Aug 25, 2009

எனக்கே என்னை தெரியாமல்-4

கை நிறைய மாத்திரைகள். தன் அறை படுக்கையில் உட்கார்ந்து இருந்தாள். காலையில் பள்ளிக்கு கொண்டு சென்ற பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. திறந்து கொஞ்சம் குடித்தாள் தேவி. துயரம் தொண்டையை அடைத்தது. மனம் படபடத்தது. கைகள் நடுங்கின.


தான் செய்வது முட்டாள்தனம் என்று மூளைக்கு புரி்ந்தாலும், புண்பட்ட மனத்திற்கு நிம்மதி வேண்டிய சூழ்நிலை. அவசியம். தேவை. வாய் அருகே மாத்திரைகளை கொண்டு சென்றபோது கைபேசி அலறியது.


"ஹாய் தேவி, a very good and surprising news. you have been selected to represent our kick-boxing club in the international contest in canada. congrats ya. am so happy and proud of you!! get ready to rock on. see you tmr. need to explain the contest procedures. good nitez." என்று பாக்சிங் மாஸ்ட்டரிடமிருந்து குறுந்தகவல் வந்தது.


ஸ் எம் ஸை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்தாள், 20 நிமிடங்களுக்கு. சந்தோஷமும் துக்கமும் ஒரே நேரத்தில் தேவியால் ஏற்று கொள்ள முடியவில்லை. சந்தோஷமான செய்தி அவள் மனதிற்கு நிம்மதியை கொடுத்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த செய்தி அவளை எந்த ஒரு முட்டாள்தனமான காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்தது.


அந்த குறுந்தகவலை பல முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். தொலைந்த வாழ்க்கை ஒரு சின்ன குறுந்தகவல் மூலம் வரும் என்று நினைக்கவில்லை. உடனே தனது கிக் பாக்சிங் மாஸ்ட்டருக்கு ஃபோன் போட்டு தன் பிரச்சனையை கூறினாள், பள்ளியில் நடந்ததையும் கூறினாள். தான் தற்கொலை முயற்சிக்கு முற்பட்டதாகவும் கூறினாள்.


அவருக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது. இதுநாள் வரை தேவியை ஒரு மாணவியாக, தைரியமான பெண்ணாக பார்த்தவருக்கு அவள் சொன்ன ஷயங்கள் விஜித்திரமாக இருந்தது. இருப்பினும், அவள் மீது அதிக மரியாதை வந்ததே தவிர அவளை ஒதுக்கவில்லை. மாஸ்ட்டர் ஆறுதலாக பேசியது அவளுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.


உலகில் கடவுளே இல்லை என்று நினைக்கும்போது தான் ஏதோ ஒரு ரூபத்தில் கடவுள் வருவார். தேவிக்கு அந்நேரம் தெய்வமாக தெரிந்தவர் மாஸ்ட்டர் தான். தற்கொலை முயற்சியை கைவிட்டாள்.


மாஸ்ட்டரின் ஊக்கத்தால் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி செய்தாள். பள்ளியில் மறுபடியும் சேர்த்து கொள்ளும்படி தேவி சார்பாக மாஸ்ட்டர் பேசினார். ஆனால், எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. கடைசியில் வேறு ஒரு பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்ந்து படிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டாள் தேவி. மிகுந்த சிரமத்துடன் பள்ளி படிப்பை முடித்து, sports science மேற்கல்வி படிப்பை படித்தாள்.


பல போட்டிகளில் பங்குபெற்று தனது குருவுக்கு பெருமையை தேடி தந்தாள். தானாகவே ஒரு உடற்பயிற்சி நிலையத்தை உருவாக்கி, பலவித உடற்பயிற்சிகளை சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறாள் தேவி. காலேஜ் படிக்கும்போதே, தனது சிகை உடை அலங்காரத்தை முற்றிலுமாக மாற்றிகொண்டாள்.


தன் மனதிற்கு ஒரு உருவம் வேண்டும் என்பதற்காக தான் மாற்றி கொண்டாளே தவிர வெளிஉலகத்திற்கு தான் ஒரு lesbian என்று காட்டவேண்டும் என்பதற்காக ஒரு போதும் தன்னை மாற்றிகொள்ளவில்லை.

***

"actually கீதா, தேவியோட இந்த quality தான் என்னைய ரொம்ப ஈர்த்துச்சு. அவ யாருன்னு அவளுக்கு தெரியும்....ஆனா அத வெளிப்படையா காட்டனும்னு அவசியம் இல்லேன்னு நினைக்குற ஆளு. that's what i really really like about her." ரினிஷா சொல்லவும் தேவி குளித்துமுடித்து வரவும் சரியாக இருந்தது.


