Jun 9, 2011

அப்பரம், இன்னிக்கு என்ன plan?- 1

சோம்பல் முறித்த சந்தோஷ் படுக்கையில் புரண்டு வலம் பக்கம் திரும்பினான். குளியலறையின் கதவில் நீரின் வெப்பம் ஒழுகியது. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் மாயா. அவளின் வாசம், சோப்பின் மணம் அனைத்தும் சோம்பலில் இருந்த சந்தோஷுக்கு புத்துணர்ச்சியை தந்தது. தலைமுடியை துவட்டியபடி மெத்தையில் அமர்ந்தாள். சந்தோஷ் அவளையே பார்த்தான் கண்கொட்டாமல்.

"எழுந்திரு சந்தோஷ், it's 7.15am now." அவன் பக்கம் திரும்பி கூறினாள். தலைமுடியிலிருந்து இரண்டு சொட்டு நீர் சந்தோஷின் கன்னங்களில் விழுந்தன.

அவன், " தேவதை குளித்தத் துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்....அன்பே அன்பே கொல்லாதே" ஜீன்ஸ் பட பாடலை பாடினான்.

சிரித்தபடி மாயா, "ஸ்ருதி தப்பா இருக்கு!" என்று கிண்டலடித்தாள்.

"சாரி, ஸ்ருதினு எந்த பொண்ணும் எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்ச ஒரே பொண்ணு, மாயா தான். அவ ரொம்ப அழகா இருப்பா...especially after her shower." காலையிலேயே ரோமெண்டிக் மூட் வந்தது சந்தோஷுக்கு.

புன்னகை மாறாத மாயா, "ஹாலோ மிஸ்டர் சந்தோஷ், enough of your nonsense. you're getting late for work. quick, get up! breakfastக்கு என்ன வேணும்?"

"it's friday. இன்னிக்கு... வேலைக்கு போகனுமா?" வேண்டாம் வெறுப்பாக எழுந்தான்.

காலை உணவு உண்ண சந்தோஷ் dining tableக்கு வந்தான். மாயா செய்து இருந்த sandwich எடுத்து ஒரு சிறு கடி கடித்தான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த மாயா, அவனுக்கு ஆரஞ்சு ஜுஸ் ஊற்றினாள்.

"ம்ம்ம்....அப்பரம் இன்னிக்கு என்ன plan?" என்றான் சந்தோஷ்.

சமையலறைக்குள் சென்ற மாயா, "என்ன plan?" என்று முழித்தாள்.

"ஏர்டெல் விளம்பரத்துல கார்த்தி சொன்னா மட்டும் புரியுது?" என்று கிண்டலடித்தான். ஆரஞ்சு ஜுஸ் குவளையை சமையலறையில் வைத்துவிட்டு திரும்பிய மாயாவை, சுவர் அருகே மடக்கினான் சந்தோஷ். அவளின் சோப்பு மணமும் shampooவின் மணமும் அவனையை அவளிடம் இன்னும் ஈர்த்தது. மணம் நுகர்ந்தபடியே அவள் கழுத்தை நோக்கி சென்றது அவனது முகம்.

அவனின் குறும்பு செயலை தடுத்தபடி, "ஹாலோ my dear santhosh, ஆபிஸுக்கு லேட் ஆயிட்டுனு கொஞ்சும்கூட பயம் இல்லையா!?"

சந்தோஷ் புன்னகையுடன், "அழகான மனைவி இருந்தா, ஆபிஸுக்கு லேட்டா போகலாம். தப்பில்ல!" என்று கண் சிமிட்டினான்.

"ஐயோ சந்தோஷ்! ப்ளீஸ்! என்னையவிட...." வெட்கங்களை அள்ளிகொண்டு அவன் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று தோற்று போனாள் மாயா.

"tie கட்டிவிடு!" என்றான் சந்தோஷ்.

"ஏன் உனக்கு தெரியாதா?" என்றாள் மாயா.

"தெரியாத விஷயங்கள மட்டும் தான் சொல்லி தருவீயா?? நேத்திக்கு ராத்திரி மாதிரி." சில்மிஷ பார்வையுடன் அவன்.

வெட்கங்கள் அவளின் உதடுகளை முட்ட, "சந்தோஷ்!!!! stop it!!"

"hahaha..ok ok. just kidding. please.... tie கட்டிவிடேன்." கெஞ்சினான் சந்தோஷ்.

"இப்படி கிட்ட நின்னா...எப்படி?" என்றபடி அவள் இடுப்பில் இருந்த அவனது கைகளை தள்ளிவிட்டு tie கட்டினாள். tieயை சரிசெய்தாள். சற்று கலைந்திருந்த அவனது முடியை தனது விரல்களால் அழகாய் கோதிவிட்டாள்.

