Mar 8, 2008

அத்தை மகன் சிவா (part 3)

முந்தைய பாகங்களை படிக்க, இங்க கிளிக் செய்க
அத்தை மகன் (part 1)

அத்தை மகன் (part 2)

(தொடர்ச்சி)..

சூரியன் தன் வேலையை முடித்து கொண்டு மறையும் வேளையில் தெரிந்த ஒரு அழகான இருள் கலந்த வெளிச்சம் வானத்தில் பரவி இருந்தது. கோபுரங்கள்போல் கம்பீரமாய் நின்ற கட்டடங்கள், நீல வண்ண கம்பளம்போல் ஓடிய கடல்நீர், வரிசையாய் சென்ற வாகனங்கள் என சிங்கையின் அழகை ராட்டினத்திற்குள் உட்கார்ந்து ரசித்து கொண்டிருந்தான் சிவா.

"என்னது சிவா ஒன்னுமே சொல்லாம இருக்கான்" என்று சீதாவின் மனம் படபடத்தது. அன்று சிவா ரொம்பவே அழகாக இருந்தான். வெள்ளை நிற சட்டை அவன் மாநிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. மீசையை கொஞ்சம் டிரிம் செய்து இருந்தான். மாறாத அந்த புன்னகை, அதில் சிறிதாய் விழும் கன்னத்தில் குழி. முகத்தில் தெரிந்த நிதானம். சுற்று சூழலை ரசித்துகொண்டிருந்த அவன் கண்கள், ஏதோ சொல்ல துடித்த அவனது உதடுகள் என்று அழகை பட்டியலிட்டு கொண்டே போகலாம்!

ஆனால் சீதா தான் ரசிக்க முடியாமல் திண்டாடினாள்! என்ன சொல்ல போகிறான் என்ற மனதுடிப்பு, போன semesterரில் படிக்காம போன calculus பரிட்சைக்குகூட இந்த அளவுக்கு பயம் இல்லை.

(ஆமா ஆமா.. காதலும் படிக்காம எழுதும் பரிட்சை தானே..)

அவஸ்தை தாங்க முடியாமல் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள் தனது கைபேசியை அப்படியும் இப்படியும் கைகளில் மாற்றி மாற்றி.

"எதாச்சு சொல்லேண்டா" என்று சீதாவின் உள்மனம் கோபம் கொண்டது.

அப்போது சிவா,
"ரொம்ப அழகா இருக்கே!" என்றான்.

சீதா ஒன்றும் புரியாதவளாய் ஆச்சிரியத்தில் தன் புருவம் உயர்த்தி சிவாவை தலை நிமிர்ந்து பார்த்தாள். சிவா ராட்டினத்தின் கண்ணாடி சன்னல் வழி பார்த்து

"ரொம்ப அழகா இருக்கே, சிங்கப்பூர்!" என்று சுற்று புறத்தை பார்த்து மறுபடியும் சந்தோஷத்தில் கூறினான்.

'ச்சே..'' என்று மனம் லேசாய் வருத்தப்பட்டது.

"சிவா?" என்றாள் தயக்கத்துடன்.

"ம்ம்ம்..." என்றான் சிவா.

"ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு வந்தே.. " என்று சீதா சொல்லி முடிக்கையில், சிவா,

"ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன். ஆனா எப்படி சொல்லறதுதான் தெரியல... நேத்திக்கு அத்தை, கல்யாணம் அப்படி இப்படினு பேச்சை ஆரம்பிச்சுட்டாங்க. சீதா, நான் உண்மைய சொல்லிடுறேன். நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன். அவகிட்ட சொல்லலை! எப்படி சொல்றதுனு தெரியல.. நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்" என்று உடைத்துவிட்டான் உண்மையை மட்டுமல்ல சீதாவின் மனதையும் சேர்த்தே.

குழப்பம், கோபம், அழுகை அழுகையாய் வந்தது சீதாவுக்கு. மனம் கலங்கியது. வார்த்தைகள் தொண்டை குழியில் அடைக்க கஷ்டப்பட்டு பேச ஆரம்பித்தாள்,

"காதலா? நீயா... " என்று சீதா ஆச்சிரியமாக கேட்டாள்.

