Nov 13, 2007

எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்!

" எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்?" இந்த டையலாக் இப்ப ரொம்பவே பிரபலம் ஆச்சு. எந்த படத்துல வந்தது என்று யோசிக்கிறீங்களா? எந்த படத்தலையும் வரல. இவ்வரிக்கு சொந்தக்காரி விஜ்ய் தொலைக்காட்சியில் வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தாயின் வார்த்தைகள். 'நீயா நானா'வில் பரபரப்புக்கு பஞ்சமே இல்ல. அதுவோட இது போன்ற காமெடிக்கு பஞ்சமே இல்ல.

சென்ற வாரத்தின் தலைப்பு 'திருமணத்தை பற்றி பிள்ளைகளின் கனவுகள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பார்ப்புகள்". ஒரு பக்கம் இளையர்கள், இன்னொரு பக்கம் பெற்றோர்கள். இதை பற்றி ஏற்கனவே ஒரு அன்பர் அவரது வலைப்பக்கத்தில் போட்டுவிட்டடர். இருப்பினும் நிகழ்ச்சியை பார்த்தவுடன் 'ஏய், கண்டிப்பா இத பத்தி வலைப்பூவில் போடு' என்று தமிழ்மாங்கனியின் உள்மனசு சொன்னுச்சு!!

வயசுக்கும்( என்னை போன்றவர்கள்:)) இந்த தலைப்புக்கும் கொஞ்சம் தொடர்பு இருப்பதால், ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். பெற்றோர்கள் பக்கத்தில் இருந்த ஒரு தாய், எனக்கு நடிகர் விஷால் மாதிரி மருமகன் வேணும் என்று சொன்னது தான் ஆச்சிரியமாகவும் இருந்தது அதே சமயம் செம்ம காமெடியாக இருந்தது. அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ரசித்து கைதட்டி சிரித்தது அதைவிட அழகாய் இருந்தது! (ஆஹா... தமிழ்மாங்கனி... வழியாதே வழியாதே!!:))

நடிகர் விஷால் மாதிரி மாப்பிள்ள வேணுமாம்!! அட, இத விஷால் கேட்டுச்சுனா எவ்வளவு 'வீல்' பண்ணும்! விஷால் எதிர்காலம் என்னவாகும்?? ஹஹஹா... நகைச்சுவை ஒரு பக்கம் இருக்க... நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில கருத்துகள் என்னை சிந்திக்க வைத்தது. சமுதாயம் இன்னும் சில விஷயங்களில் மாறவில்லை. நிகழ்ச்சியின் வந்தவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்காவிட்டாலும், அவர்க்ளின் சிந்தனை சமுதாயத்தை ஓரளவுக்கு பிரதிபலிக்கின்றன என நினைக்கிறேன்.
ஆண்கள் பொதுவாகவே சிவப்பாக இருக்கும் பெண்கள் வேண்டும் என்று சொன்னது.... 'எனக்கு சிநேகா மாதிரி கலருல வேண்டும். எனக்கு பூமிகா மாதிரி பொண்ணு வேண்டும்' என்று சொல்வது சிவப்பு நிறத்துக்கே அதிக மவுசு என்பதை காட்டியது. ஆனால் சில பெண்கள் 'எங்களுக்கு கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும் ஆளு தான்' வேண்டும் என்பது ஆச்சிரியமாக இருந்தது.

அதிலும் ஒரு பொண்ணு 'எனக்கு வரும் ஆளுக்கு, கொஞ்சம் ரவுடி லுக் இருக்கணும்' என்று சொல்லியது ரொம்பவே பயங்கரமா இருந்துச்சு. (அப்படினா புதுப்பேட்டை தனஷ், போக்கிரி விஜய், கொக்கி கரண்... இந்தமாதிரி ஆளுங்க... ஓகேவா, பொண்ணு?))

