நேத்து இரவு, மனசு துடிச்சது பாருங்க... 30 பந்துகளில் 30 ரன்கள்!!! ஐயோ, எனக்கு தலவலி, வயத்துவலி, நெஞ்சுவலி- எல்லாமே வந்துவிட்டது.
இங்கு சிங்கையில் மாலை 5 மணிக்கு ஆரம்பித்தது ஆட்டம். boat quay என்னும் இடத்தில் ஆட்டத்தை கூட்டத்தோடு பார்க்கலாம் என்று தோழியுடன் சென்றேன். பொதுவா அந்த இடத்தில் வெள்ளைக்காரர்கள் தான் அதிகம் இருப்பார்கள்! ஆனால் நேற்று ஒரு இந்தியாவே அங்கு தான் இருந்தது. முகங்களில் வண்ண நிறம். நீல வண்ண சட்டை அணிந்த பலரும் அந்த இடத்திற்கே புது வண்ணம் கொடுத்தனர். ஒவ்வொரு பந்திற்கும் செம்ம விசில் சத்தம்! முதல் விக்கெட் விழுந்தபோது, அந்த இடமே சந்தோஷத்தில் குதித்தது.
இது எல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப புதுசு. முதல் தடவ கூட்டத்தோடு பார்ப்பதும், சிங்கையில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இப்படி ஒரு ஆதரவு இருப்பது எனக்கும் ரொம்ப ஆச்சிரியமாய் இருந்தது. முதல் 10 ஓவர்களில், இந்தியாவின் fielding செம்ம powerful!! தோழி இலங்கையை சேர்ந்தவள். ஆக, இன்னும் வெறித்தனமாய் நான் கைதட்டி ஆரவாரம் செய்தேன். :)))) இலங்கை 220 ரன்களில் சுருண்டுவிடும் என்று நினைத்தேன். இருப்பினும் இலங்கையில் கடைசி சில ரன்கள் அபாரம்!
கொஞ்ச நேரம் கழித்து வீடு திரும்பிவிட்டேன், இந்தியா battingயை பார்க்க. shewag அவுட், சச்சின் அவுட்! மனசு கிடந்து பதறியது! facebookல் நண்பர்களின் update ஒரு பக்கம், ஆட்டம் ஒரு பக்கம், என் வீட்டு பணிப்பெண் அக்காவின் reaction ஒரு பக்கம் என்று ஒரே பரபரப்பாய் சென்றது நேற்று இரவு.
என் வீட்டு பணிப்பெண் சமீப காலமாய் தான் கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தார். இருப்பினும், நேற்று ஆட்டத்தை ரொம்பவே ரசித்து பார்த்தார். சச்சின் அவுட் ஆனதும் அவர் முகத்தில் தெரிந்த சோகம்....ஐயோ அப்ப தான் புரிந்தது cricket is not just a sport, it's a game that can emotionally impact people's lives!
gambhir கம்பீரமாய் ஆடியதும் கொஞ்சம் சந்தோஷம். இந்தியாவில் இருக்கும் தோழி மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தோழி ஆகிய இருவரிடம் facebookல் நாங்கள் அடித்து கொண்ட commentaryகள் ஏராளம்!
gambhir போனதும், சற்று கூடியது heart beat rate. டோனி வந்தார்! கலக்கிட்டார்! அவர் கண்களில் தெரிந்த வெறி- the fire in his eyes. தல டா, டோனி! உண்மையான தலைவன் அவன் தான். ஸ்டைல் மன்னன் ரஜினி அங்கு இருந்ததால் என்னவோ, டோனியும் ஆட்டத்தை ஸ்டைலாக முடித்தார்!
28 வருட கனவு. சச்சினின் ஆசை. 100 கோடி மக்களின் விருப்பம்- நேற்று இரவில் அனைத்தும் நிறைவேறியது! ஆனந்த கண்ணீரை தடுக்க முடியவில்லை.
இலங்கையின் அதிரடி ஆட்டம் அற்புதம். ஒரு இறுதி போட்டி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது!!
ஆட்டம் முடிந்தபிறகு, kohli சொன்னதும் இன்னும் கண்ணீர் பெருகியது, " ."
நான் ஒரு இந்தியன் என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))))
நான் ஒரு கிரிக்கெட் ரசிகை என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))
நான் வாழும் காலத்தில் இந்தியா உலக கிண்ணத்தை ஜெயித்தது என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))
*இந்தியா ஜெயிச்சா, பிரியாணி செஞ்சு தரேன்னு பணிப்பெண் சொன்னாங்க! பிரியாணி, here i come!:)))
1 comment:
//the fire in his eyes//
நான் லிவிங் ரூமுக்குப் போகவும் டோனி பீல்டுக்கு வரவும் நேரம் சரியாக இருந்தது. அதே நேரம் இங்கே ரேடியொவில் ஐ ஓவ் த டைகர் பாட்டும் போய்க்கொண்டிருந்தது. டோனியை பார்த்த போதும் எனக்கு அது தான் தோன்றியது. நான் இறங்கிப் போன போது டோனி வந்ததால் டோனி அடிச்சு ஆடினார் என்று நான் அடிச்ச பந்தா எனக்கே ஒவராகத் தான் தெரிஞ்சுச்சு
Post a Comment