"இல்ல சீதா.. உனக்கு shockஆ தான் இருக்கும்... இருந்தாலும் நீதான் எனக்கு உதவி பண்ணனும். அவகிட்ட சொல்லனும். ஒரு ஐடியா கொடுக்கனும்." என்று சிவா சீதாவை பார்த்து கெஞ்சினான்.

தன் அழுகையை கட்டுபடுத்தி கொண்டு, "யாரு அந்த பொண்ணு, கோமதியா?" என்றாள்.

"ச்சே... ச்சே அவ இல்ல.. " என்று புதிர் போட்டான்.

"அப்புறம் வேற யாரு... நம்ம கிராமத்து பொண்ணா?" வினாவினாள் சீதா.

"ஊருல இருக்குற பொண்னு தான்." என்று மறுபடியும் ஒரு முறை சீதாவின் மனதை காயப்படுத்தினான் சிவா. இதற்கு மேல் சீதாவிற்கு பேச வார்த்தை வரவில்லை. காதல் சொல்லாமலேயே இறந்துவிட்டதே என்ற சோக கடலில் மூழ்கினாள் சீதா.

"நான் ஒரு ஐடியா வச்சு இருக்கேன். கேளு சீதா.. நான் அவளுக்காக ஒரு பரிசு பொருள் வாங்கி வச்சு இருக்கேன். அத அவகிட்ட அனுப்பபோறேன். அது மூலம் அவ என் காதலை புரிஞ்சுப்பா.. இந்த ஐடியா ஓகே தானே? " என்று சந்தோஷமாய் சிவா ஆர்வத்துடன் கேட்டான்.

சரி என்பதுபோல் மட்டும் தலையாய் லேசாக ஆட்டினாள் சீதா. 42 நிமிடங்கள் முடிந்துவிட்டன. ராட்டினத்திலிருந்து இருவரும் கீழே இறங்கினர். சிவா மகிழ்ச்சியுடன் சீதா வருத்தத்துடன் வீடு திரும்பினர். தன் அறையினுள் சென்ற சீதா சோகத்தையும் துக்கத்தை அழுகையால் தீர்த்துவிட்டாள். மனதில் விழுந்த இடி கண்களில் மழையாய் பொழிய, கண்கள் சிவந்தன. முள் காதலை குத்தியது. மனசு வலித்தது. தூங்காமல் இதை பற்றியே நினைத்து அழுது கொண்டிருந்தாள். கோபம் யார் மேல் காட்டுவது? சிவாவின் மீதா காதலின் மீதா அல்லது தன் மீதே காட்டுவதா என்று புரியாமல் கதறினாள். வீட்டில் இருக்க பிடிக்கவில்லை சீதாவுக்கு. அதனால் தன் தோழி வீட்டில் இரண்டு நாள் தங்கினாள், group project செய்கிறோம் என்று அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு.

இரண்டு நாள் கழித்து வீடு திரும்பினாள். மனம் முழுமையாக ஆறுதல் அடையாவிட்டாலும் ஏதோ ஒரு அளவுக்கு மனம் சாந்தி அடைந்து இருந்தது. வீட்டின் வெளியே சிவாவின் காலணி இல்லை. சீதா வீட்டுக்குள் நுழைந்ததும், "அம்மா.. சிவாவோடு shoes வெளிலே காணும்? எங்க போய் இருக்காரு? என்றாள் தன் பையை சோபாவில் வைத்துவிட்டு.

"சிவா.. இப்ப தான் கிளம்பி போனுச்சு.. அவனுக்கு office quarters கிடைச்சுட்டு அதான் அங்க கிளம்பிட்டான். " என்று சீதாவின் அம்மா பதிலளித்தார்.

"ஓ எங்ககிட்டலாம் சொல்லிட்டு போக மாட்டாரோ..." என்று சற்று கோபம் கலந்து நக்கலுடன் கேட்டாள் சீதா.

"அட நீ ஒருத்தி.. அவன் உன்கிட்ட சொல்லிட்டு போகனும்னு இவ்வளவு நேரமா காத்திருந்தான். உன் handphoneக்கும் அடிச்சு பார்த்தான். நீ switch offல வச்சுருந்தே. உன் friend வீட்டுக்கு அடிச்சு பார்த்தா.. நீ கிளம்பி வந்துட்டேனு சொன்னா.."என்றாள் சீதாவின் அம்மா சற்று முறைத்து கொண்டே.

