ஒரு வழியா... விழி பிதிங்கி போய் நேத்திக்கு பரிட்சை எல்லாம் முடிச்சாச்சு!! எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் இருக்கு. பரிட்சை முடிஞ்ச அன்றைக்கே எதாச்சு ஜாலியா செஞ்சுடுனும். என் காலேஜில் இந்த வருடம் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் விட்டு போகும் சீனியர்களுக்கு கொடுக்கும் farwell partyக்கு என்னை அழைச்சு இருந்தாங்க. (நான் இந்த காலேஜில் மூன்று வருஷத்துக்கு முன்னாடி படிச்சு இருந்தேன். முன்னாள் மாணவி என்ற பெயரில் என்னை சிறப்பு விருந்தினர் என்ற வகையில் அழைச்சாங்க...)
இந்த ஜீனியர்கள் எல்லாம் என்னமா ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க. மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்கள். எல்லாமே அவர்களாகவே செய்தார்கள், எந்த ஆசிரியர் துணையும் இன்றி. பாட்டு என்ன, நடனம் என்ன, அதுல இரண்டு பொண்ணுங்க.. ஒரு 4 பாட்டுக்காவுச்சு ஆடி இருப்பாங்க... அப்பரம் ஒரு சைடுல இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தாங்க.. அப்பரம் அவர்கள் செய்த காலேஜ் போட்டிகளின் சாதனையை powerpoint slide மூலமாக காண்பித்தார்கள். எவ்வளவோ technical விஷயங்கள் பயன்படுத்தி புதுமையா செய்யுதுங்க இந்த காலத்து சின்ன பசங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்பரம் அவர்களாகவே எடுத்த ஒரு சிறு காமெடி திரைப்படம் ஒன்று காண்பித்தார்கள். நிக்ழ்ச்சி தொகுப்பாளர்களின் காமெடி கலக்கல்.
பிறகு, சிறு சிறு போட்டிகள். காமெடி போட்டிகள் தான்!! ஒரு பாட்டு போட்டு, அதுக்கு சீனியர்கள் வேறுவிதமாக ஆடனும்!!
முதல போகும் போது, மனசு லேசா இருந்துச்சு! ஆனா, எல்லாத்தையும் பார்த்துவிட்டு, மனசு சந்தோஷத்துல கனத்துபோச்சு!! என் காலேஜ் நாட்களை ஞாபகம் படுத்திவிட்டார்கள்!! எல்லாரும் போலவே என் காலேஜ் நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. அடுத்த மாதம் 'கல்லூரி' என்ற படம் வரபோகுது...நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்க்கும் படம்!!
நிகழ்ச்சியின் கடைசியில் dance floor!! ஹாஹா.. நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். எல்லாருமே அப்படியே ஒரு சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டம் போட்டார்கள்!! என்னா ஆட்டங்கிறீங்க!!!
6 comments:
"இந்த காலத்து சின்னபசங்க என்னமா யோசிக்கிறாங்க" னு புல்லரிச்சிப் போறதுக்கு உங்களுக்கு என்ன வயசாயிடுச்சா? உங்களுக்கும் அவர்களுக்கும் 4-6 வருசம் தானே வித்யாசம்,
இது poly?உங்க ஜீனியர்களுக்கு எல்லாம் உங்க மேல எம்புட்டு பாசம்.எங்களுக்கு எல்லாம் சீனியர்கள் தான் விழா எடுப்பாங்க (கல்லூரிக்கு புதிதாக வந்த பொழுது)
இல்ல துர்கா.. இது (jc). நீங்க சிங்கையா? மலேசியாவா?
ஹாலோ குட்டிபிசாசு, நான் முதலாம் ஆண்டு படிக்கும்போது(அவர்கள் வயதில் இருந்தபோது), இந்த மாதிரி கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. அதனாலதான் சொன்னேன் அப்படி!!
\\ நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். \\
நம்பிட்டேன் தமிழ், அப்படியே நம்பிட்டேன்!!
ரொம்ப என்ஜாய் பண்ணியிருப்பீங்க போலிருக்கு,
நிகழ்ச்சியை அழகா, நேர்த்தி தொகுத்து பதிவிட்ட விதம் அருமை! ரசித்தேன்!
நன்றி திவ்யா!!
Post a Comment