தேவி, "நீங்க யாரும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? let's eat. i am damn hungry man." என்றபடி மேசையை சுத்தம் செய்தாள். ரினிஷா உணவை மேசையில் கொண்டு வந்து வைத்தாள். சொன்ன கதையை கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணித்து கொண்டு இருந்தாள் கீதா. இன்னும் மீளாத கீதா,


"எப்படி தேவி....இவ்வளவு கஷ்டங்களையும்....?" என்றாள்.


சிரித்துகொண்டே, "இதலாம் ஒரு கஷ்டம்னு நினைக்க முடியாது. உலகத்துல எத்தனையோ பேரு.....take for instance....கை கால் இல்லாதவங்க, சந்தோஷமா வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்காங்க ஏதோ ஒரு வகையில. அவங்களோட நிலைமைய பாக்கும்போது நம்மளோடது எல்லாம் nothing."


கீதாவிற்கு உணவு பரிமாறப்பட்டது.


"இன்னும் கொஞ்சம் போடவா?" ரினிஷா உபசரித்தாள்.


சாப்பிட்டு முடித்தபிறகு, ரி்னிஷா பழங்கள் கொண்டு வந்தாள். அதற்கு தேவி, "டியர், நான் உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன். fruits should be taken before meals. not after meals. indigestion வரும் பா...." சற்று கோபித்து கொண்டாள்.


சிரித்தபடி ரினிஷா, "ஓ...shut up man! நீயும் உன் factsம். ஏதோ சாப்பிட்டோமா இருந்தோமான்னு இல்லமா எப்ப பாத்தாலும் ஒரு கருத்து....." தேவியின் முடியை செல்லமாய் கலைத்துவிட்டாள்.


"சரியா சாப்பிடாம இருந்தா, இந்த மாதிரி கண்ட இடத்துல கொழுப்பு வந்திடும்." ரினிஷாவின் இடுப்பை கிள்ளினாள் தேவி.


"oh just shut up man!" சிரித்துகொண்டு மேசையில் இருந்த தட்டுகளை எடுத்து சென்றாள்.


இருவரின் கிண்டலை பார்த்து ரசித்தாள் கீதா. தேவியிடம் கீதா, "ரினிஷாவ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?"


புன்னகையித்தாள் தேவி. சோபாவில் உட்கார்ந்திருந்த கீதா-தேவியுடன் சேர்ந்து கொண்டாள் ரினிஷா.


"ரினிஷா, நீங்க எப்படி தேவிய மீட் பண்ணீங்க? அந்த கதைய சொல்லவே இல்ல...." கீதா கேட்டாள்.


"ஓ...bedtime story கேக்கனுமா?" கிண்டல் அடித்தாள் தேவி. தொடர்ந்தாள் கதையை....


***

ரினிஷா நிறைய பொது தொண்டு செய்வதில் ஆர்வம் உடையவள். பல்வேறு மருத்துவமனைகளில் ரத்த தானம் முகாம் நடத்தி வந்தாள். தேவிக்கு இரத்த தானம் கொடுக்கும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு முறை தேவி தன் வீட்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் ரத்த தானம் கொடுக்கும்போது தான் முதன்முறையாக ரினிஷாவை பார்த்தாள்.

அன்று ரினிஷா வழக்கம்போல் எல்லாரிடமும் சிரித்துபேசி கொண்டு இருந்தாள். registration formயை கவுண்ட்டரில் கொடுத்தாள் தேவி. அங்கு இருந்து ரினிஷா விவரங்களை சரி பார்த்தாள்,

"ம்ம்ம்.....name.......home address......date of birth......" பிறந்த தேதியை பார்த்தபிறகு ஆச்சிரியம் அடைந்தாள்.

"அட நானும் 19th august தான்...ஆனா உங்களவிட ஒரு வயசு கம்மி" புன்னகையித்தபடி சொன்னாள் ரினிஷா. புதிய நபர்களிடம் அதிகம் பேசாத தேவி எப்போதும் போலவே புன்னகையை பதிலாய் வீசினாள்.

முகாமை முடித்துவிட்டு கிளம்ப தயாரானாள் ரினிஷா.

தேவி வந்த வேலையை முடித்து கொண்டு தன் பைக்கை ஸ்ட்டார்ட் செய்யும்போது மழை ஜோராக பெய்ய தொடங்கியது.

நனைந்தபடியே மருத்துவமனை கேட் அருகே நின்றுகொண்டிருந்தாள் ரினிஷா call taxiக்காக. அவளை கடந்து வேகமாக சென்றாள் தேவி தனது பைக்கில். ஆனால் ஏனோ தெரியவில்லை தேவி பைக்கை reverse செய்தாள். ரினிஷா பக்கம் வந்தாள்......

