Nov 28, 2011
மயக்கம் என்ன- பிடிச்ச மயக்கம்!
ரொம்ப நாளைக்கு அப்பரம், first day first show பார்த்த படம்- இந்த 'மயக்கம் என்ன'.
மத்தவங்களுக்கு ஏன் இந்த படம் பிடிக்கலைன்னு சொல்லிடுறேன் - மெதுவாய் சென்ற திரைக்கதை, இரண்டாம் பகுதியில் சில குழப்பங்கள், 'silent' background score, செல்வராகவனின் அரைத்த மாவை திருப்பி அரைத்தவிதம்.
இருப்பினும், எனக்கும் படம் ரொம்ப பிடித்து இருந்தது. காரணம்- எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்த படம். (ஏற்கனவே rockstar பார்த்து நொந்து போனதால் என்னவோ), இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது. பாடல்கள் வந்து இடம், கதாநாயகியினி நடிப்பு- முக்கியமா சொல்ல போனால், ஒரு காட்சியில் வெறிகொண்டு ஆத்திரம் அடைவார் கதாநாயகி. அந்த நடிப்பு- oh my god, awesome!!
அப்பரம் வசனங்கள்:
1) பிடிச்ச வேலைய பாக்க முடியலன்னா, செத்து போய்டனும்!! (என் மனசாட்சி தினமும் என்னை வாட்டி எடுக்கும் ஒரு டயலாக்!)
2) தவறாக நடந்துகொள்ளும் நண்பனிடம், "ஆம்பள புத்தி. அப்படி தான்." என்று கதாநாயகி ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லும்போது...ஐயோ!!! செம்ம செம்ம செம்ம!!
தனஷின் நடிப்புக்கு நல்ல தீனி போட்ட படம். தமிழ் தெரியாவிட்டாலும், நடிப்பில் கலக்கிய புது கதாநாயகி. நண்பனாய் வரும் 'சுந்தர்'- அவரின் காமெடி! எனக்கு படத்தில் பிடித்த காட்சி- தனஷ் எடுத்த படம் அட்டைபடமாய் வந்த குமுதம் இதழ் அந்த ஆபிஸ் முழுக்க பல பேரின் கைகளுக்கு சென்று கடைசியாய் போக வேண்டிய இடத்திற்கு செல்லும். அதற்கு அப்பரம் தான் தனுஷ் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும்! - இக்காட்சி எனக்கு தந்த நம்பிக்கை. எப்படியாச்சு நமக்கு ஒரு நல்லது நடக்கும், நமக்கு பிடிச்ச வேலைய பார்க்கும் ஒரு நாள் வரும் அப்படின்னு எனக்கு நம்பிக்கை தந்த படம்!!!!
மொக்கை காட்சிகள் சில இருந்தாலும், படம் என்னை கவர்ந்து இருக்கிறது.
மசாலா தோசை ஆர்டர் செய்ய போய், வெறும் plain தோசை சாப்பிடும் ஒரு உணர்வு ஏற்பட்டாலும் கூடவே புதுசா freshஆ இருந்த தக்காளி சட்னியும் புதினா சட்னியும் வெறும் தோசையையும் ரசிக்க, ருசிக்க வைத்தது!!:))))))))))))
மயக்கம் என்ன- எனக்கு பிடிச்சிருக்க இந்த மயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
good
true comment..machi.
பாசிடிவ் விமர்சனம். ஓகே ஓகே....
நம்ம தளத்தில்:
அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?
good
vimarsanam nallaa iruku
Padam inum paarkala..inimethaan
Post a Comment