Oct 31, 2008

அண்ணாத்தே கொடுத்த 'தல'வலி

சோகன் படம் பார்த்தேன்...ச்சே..ஐ மின் ஏகன். காபி அடிக்க போறோம்னு தெரியும். அத சரியா காபி அடிச்சா என்ன? யப்பா...முடியல. why blood? same blood!

main hoon na ஹிந்தி படத்த அப்படியே காபி அடித்திருந்தால் கண்டிப்பா சொல்றேன், படம் ஹிட்டாக இருந்திருக்கும். ஆனா, இப்படி சொதப்பி, கொல்ல பண்ணி, படத்த கதற கதற எடுத்திருக்காங்கய்யா....



ஏன்? ஏன்? ராஜு, ஏன் உங்களுக்கு இந்த கொல வெறி. தம்பி எடுக்குறான்... சரி நம்மலும் எடுக்காலாம்னு நினைச்சு எடுத்தீங்களா?



படத்தின் ஆரம்ப காட்சியில் வில்லன் சுமன் தான் அஜித் என்று நினைத்து தியேட்டரில் ஒரே விசில் சத்தம். கொஞ்சம் close upல பாத்த பிறகு தான் தெரிஞ்சுது அது அஜித் இல்லன்னு. செம்ம காமெடியா போச்சு! போண்டா சாப்பிடனும்னு நினைச்சு, மசாலா தோசைய சாப்பிட்டு, அது சரியா செரிக்காம, ஓம தண்ணி குடிச்ச மாதிரி படம் இருக்கும். நயன் தாரா ஏழைவீட்டு டீச்சரா நடிச்சு இருக்காங்க. ஏன்னா, அவங்களுக்கு ஒரு முழு ஜாக்கெட் வாங்கிபோடகூட காசு இல்ல.

நகைச்சுவை என்ற பெயரில் கோமாளித்தனம். செம்ம மொக்கை. அஜித் காமெடியில் ஆங்காங்கே ராஜுவின் சாயல்! இந்த கதாபாத்திரத்திற்கு 25கிலோ ஏத்தினாராம். ம்ஹும்.... நல்லா இருங்கப்பா!

அண்ணன்(ராஜு) கொடுத்த 'தல'வலி தாங்கா முடியல....

5 comments:

பிரியமுடன்... said...

உங்களுக்கு செம collection ஆகி போச்சு பாவம் ராஜு கதைதான் படுகேவலமா போச்சு!

அஜித்தை கடைசிவரைக்கும் கல்லூரி மாணவர் கெட்டப்பில் காட்டவே முடியவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்! முடியாது இனிமேல்! சரி விடுங்க விஷால் எப்படியிருக்காரு!! பதில் வாழ்த்து போடுவாறா? நான்கூட அவருடைய பிலாக்குக்கு சென்று ஒரு வாழ்த்தை போட்டு வச்சேன்! தல வலிக்கு ஏதாவது மருந்துபோடுறீங்களா....விஷால் படம் வந்தாதான் போடுவீங்கலா....அப்ப பிளிஸ்...வெயிட்!

FunScribbler said...

@பிரியமுடன்

//அஜித்தை கடைசிவரைக்கும் கல்லூரி மாணவர் கெட்டப்பில் காட்டவே முடியவில்லை//

ஹாஹா.. நல்லா சொன்னீங்க போங்க...

//விஷால் எப்படியிருக்காரு//

ம்ம்...நல்லா இருக்காரு. அடிக்கடி வந்துட்டு போறாரு.. கனவுல சொன்னேனுங்க!:)

//தல வலிக்கு ஏதாவது மருந்துபோடுறீங்களா//

இது விடாது கருப்பு மாதிரி.. படத்த நினைச்சாலே, தல வலிக்குது.

//விஷால் படம் வந்தாதான் போடுவீங்கலா....//

ஆமாங்கோ...அடுத்து அவரு இரட்டை வேடத்துல நடிக்குறாராம். எஸ், ஐ எம் வேயிட்டிங்

Dinesh C said...

:)

Dinesh C said...

naanum! same blood! :(

priyamudanprabu said...

முதல் நாளே பார்த்தேன்
தாங்கமுடியல.....
இந்தியாவில் பார்த்ததால 40 ருபாயோடு போச்சு
இதே சிங்கபூரா இருந்தா 10 டாலர்
??????????