முதல் நாள் முதல் காட்சி, அஜித் படம்னா சும்மாவா!! அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கிட்டோம்!! ஒரே கூட்டம். வெள்ளிக்கிழமை மதியம் காட்சிக்கு இவ்வளவு கூட்டமா (யாருமே வேலைக்கு போகலைனு நினைக்கிறேன்.) பள்ளி விடுமுறை என்பதால் சின்ன பசங்கதான் வருவாங்க என்று நினைத்தேன். அங்கபோய் பார்த்தா ஒரே அஜித் ரசிகர்கள்!(கொஞ்சம் ரகளை செய்யும் ரசிகர்ள் தான்) ஒரே விசில் சத்தம்..... எங்க அம்மா சும்மாவே டென்ஷன் பார்ட்டி. இந்த சத்தத்துல எங்க அம்மா செம கடுப்புல இருந்தாங்க வேற.
சரி கதை, அதே பழைய பில்லா கதை தான். திரைக்கதை கொஞ்சம் மாற்றம் பெற்று இருந்தது. ஆனால் விறுவிறுப்பு கிடையாது. இரண்டாம் பாதியில் படம் ரொம்ப 'போர்' அடித்து விட்டது. லாஜிக் பல இடங்களில் இடித்தது.
இருந்தாலும் 2007 வருடத்தில் ரொம்பவே எதிர்பார்த்த படம் ஆச்சே!! 'தலை'க்கு ரொம்பவே முக்கியமான படம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு 'stylish' படம் வந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. படம் படு ஸ்டைலாக இருந்தது. இடம், சண்டை காட்சிகள், கார் பந்தயம், போடும் உடைகள் என்று எல்லாம் வடிவிலும் படு ஸ்டைலாக வருகிறார் தல!!
வசனங்களும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது.
"அந்த வேலுக்கு ஆறு தல. நான் ஒரே தல.' என்று சொல்லும்போது என் சித்தி பெண்ணு (12 வயது தான்) கைதட்டுது தட்டுது.... ஒரே குஷியாகிவிட்டது அவளுக்கு! பயங்கர விசில் சத்தம். 'தல'க்கு ரசிகர்கள்விட ரசிகைகள் அதிகமாகும் இந்த படம் மூலம்... அது மட்டும் நிச்சயம்! பாடல்கள் நல்லா இருக்கு! பிண்ண்ணி இசை ரொம்பவே அழகா இருக்கு. யுவன் தன் வேலையை நன்றாகவே செய்துள்ளார்.
பிரபு, ரகுமான்... மற்ற மலேசியா நடிகர்கள் என்று பலரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் சில இடங்களில் பிரபு வரும்போது சிரிப்பு வந்துவிடுகிறது... அவர் சீரியஸா நடித்தால்கூட... என்ன கொடுமை சரவணா இது!!! நயன்தாரா... என்ன இப்படி மெலிஞ்சு போச்சு புள்ள! என்னதான் செய்தாளே, புள்ள படு சிலிமாக வருது... ஆனால் நடிப்புக்கு ஒன்னும் வேலை கிடையாது. நயன் போடும் உடைகள் சகிக்கவில்லை. இதில் கொடுமை, நயன் நீச்சல் உடையில் வேற வரும்... கொடுமை கொடுமை (சிம்பு காதுல.. புகை புகையா வர போகுது சாமியோ!!) நமிதாவும் தேவையில்லை. ஆனால் அதுக்கும் ஒரு பாட்டு, சில வசனங்கள். இது முழுக்க முழுக்க அஜித் படம், ஆகா பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை!!
படம் பார்க்க போது படு ஸ்டைலாக இருக்கும், ஆனால் மற்றபடி ஒன்னும் புதிது அல்ல.எங்க அம்மாவுக்கு படம் சுத்தமா பிடிக்கல. ஆனா அவங்க சொன்னது 'இந்த படம் மூலம் இரண்டே இரண்டு நல்ல விஷயம் நடக்கும். கறுப்பு 'கூலிங்' கண்ணாடிகளின் விற்பனை அதிகரிக்கும். அடுத்து, மலேசியாவுக்கு போகும் சுற்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.' அது உண்மை தான். ஏனா... மலேசியாவை ரொம்பவே அழகாவே படம் பிடித்து காட்டியுள்ளனர்!!
பில்லா- 'ஓகே' லா
6 comments:
:)
நன்றி சிவா
// நயன்தாரா... என்ன இப்படி மெலிஞ்சு போச்சு புள்ள! என்னதான் செய்தாளே, புள்ள படு சிலிமாக வருது... ஆனால் நடிப்புக்கு ஒன்னும் வேலை கிடையாது. நயன் போடும் உடைகள் சகிக்கவில்லை. இதில் கொடுமை, நயன் நீச்சல் உடையில் வேற வரும்... கொடுமை கொடுமை (சிம்பு காதுல.. புகை புகையா வர போகுது சாமியோ!!) நமிதாவும் தேவையில்லை. ஆனால் அதுக்கும் ஒரு பாட்டு, சில வசனங்கள். இது முழுக்க முழுக்க அஜித் படம், ஆகா பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை!!
ஹலோ.. படம் வேஸ்ட்டுன்னு நீங்களே சொல்லிப்புட்டிங்க.. நயனும்,நமியும் இல்லாட்டி நாங்க படத்துக்கு போயி என்னங்க்க பிரயோசனம்..?.ஹிஹி..:))
//நயனும்,நமியும் இல்லாட்டி நாங்க படத்துக்கு போயி என்னங்க்க பிரயோசனம்//
ஹஹா.. இதுவும் சரிதான்!!
//
இது முழுக்க முழுக்க அஜித் படம், ஆகா பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை!!
//
என்ன ஒரு அநியாயமான விமர்சனம்!!
//
ரசிகன் said...
நயனும்,நமியும் இல்லாட்டி நாங்க படத்துக்கு போயி என்னங்க்க பிரயோசனம்..?.ஹிஹி..:))
//
ரிப்பீட்டேய்ய்ய்
Post a Comment