Feb 8, 2012

காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி?


உங்கள எப்படிங்க correct பண்றது என்று புலம்பி கொண்டிருக்கும் பல பேருக்கு இந்த போஸ்ட் கொஞ்சம் பிடிச்சிருக்கும்.

இப்போ facebook வந்த காரணத்தால், புதிய நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சுலபமா போச்சு! சரி, விஷயத்துக்கு நேரா வரேன். பசங்களுக்கு அவங்களுக்கு பிடிச்ச பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது எப்படி? அதுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப தேவை- 1) திறமை 2) பொறுமை.

திறமை- உங்களுக்கு பிடிச்ச பெண்ணுக்கு 1008 நண்பர்கள் facebookல் இருந்தாலும், நீங்க அவங்க மனசுல இடம் பிடிக்கும் திறமை வேண்டும்.

பொறுமை- பொறுத்தார் பூமி ஆழ்வார். இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருந்தால், ஒரு பொண்ணு மனசையும் ஆளமுடியும்.

tip no 1: எடுத்தவுடனே அவள் ஃபோன் நம்பரை கேட்பது, ஒரு strict traffic police ஆபிசர்கிட்ட லஞ்சம் கொடுப்பதுபோல். செம்மயா விழுவும்!

ஹாய், எப்படி இருக்கீங்க, எங்க படிக்குறீங்க என்று எல்லாம் கேட்டுவிட்டு, பேச்சை தொடரும் உத்தி/திறமை வேண்டும்.

(அது எப்படிங்க? என்று நீங்க கேட்பது எனக்கு கேட்குது)

அவள் info pageல் பிடித்த புத்தகம், பாடகர், இசை, படம் என்று அவளுக்கு பிடித்து விஷயங்களை போட்டு இருப்பாள். அதை வைத்து 'காயை' நகர்த்த வேண்டும்.

உதாரணம், அவளுக்கு shah rukh khanயை பிடித்து இருக்கு என்று வைத்து கொள்வோம். facebook chat-ல்...

நீங்க: உங்களுக்கு shah rukh khanயை ரொம்ப பிடிக்கும் போல் இருக்கு.

அவள்: yes.


நீங்க: எத்தன வருஷமா அவரோட fan?


அவள்: ரொம்ப வருஷமா. 5வது படிக்கும்போதே.


நீங்க: எல்லா படத்தையும் பார்த்துடுவீங்களா?


அவள்: ஆமா. நீங்க? உங்களுக்கு யார பிடிக்கும்?


எப்போ அவள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாளோ, அப்போதே உங்களுடன் பேச்சை தொடர ஆசைப்படுகிறாள் என்று அர்த்தம். :) ஒரே topicகில் பேச்சை விடாமல், பலவற்றை சுவாரஸ்சியமாய் சொல்லுங்க, பேசுங்க.



tip no 2: அவள் போடும் எல்லா facebook statusக்கும் 'like' போட்டு நீங்க ரொம்ப வெட்டியா இருக்கீங்கனு காட்டாதீங்க. facebook comments போடும் போது, நகைச்சுவையாகவே அல்லது அறிவுபூர்வமாகவோ போடுங்க. சில நேரங்களில் அவள் ரொம்ப நொந்துபோய் கவலையாய் ஒரு status போட்டால், அதற்கு நீங்க அவளுக்கு தனியாய் ஒரு facebook message அனுப்புங்க.

hi ராஜி

எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளாவே, உங்க status எல்லாம் ரொம்ப நொந்துபோய் எழுதுறீங்க? cheer up buddy! கவலைய விடுங்க. ரொம்ப சோகமா போனாலும் உடம்ப நல்லது இல்ல. அதுக்கும் சோகத்த மனசுலே பூட்டி வைக்காம statusஆ போடுறதும் நல்லது தான். atleast உங்க friends ஆறுதலா இருப்பாங்க. கவலையா இருந்தா, friendsகூட வெளியே போயிட்டு வாங்க, இல்லன்னா comedy விடியோஸ் பாருங்க. whenever I am down, I just go to sleep. that's the best remedy for me:) times will be tough but we are tougher! :)

இப்படி ஒரு மெசேஜை போட்டுவிட்டு கூடவே அவங்களுக்கு ஏதேனும் காமெடி clip linkயை அனுப்பிவிடுங்க. 6 ballயையும் 6 சிக்ஸர் போட்ட மாதிரி, சார்! இதுல ரொம்ப முக்கியமான விஷயம், அவங்களுக்கு என்ன சோகம்னு நீங்க கேட்டுவிட கூடாது. அவங்களோட privacyக்கு நீங்க மரியாதை கொடுக்கனும். அவங்களா சொன்னால் தான், அது சரி. 'en frienda pola yaaru machan' என்று அவள் உங்களை பத்தி நினைப்பாள், அப்பரம் நீ தான் என் மச்சான் என்று கூடிய விரைவில் சொல்வாள்!!

