இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த மை ஃபிரண்டுக்கு நன்றி! :)
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
1 வயது இருக்கும்போதே சினிமா பார்க்க ஆரம்பித்தேன். 'பந்தம்' திரைப்படம் மூனு வேளையும் வீட்டில் ஓடுமாம்.. அம்மா சொல்வாங்க... பேபி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக வந்த படம். "big uncle big uncle" என்று சொல்லும் அந்த குரலை எப்படி மறக்க முடியும்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா!:)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
onlineல் சத்யம் படம் பார்த்தேன். தமிழ் படத்தில் பாட்டு, fight, தேவையில்லாதா sentiment சீன், மொக்கையான காமெடி சீன் இவை அனைத்தும் forward செய்துவிட்டேன். படத்தை 45 நிமிடங்களில் பார்த்து முடித்தேன். விஷாலுக்காக மட்டுமே பார்த்தேன். செம்ம cuteஆ இருக்காரு.... ஆனால், ஒரு காக்க காக்க மாதிரி படத்தில் நடித்திருந்தால்...பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்திருக்கும் என்று உணர்ந்தேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நிறைய உண்டு. இப்ப நினைவுக்கு வருவது 'காதல்' திரைப்படம். படத்தை தோழிகளோடு திரையரங்கில் பார்த்தேன். படம் முடிந்து அரை மணி நேரமாவது அழுது இருப்பேன். எல்லாரும் என்னை சமாதானம் படுத்தியபோதும், என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ரொம்ப feelingsஆ போச்சு.....
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அப்படி ஏதும் இல்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
திரையில் பார்ப்பது வேறு. அதற்கு பின்னால் நடப்பது வேறு. ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் படும் கஷ்டம். யப்பா.... பாவம் தான்! எனக்கு இந்த பின்னால் ஆடும் நடனமணிகளை பார்த்தால், பாவமா இருக்கும். எவ்வளவு கஷ்டம். என்னுடைய ஆங்கிள் ஒருத்தர் என்னிடம் சொன்னார்....வெளிபுர நடனம் ஆடும்போதுகூட, இந்த டான்ஸ்ர்களுக்கு துணி மாற்றகூட சரியான இடம் கிடைக்காதாம். ஹீரோ/ஹீரோயின் பின்னால் முதல் வரிசையில் ஆடுபவர்கள் சீனியர். ஆக பின்னால், ஆடுபவர்கள் புதிது அல்லது சரியாக ஆட தெரியாதவர்களாம். எந்த வரிசையில் இருக்கிறார்களோ, அந்த வரிசைபடி சலுகைகள் கிடைக்குமாம்!...
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ம்ம்ம்... அதானே வேலையே! indiaglitz.com மற்றும் cinesouth.com தினமும் படிப்பேன்.
7.தமிழ்ச்சினிமா இசை?
புது பாட்டு வந்தால் உடனே கேட்டுவிட்டு, தோழிகளிடம் discussion நடக்கும். இந்த பாட்டு, எந்த பாடலின் தழுவல், யார் எந்த ஆங்கில பாடலை காப்பி அடித்திருக்கிறார் என்பதை பற்றி பேசுவதுண்டு.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம்- நான் வாழ்க்கையில் முதன் முதலாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சென்று பார்த்த படம் 'bend it like beckham'. முதன் முதலாக திரையரங்கில் பார்த்த ஆங்கில படம். முதன் முதலாக நண்பர்களுடன் வெளியே சென்ற நாள் அதுவே. இப்படி நிறைய 'முதன் முதலாக' நடந்ததால் இந்த படம் ரொம்ப பிடிக்கும். பல வகையில் மனதை தாக்கிய படமும்கூட.
