Nov 14, 2011

இச் இச் இச் இச் கொடு

"மேடம், 11 மணி ஆச்சு...ஆபிஸ close பண்ணனும்..." என்றான் security guard. அவன் சொன்ன பிறகு தான் ஷாமினிக்கு தெரிந்தது மணி 11 என்று. இன்னும் வேலை முடிந்த பாடு இல்லை. அவசரமாக fileகளை எடுத்து தனது பையில் போட்டாள். கணினியில் இருந்த documentகளை thumbdriveல் save செய்தாள். ஆபிஸில் அவள்கூட இன்னும் 4 பேர் மும்முரமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் security guard விரட்டினான்.

கார் நிறுத்திய இடத்தில் ஷாமினி கூட வேலை பார்க்கும் தோழி, " என்ன ஷாமு பொழப்பு இது. காலையில 8 மணிக்கு வந்தா....ராத்திரி 11 மணிக்கு தான் வீட்டுக்கு போறோம். i feel extremely tired. there's no life at all!" கோபமும் சலிப்பும் தெரிந்தது அவளது குரலில். அவளைவிட ஷாமினிக்கு இன்னும் களைப்பு. பதில்கூட சொல்ல முடியாமல் தோழியின் தோள்பட்டையில் தட்டி கொடுத்தாள்.

வண்டியை start செய்தாள். இரவு குளிர், காரில் உள்ள குளிர், தனிமையில் கார் பயணம், வானொலியில் காதல் பாடல்கள்- இவை அனைத்தும் வாசு இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என அவள் மனதில் சிந்தனைகளை ஓட விட்டது. அவனை அளவுக்கு அதிகமாக காதலித்தவள் இப்போது வேலை பளுவினால் அளவுக்கு அதிகமாய் 'மிஸ்' செய்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும், ஒரு அற்புத வாசனை வீசியது. வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருந்தன. அனைத்தும் வாசு சுத்தம் செய்து வைத்திருந்தான். அறைக்குள் சென்றவள், வாசு தூங்கி கொண்டிருந்ததால், படுக்கை பக்கத்தில் இருந்த சிறு விளக்கை மட்டும் போட்டாள்.

அந்த சிறு வெளிச்சத்தில்கூட அவனது முகம் பிரகாசமாய் தெரிந்தது. கார் சாவியையும் பையையும் கீழே வைத்தாள். அவன் அருகே படுக்கையில் உட்கார்ந்தாள்.

வாசுவை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள். தனது வலது கைவிரல்களால் அவனது முடியை மெர்துவாய் கோதிவிட்டாள். அவளது விரல்கள் அவனது கன்னத்தையும் வருடியது. இந்த கணம் தான் அவள் உணர்ந்தாள் அவனிடம் நன்று பேசி, சிரித்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதை. ஞாயிற்றுகிழமைகளில்கூட அவள் வேலை பார்க்க நேரிட்ட தருவாயிலும் வாசு அவளது வேலை சுமையை நன்கு புரிந்து கொண்டான். ஒருபோதும் அவள் மீது கோபம் கொண்டது இல்லை.

அவளுக்குள் சிந்தனைகள் ஓட, வாசு கண் விழித்தான்.

"ஏ... ஷாமினி... வந்துட்டீயா?" சிறு குழந்தை அம்மா வாங்கி வந்த lollilopயை கண்டு மகிழ்ச்சி அடைந்ததுபோல் புன்னகையித்தான்.

"sorry." என்றாள் அமைதியாய்.

"ச்சே, எழுப்பிவிட்டதக்கா? பரவாயில்ல டா...how was your day? என்று சொல்லிகொண்டு எழுந்து உட்கார்ந்தான் கட்டிலில். ஷாமினி பேசவில்லை.

"are you ok?" படுக்கையில் வைத்திருந்த அவள் கைமேல் அவன் கைவைத்து கேட்டான்.

"sorry. எல்லாத்துக்கும். I feel very tired. I feel very lonely. உன்னைய விட்டு ரொம்ப தூரம் விலகி போன மாதிரி இருக்கு." ஷாமினி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"என்ன மா சொல்ற. ஏன் ஒரு மாதிரியா இருக்கே? any problem at office?" அவன் கேட்டான்.