(எத்தன நாளைக்கு தான் ஃபோன் நம்பர் வாங்காம, facebookலே இருக்குறது? அப்படினு நீங்க கேட்பது புரியது. அதுக்கு தான் அடுத்த tip)

tip no 3: நேரடியா ஃபோன் நம்பரை கேட்க கூடாது. நீங்கள் ஒரு volunteer charity programme செய்யுறீங்க இல்ல ஒரு sports event தயார் பண்ணுறீங்க, அதுக்கு ஆள் தேவை இல்ல ஒரு முக்கியமான book தேவை அதுக்கு தெரிஞ்சவங்க வேணும் என்று சொல்லிவிட்டு. அப்படி யாரேனும் தெரிந்தால், அவங்க நம்பர் வேணும். எனக்கு உடனே என் நம்பருக்கு message பண்ணுங்க என்று சொல்லிவிட்டு உங்க நம்பரை கொடுத்துவிட்டு உடனே 'facebook chat' லிருந்து offlineக்கு வந்துவிட வேணும். உங்க நம்பர் கொடுத்த மாதிரியும் இருக்கும், அவங்க message பண்ணும் வாய்ப்பும் இருக்கும்.

இங்க தான் பொறுமை தேவை. உடனே நம்பர் வராது. tip no 3யை அவளை நன்கு தெரிந்தபிறகு, 4 அல்லது 5 மாதம் கழித்து பயன்படுத்துவது நல்லது.



பசங்களே, முக்கியமான விஷயம் 'நம்பிக்கை'. தெரியாத பொண்ணு facebookல் உடனே நம்பர் கொடுக்கனும், பாக்கனும், பீச்-க்கு போனும் அப்படின்னு ஒரே பாடலில் பெரிய ஆளாய் ஆகிவிட வேண்டும் என்று கனவு காணகூடாது. (ஒரே பாடலில், தனுஷ் வேண்டும் என்றால் பெரியா ஆளாய் வந்துவிட முடியும். நம்மள ரொம்ப சாதாரணமான மனுஷங்க. அதை புரிந்து பொறுமையாய் இருந்தால், நல்லதே நடக்கும்.)

காதலில் சொதப்பாமல் இருங்க!!

10 comments:

test said...

ரொம்ப நன்றி! இவ்வளவு சொன்னீங்க...உங்க ID சொல்லலயே! :-(

test said...

//எத்தன நாளைக்கு தான் ஃபோன் நம்பர் வாங்காம, facebookலே இருக்குறது? அப்படினு நீங்க கேட்பது புரியது//
ஆமா இதெல்லாம் எங்க நடக்குது? உலகம் தெரியாமலே வளந்துட்டடா ஜீ!

FunScribbler said...

ஜீ: எந்த id, boss?

test said...

Facebook id தான் வேறென்ன?

ஷக்தி said...

Superbbbbbb

MyFriend said...

It was a good advice for guys Gayu.. Any experienceon this? - MyFriend

MyFriend said...

:)

FunScribbler said...

ஜீ: எனது வலைப்பூ பக்கத்திலேயே இருக்கே!!:)

myfriend: அக்கா!!! எப்படி இருக்கீங்க? பெரிய experience எல்லாம் ஒன்னுமில்ல. ஆனா, மொக்கை பசங்க நிறைய பேரு இந்த உலகத்துல இருக்காங்க. தோழிகள் அனுபவம்படி!:)

Kannan said...

சூப்பர் இப்பிடி ஒருத்தி இருப்பதுவே இந்த link ஐ எனக்கு ஒரு friend share பண்ணித் தான் தெரிய வந்தது ஆமா சரி உங்க உங்க original facebook id ஐ தாங்க try பண்ணித்தான் பார்ப்பம் இது work out ஆகிறதா எண்டு.(Thamizh Maangani என்பது public id so no use)

selventhiran said...

எடுத்தவுடனே அவள் ஃபோன் நம்பரை கேட்பது, ஒரு strict traffic police ஆபிசர்கிட்ட லஞ்சம் கொடுப்பதுபோல். செம்மயா விழுவும்! // ஹா.. ஹா ஜூப்பர்