Jan 23, 2010

ஜஸ்ட் சும்மா (24/1/10)

இப்போது எழுதி கொண்டிருக்கும் 'விளையாடுவோமா உள்ள' தொடர் கதைக்கு ஒரு சின்ன பிரேக் கொடுக்கலாம்னு இருக்கேன். மண்டையில ஒரு மண்ணும்( மண்டைல அது மட்டும் தானே இருக்கு. அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது) தோண மாட்டேங்குது. அதனால், அந்த தொடர் இப்போதுக்கு தொடர வாய்ப்பில்ல. ஆனா, அதுக்கு வலைப்பூ எழுதுறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினைக்க வேண்டாம். மத்த மொக்கைகள் எப்போதும் போலே தொடரும்.
--------------------------------------------------------------------------------------

ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். அந்த படம் பார்த்ததாக நானும் மறந்துடுறேன். வரலாறும் மறந்துடனும். இந்த படத்த பத்தி பேசி, நண்பன் ஒருவர் ரொம்ம்ம்ப கோச்சிகிட்டாரு!! (எனக்கு சுத்தமா பிடிக்கல. அவருக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு)
---------------------------------------------------------------------------------

இயக்குனர் பாலாவிற்கு 'நான் கடவுள்' படத்திற்காக தேசிய விருது கிடைச்சு இருக்கு. வாழ்த்துகள்! (படம் எனக்கு பிடிக்கவில்லை...இருந்தாலும் ஒரு தமிழன் முன்னேறுவதை பார்த்து இன்னொரு தமிழன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதே என் கொள்கை!! யாருப்பா அங்க...எனக்கு சிலை வைக்கனும்னு பேசிகிறது?) ஹிந்தி படத்திற்காக பிரியங்கா சோப்ராவுக்கு தேசிய விருது கிடைத்து இருக்கு!:)
------------------------------------------------------------------------------------

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் ட்ரெல்லரை பார்த்தேன். வாரணம் ஆயிரம் படத்துல வெட்டுப்பட்ட காட்சிகள ஒன்றா சேர்த்து போட்ட மாதிரி தோணுச்சு. எப்படி இருந்தாலும், படத்த பார்க்கனும்...atleast for gowtham menon!:) hehe.
------------------------------------------------------------------------------------

வரும் ஏப்ரல் மாதம் படிப்பு முடிய போகிறது. (படிப்பு என்னைய ஒரு வழியா முடிச்சிடும்). அத நினைச்சா, துக்கம் தொண்டைய அடைக்குது. காலேஜ் டீச்சர்கள் மேல உள்ள பாசம் இல்ல...பிரண்ட்ஸ், காலேஜ் கேண்டீன், கார்பார்க், லீவு நாட்கள் இத நினைச்சு தான் கவலை. இனி வாழ்க்கைல இது எல்லாம் திரும்பி வருமா? (எனக்கு இப்ப ஒரு சைக்கிள் வேணும்... ஆட்டோகிராப் சேரன் மாதிரி ஃவீல் பண்ணிகிட்டே போக...)

வேலைக்கு போயிட்டா அப்பரம் அம்புட்டு தான்....... அதுவும் பிடிக்காத வேலை என்றால்...சுத்தம்!!!

மனுஷனுக்கு தன்னம்பிக்கை குறையும் போது தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகும்னு சொல்வாங்க...எனக்கு இப்போ கடவுள் நம்பிக்கை அதிகமா போய்கிட்டு இருக்குதுங்கோ!
---------------------------------------------------------------------------------------------

6 comments:

அண்ணாமலையான் said...

இது வரை எழுதன கதய விட இப்ப எழுதியிருக்கறதுதான் படிக்கறா மாதிரி இருக்கு.. இதயே தொடருங்க... (மிரட்டலுக்கு பயந்து ஓட்டு போட்டுட்டேன்)

goma said...

கல்லூரி வாழ்க்கை இழப்பு பற்றி எழுதியிருப்பது அருமை

VISA said...

This post is good. fast and peppy.

Karthik said...

you didn't like pudhupettai also. you don't like selva movies? :)

congrats in advance for the graduation..:)

FunScribbler said...

@அண்ணாமலையான், ரொம்ப நன்றி:)கதைய விட்டதற்குனு சொன்னீங்களே அதுக்கு.

@கோமா, நன்றி:)
@கார்த்திக், எனக்கு அவர் எடுத்த 7ஜி மற்றும் காதல் கொண்டேன் மட்டும் தான் பிடிச்சு இருந்துச்சு. துள்ளுவதா இளமை- ஓகே ஓகே ரேஞ்சு தான்!:)

Prabhu said...

காலேஜ் முடியுற கஷ்டம் தெரியுதா? ம்ச்ச்.... அதெல்லாம் ஒரு ஃபீல்!