஒன்னுமே கேட்காததால் சுத்தமா அடிப்பட்டு போச்சு!!

பேசாம நாங்க நண்பர்கள் எல்லாம் அஞ்சப்பர் கடையில போய் கோழி பிரியாணி சாப்பிட்டு இருக்கலாம், டிக்கெட் வாங்கிய காசுக்கு பதிலா. ஒரு மாதத்திற்கு முன்னால் இந்நிகழ்ச்சியின் விளம்பரத்தை பார்த்தேன் - "எல்லாரும் கண்டிப்பா வரனும். நிகழ்ச்சியி கடைசியில ஒரு twist இருக்கு!"

நிகழ்ச்சி நேரத்தில் முக்காவாசி சமயம் பக்கத்தில் இருந்த தோழியிடம் பேசி கொண்டே இருந்ததால்( அப்பரம்.. 'போர்' அடிச்சா.. இப்படி தான் ஆகும்), ஒரு பக்கமா உட்கார்ந்து பேசிட்டேன். அதனால, இடுப்பு ஒரு பக்கமா twist ஆயிடுச்சு!! இந்த twist தவிர வேற எந்த twistயை பார்க்கல... மனசுலையும் ஒன்னும் நிக்கல்ல!!

6 comments:

Divya said...

\\அதனால, இடுப்பு ஒரு பக்கமா twist ஆயிடுச்சு!! இந்த twist தவிர வேற எந்த twistயை பார்க்கல... மனசுலையும் ஒன்னும் நிக்கல்ல!!\\

:)) ROTFL!!

Nicely written !!!

Thamizhmaangani said...

//Nicely written !!!//

நன்றி திவ்ஸ்!!

Dreamzz said...

//இந்த twist தவிர வேற எந்த twistயை பார்க்கல... மனசுலையும் ஒன்னும் நிக்கல்ல!!/

lol onrum solradhuku illa!

SanJai said...

யக்கா..அஞ்சப்பர்ல கோழி பிரியாணி திங்க போறதால ஆன் தி வே ல ஒரு க்வாட்டர் அடிச்சிட்டு போனியா? மப்பு தெளியாம எழுதி இருக்க.. ஏகப்பட்ட எழுத்துப் பிழை...

மேட்டர் நல்லா இருக்கு.. அதை க்வாட்டர் அடிச்சிட்டு எழுதினது தான் நல்லா இல்லை. :))

Thamizhmaangani said...

//ஆன் தி வே ல ஒரு க்வாட்டர் அடிச்சிட்டு போனியா? மப்பு தெளியாம எழுதி இருக்க.. ஏகப்பட்ட எழுத்துப் பிழை...//

நீங்க வாங்கி கொடுத்த க்வாட்டர் அது! அதான் சரியான தலவலிய கொடுத்தது. அதனால வந்து எழுத்து பிழை! அவ்வ்வ்வ்வ்

Karthik said...

//பேசாம நாங்க நண்பர்கள் எல்லாம் அஞ்சப்பர் கடையில போய் கோழி பிரியாணி சாப்பிட்டு இருக்கலாம்

நான் இப்போ அதைத்தான் பண்ணப் போறேன்...
:))