Dec 21, 2011

நிலா அது வானத்து மேலே- (2)

பகுதி 1

பரவாயில்ல நாங்க பஸ்ல போறோம்'னு சொல்லிட்டு கிளம்பி வந்தோம். அச்சமயம் ஒரு பெண் வாகன ஓட்டுநர் (கையில் சிகரெட்) வந்தார். $15க்கு ஓகே சொல்லி ஏறினோம். ஆனால் அவர் main roadலில் போகாமல் சந்துகளில் போனார். ஆள் நடமாட்டமே இல்லை அவ்விடத்தில்....

ஏதோ ஒருவித பயம் மற்ற பெண்களுக்கு. எனக்கு microwave ovenல் உட்கார்ந்து இருப்பது போல் இருந்தேன். அம்புட்டு வெயில்! வாகனத்தில் ஏசி வேற இல்லை! கையில் ஒரு முட்டை இருந்திருந்தால், omeletteஆக மாறி இருக்கும்!

அவர் சந்துகளில் போனதற்கு ஒரு காரணம் இருந்தது. main சாலையில் அதிக traffic என்பதால் அவர் அவ்வாறு செய்தார். அப்போது தான் புரிந்தது- யாரையும் தப்பா நினைக்ககூடாதுன்னு!:))) அவர் எங்களை இறக்கிவிட்டு மீண்டும் இரண்டு மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு சென்றார். நாங்கள் நல்லா shopping செய்தோம். ice-lemon tea வாங்கினோம்- சாக்கடை தண்ணிகூட நல்லா இருக்கும்னு அப்போது தான் தோன்றியது!:((

பிறகு, வண்டியில் மீண்டும் கப்பலுக்கு சென்றோம். நான் முதலில் சொன்னதுபோல் கப்பல் உணவை மீண்டும் சுவைத்தோம்! தோழிக்கும் தங்கைக்கும் 'ஐஸ் கீரிம்' man என்று ஒருவர் மீது ஒரு கண்ணு என்று சொல்லியிருந்தேன் அல்லவா- அவருடன் போய் ஃபோட்டோ எடுக்கனும்னு ஒரே அடம் என் தங்கைக்கு! (தூக்கி வளர்த்த துயரம்...)

இந்த மானகெட்ட விளையாட்டுக்கா நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு சாப்பிட சென்றுவிட்டேன். அதுங்க எப்படியோ போய் ஃபோட்டோ எடுத்து கொண்டனர். ஹாஹா..ஹாஹா...ஆனால், அவர் கண்களை மூடியவாறு எடுத்துவிட்டனர்.

மறுநாள், phuket (thailand) சென்றோம். கடற்கரை ஓரம்! ரொம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்துச்சு. இந்த வெயில் தவிர இடம் ரொம்ப அருமையா இருந்துச்சு. burger king கடையில் ice-milo வாங்கினோம்- அமர்தம்!! அவ்வளவு இனிப்பா சுவையா இருந்துச்சு. ஆனால், அங்கயும் இந்த 'லொல்லு பசங்க' தொல்லை தாங்கமுடியல்ல. நாங்கள் இந்தியர்கள் என்று தெரியும். ஆக, இந்த கடைக்காரர்கள் (ஆண்கள்) எங்களை பார்த்து, "என்ன சாப்னியா?" (சாப்பிட்டீயா?) என்று கிண்டல் செய்தது சலிப்பை உண்டு பண்ணியது!

இருந்தாலும், 'customer'யை ஈர்க்கும் உத்தி என்று மனதை சமாதானம் செய்து கொண்டு வந்தோம். ஆனால், ஒரு கேள்வி- இதுவே நாங்க ஒரு ஆண் தோழரோடு சென்று இருந்தால், கிண்டல் நடந்து இருக்குமோ??? ஆக, சின்ன பொண்ணுங்கன்னா...கிண்டல் அடிக்கலாமா? என்னமோ போங்க!

ஆனா, என்ன நடந்தாலும் நாங்க சிரித்து கொண்டு எங்கள் கொண்டாடத்தை தொடர்ந்தோம்!

கப்பலில் முக்கால்வாசி நபர்கள் வட இந்தியர்கள் என்பதால் ஒரே ஹிந்தி தான் போங்க! மூன்று நாட்களில் அவ்வளவு இந்தி சொற்களை கற்று கொண்டோன். அறை தொலைக்காட்சியில் zee tv வேற தெரிந்ததா? அதையும் விடவில்லை. ஏதோ ஒரு ஹிந்தி நாடகம்- அந்த ஹீரோயின் microwave ovenல் சில்வர் பாத்திரத்தில் ஒன்றை வைப்பார். அது வெடித்துவிடும். இதை ரெண்டு நாளா காட்டி கொண்டிருந்தான். நாங்கள் எங்களால் முடிந்த அளவு காமெடியும், கலாட்டாவும் அடித்து ரசித்து பார்த்தோம்!

கப்பலில் சென்ற பயணம்- ரொம்ப பிடித்துபோய், வீட்டிற்கு திரும்பவே ஆசை இல்லை. எனக்கு அழுகையே வந்துடுச்சு! வேலையில் ரொம்ப நொந்து போயிருந்த எனக்கு, இது உண்மையாகவே ஒரு ஜாலியான நேரம்!

5 comments:

rishvan said...

நல்ல பயணக்கட்டுரை....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

Pu..Ka..Ra..Prabhu said...

கடைசிவரைக்கும் எவ்வளவு செலவு ஆச்சு னு சொல்லவே இல்லை தமிழ்..

By
Prabhu R

Thamizhmaangani said...

பிரபு: ஹாஹா.. $700 (singapore currency)

Kumaresh said...

Blog Design Superrrr. Nice Change and of course nice experience

பிரியமுடன் பிரபு said...

நன்றி பகிர்விற்கு...