மனம் விரும்பாவிட்டாலும் கால்கள் தானாவே சிவாவின் அறையை நோக்கி சென்றன. சுத்தமா அவனது பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டான். சீதாவின் மனம் போல் அறையும் காலியாகவே இருந்தது. சீதாவின் பார்வை ஒரு முறை அறை முழுவதும் சுற்றிவந்தது. அப்போது அங்கு மேசையில் ஒரு பார்சல் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தாள். அது சிவா தன் காதலிக்கு அனுப்பவேண்டிய பார்சல். அதை அங்கேயே மறந்து வைத்துவிட்டான். வேண்டாம் என்று மூளை சொன்னாலும் சரி போய் கொடு என்று மனம் சொல்லியது.

"அம்மா.. சிவா இங்க மேசையில ஏதோ ஒன்னு வச்சுட்டு போயிட்டாரு." என்று அறையிலிருந்து சமையலறையில் இருக்கும் அம்மாவுக்கு கேட்கும்படி கத்தினாள்.

"அடடே அப்படியா... சரி சிக்கிரம் போ.. கீழ தான் car waiting areaவுல இருக்கும் சிவா. அங்கதான் ஆபிஸ் காரு வருதுனு சொன்னான்... சிக்கிரம் போ டி." என்று சீதாவின் அம்மா சொல்லி கொண்டே அறைக்குள் வந்தார்.

"சரி சரி.. போறேன்.. " என்றாள் சீதா சற்று வேண்டாவெறுப்பாக.

மெதுவாக நடந்து car waiting areaவுக்கு சென்றாள். அங்கு சிவா உட்கார்ந்து இருந்தான். சீதா வருவதை பார்த்த சிவா எழுந்து நின்று அவளை நோக்கி நடந்தான் புன்னகையுடன், "ஏய் சீதா... எப்படி இருக்கே..இரண்டு நாளா ஆள காணும்.project work எல்லாம் முடிச்சாச்சா... " என்றான்.

"ம்ம்..." என்று சீதா பார்சலை சிவாவிடம் நீட்டினாள்.

"என்னது.." என்றான் சிவா.

"உன் காதலிக்கு ஏதோ பரிசு பொருள் அனுப்ப போறேனு சொன்னே... அத மறந்து வச்சுட்டு வந்துட்டே.. " என்று பார்சலை அங்கே இருந்த பெஞ்சில் வைத்துவிட்டு நடையை கட்டினாள்.

"ஏய் சீதா..wait..என் காதலிக்கிட்டதான் கொடுத்துட்டு வந்தேன்..."என்று குழப்பினான் சிவா.

சிரித்து கொண்டே, " நீ தான் பா அது!" என்று கூறினான்.ஒன்றும் புரியவில்லை சீதாவிற்கு.

"நானா...?" சீதாவின் முகம் ஆச்சிரியத்தின் உச்சிக்கு சென்றது.

"ஏய்..ஓகே பா...i will stop my game. ம்ம்..நான் உன்ன காதலிக்கிறேன்." என்று அமைதியாய் சொன்னான் சிவா, ஆச்சிரியத்தால் விரிந்த சீதாவின் கண்களை பார்த்து.

"நீ என்னசொல்லுற சிவா... நீ என்னையவா but அந்த கிராமத்து பொண்ண காதலிக்குறேனே..சொன்னியே?" என்று குழம்பியவளாய் சீதா.

"ஆமா... ஊருல இருக்கானு சொன்னேன். சிங்கப்பூருல இருக்கானு சொல்லவந்தேன்." என்று 'சிங்கப்பூருல' என்ற வார்த்தையை அழுத்தி கூறினான். சீதாவின் மனம் பறந்தது. பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன சீதாவின் வயிற்றுக்கும் துண்டைக்கும். தன் காதலை சொல்லவந்து சிவாவே வந்து சொல்கிறான் என்று சீதாவிற்கு ஆனந்த தாண்டவம் ஆடவேண்டும் என்று இருந்தது.

"சரி நான் தைரியமா சொல்லிட்டேன்... இப்ப நீ சொல்லு." என்றான் சிவா.

"நான் என்ன சொல்ல... " என்று அப்பாவியாய் சீதா.

