Jun 22, 2010

உலக கிண்ணமும் ராவணனும்

உலக கிண்ண காற்பந்து போட்டி ஆரம்பிச்சு திருவிழா மாதிரி போய்கிட்டு இருக்கு. இங்கு சிங்கையில் இதற்காகவே நிறைய பேர் ஒரு மாதம் லீவு போட்டு இருப்பதாக செய்தி வந்துச்சு. சிங்கையில் காற்பந்து பிரியர்கள் ஏராளம். நான் நேத்து portugal vs north korea போட்டியை பார்க்க சென்றேன் வீட்டு பக்கத்தில் இருக்கும் சமூக நிலையத்தில்.

செம்ம கூட்டம். கிட்டதட்ட 400 பேர் வந்து இருப்பாங்க. portugal ஆட்டம் அபாரம்! எதிர் அணியை வீழ்த்தி தள்ளியது. ஒவ்வொரு முறையும் கோல் போடும்போது கூட்டமே அலறியது!! நான் வடகொரியாவை தான் ஆதரித்தேன். ஏன் என்றால் முன்பு நடந்த போட்டியில், வடகொரியா உலகத்தில் முதல் நிலையில் இருக்கும் பெரிசிலை ஒரு கை பார்த்தது.

ஆனால் நேற்று போட்டியில், ரொம்ப சுமாராக விளையாடி தோல்வியை சந்தித்து!:(( portugal 7 கோல்கள் போட்டது. இதுவரை நடந்த போட்டியில் இது தான் ஆக அதிகமான கோல் எண்ணிக்கை.

உலகமே இப்படி விழாக்கோலமாக இருக்க, நம்ம சும்மா இருப்போமா? நானும் களத்தில் இறங்கிவிட்டேன். நாளை நண்பர்களுடன் காற்பந்து விளையாட போகிறேன். :)))
--------------------------------------------------------------------------------------

ராவன்/ ராவணன்- தமிழ் இந்தி ஆகிய இரண்டிலும் பார்த்துவிட்டேன். என் விமர்சனம்- மணி சார், என்னைய இப்படி ஏமாத்திவிட்டீங்களே!!!

படம் ஒன்னும் புரியலை. ராமாயணம் கதை மாதிரி இருக்கு. அது புரியது. அதை இந்த காலத்திற்கு ஏற்ப எடுத்து இருக்கலாம். காடு, காட்டுமிரண்டித்தனமான நடிப்பு, அழுத்தமில்லாத காதல்- இப்படி அனைத்தையும் தவிர்த்து இருக்கலாம். அட போங்க சார்....உங்க மேல ரொம்ப கோபம்!!

ஆவூன்னா, இதிகாசங்களை வச்சு படம் பண்றீங்க! நானும் பண்றேன் -remake of பாட்டி வடை சுட்ட கதை (ஓ...இது இதிகாசம் இல்லையா?)

6 comments:

rk guru said...

அருமையான விமர்சனம் பதிவு வாழ்த்துகள்...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

விக்னேஷ்வரி said...

கால் பந்து விளையாடப் போய் காலை உடைச்சுக்காம வாங்க காயத்ரி.

ராவணன் நல்லா இல்லைன்னு எல்லாரும் சொன்னாலும் எனக்குப் பார்க்கணும்னு தோணுது.

goma said...

ஒரு சமயத்தில் எல்லாமே ஒரு தேக்கநிலைக்கு வந்து விடும்
மணிசாரும் அப்படித்தான் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன்.

ஓய்வெடுக்கலாம்

Thamizhmaangani said...

@guru: thank you guru:))

@viki akka: thank you for the concern. pls do watch the film, so that you can join our club 'பத்து தல தலைவலி'

@goma: சரியா சொன்னீங்க. அப்பரம் ஒரு மேட்டர். பேசாம அவர் மகனை நடிக்க வைக்கலாம்! அவ்வளவு அழகு!!:))

goma said...

அழகா இருந்தா நடிப்பு வந்துடுமா...
அவங்கஎல்லாம் படிக்கட்டும் .

Anonymous said...

உங்களது பெரும்பாலான பதிவுகள் ரசிக்க தக்கதாக உள்ளது. வாழ்த்துக்கள். முரசொலிமாறன்,சென்னை.