(தொடரும்)

பகுதி 5

20 comments:

Divyapriya said...

me the first :))

gils said...

me the jegandu..aana intha post 5 days oldnu en bloglua kaatuthu

யாசவி said...

//தேவி மாதம் ஒரு முறையாவது இரத்த தானம் செய்துவிடுவாள்.//

கவனிக்கவும்

:-)

gils said...

anyawys :) kathai semam interesting..main matter ennana..intha mathiri themela oru story..ithu varaikum padichathillaya :) so semma eagerly waiting for the next part..

sri said...

Yes its a different feel reading to ur story , but got to admit its quite interesting :) edhir paarpu neraya agikittey erukku paathu climax kudunga :)

sri said...

//தேவி மாதம் ஒரு முறையாவது இரத்த தானம் செய்துவிடுவாள்.//

3 months once dhaaney pannanum ?

sri said...

//தொலைந்த வாழ்க்கை ஒரு சின்ன குறுந்தகவல் மூலம் வரும் என்று நினைக்கவில்லை. //

Yes sometimes life epdi vena vandhu nala surprise pannum :)

FunScribbler said...

@கில்ஸ் //aana intha post 5 days oldnu en bloglua kaatuthu//

அன்னிக்கு ஆரம்பிச்சு இன்னிக்கு தான் முடிக்க முடிஞ்சுது. கண்டுக்காதீங்க!ஹிஹி...

FunScribbler said...

@யாசவி, ஸ்ரீ

அந்த இரத்த தானம் மேட்டர சரி செஞ்சுட்டேன். thanks for the info. சின்ன புள்ளகிட்ட கதை எழுத சொன்னா, இப்படி தான் ஏடாகுடமா போகும்!:):)ஹிஹி....

FunScribbler said...

@கில்ஸ், ஸ்ரீ

//so semma eagerly waiting for the next part..//

//edhir paarpu neraya agikittey erukku paathu climax kudunga :)//

ஆமாங்க, இப்படி அதிக எதிர்பார்ப்ப ஏத்திவிட்டுடீங்க...என்னா எழுதுறது எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம வயத்து போக்கு போறது எனக்கு மட்டும் தான் புரியும்!!

anyway thanks for all ur wishes. really appreciate ur patience in reading such a story!

ivingobi said...

aajaraagitten thamizh.....

Karthik said...

கதைனா முன்னாடி போகும் இல்லைனா பின்னாடி போகும். நீங்க சென்ட்டர்ல ஆரம்பிச்சு ரெண்டு பக்கமும் போவீங்க போல! கலக்கல்! :)

G3 said...

//Eppadinga konjamum viruviruppu koraiyaama continue pandreenga !!! paaratukkal :)))

Defaulta indha qn.um koodave varudhu :)) adutha part eppo release? ;)//

Repeatikkaren en commenta ;))))))

Divyapriya said...

சாரி, இப்ப தான் படிச்சு முடிச்சேன் ;))
கதை விருவிருப்பா போகுது...அடுத்தது எப்ப? எப்பவும் சீக்கரம் அடுத்த அடுத்த பகுதி போடற காயத்ரி இப்படி பண்ணலாமா? அடுத்த பகுதி சீக்கரம் போடுங்க

Prabhu said...

அடுத்த பாகம் நிறைவா? பொதுவா 5ம் பாகத்தில முடிப்பீங்களே! 5 உங்க குடும்ப எண்ணா?

ivingobi said...

pappu said...

அடுத்த பாகம் நிறைவா? பொதுவா 5ம் பாகத்தில முடிப்பீங்களே! 5 உங்க குடும்ப எண்ணா?
ennadhui athukkulla End vaenuma pappu...... inithaan speed aagum nu ninaikkaren......

FunScribbler said...

@g3, karthik

வாழ்த்துகளுக்கு நன்றி

@திவ்யாபிரியா

//எப்பவும் சீக்கரம் அடுத்த அடுத்த பகுதி போடற காயத்ரி இப்படி பண்ணலாமா? அடுத்த பகுதி சீக்கரம் போடுங்க//

மூளை வேலை செய்ய மாட்டேங்குது. நான் என்ன செய்ய?ஹிஹி...:)

FunScribbler said...

@பாப்பு

//5 உங்க குடும்ப எண்ணா?//

ஹாஹா...அப்படி ஒன்னுமில்ல தம்பி!:)

Karthik said...

excuse me miss tamizhmaangani, atutha part eppo poduveenga ini?

sri said...

LOL at karthik comment!