"ஏய் சீதா.. எனக்கு எல்லாம் தெரியும். நீ தான் என்ன முதல காதலிக்க ஆரம்பித்தே... all details i know ma" என்று ஹீரோ பேசுவது போல் பேசியதும் சீதாவிற்கு உலகமே சுற்றியது.

" அது உனக்கு எப்படி தெரியும்" என்றாள் சீதா.

"உன் blog தான் காட்டி கொடுத்துச்சு." என்றான் சிவா.

"blogல..எனக்கும் ஒன்னு இருக்குனு உனக்கு எப்படி தெரியும்? ஆனா.. என் blogக்குலக்குட என் பெயரையோ ஊரையோ போடலையே. அப்பரம் எப்படி.. என் friendsக்குகூட தெரியாதே. அப்பரம் எப்படி சிவா உனக்கு மட்டும்...தெரியும்" என்று சஸ்பென்ஸ் தாங்க முடியாதவளாய் சீதா கட கடவென்று பேசி முடித்தாள்.

" அன்னிக்கு உன் லேப்டோப் யூஸ் பண்ணபோது உன்னோட blogger.com இருந்து நீ logout பண்ணல. என்னடா இதுனு போய் பார்த்தா.... ஹாஹா... அப்பரம் எல்லாம் புரிஞ்சுச்சு எனக்கு!" என்று சிவா நடந்ததை கூறினான்.வெட்கம் மெதுவாய் அவள் முகத்தில் பரவியது.

"ஏய் என்ன இருந்தாலும்.. நீ புத்திசாலி மா.. இத்தன வருஷமா என்ன காதலிக்குற.. ஒரு நாள்கூட என்கிட்ட வந்து சொல்லல.. கள்ளி!" என சிவா, சீதாவின் பறந்துகிடந்த கூந்தலை சரிசெய்து பின்னால் போட்டு, தன் கைகளால் சீதாவின் கன்னங்களை தாங்கி,

"but seriously ma...நீ என்னைய எவ்வளவு காதலிக்கிறேனு புரிஞ்சுகிட்டேன் உன் blog மூலமா.. எனக்காக என்னனமோ செஞ்சு இருக்கே... i really like it ma. நீ ஊருக்கு வரும்போது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். உன்கிட்ட நிறைய பேசனும்னு ஆசையா இருக்கும். ஆனா ஏதோ கொஞ்ச பயமா இருக்கும். எனக்கும் உன்மேல அப்பவே ஆசை இருந்துச்சு. உன்கிட்ட சொல்லதான் பயம். நீ இங்கயே வளந்த பொண்ணு வேற.. தப்பா என்னய நினைச்சுடுவீயோதான் அப்ப சொல்லல... இப்ப சொல்லுறேன் i love you சீதா!"

இப்படி நெருக்கமாக நின்று பேசியதும் சீதாவுக்குள் பல வேதியல் ஓட்டங்கள்! சீதா தன் கண்களால் அவன் கண்களை பார்க்க முடியவில்லை. காரணம் நாணம்!

சிவா, " சீதா, என்னய பாரேன் மா.. நான் இவ்வளவு அழகான்னு ஒரு நாளும் நினைச்சுது இல்ல. ஆனா நீ எழுதியத பார்த்து நான்கூட இவ்வளவு அழகானு ஆச்சிரியமா இருந்துச்சு.. எத்தன கவிதை... எத்தன விஷயங்கள். you are such a sweet girl ma!" என்றான் சிவா. அவன் பேச பேச வேதியல் மாற்றங்கள் ஓட, ஆட, தாண்டி குதித்து செல்ல, ஒரு கட்டத்தில் அழகாய் பூத்தது சீதாவுக்குள்.சிவா பேசி கொண்டே இருக்கும்போது, சீதா சிவாவை கட்டிபிடித்து,

"i love you மாமா
i love you மாமா
i love you மாமா" என்று பல முறை கூறினாள். எப்போதுமே சிவா என்று அழைத்த அவள் இன்று முதன்முதலாக மாமா என்று கூப்பிட்டாள். காதலில் மட்டும்தான் அழுகையும் சந்தோஷமும் சேர்ந்தே வரும். இக்கலவையின் வெளிபாடாய் ஒரு துளி கண்ணீர் சீதாவின் கண்களில்.

"என்னது மாமாவா?? எப்பலேந்து இது... இதுவரைக்கும் சிவா... இப்ப மாமாவா!!" என்று சிரித்தான் சிவா.

