இனிய இரவு
ஜன்னல் வெளியே மழை
குளிர் காற்று
பக்கத்தில் நீ
உன் மடியில் நான்
இது போதும்டா.
வாழும் போதே
சொர்க்கத்தை
உணர்ந்துவிட்டேன்!
காதல் பார்வையுடன்
என் கை பிடித்து கேட்டாய்
"எத்தனையோ கவிதை
எழுதி இருக்கே
எனக்காக இப்ப
ஒரு கவிதை
சொல்லேன்..ப்ளீஸ்"
உடனே எனக்கு
தோன்றியது
"நான் கொஞ்ச அழுகு
நீ கொஞ்சும் அழுகு"
காதலுக்கு கண் இல்லையாம்.
ச்சே.. அப்படி ஒரு காதல்
வேண்டாம் நமக்கு.
என் காதலுக்கு
கண் வேண்டும்,
இல்லையெனில்
இந்த கருப்பு நிலாவை
எப்படி ரசிப்பது?
ரொம்ப குளிருது.
ஜன்னலை சாத்தவா?
இல்ல
உன்னை போர்வையா
அள்ளி போத்தவா?
சேலை மாற்றவேண்டும்
என்று என்னை
வெளியே அனுப்புகிறாயே.
'compartment'க்கு கிடைத்த பாக்கியம்
இந்த
'companion'க்கு கிடைக்காதா?
என்னை
தனியே விட்டு,
உன் நண்பனிடம்
நீ செல்போனில் பேசிய
அந்த இரண்டு நிமிடங்களில்
என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன!
(இதே concept வச்சு நம்ம காதல் இளவரசன் நவீன் காதல் கவிதைகளை அள்ளி வீசுவார் என்று கூறியுள்ளார். விரைவில் எதிர்பார்க்கலாம்....:)
26 comments:
//என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன! ///
சூப்பரூ :))
Thamiz,
Worth the wait..
Superb lines, suitable photos..
:)
me NOT the firstu?
:)
ரயில் பெட்டிகளாய்
ரசிக்கும் கவிதைகள்!
அத்தனை பெட்டிகளும்
அசத்தும் தங்க கட்டிகள்!!
புகைப்படங்களுக்கு
புதிய அர்த்தம்கூறும்
புதிய புயலே!
உன்னை இங்கே
புகழ்வதற்கு எனக்கு
புதிய வார்த்தைகள் கிடைக்காமல்
புலம்பி தவிக்கிறேன்!
ரொம்பவெல்லாம் புலம்பவில்லை
ஒரு ரைமுக்கு எழுதுகிறேன்
அவ்லோதான்!
ஹ..ஹ..ஹாஅ...
ஹெய்...ரொம்ப்ப தெரம இருக்கு உங்ககிட்ட...ம்ம்...ம்ம்...
ஓகேலா...கீப் ட் அப்! ஆல் தி பெஸ்ட்!
ரொம்ப நல்லா இருக்குங்க...!
@ஆயில்யன்
//சூப்பரூ :))//
நன்றி:)
@கார்த்திக்
//Worth the wait..
Superb lines, suitable photos..
:)//
பாராட்டுகளுக்கு நன்றி:)
@பிரியமுடன்
//ஹெய்...ரொம்ப்ப தெரம இருக்கு உங்ககிட்ட...ம்ம்...ம்ம்...
ஓகேலா...கீப் ட் அப்! ஆல் தி பெஸ்ட்!//
ஆஹா...உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி! சந்தோஷமா இருக்கு:)
@நிஜமா நல்லவன்
பாராட்டுகளுக்கு நன்றி:)
//நான் கொஞ்ச அழுகு
நீ கொஞ்சும் அழுகு//
சூப்பரு... கலக்கறே காயத்ரி :))
என் தங்கச்சி எங்கயோ போறாப்பா.. :))
படத்துக்கு அவ்ளோ பொருத்தமா அழகா கவிதைகள்.. ஹ்ம்ம்.. கீப் இட் அப்.. :)
காதலுக்கு கண் இல்லையாம்.
ச்சே.. அப்படி ஒரு காதல்
வேண்டாம் நமக்கு.
என் காதலுக்கு
கண் வேண்டும்,
இல்லையெனில்
இந்த கருப்பு நிலாவை
எப்படி ரசிப்பது?
////////////
சூப்பரப்பு
@பிரபு
நன்றி, உங்க வாழ்த்துகளுக்கு!:)
நல்லா இருக்கும்மா கவிதை. இன்னும் நிறைய எழுது.
தமிழ்,
ஒரு ஆர்வக் கோளாறில் சினிமா தொடர் பதிவை உங்களுக்கு முன்னால் போட்டுவிட்டேன். 'நோ ப்ராப்ளமா'? தேங்க்ஸ்.
//என்னை
தனியே விட்டு,
உன் நண்பனிடம்
நீ செல்போனில் பேசிய
அந்த இரண்டு நிமிடங்களில்
என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன! //
உங்கள் கவிதையில் நான் ரசித்த வரிகள்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
@புதியவன்
படித்து பாராட்டியதற்கு நன்றி:)வருகைக்கும் நன்றி:)
கவிதைகள் அனைத்தும்
இதழ்வாளங்களில் மிக
அழகான காதலில்
வழுக்கிசெல்கின்றன
காயத்ரி....
:))
//உன் இதழும்
என் இதழும்
பிரியாமல் இருக்கட்டும்
இன்றைய இரவும்
நாளைய விடியலும்
சந்திக்காமல்
போகட்டும்! //
பிரியாத இதழ்கள்
சந்திக்காத பொழுதுகள்...
அழகான வேண்டல்...:)))
@நவீன்
//கவிதைகள் அனைத்தும்
இதழ்வாளங்களில் மிக
அழகான காதலில்
வழுக்கிசெல்கின்றன
காயத்ரி....//
:) நன்றி
போட்டோஸ்லாம் ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க.
அதைவிட
கவிதையெல்லாம் நல்லா எழுதியிருக்கீங்க.
அமிர்தவர்ஷினி அம்மா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி:)
//உன் இதழும்
என் இதழும்
பிரியாமல் இருக்கட்டும்//
வ.வ பக்கம் என முத்திரையிடவும்.... அதாங்க வயது வந்தோர்
என்ன மாதிரி சின்ன புள்ளங்க மனசு என்ன ஆவது.. :)
@இத்யாதி
வருகைக்கு நன்றி! என்னது சின்ன புள்ளையா? அப்படி போட்டா, நானே என் ப்ளாக்கை பார்க்க முடியாதுங்க (உங்களவிட நான் ரொம்ப சின்ன புள்ள)
கவிதை அழகு :-)
@இனியவள் புனிதா
படித்து வாழ்த்துகள் கூறியதற்கு நன்றி!:)
//நீ செல்போனில் பேசிய
அந்த இரண்டு நிமிடங்களில்
என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன! //
காதலில் சிறுப்பிரிவும் பெரும் தவிப்புகள் தரும் என்பதை மிக மிக அழகாய் உணர்த்தும் வரிகள்... அழகா இருக்குங்க மேடம்:))))
Post a Comment