ரொம்ப smartஆ தெரிந்தான். அவன் நெற்றியில் இதழ் பதித்தாள் மாயா.

முத்தம் கொடுத்த உற்சாகத்தில், மறுபடியும் தன் வசம் இழுத்து கொண்டான் மாயாவை.

"நெத்தில மட்டும் தானா!?" என்று கொஞ்சினான்.

அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா.

"right cheekல மட்டும் தானா?" மறுபடியும் கெஞ்சல்.

முறைத்தாள் செல்ல கோபத்துடன். செய்ய வேண்டியதை செய்தாள்.

"left cheekல மட்டும் தானா?" அவனும் விடவில்லை.

"quota finished! இதுக்கு மேல கேட்டே...அப்படியே இந்த tieயால கொல பண்ணிடுவேன்." அவனது tieயை இழுத்தாள்.

"நீ என்னைய என்னவேணாலும் பண்ணு. ஆனா the weapon must be your lips!" சிரித்தான் சந்தோஷ்.

"santhosh...please da. அடம்பிடிக்காதே! டைம் ஆச்சு! இன்னும் ஒரு secondல நீ கிளம்புல அப்பரம் இன்னிக்கு no plans for tonight" என்றதும் சந்தோஷ்,

"noooooooooo! சரி சரி, i better leave." என்று கிளம்புவதற்கு முன் ஒரு முறை மாயாவை கட்டி அனைத்து,

"take care, dear" என்றான்.

அவன் காரில் ஏறி செல்வதை ஜன்னல் வழி பார்த்தாள். அச்சமயம், பக்கத்துவீட்டு குட்டிபையன் பள்ளிக்கு செல்லும் தருவாயில், "அம்மா, இன்னிக்கு football match இருக்கு. late-aa ஆகும்."

********
2 வருடங்களுக்கு முன்...

"அம்மா, இன்னிக்கு football match இருக்கு. late-aa ஆகும்," சொல்லிகொண்டே தனது shoe பையில், gloves, knee pad, knee shield, boots ஆகியவற்றை எடுத்து கொண்டாள் மாயா.

'goalfest carnival- boys&girls' என்ற வரவேற்பு பலகையை படித்தவாறு ஸ்டென்லி விளையாட்டு அரங்கிற்குள் நுழைந்தாள் மாயா. இந்த 'goalfest carnival' வருடம்தோறும் நடக்கும் ஒரு காற்பந்து விளையாட்டு விழா. இதில் ஆண்கள் பெண்கள், சிறு குழந்தைகள் என மூன்று பிரிவுகள் உண்டு. சில வருடங்கள் காற்பந்து விளையாட்டிய அனுபவம் இருந்தாலும், மாயாவிற்கு இந்த விழாவில் கலந்து கொள்வது முதன் முறை.

கோயில் திருவிழா போல் அரங்கம் முழுவதும் மக்கள். காலை 10 மணிக்கு தான் வெவ்வேறு திடலில் ஆட்டம் நடைபெறும். அப்போது 9 மணி தான். warm up உடற்பயிற்சிகளை தனது குழு தோழிகளிடம் சேர்ந்து செய்தாள். அவளின் தோழி ஷில்பா,

"மச்சி, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு!"

மாயா, "don't be nervous! let's do our best!"

ஷில்பா அதற்கு, "அது இல்ல டி! ஒரே நேரத்துல இந்த அழகான பசங்கள பார்க்க நான் கொடுத்து வச்சு இருக்கனும்! எனக்கு சந்தோஷத்துல...அழுக அழுகையா வருது மச்சி!"

மாயா சலித்துகொண்டாள், "oh god! நீங்கலாம் திருந்த மாட்டீங்க! please stay focus!"

"i am going through a குவ்வியமில்லா காட்சி பேழை moment di!!!" சத்தம் போட்டு சிரித்தாள் இன்னொரு தோழி ராதா. மற்ற தோழிகளும் சிரித்தனர். சிரிப்பு சத்தம் இடையே ஒரு அறிவிப்பு வந்தது.

அறிவிப்பாளர், " இன்னும் 3 டீம் register பண்ணல்ல. 5 minutes தான் இருக்கு கடைசி registrationக்கு. registration will be closed after that and teams without official registration forms would be disqualified." என்றார்.

ராதா, "மச்சி, we have yet to register." என்றார் திடீரென்று.

