Nov 9, 2009

ஜஸ்ட் சும்மா(9/11/09)

பரிட்சை இன்னும் 15 நாட்களில் ஆரம்பிக்க போகுது. வகுப்பில் கிளாஸ் பரிட்சை ஒன்னு வச்சாங்க. அதுல..ம்ம்... 5 மார்க் மேல வந்தாவே பெரிய விஷயம்னு நினைக்குறேன். கேள்வியை பார்த்து படிச்சு புரிஞ்சுக்கவே மயக்கம் வந்துட்டு!

"மனிதன் புரிந்து கொள்ள இது மனித பரிட்சை அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது!" - சங்கம் வைக்கும் அளவுக்கு வசதியில்லாத சங்கம்.

போட்டு அடிச்சு ஏதாச்சு பண்ணி, படிக்கவேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. பார்ப்போம்.
_----------------------------------------------------------------------------------------

சமீபத்தில் 'கண்டேன் காதலை' படத்தை பார்த்தேன். அரை மணி நேரத்துக்கு மேல பாக்க முடியல படத்த. பரத் பேசாம வேற வேலைக்கு போகலாம். யோவ், ஹிந்தி படத்த காபி அடிக்குறீங்க....அத இந்த அளவுக்கா காபி அடிப்பீங்க!! ஐயோ ஐயோ...
-----------------------------------------------------------------------------------------

சித்து ப்ளஸ் டூ படப்பாடல் வெளியாகிவிட்டன. பாக்யராஜ் இயக்கத்தில் அவர் மகன் நடிக்கும் (நடிச்சு இருக்காரான்னு தெரியல...) படம். இசை தரண். பூவே பூவே பாடல் செம்ம பாட்டுய்யா! இந்த பாட்டு மட்டும் தான் நல்லா வந்துருக்கு. சூப்பர் பாடல்! கேட்டு பாருங்க. யூவன், சின்மயி பாடியிருக்காங்க.
-----------------------------------------------------------------------------------------

ஓபாமா சிங்கைக்கு வருகை தந்து இருந்தார்.பார்க்க தான் வாய்ப்பு கிடைக்கல. இல்லை என்றால் எங்க வீட்டு தீபாவளி முறுக்கு இரண்டு கொடுத்து விட்டுருக்கலாம் அமெரிக்காவுக்கு, அப்பரம்..மிஷேல் அண்ணி சாப்பிட வேண்டாமா? ஹிஹிஹி.......
-----------------------------------------------------------------------------------------

15 comments:

Srivats said...

LOL post after a long time, all the best

pappu said...

நம்ம ரேஞ்சுக்கு மாதிரிலாம் சப்ப. நம்ம வீரத்தை கடைசி பரிட்சையில் காட்டுறோம்!

pappu said...

உங்கள கார்த்திக் கூப்பிட்டிருக்கான். எட்டிப் பாருங்க.

மணி said...

வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் அறிய(!) சேவையை. நல்ல இண்ட்ரஸ்டிங்கா எழுதுறீங்க.

gils said...

alo..ejjamku padikaama inga inum aatama :D maathiri paritchaailaam oru maathiyaaa thaan irukum..athaan antha name...nerja paritchaila unga bala partichaiya kaatriunga :)

kanden kaathalai trailorlaye terinji poachu..padam darrassiyaa nu...dress mudhakonu kaapi..

கலையரசன் said...

//"மனிதன் புரிந்து கொள்ள இது மனித பரிட்சை அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது!" //

எனக்கு புரிஞ்சிடுச்சு! அப்ப நா கொடூரமானவனா...? அவ்வ்வ்வ்வ்வ்்வ்!!

Thamizhmaangani said...

@பப்பு, //நம்ம வீரத்தை கடைசி பரிட்சையில் காட்டுறோம்!//

உடம்பு தாங்குமாய்யா!

@மணி, நன்றி நன்றி:)
@கில்ஸ்,//lo..ejjamku padikaama inga inum aatama//

ஹாஹா...

soin said...

yen paritchaila munu questions..explain uml..innum rendu abbrevations.full form kuda therila..neengalum engg padikerengala??free

விக்னேஷ்வரி said...

ஒழுங்கா படிக்குரத விட்டுட்டு பதிவுலகம் பக்கம் என்ன வேலை...

நான் படம் பார்க்கல. தப்பிச்சிட்டேன். ஷாகித் கபூர் இடத்துல பரத்தை வச்சு பாக்குற மனோதிடம் எனக்கில்ல.

Divyapriya said...

எது ஒபாமா உங்க அண்ணனா? உனக்கு அவ்ளோ வயசு ஆய்டுச்சாம்மா காயத்ரி? தெரியவே இல்லையே ;)

all the best for ur exams...n all the best for ur professors too for evaluating ur ans sheets, LOL :P

இராயர் அமிர்தலிங்கம் said...

அது எப்படிங்க நீங்க மொக்கையா எழுதினாலும் நல்ல இருக்கு
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Thamizhmaangani said...

@soin, //neengalum engg padikerengala?//

nope. doing maths.final yr.

@viki akka, //ஒழுங்கா படிக்குரத விட்டுட்டு பதிவுலகம் பக்கம் என்ன வேலை...//

ahahah..நான் படிக்குறதே பெரிய அதிசயம். இதுல ஒழுங்காவா? ம்ஹும்...

@திவ்யாபிரியா

//எது ஒபாமா உங்க அண்ணனா?//
அட அவர் வயச கொஞ்சம் குறைச்சு காட்டுறதுக்காக தான்!

Karthik said...

@பப்பு

//உங்கள கார்த்திக் கூப்பிட்டிருக்கான். எட்டிப் பாருங்க.

நீங்கதான்பா ஜென்டில்மேன். :)

தமிழ் நம்ம ப்ளாக்குக்கு வழி மறந்துட்டாங்க போல. இங்க கொஞ்சம் எட்டி பாருங்க தமிழ்!

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/11/blog-post_5066.html

Anonymous said...

\\"மனிதன் புரிந்து கொள்ள இது மனித பரிட்சை அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது!"//

பாவ‌ம் ரொம்ப‌ ப‌ட்டுட்டீங்க‌....

Anonymous said...

என்ன 36 வெள்ளியா எந்த சினிமா கொட்டகை தாயே
hari singapore