இதை சொன்ன பெண் தான் எனக்கு தாலி, மெட்டி போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை. கல்யாணத்தில் இதலாம் தேவையில்லை என்றார். தனது கருத்துகளை கொஞ்சம் அதிகமான தைரியத்தோட சொன்னது நல்லா இருந்துச்சு. உண்மையில் 'குடும்பவிளக்கு' காவியத்தில் இது போன்ற சடங்குகள் எதுவும் இல்லாமல் தான் ஒரு கல்யாணம் நடந்ததாக இருக்கு.

இது போன்ற கருத்துகள் தெரிவித்த அந்த பெண் பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருந்தாலும், இவளை போன்ற ஒரு பெண் உங்க வீட்டுக்கு மருமகளாக வந்தால் ஏற்று கொள்வீங்களா என்று கோபிநாத் கேட்ட கேள்விக்கு பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து, ' எங்களுக்கு இது மாதிரி மருமகள் வேணாம்' என்று பட்டென்று சொன்னது ரொம்பவே அதிரிச்சியாக இருந்தது. அந்த பொண்ணு மனசு கஷ்டப்பட்டு இருக்குமா இல்லையா? என்று என் மனசு கேட்டது.

என்னவோ....மொத்தத்தில் நல்ல சிந்தனைக்கு தீனி போட்டது இந்நிகழ்ச்சி எனலாம். மற்றபடி பெற்றோர்கள் ஜாதி மதம் மாறி கல்யாணம் செய்வதில் இஷ்டம் இல்லை என்பது, பிள்ளைகள் அவர்கள் கல்யாணத்தை பத்திரிக்கை கூட இல்லாமல் குறுந்தகவல் மூலமோ அல்லது ஈமெயில் மூலமோ கல்யாண செய்தியை அனுப்புவார்கள் என்று சொன்னது புதுமையாக இருந்தது. ஒவ்வொரு கருத்தும் சொல்லும்போது.. நான் அப்படியே ஓரக்கண்ணால் என் பெற்றோர்களை பார்த்தேன். எந்த கருத்துக்கு அவங்க சரி என்கிறார்கள் எந்த கருத்துக்கு சரியில்ல என்கிறார்கள் என்பதை பாத்துவச்சுகிட்டோம்ல!! ஹாஹா... .

ஆனா ஒன்னு... நிகழ்ச்சி நடத்தும் கோபிநாத் மாதிரி ஒரு மாப்பிள்ள, எல்லாம் வீட்டுலையும் இருந்தா நல்லா இருக்கும்.. ஏனா.. பிரச்சனன அவரே ஆரம்பித்து அவரே சுமூகமா முடித்துவைப்பாரு!!

10 comments:

Divya said...

\\ஆனா ஒன்னு... நிகழ்ச்சி நடத்தும் கோபிநாத் மாதிரி ஒரு மாப்பிள்ள, எல்லாம் வீட்டுலையும் இருந்தா நல்லா இருக்கும்.. ஏனா.. பிரச்சனன அவரே ஆரம்பித்து அவரே சுமூகமா முடித்துவைப்பாரு!!\\

ஹா ஹா ஹா!!!
ரொம்ப சரியா சொன்னீங்க!

கோபி ரொம்ப நல்லா நிகழ்ச்சியை நடத்துகிறார்.

FunScribbler said...

ஆமா... சரி தான்! அப்படி ஒரு மாப்பிள்ள ரொம்ப rare! hehe..

மங்களூர் சிவா said...

//
அதிலும் ஒரு பொண்ணு 'எனக்கு வரும் ஆளுக்கு, கொஞ்சம் ரவுடி லுக் இருக்கணும்' என்று சொல்லியது
//
Nalla Kettukkanga naanum rowdidhaan rowdidhaan rowdidhaan

//
ஒவ்வொரு கருத்தும் சொல்லும்போது.. நான் அப்படியே ஓரக்கண்ணால் என் பெற்றோர்களை பார்த்தேன். எந்த கருத்துக்கு அவங்க சரி என்கிறார்கள் எந்த கருத்துக்கு சரியில்ல என்கிறார்கள் என்பதை பாத்துவச்சுகிட்டோம்ல!!
//
haha coooooool
you read their mind??

