Dec 11, 2007

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?


மாற்றம் கண்டுள்ளது
பல விஷயங்களில்
மாற்றம் காணவேண்டிய
சில விஷயங்களில்
கண்டுகொள்ளாமல்
இருக்கிறது
சிங்கார சென்னை!
சில வருடங்களில்
எத்தனையோ வளர்ச்சி
மெய்சிலிர்க்க வைக்கும்
அடுக்குமாடி கடை அங்காடிகள்
சென்னைக்குள் ஒரு
நியூ யோர்க் பார்த்தேன்
சென்னைக்குள் ஒரு
ஹாங் காங் பார்த்தேன்!

வசதிகள் பெருகிவிட்டன
சினிமா டிக்கேட் முதல்
சாப்பிடும் பிட்சா வரை
'door delivery'!


பணத்தை தண்ணீர் போல செலவு
செய்யும் ஒரு கூட்டம்
தண்ணீர்க்குகூட வசதியில்லாத
இன்னோரு கூட்டம்
மின்சாரம் சரிவர இல்லாத
இடங்களில்
எதற்காக
கம்பீரமாக நிற்கின்றன
ரசிகர் மன்றங்களின் பலகைகள்?

வீட்டுக்கு வீடு வாசப்படி
இருக்கிறதோ இல்லையோ
தெருவுக்கு தெரு 'டாஸ்மார்க்'!
மோட்டார் சைக்கில்
பாதுகாப்பு தலைகவசம்
தலையில் தானே அணிய வேண்டும்
அதை சும்மா பின்னாடி
வைப்பது ஏனோ?
சட்டம் தன் கடமையை 'செய்தது'
மரத்தின் நிழலடியில் இதையல்லாம்
கண்டுகொள்ளாத
காவலர்கள் ரூபத்தில்....

பள்ளிக்கு செல்லும் வயதில்
பணிக்கு செல்லாதே
ரொம்ப பிடித்த வாசகம்!
பெண்ணின் திருமண வயது 21-வாசகம்
போட்டிருக்கும் ஆட்டோவில்
நான் ஏறவே இல்லை!!
எத்தனையோ வாசகங்கள் இருந்தபோதிலும்
எனக்கு சிரிப்பை வரவழைத்தது
தினமும் சாலையில் செல்லும்போது
மூன்று முறையாவது கேட்டுவிடும்
'வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?'



8 comments:

Anonymous said...

நல்லாகீதுப்பா!!

நாகை சிவா said...

நியாயமான ஆதங்கம் தான் :)

சொல்லிட்டு வராட்டி நீ போய் சொல்லிட்டு வரீயா னு கேளுங்க...

அது என்ன காரணம் 21 வயது ஆட்டோ ஏறுவது இல்லை என்பது.. அது ஒரு விழிப்புணர்வுக்காக தானே

FunScribbler said...

என்னங்க சிவா, 21 வயசு ரொம்ப சின்ன வயசுங்க....

Divya said...

\\பள்ளிக்கு செல்லும் வயதில்பணிக்கு செல்லாதேரொம்ப பிடித்த வாசகம்!பெண்ணின் திருமண வயது 21-வாசகம்போட்டிருக்கும் ஆட்டோவில்நான் ஏறவே இல்லை!!\\

புரியுது..புரியுது.......உங்க வயது திருமண வயதில்லன்றீங்க!!

ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருந்தது உங்க பதிவு படிக்கிறதுக்கு!

Divya said...

\\பணத்தை தண்ணீர் போல செலவுசெய்யும் ஒரு கூட்டம்தண்ணீர்க்குகூட வசதியில்லாதஇன்னோரு கூட்டம்\\

வாவ், என்னா ஒரு ஒப்பிடுதல்!!

FunScribbler said...

//ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருந்தது உங்க பதிவு படிக்கிறதுக்கு!//

நன்றி திவ்யா!

//புரியுது..புரியுது.......உங்க வயது திருமண வயதில்லன்றீங்க!!//

ஹாஹா... அடடே என்ன இதுப்பா.. இந்த ஆட்டத்துக்கு நான் வரல்ல..ஹிஹி

நாகை சிவா said...

//என்னங்க சிவா, 21 வயசு ரொம்ப சின்ன வயசுங்க....//

சின்ன வயசு தான். ஆனால் நம் நாட்டில் அந்த வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது. இன்னும் கூட இருக்கின்றது. குறைந்தப்பட்சம் 21 வயதில் தான் ஒரு பெண் அனைத்து விதத்திலும் திருமணம் பந்தத்திற்கு என்ற நிலையை அடைவதற்கு தயார் ஆகின்றாள், அதற்கு முன்பு திருமண செய்வது தவறு என்பதை விளக்கும் வாசகம் தான் பெண்ணின் திருமண வயது 21 என்பது.

தவறு இருந்தால் திருத்தவும்.

FunScribbler said...

21 என்பதே ரொம்ப சின்ன வயது. அதுக்குள்ளே கல்யாணமாம்!! நீங்க சொன்ன கருத்திலும் உண்மை உண்டு சிவா. நானும் பார்த்தேன்.. சின்ன பெண்ணுங்கலாம் இடுப்புல ஒன்னு வயத்துல ஒன்னு என்று இருக்கிறார்கள்.பார்க்க ரொம்ப கஷ்டமாதான் இருந்துச்சு..