Feb 20, 2012

2 மொக்கை, 1 சூப்பர், 1 சுமார்!

கடந்த வாரத்தில் 4 படங்கள் பார்த்தேன் - ek main aur ekk tu, டோனி, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள்.

2 மொக்கை:

பார்த்தில் முதல் மொக்கை 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. ஐயோ யோ, இயக்குனர் வெற்றி படங்களை தயாரித்தவர், கௌதம் மேனனின் நண்பர் என்பதால் என்னவோ, தலைப்பில் மட்டும் தான் அழகு. கதை, திரைக்கதை, நடிப்பு- ரொம்பவே கொடுமை. 'ஒரு முறை' பாடல் பரவாயில்லை. rich look படத்திற்கு but poor கதை!
ஆனால், நான் ரசித்தது ஒன்னே ஒன்னு தான் 'அதர்வா'. :)))))))))))))

பிச்சி போட்ட பரோட்டா மாதிரி அவர் தமிழ் இருந்தாலும், அதை ரசித்தேன் அகில உலக 'அதர்வா' ரசிகர் மன்றம் தலைவி என்பதால்! அவருக்காக கவிதைகூட எழுதியிருக்கேன்.

நீ அதர்வா?
இல்லை
என்னைத் தாக்கிய
அதிர்வா?

இவர் அடுத்ததாக இயக்குனர் பாலாகிட்ட படம் பண்ணுறாராம். என்னமோ போங்க சார், எனக்கு மனசே சரியில்லை!! இப்படி ஒரு அழகிய முகத்தை போய் தாடி வைக்கனும், தலைக்கீழா நிக்கனும் அப்படின்னு சொல்லி என்ன பண்ண போறாரோ!!??
----------------------------------------------------------------------------------------

அடுத்த மொக்கை- ek main aur ekk tu.

ரொம்பவே எதிர்பார்த்தேன். படம் ஒரு laughter riot என்று நினைத்து பார்த்தால், சிரிப்பே பக்கத்தில் வர மாட்டேங்குது. அப்படி ஒரு கதையில்- காமெடியை அள்ளி வீசியிருக்க வேண்டாமா? பெரிய ஏமாற்றம். இருப்பினும், என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும், கரீனா கபூர் புகுந்து விளையாடுகிறார்! அவரின் வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார்.

---------------------------------------------------------------------------------------
1 சுமார்- காதலில் சொதப்புவது எப்படி?

வித்தியாசமான திரைக்கதை. கதை சொன்ன விதம் வித்தியாசம். ஏற்கனவே பார்த்த குறும்படம் என்பதால் என்னவோ, அதை compare பண்ணாம இருக்க முடியவில்லை. எனக்கு குறும்படம் தான் பிடித்து இருக்கிறது. சில விஷயங்களை பண்ணாம இருந்திருந்தால் அதன் மதிப்பு தக்க வைக்க முடியும். இப்போ நானே, ஓரளவுக்கு ஏதோ எழுதுவதால், பொருளாதாரம் பத்தியோ அல்லது விஞ்ஞானம் பத்தியோ எழுதினால் தாங்குமா? உலகம் தாங்காது இல்ல! அதே மாதிரி தான் இப்படமும்- அப்படியே குறும்படமாகவே வைத்திருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சரி விடுங்க...எடுத்தாச்சு! சித்தார்த் வருகிறார்- அதற்காகவே படத்தை பார்க்க முடிந்தது.

-----------------------------------------------------------------------------------

1 சூப்பர்- டோனி!!!

அருமையிலும் அருமை. 'நண்பன்', 'சந்தோஷ் சுப்பரமணியம்' வகையில் பெற்றோர்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ள வேண்டும் என நமக்கு எடுத்து கூறும் ஒரு படம். படத்தில் வந்த ஒவ்வொரு வசனமும் சூப்பர்!!! பல காட்சிகள் அப்படியே என் வீட்டில் நடந்திருக்கின்றன- கணக்கு வராததால் அக்காவை அடித்தது. கிரிக்கெட் பார்த்த போது, 'அது உனக்கு சோறு போடுமா?' என்று அம்மா என்னை பார்த்து கேட்டது, பிடிக்காத படிப்பை தான் படிக்க வேண்டும் என்று சொல்லியது.

பல காட்சிகளை பார்த்து, என்னை அறியாமலேயே அழுதேன். ரொம்பவே அழுதேன். பெற்றோர்கள் சொல்வது எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் என்று மனதை ஏமாற்ற முடியவில்லை. 'படிக்காதவங்கவிட படிச்ச பெற்றோர் தான் தப்பு பண்றாங்க' என்ற வசனம் top class.

பள்ளிகூடத்தில் social teacher கிட்ட பிரகாஷ், 'உங்களுக்கே ஒரு subject தான் தெரியுது. ஆனா புள்ளைங்க மட்டும் எல்லாமே படிக்கனுமா?' எவ்வளவு உண்மையான கருத்து!!! கல்வி என்ற ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒரு ஜீவன் நான்!!

பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள்- என எல்லோரும் பார்க்க வேண்டிய படம்!!!

simply super!!!!!!!!!!

------------------------------------------------------------------------------------

8 comments:

Kumaran said...

நான்கு படத்தையும் தாங்கள் ரசித்தவற்றை சுருக்கமாகவும், கலக்கலாகவும் நச்சுன்னு ஒரு சூப்பரான பதிவு போட்டுட்டீங்க..இதில் ஒரு கவலையான விஷயம்..நான் எந்த படத்தையும் பார்க்காததுதான்..நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

பிரியமுடன் பிரபு said...

இவர் அடுத்ததாக இயக்குனர் பாலாகிட்ட படம் பண்ணுறாராம். என்னமோ போங்க சார், எனக்கு மனசே சரியில்லை!! இப்படி ஒரு அழகிய முகத்தை போய் தாடி வைக்கனும், தலைக்கீழா நிக்கனும் அப்படின்னு சொல்லி என்ன பண்ண போறாரோ!!??
///


:))

sk-suharman said...

Good review but for me Dhoni not that much attract.

Prabu M said...

நாலே வார்த்தையில் நாலு படத்தை பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்களே!! :)
சுவாரஸ்யமா இருந்திச்சு.... நச் நச்ச்னு சொன்னதுக்கு நன்றி :)

Anonymous said...

//வித்தியாசமான திரைக்கதை. கதை சொன்ன விதம் வித்தியாசம். ஏற்கனவே பார்த்த குறும்படம் என்பதால் என்னவோ, அதை compare பண்ணாம இருக்க முடியவில்லை. எனக்கு குறும்படம் தான் பிடித்து இருக்கிறது//

சரியா சொன்னீங்க

Thamizhmaangani said...

kumaran: watch dhoni. the others, forget about it!:)

sk: dhoni not good ah? aiyo, how can you say that. watch it again or maybe you were a topper in class all the way. hence, you are unable to feel the 'pain':))

gils said...

KSE sumaar sonna mangova naadu kadathanum...me the very likes :) dhoni inum pakala..MUK amala paulkaaga pakaalamnu thonuthu aana reviews derror kelapings!!

Latest Tamil Cinema News said...

Perfect Review.......Tamil Cinema News