FunScribbler said...

நீங்க வேற சிவா, ஏதோ ஓரளவுக்கு அவங்க என்ன நினைச்சாங்கனு கண்டுபிடிக்க முயற்சி தான் செய்தேன்!! முயற்சி மட்டுமே!!

குட்டிபிசாசு said...

திருமண சடங்குகள் தேவையில்லை தான். இதுபோன்றதொரு கருத்து பொதுவாக எப்பவும் படித்த இளைஞரகள்் நடுவே உண்டு.(20-30 வருடங்களுக்கு முந்தியிருந்தே) ஆனால் யார் செய்கிறார்கள்? இவர்கள் கூறுவதெல்லாம் வெறும் எமோஷனலாக சொல்வது தான், உண்மையில் இதை இவர்கள் செயலில் காண்பிப்பார்களா? இதை வெறும் மைண்ட் ரீடிங் என்றால், நம்ம எலக்ஸன் சர்வே போலத்தான் இருக்கும்.

என்ன சடங்கோ? என்ன சம்பிரதாயங்களோ? திருமணப்பதிவு மட்டும் கண்டிப்பாக செய்துவிடுங்கள். இப்போது நிறைய கணவன்மார்கள் "இவ என்னோட பொண்டாட்டி இல்ல! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல" என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

//இது போன்ற கருத்துகள் தெரிவித்த அந்த பெண் பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருந்தாலும//

பாரதி கண்ட புதுமைப்பெண் "ரவுடி லுக்கில் மாப்பிளை வேண்டும"் என்றார்களா? ஒரு சில்க்ஸ்மிதா ரசிகனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்யாசம்.

FunScribbler said...

//திருமணப்பதிவு மட்டும் கண்டிப்பாக செய்துவிடுங்கள்.//

இந்தியா போன்ற நாடுகளில் இது எப்படி என்று தெரியவில்லை. ஆனால், பல நாடுகளில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும். அது ஒரு சட்டமாகவே உள்ளது.

//பாரதி கண்ட புதுமைப்பெண் "ரவுடி லுக்கில் மாப்பிளை வேண்டும"் என்றார்களா?//

நான் அப்படி சொல்லவில்லையே... புதுமைபெண் என்று சிந்தனையில் அவர் புதுமையாக யோசிக்கிறார் என்றேன்.

//ஒரு சில்க்ஸ்மிதா ரசிகனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்யாசம்.//

யாரங்க சொல்லுறீங்க? புரியல...

மங்களூர் சிவா said...

http://tsivaram.blogspot.com/2007/11/blog-post_30.html

இந்த லின்க் பார்க்கவும்!!!

Unknown said...

//வயசுக்கும்( என்னை போன்றவர்கள்:)) இந்த தலைப்புக்கும் கொஞ்சம் தொடர்பு இருப்பதால்,//

ப்ரொஃபைல் சொல்லும் வயது 21. மின்னஞ்சல் முகவரியில் 1973. கணக்கு உதைக்குதே.

FunScribbler said...

உமையணன்.. 1973க்கும் வயதுக்கும் தொடர்பு இல்லைங்க. 1973.. சச்சின் பிறந்த வருடம். அவர் ரசிகை என்பதால் வைத்தேன்..ஹிஹி..

நாகை சிவா said...

ஆஹா.. நம்ம பதிவுக்கு இங்க ஒசியில வேற விளம்பரம் வருதே... ம.சிவா.. என்ன உங்க பாசம் போங்க.. :)

நீங்க சொன்னதை போல நீயா, நானா நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சி. அதை தவிர்த்த உங்க பதிவுல உள்ளத்தை எல்லாம் ரொம்பவே அலசி ஆராய்ந்து பேசிட்டேன். போதும் என்று தோணுது. ஜுட்...