"ஏய் கிண்டல் பண்ணாதேப்பா..." என்று சீதா சிரித்து கொண்டே தன் கண்ணீரை துடைத்தாள்.

"சரி இப்ப என்ன பண்ணுறது..." என்றாள் சீதா.

"எதுக்கு" என்றான் சிவா.

"அப்பா அம்மாகிட்ட சொல்லவேண்டாமா..." என்றாள் சீதா.

அதுக்கு சிவா, " சொல்லுவோம்... உன் படிப்பு முடியட்டும் அப்பரம் நல்ல வேலைக்கு போ.. நான் இங்க என் வேலையில் நல்ல இடத்த பிடிக்கிறேன். இதுக்கு எல்லாம் இன்னும் 2 , 3 வருஷம் ஆகம்...அப்பரம் சொல்லலாம்..." என்றான்.

"அதுவரைக்கும்?" என்று சீதா கேட்டதற்கு, சிவா

"காதலிப்போம்!" என்றான்.

அதை கேட்ட சீதா சிவாவை இறுக்க கட்டி பிடித்து அவன் புன்னகை கன்னத்துக் குழியில் 'இச்' என ஒரு முத்தம் வைத்தாள்.

(தொடரும்... கதைய சொல்லலேங்க... காதலை சொன்னேன்!!)
--------------------------------------**************முற்றும்***-------------

கதையை படித்த அனைவருக்கும் எனது நன்றி!!!

24 comments:

Divya said...

வாவ்!!! அத்தை மகன் சிவா[மாமா] கதை சூப்பரு,

லாஸ்ட் பார்ட் ரொம்ப ரொமேண்டிக்கா இருந்தது.

இயல்பான, ரசிக்குமபடியான உரையாடல்கள் இனிமை!!

சிவா, பேச்சில் 'மா'போட்டு சீதாவை அழைப்பது மிக மிக அழகு!

கலக்கல்ஸ் தொடர் தமிழ், வாழ்த்துக்கள்!!

Divya said...

\\அவன் பேச பேச வேதியல் மாற்றங்கள் ஓட, ஆட, தாண்டி குதித்து செல்ல, ஒரு கட்டத்தில் அழகாய் பூத்தது சீதாவுக்குள்.\\

அட்டகாசம்!

Divya said...

\\மனதில் விழுந்த இடி கண்களில் மழையாய் பொழிய, கண்கள் சிவந்தன. முள் காதலை குத்தியது. மனசு வலித்தது. தூங்காமல் இதை பற்றியே நினைத்து அழுது கொண்டிருந்தாள். கோபம் யார் மேல் காட்டுவது? சிவாவின் மீதா காதலின் மீதா அல்லது தன் மீதே காட்டுவதா என்று புரியாமல் கதறினாள்\\

கதாபாத்திரத்தின் வலியை அப்படியே பிரதிபலித்தது ஒவ்வொரு வார்த்தையும்!

மங்களூர் சிவா said...

இப்பிடி படிக்காம கதை பண்ணிகிட்டிருந்தா பாஸ் பண்ணினா மாதிரிதான்.
சீதா சீதாவ சொன்னேண்.

மங்களூர் சிவா said...

//
அன்று சிவா ரொம்பவே அழகாக இருந்தான். வெள்ளை நிற சட்டை அவன் மாநிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. மீசையை கொஞ்சம் டிரிம் செய்து இருந்தான். மாறாத அந்த புன்னகை, அதில் சிறிதாய் விழும் கன்னத்தில் குழி. முகத்தில் தெரிந்த நிதானம். சுற்று சூழலை ரசித்துகொண்டிருந்த அவன் கண்கள், ஏதோ சொல்ல துடித்த அவனது உதடுகள் என்று அழகை பட்டியலிட்டு கொண்டே போகலாம்!
//

இன்னும் நிறைய எதிர்பாத்தேன்!!!!
but its OK.

:))))))))))))))))))

மங்களூர் சிவா said...

//
தன் அறையினுள் சென்ற சீதா சோகத்தையும் துக்கத்தை அழுகையால் தீர்த்துவிட்டாள்.
//

avvvvvv

//
கோபம் யார் மேல் காட்டுவது? சிவாவின் மீதா காதலின் மீதா அல்லது தன் மீதே காட்டுவதா என்று புரியாமல் கதறினாள்
//
awwwwwwwwwwwwwwww

மங்களூர் சிவா said...

