Nov 6, 2008

சும்மா அரட்டை 2

கைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்....

நண்பன்: ஏ, எப்படி இருக்கே? ஒரு ஃபோன காணும். லெட்டர காணும். ஸ் எம் ஸ காணும்...இருக்கீயா? இல்லையா?

நான்: ஹாய் i am fine. how r u? sorry was busy for quite some time. என்ன திடீரென்னு?
நண்பன்: ஒன்னுமில்ல. சும்மா தான்... சரி நாளைக்கு நீ freeya?

நான்: நாளைக்கா? no. am not. y?

நண்பன்: சரி சனிக்கிழம?

நான்: டேய், எனக்கு exam pa... ஏன் கேட்குற?

நண்பன்: ஒன்னுமில்ல.. உன்னைய barber கடைக்கு கூட்டிகிட்டு போனும்!

நான்: என்னையவா? எதுக்கு?

நண்பன்: ஒபாமா ஜெயிச்சாருன்னா, உனக்கு மொட்ட போட்டு, நாக்குல வேல் குத்தனும்னு வேண்டியிருந்தேன். அதுக்கு தான்.

நான்: ஹாஹாஹா...லூசு லூசு! இதலாம் நிறைவேறாத வேண்டுதல். அப்பரம்... வாழ்க்கை என்ன சொல்லுது? wen are ur exams?

நண்பன்: இந்த வாரம் தான் பரிட்சை நடக்குது. அன்னிக்கு monday, throat பத்தி ஒரு exam. கேள்விக்கு கேட்டவனையே அலரி அடிச்சுகிட்டு ஓடுற அளவுக்கு என் பதில எழுதிவச்சேன். பதில் படிக்கறவனுக்கும் புரியாது, எழுதின எனக்கும் புரியாத அளவுக்கு பரிட்சைய செஞ்சுகிட்டு வரேன்.

நான்: ஹாஹா.. நீயெல்லாம் எப்படி medicine முடிச்சு, டாக்டரா வந்து...யப்பா... உஸ்ஸ்ஸ்....முடியாதுடா சாமி!

நண்பன்: ஹாஹா.... anywayz wanted to ask u. are u gg for நகுல்'s party?

நான்: நோ, எனக்கு exams. நான் போகல்ல...நீ?

நண்பன்: நானும் போக போறது இல்ல. நம்ம ரவீனுக்கும் பரிட்சை தான். ஆனா அவன் போறானாம். சும்மா 1 hr இருந்துட்டு வந்துடுவானாம். இதலாம் நடக்குற காரியமா?

நான்: நம்ம ஆளுங்கல நம்பி 1 hr வாக்குலாம் கொடுக்க முடியாது.... போனா...4, 5 மணி நேரமாவது wasteஆ போயிடும்.....

நண்பன்: சரியா சொன்னே போ.... 6 மணிக்கு மீட் பண்ண சொன்னா, 7 மணிக்கு தான் வந்து சேருங்க.... நடக்குற காரியம் இல்ல. u heard abt the farewell party in our school for our current batch? are u gg for that?

நான்: ஆமா நான் போறேன். அது 24th தானே... அதுக்குள்ள பரிட்சையலாம் முடிஞ்சுடும். நீ வா..

நண்பன்: இல்ல லா... நான் வரல.... அங்க யாரையும் தெரியாது....

நான்: நான் மட்டும் என்ன தெரிஞ்சுகிட்டா போறேன்... அங்க சூப்பரா சாப்பாடு இருக்கும். நல்ல ஒரு வெட்டு வெட்டிட்டு, அப்படியே ஒரு வாரத்துக்கும் pack பண்ணிட்டு வந்துட வேண்டியது தான்.

நண்பன்:ஹாஹா...நீ திருந்தவே மாட்டே....

நான்: நான் திருந்திட்டா, அடுத்த நிமிஷமே உலகம் அழிஞ்சு போயிடும்...

நண்பன்: ஹாஹா...எப்படி லா இப்படியலாம்? அப்பரம் உன் காதல் வாழ்கையலாம் எப்படி போகுது?

நான்: என்னது? காதல் வாழ்க்கையா? எனக்கு தெரியாம... அப்படி ஒன்னு நடக்குதா....நீ வேற...

நண்பன்: ஆமா லா...இந்த year ஒரு april fool shock கொடுத்து ஏமாத்தினீயே...எப்படி மறக்க முடியும்?

நான்: ஏ, சாரி சாரி. அது சும்மா தான் பா.

நண்பன்: hey ச்சி... i was just kidding too. சரி, நீ போய் நல்லா படி. all the best 4 exams. உனக்கு எப்போ exams முடியுது?

நான்:14th nov. உனக்கு?

நண்பன்:21st nov...நமக்கு exams முடிஞ்ச பிறகு, நீ, ரவீன், நான்....நம்ம எல்லாரும்... அஞ்சப்பர்க்கு சாப்பிட போவோம்...

நான்: அஞ்சப்பரா!!! ஒகே ஒகே, நான் இப்பவே ரெடி.

நண்பன்: ஹாஹா...ஒகே காயத்ரி, u take care and all the best 4 exams.thanks for the comedy time. ஹாஹ...

நான்: u too. gd nitez.

6 comments:

பிரியமுடன்... said...

ஆரம்பத்திலேயே அஞ்சப்பருக்கு கூப்பிட்டிருந்தால், இவ்வளவு நேரம் பேசியிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது உங்கள் நண்பருக்கு! அவர் என்ன அய்யரா? அஞ்சப்பர் என்றதும் ஓடிவிட்டார்!

ஆமாம்....உங்களுக்கு காதலன் இருப்பது சற்று சந்தேகம்தான், ஏன்னா, எப்ப பாத்தாலும் ஒரு கட்டு கட்டுவதிலேயே குறியா இருந்தால் ரொம்ப கஷ்டப்பா....

Karthik said...

:)

காண்டீபன் said...

:) ரசித்தேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்பரம்... வாழ்க்கை என்ன சொல்லுது?

ம். அரட்டைக்குள்ளயும் ஒரு மேட்டர் இருக்கு.

Divya said...

Gayathri, oru train kavithai irunthuchey.......athukku comment podalamnu vantha......kavithaiyey kanaom???
enachu Gayathri??

Sanjai Gandhi said...

//sorry was busy for quite some time//

சாரி தானே பிசி.. உனகென்ன.. பேச வேண்டியது தான?