சாய்ந்திருந்த ஷாமினி எழுந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவனது கண்களைப் பார்த்து, " i really really miss you vasu. காலையில ஆபிஸ் போனா, late night தான் வரேன். மறுபடியும் காலையில எழுந்துச்சு போயிடுறேன். weekends முழுக்க வேலை தான் மறுபடியும். especially இந்த ரெண்டு மாசம்.... முடியலடா."

அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தான். அவள் குரலில் தெரிந்த சோகம் அவனுக்கு புரிந்தது. "என்ன மா, இதுக்கு போய் feel பண்ணுற. எனக்கே வேலை அதிகமா இருந்துச்சுன்னு, ஆபிஸ் முடிஞ்சு எவ்வளவு லேட்டா வந்து இருக்கேன்?"

"உன்னைய கவனிச்சுக்க முடியலன்னு... i feel guilty டா." அவனது முகத்தை பார்க்க தயங்கினாள்.

புன்னகையித்தபடி வாசு, " ஐயோ ஷாமினி. என்ன மா? ரொம்ப சீரியஸா ஆகுற. இது எல்லாம் ஒரு பிரச்சனையா? absence makes the heart fonder. வாழ்க்கைல கொஞ்சம் இப்படி 'மிஸ்' பண்ணதான் love அதிகமாகும்."

தொடர்ந்தான் வாசு, " இது ரொம்ப simple. இப்போ ஏதோ ஒரு முக்கியமான project போயிகிட்டு இருக்குனு சொன்னீயே... அது எப்ப முடியும்?"

சலித்தகொண்டே ஷாமினி, "அது இன்னும் 3 வாரம் ஆகும்."

கொஞ்சம் யோசித்த வாசு, "ok great. அப்போ அடுத்த மாசம் முதல் வாரத்துக்குள்ள முடிஞ்சுடும். cool.... முடிஞ்ச கையோட நீயும் நானும் 2nd honeymoon போறோம். செம்மயா enjoy பண்ணுறோம். அப்பரம் உனக்கு எந்த guilty feelingsம் இருக்காது. ஒன்னா சேர்ந்த மாதிரியும் இருக்கும், work எல்லாம் தள்ளிவச்சுட்டு ஒரு holiday போயிட்டு வந்த மாதிரியும் இருக்கும். என்ன ஓகேவா?" என்றான்.

அவன் முகத்தில் பார்த்த ஆனந்தம் அவளுக்கு பிடித்து இருந்தது, "ம்ம்..ஒகே. உன் விருப்பம்."

புன்னகையித்த கொண்டே, படுக்கையில் அமர்ந்து இருந்த வாசு, அவள் இடுப்பை சேர்ந்து அணைந்து கொண்டான். புருவம் சுழித்த வாசு, "ரொம்ப இளச்சு போயிட்ட மா... நீ சாப்புடுறீயா இல்லையா?" என கேட்டான்.

படுக்கையிலிருந்து எழுந்த ஷாமினி, காதுகளில் போட்டிருந்த தோடுகளை கழற்றி மேசையில் வைத்தாள். குளிக்க செல்வதற்காக, அலமாரியில் துண்டை எடுக்க சென்றாள்.

" lunch என்ன சாப்பிட்ட?" என்றான் வாசு.

"meeting இருந்துச்சு டா." என்று பதில் அளித்தபடி அலமாரியில் இருந்த 3வது அடுக்கில் தனது துண்டை தேடினாள்.

"tea break?" மறுபடியும் கேள்வியை கேட்டான்.

"அதுக்கு எல்லாம் எங்கடா டைம் இருக்கு. i was at the HQ."

தேடி கண்டுபிடித்த துண்டை கையில் எடுத்தவாறு அலமாரியை சாத்தினாள், அதே சமயம் வாசுவும் அவளை, அலமாரி கதவு அருகே இழுத்து கொண்டான்.

"so, இன்னிக்கு நாள் முழுக்க சாப்பிடல?"

"டைம் இல்ல டா..."

"உன்னைய நல்லா பாத்துப்பேனு சொல்லி உங்க அம்மா அப்பாகிட்ட promise பண்ணியிருக்கேன். நாளைக்கே வந்து என் இப்படி இளச்சு போயிட்டேனு கேட்டா, நான் என் மூஞ்சிய எங்க வச்சுகிறது. " என்றான் வாசு.