மாயா, "what!!?? நான் தான் நேத்திக்கு சொன்னேன்ல. சீக்கிரமா வந்தவங்க first போய் register பண்ணுங்கன்னு." எரிச்சலாய் சொன்னாள்.

ஷில்பா, "sorry babe. got distracted by handsome dudes." என்று தனது நக்கல்பேச்சுடன் அவசர அவசரமாய் கிளம்பினாள் registration counterக்கு. கூடவே, மாயாவும் போனாள்.

அங்கே ஏற்கனவே, இருவர் குழு ஏற்பட்டாளரிடம் வாக்குவாதம் நடத்திகொண்டு இருந்தனர். ஏற்பட்டாளர், " மிஸ்டர் சந்தோஷ், look here. 9.15amக்குள்ள registration பண்ணியிருக்கனும். now it's 9.16am. registration over."

சந்தோஷ், "but sir, it's only 9.12am." தனது கடிகாரத்தை நீட்டி காட்டினான்.


(பகுதி 2)

11 comments:

Anonymous said...

Hai Vada =))

sulthanonline said...

Wow superb romantic love story..

vijayroks said...

sema romance.....ammaadeee....aanjaneyabaktai nu sollikittu oora emathuraangappa....idha yaarum keekamateenga....really nice...waiting for next part

vijayroks said...

//ஷில்பா, "sorry babe. got distracted by handsome dudes." என்று தனது நக்கல்பேச்சுடன் அவசர அவசரமாய் கிளம்பினாள் //

indha ponnungale ippidithan esamaan...lol

vijayroks said...

indha kadhaiyoda next part sollatuma....hero vandhu heroinekaaga avar regstration a cancel panniduvaaru.heroine register panni vilayadi jeichiduvaanga.vitti kodutha hero mela heroine ku luvs vandhudum...rendu perum kalyanam pannikittu daily kalaila sandwich sappuduvaanga....

epdi kadhai...soopera

vijayroks said...

//மிஸ்டர் சந்தோஷ், look here. 9.15amக்குள்ள registration பண்ணியிருக்கனும். now it's 9.16am. registration over."

சந்தோஷ், "but sir, it's only 9.12am." தனது கடிகாரத்தை நீட்டி காட்டினான்.//

pakkathula irundh avanoda friendu" dei adhu nethi time da...andha watch ninnu poiye 24 hrs aaguthu..."

vijayroks said...

//"நீ என்னைய என்னவேணாலும் பண்ணு. ஆனா the weapon must be your lips!" //

aaha AK47 madhiri use panraangappa

ANaND said...

ரொமாண்டிக் ஸ்டோரி ...

உங்க கதைய படிச்சா நாளைக்கே கல்யாணம் பண்ணிகலமோ னு தோணுது

ஒரு வழியா குவியமில்லா காட்சிபேழை க்கு அர்த்தம் கண்டுபுடிசிடிங்க போல

FunScribbler said...

@அனாமிகா: :)

@சுல்தான்: நன்றி நண்பா:)

@விஜய்: என்றுமே நான் ஆஞ்ஜநெய பக்தை தான்!ஆஹா.. கதையோட அடுத்த பகுதிக்கு நல்லாதான் ஐடியா கொடுக்குறீங்க! thanks:)

@ஆனந்த:

//உங்க கதைய படிச்சா நாளைக்கே கல்யாணம் பண்ணிகலமோ னு தோணுது//

hahaha I am flattered. thank you.
ஆனா இருந்தாலும், இந்த மாதிரி தவறு நடந்தால் என்னைய குற்றம் சொல்ல கூடாது நண்பா!

Venkat said...

twingk:} எனக்கு ஒண்ணுமே புரியல, நான் சின்னபுள்ளை இல்லையா அதான். hehee :):)

Btwn: good imagination you have, Lucky ur Boy is.

எவனோ ஒருவன் said...

Thanks for visiting my blog and comments. உங்க ப்ளாக் ல இருந்து கதை எழுதுற டிப்ஸ் எடுத்துக்கிறேன் :-)

காமெடி, ரொமான்ஸ் ரெண்டுலயும் பின்னுறீங்க.

////அவன், " தேவதை குளித்தத் துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்....அன்பே அன்பே கொல்லாதே" ஜீன்ஸ் பட பாடலை பாடினான்.//// - Timing was good.

பசங்க பொண்ணுங்களை பார்த்தா என்ன பேசுவோம்னு தெரியும்...ஆனால் பொண்ணுங்க என்ன கமெண்ட்ஸ் அடிப்பாங்கன்னு உங்க ப்ளாக்கை பார்த்தா தெரிஞ்சுக்கலாம் போல :-)