//
மனம் விரும்பாவிட்டாலும் கால்கள் தானாவே சிவாவின் அறையை நோக்கி சென்றன.
//

மேக்னெடிக் பவர்
:))))))

மங்களூர் சிவா said...

//
அறையிலிருந்து சமையலறையில் இருக்கும் அம்மாவுக்கு கேட்கும்படி கத்தினாள்.
//

as usual ஆ பேசினாள் அப்டின்னு மென்ஷன் பண்ண விட்டுட்டீங்களே!!!

மங்களூர் சிவா said...

நல்ல முடிவு.

SanJai said...

//(தொடரும்... கதைய சொல்லலேங்க... காதலை சொன்னேன்!!)
--------------------------------------**************முற்றும்***-------------//

அற்புதமான திருப்பத்துடன் கதையை முடித்திருக்கிங்க. :))

SanJai said...

//லாஸ்ட் பார்ட் ரொம்ப ரொமேண்டிக்கா இருந்தது.//

கண்டிக்க ஆளில்ல.. அதான் இப்படி.. ஊருக்கு வாங்க அப்பாகிட்ட சொல்லி வைக்கிறேன். :)

Thamizhmaagani said...

//லாஸ்ட் பார்ட் ரொம்ப ரொமேண்டிக்கா இருந்தது.//

எல்லாம் உங்க கதைய பாத்து வந்த inspiration.

//கலக்கல்ஸ் தொடர் தமிழ், வாழ்த்துக்கள்!!//
நன்றி திவ்ஸ்..

Thamizhmaagani said...

//அற்புதமான திருப்பத்துடன் கதையை முடித்திருக்கிங்க. :))//

நன்றி சஞ்சய்!

Thamizhmaagani said...

//கண்டிக்க ஆளில்ல.. அதான் இப்படி.. ஊருக்கு வாங்க அப்பாகிட்ட சொல்லி வைக்கிறேன். :)//

உங்க கொலை வெறி இன்னும் அடங்கலையா!!

ரசிகன் said...

//சூரியன் தன் வேலையை முடித்து கொண்டு மறையும் வேளையில் தெரிந்த ஒரு அழகான இருள் கலந்த வெளிச்சம் வானத்தில் பரவி இருந்தது. கோபுரங்கள்போல் கம்பீரமாய் நின்ற கட்டடங்கள், நீல வண்ண கம்பளம்போல் ஓடிய கடல்நீர், வரிசையாய் சென்ற வாகனங்கள் என சிங்கையின் அழகை //
இந்த வர்ணனைகளை ரொம்பவே ரசித்தேன். குறிப்பா.. இயற்கையை மட்டுமில்லாம,வரிசையா நகரும் வாகனங்களும் சிங்கையின் அழகுதான்னு சொன்னது யதார்த்தம்.சிறப்பா முடிச்சிருக்கிங்க.
கதையின் வசனங்கள் நல்லாயிருக்கு:) வாழ்த்துக்கள்

குசும்பன் said...

அருமையாக இருக்கு மீதி பாகத்தையும் படிக்கிறேன் பிறகு.

Shwetha Robert said...

Wow!!!!
Write up is really good,
dialogue parts are fantastic & realistic:))

Thamizhmaangani said...

//Wow!!!!
Write up is really good,
dialogue parts are fantastic & realistic:))//

நன்றி யக்கோ!

NALLA RASIHAN said...

thanks 4 ur nice creations.
go ahead. my wishes to you, make some good stories like this.

NALLA RASIHAN said...

thanks 4 ur nice creations.
go ahead. my wishes to you, make some good stories like this.

white said...

supper story

logu122 said...

கதைய சொல்லலேங்க... காதலை சொன்னேன்
NICE ENDING

I READ ALL UR STORIES, I CAN'T ABLE GIVE RANKING TO THEM..,
I FEEL THAT I JUST CAME ACROSS NICE BLOG AFTER SO LONG DAYS
KEEP ROCKING ..........,

Thamizhmaangani said...

@logu, thanks:))

parthasarathi said...

arumai........... enakku azhugaiye vandhuduchi.... romantika azhaga ezhuthirukinga...