வாய்விட்டு சத்தம் சிரித்த ஷாமினி, "இந்த புதியமுகம் படத்துல வர மாதிரி முகத்த surgery பண்ணி மாத்திக்க."

"எனக்கு அவ்வளவு அசிகமான மூஞ்சி எல்லாம் வேண்டாம். சரி நீ போய் குளிச்சுட்டு வா. சாப்பிட்டு படு."

ஷாமினி, "வாசு, வேண்டாம் டா. late night ஆச்சு. எனக்கு பசிக்கல."

வாசு, "எனக்கு பசிக்குதே."

அவள் புரியாமல் முழித்தாள், "நீ இன்னும் சாப்பிடலயா?"

வாசு, "இல்ல மா."

ஷாமினி, "ஏன் டா?"

வாசு, "உன்கூட சேர்ந்து சாப்பிடலாம்னு wait பண்ணேன்."

ஷாமினி, "எனக்குதான் லேட் ஆகும்னு உனக்கு தெரியுமே."

வாசு, "அது அல்ல ஷாமினி. இன்னிக்கு special day."

ஷாமினி இன்னும் குழம்பி போனாள். ஷாமினி, " special day??mmm...." யோசித்தாள்.
யோசித்தவள், "இன்னிக்கு உன் birthdayயும் இல்ல. எனக்கும் இல்ல. நம்ம wedding dayயும் இல்ல. engagement dayயும் இல்ல....அப்பரம் என்னடா special?"

வாசு, "இன்னிக்கு தான் முதல் தடவ நீ எனக்கு 'ஐ லவ் யூ' னு மெசேஜ் அனுப்புச்ச நாள். நமக்கு engagement முடிஞ்சு ஒரு நாள் சினிமா போயிட்டு வந்தோம். அன்னிக்கு நைட் நான் மெசேஜ் அனுப்பிச்சு கேட்டேன் என்னைய பிடிச்சுருக்கானு. அதுக்கு 'ஐ லவ் யூ'னு reply போட்டு இருந்தீயே. இன்னும் அத என் mobileல வச்சுருக்கேன்," என்று கூறி முடிக்க,

ஷாமினி கண்களில் பூரிப்பு. அந்த பூரிப்பு கலந்த சந்தோஷத்தில், ஒரு துளி ஆனந்த கண்ணீர்.

"என்னைய கொல்றடா!" என்றவள் அவனைக் கட்டி அணைந்து கொண்டாள். நெற்றியில் முத்தம் கொடுத்தவளிடம் வாசு,

"எனக்கு அங்க வேணாம். எனக்கு இங்க வேணும்." என்றவன் அவளது ஆள்காட்டி விரலை தனது உதடுகள் மேல் வைத்தான். அவளையே குறுகுறுப்பான விழிகளால் ஊடுருவிய அவனுடைய பார்வை, புரியாத பல உணர்வுகளை பிரதிபலிக்க அவளுக்குள் கூச்சம் கூரைக்குள் ஒளிந்துகொண்டது. அவன் முகத்தில் விரவிய வசீகரப் புன்னகை அவள் உலகையே மறக்க செய்தது.

*முற்றும்*

6 comments:

sulthanonline said...

nice story thamiz

சதீஸ் கண்ணன் said...

உங்களுடைய trademark லவ் ஸ்டோரி :)
பெரிய கதைல வருற ஒரு அத்தியாயத்தை மட்டும் படித்த மாதிரி இருந்தது.. கொஞ்சம் அதிகமாக எழுதிருக்கலாம்

Thamizhmaangani said...

@sultan: thank you boss!!
@sateesh: thanks for the comments!! no time to write a lengthy one!

Pu..Ka..Ra..Prabhu said...

wav... once again romantic story... quite interesting but its shows the same feels like your other love story thamil... But at the end இச் இச் இச் இச் finished well from vaasu smile..

By
Prabhu R

F.NIHAZA said...

அற்புதம்...
காட்சிகள் தன் வீட்டில் நடப்பது போல இருந்திச்சு

சிவகுமார் said...

Real life eppdi ellam ella !