May 26, 2014

இசை கேட்டா அழுகை வருமா, மச்சி? எனக்கு வந்துச்சு, மச்சி!

வலது கண் சிமிட்டினால் காதல் வருமா, இடது கண் சிமிட்டினால் காதல் வருமா என்ற வகையில் மொக்கையான தலைப்பில் சில நேரங்களில் நிகழ்ச்சி நடத்தும் நீயா நானா, நேற்று நடத்திய 1.5 மணி இசை விருந்து மெய்சிலிர்க்க வைத்து விட்டது. (london star nite இல்லங்க.)

கோபி இங்கிலீஷில் சொல்ல போனால், "no words to say" எனலாம். ரொம்ப நாளைக்கு அப்பரம் ரசித்து பார்த்த நீயா நானா நிகழ்ச்சி.

இந்திய பண்பாட்டில் இருக்கும் இசையும், இசை கருவிகளும் அதை செய்பவர்களை பற்றியும் ரொம்ப ஜாலியாக போன நிகழ்ச்சி. 

இசை கலைஞர்கள் பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை லேசாக சுட்டிக்காட்டி விட்டு போனது இன்னொரு சிறப்பு. அதை வைத்து அழுகாச்சி நிகழ்ச்சி செய்யாமல் போனதற்கு, மிக பெரிய நன்றி விஜய் டீவி!
நாதஸ்வரம் வாசித்த தம்பதியினரே, அருமை அருமை! மெய்சிலிர்த்து, கண்கள் கலங்கியது எனக்கு! 

இசை வேறு பாடல் வேறு என சொன்ன கருத்தும் ரொம்ப யதார்த்தமாய் இருந்தது. பாடல் என்று வரும்போது, கேட்பவரின் 'freedom of interpretation' அடங்கி போகும். ஆனால், இசை என்பது தானே ஒருவர் ஓவியம் வரைவது போல, அவர் தம் கற்பனைக்கு ஏற்றாற்போல அமைத்து கொள்ளலாம போன்ற கருத்துகள் அனைத்தும் எனக்கு புதிதாய் தெரிந்தது. 

அப்படியே ஒரு இசை விருந்துக்கு சென்று வந்ததை போல் ஓர் உணர்வு. ஒவ்வொரு முறையும் இசை கலைஞர்கள் வாசிக்கும்போது, என்னை அறியாமலேயே ஒரு வித சந்தோஷம் கண்ணீரை வரவழைத்தது. 

சில விஷயங்களையும், சில மக்களையும் பார்க்கும்போது தான் தோன்றும், "இவங்க நல்லா இருக்கனும். இதவிட பெரிய இடத்துக்கு போகனும்' அப்படி 1.5 மணி நேரமாய் தோன்றியது! 



4 comments:

Ilayadhasan said...

ஆப்பிரிக்க பழங்குடி இசை கற்பதில் ஆர்வம் காட்டும் இளையர்கள் ஏன் பறை போன்ற நம்மின பழங்குடி இசையை கற்பதில் வெட்கம் கொண்டு மறுத்து விடுகின்றனர் என்றது நச் கேள்வி. ஆனால் நம்ம சாரு எதுக்கெடுத்தாலும் புரியாத /தெரியாத விசயத்தைச் சொல்லி வலிந்து பெருமை அடித்தது போல் இருந்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நம்ம சாரு எதுக்கெடுத்தாலும் புரியாத /தெரியாத விசயத்தைச் சொல்லி வலிந்து பெருமை அடித்தது போல் இருந்தது.//
அது தானுங்க சாரு, எல்லோரும் வடக்க போனால் சாரு கிழக்கே போவார். ஒரு வகை மனநோய்.
இவரைக் அழைத்ததற்கு எஸ்.ராமகிருஸ்னனை அழைத்திருந்தால் களை கட்டியிருக்கும்.
அடுத்து பலர் இளையராஜா எனும் சொல்லை உச்சரித்தார்கள். சாருவுக்கும், ஷாஜி க்கும் வயிறு எரிந்திருக்கும்.
நாதஸ்வர தம்பதிகள் உச்சம். வீணைப் பாப்பா பேருச்சம்.

viyasan said...

நல்ல காணொளி, அருமையான நிகழ்ச்சி. இந்தக் கலைஞர்கள் எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை கற்பவர்களை தமிழர்கள் முக்கியமாக ஆதரித்து வளர்க்க வேண்டும்.

FunScribbler said...

@dhasan:சரியா சொன்னீங்க! பறை இசைப்பள்ளிகளில் கற்க வழி வகுத்தால் நல்லா இருக்கும்னு நினைக்குறேன்.