9ஆம் வகுப்பு படித்த வருடம் அது. அந்த வருடம் தான்,காற்பந்து உலக கிண்ண போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. படத்தை பார்த்து மறுநாளே, பள்ளி திடலில் ஒரே காற்பந்தாட்டம் தான்!
korean movie-the grandmother
thai movie- alone
hindi movie- chak de india, Khabi kushi kabhi kham, kal ho naa ho
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் அப்படி ஏதேனும் ஒரு ஆள் தெரிந்தால்... ஏதேனும் ஒரு producerர பிடித்து bend it like beckham படத்தை தமிழில் எடுக்க சொல்வேன்...ஹிஹிஹி..:)
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய புதுசா செய்யும் திறமையாளர்கள் உண்டு. ஆக... நல்லா வரும் தமிழ் சினிமா.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அப்படி ஏதேனும் இல்லை என்றால்..ரொம்ப tension ஆயிடுவேன். பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைக்குறேன். ஹாஹா... தமிழர்களுக்கு...என்ன ஆகுமா?ம்ம்ம்ம்.... நல்ல முன்னேறிவிடுவார்கள்... ஹிஹி...:)
அடுத்து அழைப்பது,
கார்த்திக்
நவீன்
கார்த்திகா
6 comments:
super. சொன்ன வேலையை கரேக்ட்டா செஞ்சிட்டீங்க.. ;-)
Bend it Like Beckham அவ்வ்ளோ பிடிக்குமா? :-)
Nice post..
I've posted my entry. See my blog.
:)
@மை பிரண்ட்
ஆமாங்கோ.. bend it like beckham படம் ரொம்ம்பப பிடிக்கும்.
@karthik
நன்றி:)
ஆமாம், சினிமா சினிமான்னு என்னவோ எழுதியிருக்கீங்கலே...சினிமான்னா என்ன?
ஓ..ஓ....தமிழே தெரியாம தமிழில் பேசி நடிப்பாங்கலே.....அதுவா?
கொஞ்சம் கொஞ்சமா எடுத்ததை பசை வைத்து ஒட்டி ஓடவிடுவாங்கலே அதுவா?
புல்தடுக்கி விழுந்தால் கூட இறக்ககூடிய உடலமைப்பு வைத்துகொண்டு...12 பேரை பறந்து பறந்து அடிப்பதாக காட்டுவார்களே அதுவா?
60 வயது கிழவிக்கு கூட உதட்டுச்சாயம் பூசி, தூக்கி நிறுத்தி
சிம்ரன் ரேஞ்சுக்கு காட்டுவாங்கலே அதுவா?
எச்சில் கையால் காக்காய் ஓட்டாத எண்ணம் கொண்டவர்கள் கூட பெரிய தர்ம பிரபு மாதிரி ஆக்ட் கொடுப்பார்களே அதுவா?
இல்ல, பள்ளிகூடம் செல்லும் பிள்ளைகள் எல்லாம் காதல் செய்வது போன்று காட்சி அமைத்து அவர்கள் மனதில் கெட்ட எண்ணங்களை விதைப்பதற்கு ஏற்றமாதிரி காட்சி அமைத்திருக்குமே அதுவா?
ஏற்கனவே செத்து சுண்ணாம்பாய் போய் திரையரங்கம் சென்றால் அங்கே உட்கார வைத்து ஓய்வே இல்லாமல் கொல்வார்களே அதுவா?
அடுத்த வேலை சோத்துக்கு வழியில்லாமல் இருந்தாலும் குழந்தைகளின் கொலுசை விற்றுவிட்டு செல்வார்களே அதுவா?
ஒருசிலரை ஏற்றிவிட்டுவிட்டு பலரை படுகுழியில் தள்ளி வேடிக்கை பார்குமே அதுவா?
நிச்சயம் இதுவெல்லாம் இல்லை இல்லையா? அப்பன்ன சினிமா என்பது என்ன?
எனக்குத் தெரியுமே!! காலையிலிருந்து மாலைவரை உழைத்து உழைத்து ஓடாய் போன மனிதர்களை ஒரு சில மணிநேரம் சந்தோஷப்படுத்தும் சாதனம்தானே! உழைப்பவர்களைவிட...அடுத்தவர்கள்ளின் உழைப்பில் இதை பார்பவர்கள்தான் அதிகம்! ஆஹா..நம்ம கதை ஒருபடம் மாதிரி போய்கிட்டு இருக்கு இடைவேளை விட்டுவிடுவோம்.....பாப்கான்...முருக்கு! கல்லைமிட்டாய்...பாப்கான் முருக்கு....ஐஸ்கிரீம்....முட்டைபஜ்ஜி!
Post a Comment