16 மொழிகளில் 'காதல்' வார்த்தைகளை வைத்து ஒரு பாட்டு! பின்னிட்டாரு மதன்கார்கி!! ஒரு சிலர் நினைக்கலாம்- என்ன டா இது, தமிழ் பாட்டுல தமிழே வராதா என்று! அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் 'நாடிமானி' எனும் வார்த்தையை பயன்படுத்தி இருப்பார் பாடலில்.
நாடிமானி என்றால்? அட நம்ம stethoscope.
அப்பரம் எனக்கு ரொம்ப பிடித்தது கணக்கு ஐடியாக்களை வைத்து பாடலை எழுதியது!
முக்கோணங்கள் படிப்பேன்/ உன் மூக்கின் மேலே
(Triangles, I study on your nose)
விட்டம் மட்டம் படிப்பேன்/ உன் நெஞ்சின் மேலே
(Width and depth I understand, from your heart)
மெல்லிடையோடு வளைகோடு / நான் ஆய்கிறேன்!
(Curve line, I explore on your waistline)
(http://nandinikarky.blogspot.com/2011/12/lyrics-asklaska-setsquare-sthethoscope.html)
மதன்கார்கியின் மனைவியின் வலைப்பூ இது! அதில் இந்த பாடலை பற்றி விளக்கம் இருக்கு:)))
**********************************************************************************
3 பட பாடல்களையும் கேட்டேன். ம்ம்ம்.... கொலவெறி மட்டும் தான் அதிரடி. மற்றவை எல்லாம்..ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!
*********************************************************************************
புது வருஷம் வர போகுது. லீவும் முடிய போகுது! வேலை மறுபடியும் ஆரம்பிக்க போகுது...ஐயோ! :((((((((((((
*********************************************************************************
ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு நாள், காலையில் எழுந்து பார்த்தேன். வீட்டில் யாருமே இல்லை! யப்பா....ரொம்ப நாள் கழித்து, தனிமை! ரொம்ப பிடித்து இருந்தது அந்த அமைதியான சூழல்! தனிமை, கொஞ்சம் பிடிக்கும்:) ரொம்ப பசிக்க ஆரம்பித்தது. ஆக, சமையலறைக்கு சென்றேன். இருந்தது வெறும் 2 ரொட்டி துண்டுகள். சும்மா sandwich சாப்பிடலாம் என்று தோன்றியது. ஆனால், அடுத்து நொடி ஒரு ஐடியா வந்தது. சூரியவம்சம் தேவையாணி இட்லி உப்புமா செய்தது போல் ஏதேனும் புதுசா செய்யகூடாதுனு?
எனக்கு தெரிந்த பொருட்களை வைத்து 'egg bread kothuprata' செய்தேன். ரொட்டி துண்டுகளை சின்னதாய் வெட்டினேன். அதில் முட்டையை ஊற்றி வெங்காயத்தையும் சேர்த்து பொரித்தேன். பிறகு, chilli pasteயை சேர்த்து உப்பு கலந்து மறுபடியும் ஒருமுறை பொரியல்! சாப்பிட்டு பார்த்தேன்...அட.. கொஞ்ச நல்லாவே இருந்ததுங்க!
ஆனால், சமையல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். அது எல்லாருக்கும் சுலபத்தில் இஷ்டமான ஒன்றாக இருப்பதில்லை! இதை பலமுறை பல போஸ்ட்களில் சொல்லி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை, சமையல் என்பது 'therapy' போல்
எப்பவாவது செய்வது, எப்போதுமே செய்ய முடியாதுங்க:))))))))))))))))
*********************************************************************************
தோழி ஒருத்திக்கு கிரிஸ்மஸ்க்காக ஒரு சின்ன பொம்மை வாங்கி கொடுத்தேன். அதுக்கு பெயர் வைக்க ரொம்ப யோசித்தோம். பெயர் வைப்பது என்றால் எங்களுக்கு ரொம்ப இஷ்டம்.
தோழி: வித்தியாசமான பெயரா இருக்கனும்.
நான்: ம்ம்ம்....வித்தியாசமான பெயர்னா? அப்போ நீ வித்தியாசன்னு தான் வைக்கனும்.
தோழி: சூப்பர்!! வித்தியாசன்!:))))))
*********************************************************************************
8 comments:
மீண்டும் எல்லா பிளாகையும் படிக்கலாம்னு நினைக்கிறேன். இங்க இருந்து ஆரம்பிப்போம் :))
3 இன்னும் கேட்கல. நண்பனிலே சிக்கிக்கிட்டு இருக்கேன்
கார்க்கி: நன்றி!:))
நன்றி.நல்ல பதிவு..
இப்பொழுதுதான் தங்கள் வலைக்கு வர முடிந்து படிக்கிறேன்..
அதற்கு ஒரு மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்....
வாழ்த்துக்கள்.
Hi ... Akka adhu nadimani ila nadimaani.
Wish u advance happy nem year ka
Wish u advance happy nem year ka
anand: hey thanks for highlighting the mistake. and yes happy new yr to u too!
கார்க்கி மனைவியின் பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
நானும் அஸ்க்கு லச்க்கா தாண்ட முடியாமல் தவிக்கிறேன். ஹாரிஸ் மற்றுமொரு மெலடியில் நம்மை கட்டிபோட்டுவிட்டார். ஒரு வாரமாகவே இந்த பாடலின் வரிகளை பற்றி நன் பேசாத நாளில்லை. முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே.. சின்மயி குரலும் அருமை.
Post a Comment