அனைவருக்கும் பொங்கல், மாட்டு பொங்கல் வாழ்த்துகள்!! இதை எழுதி கொண்டிருக்கும் வேளையில் டிவியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ஓடி கொண்டிருக்கு! ஐயப்பா சாமீமீமீமீ..... தலைவலி டா!! ஒரு நல்ல நாள்னு ஆவூனு இத போட்டுடுறான். 15 வருஷமா நாலே நாலு தலைப்ப வச்சுகிட்டு ஓட்டிகிட்டு இருக்காங்க! திருந்துங்கப்பா!!!!
***************************************************************************
விண்ணை தாண்டி வருவாயா பட பாடல்களை கேட்டேன். 'ஹோசோனா' பாட்டு மட்டும் கேட்குற மாதிரி இருக்கு. மத்த பாடல்கள் ஒன்னும் அவ்வளவா மனதில் பதியவில்லை. மறுபடி மறுபடி கேட்க வேண்டும்!! படம் பிப்ரவரி 14 ரீலீஸ்!! டைரில குறிச்சு வச்சு இருக்கோம்ல!!
**************************************************************************
2 states புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன். சேத்தன் என்னமா கிண்டல் பண்ணியிருக்கிறார் இந்தியர்களை!! செம்ம காமெடி. ஆனா, காதல் காட்சிகள், வேலை, படிப்பு- இது எல்லாம் அவரின் முந்தைய கதைகளில் படித்துவிட்டதால், கொஞ்சம் போர்!!! முழுசா படிச்சுட்டு வரேன்!
****************************************************************************
நாணயம், ஆயிரத்தில் ஒருவன் படங்களை பார்க்கனும்!! ரொம்ப ஆவலா இருக்கு.
***************************************************************************
'merchants of bollywood' (http://www.merchantsofbollywood.com.au/aus/) என்னும் ஒரு musical நிகழ்ச்சி. 2 மணி நேரம் நிகழ்ச்சி: ஆட்டம் ஆட்டம் ஆட்டம்! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல இருந்துச்சு! மறக்க முடியாத அனுபவம்! சீனர்கள், வெள்ளைக்காரர்கள் நிறைய பேர் எழுந்து நின்று ஆட தொடங்கியது தான் highlight!!
***********************************************************************
7 comments:
மாட்டு பொங்கல் வாழ்த்துகள்!!
சாலமன் பாப்பையா போன்ற மற்ற தமிழ் வல்லுனர்களும் ,இந்த பட்டிமன்றம் வந்த நாளிலிருந்து, அவர்கள் நின்றிருந்த தமிழ் காவலர் ,என்ற நிலையிலிருந்து ,ஒரிரு படிகள் இறங்கித்தான் போனார்கள்.
எழுந்து நின்னே ஓட்டுப் போட்டேன் சாமி. நல்லா இருக்கு.
பொங்கல் வாழ்த்துகள் ..................
" பாப்பையா பாப்பையா என்ன நீ பாப்பியா " .. இந்த மாதிரி தீவிர ரசிகைகள் இருக்குற வரைக்கும் பாப்பையாவுக்கு வாழ்வு தான்..
மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
music concert, book , tv movies, blog and pora kuraikku padips vera - kalakareenga ponga
Post a Comment