Aug 4, 2009

லவ் ஆஜ் கல்- தமிழ் படங்களுக்கு இணையாக ஒரு படம்!

இப்ப வர தமிழ் படங்கள் சில பாக்க முடியலன்னா, ஹிந்தி படங்களும் அவ்வாறு வந்தால் நாங்கலாம் என்ன செய்றது? அட போங்கப்பா...லவ் ஆஜ் கல் பாடல்கள் செம்ம பாட்டா இருக்கே. படமும் சூப்பரா இருக்கும்னு நம்பி தோழி ஒருத்தியின் பேச்சை நம்பி போனேன். ம்ஹும்.... நம்பி கெட்டவர்களின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்து கொள்ளுங்க!

சிவா மனசுல சக்தி படத்த பார்த்து நொந்து போன நிலைமை தான் லவ் ஆஜ் கல் படம் பார்த்தபிறகு வந்தது. ஆரம்பிக்கும்போதே, என்னடா இது ஒரு background இசையும் காணும். ஏதோ போதுன்னு ஒரு நினைப்பு வந்துச்சு. அதுக்கு அப்பரம் லண்டனிலிருந்து இந்தியா, அப்பரம் அமெரிக்கா...இப்படி இடங்களை மாற்றி, கதையின் திசையும் திசை தெரியாமல் காண போகுது. பாடல்கள் நல்லா இருக்கு. ஆனா, நடன அசைவுகள் இன்னும் நல்லா இருந்து இருக்கலாம்! சைவ், நீங்க ஏன் ஏதோ vibrating mobile phoneயை முழுங்கிவிட்ட மாதிரி ஆடுறீங்க? சைவ் அலிகான் சிங் வேடத்தில் ரொம்ப நல்லா பொருந்துகிறார். இவரின் முதல் தயாரிப்பாம் இப்படம். படம் வர்த்தக ரீதியாக பிச்சிகிட்டு போகுதாம். வாழ்த்துகள். என்னைய மாதிரி ரசிகர்கள் அதிகம் இல்லாத வரைக்கும் எந்த படமும் வெற்றி படம் தான்!

தீபிகா- சும்மா சொல்ல கூடாது. ரொம்ம்ம்பவே அழகா சிரிக்குறாங்க!!

இந்த படம் என்னை பொருத்தவரை இன்னொரு ஜப் வீ மெட்!

(அப்பரம் லக் படமும் பார்த்தேன். ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல.... நான் இனிமே கன்னட படங்கள் பார்க்கலாமான்னு இருக்குறேன். ஸ்ருதிஹாசனே, ஏன்? ஏன்? இதுக்கு மேல உங்ககிட்ட நான் எதுவும் சொல்ல விரும்பல!)

21 comments:

SK said...

பரிசல் விமர்சனம் படிச்சு இன்னைக்கு சாயங்கலாம் போகலாம்னு இருக்கேன்..

இப்போ என்ன சொல்றீங்க.. போகவா வேணாமா.. ?? :(

Thamizhmaangani said...

@sk, உங்களுக்கு ஜப் வீ மெட் படம் பிடிச்சு இருந்தா, இதுவும் பிடிக்கும்! all the best:)

SK said...

நான் ஹிந்தி படமே பாக்கறது இல்லைங்க..

எதோ ஒரு நண்பன் கூப்பிட்டான்.. சோ போகலாம்னு இருக்கேன். உங்க விமர்சனம் பாத்தா ஒடனே ஒதறது.. :)

Thamizhmaangani said...

@sk, ஹிந்தி படங்கள் பாக்க மாட்டீங்களா? ம்ம்... சரி அப்போ நீங்க ஒரு தடவைக்கு ரெண்டு தடவ நல்லா முடிவு பண்ணுங்கோ!:)

ம்ம்ம்...ஆனா, உங்களுக்கு படம் பிடிக்கும்னு தோணுது? போய் பாருங்க:)

SK said...

ரிஸ்க் எடுக்கறதுன்னு ஆகிபோச்சு ..

தீபிகா மேல பாரத்தை போட்டு போக வேண்டியது தான் :) நன்றி ஆபிசர்

VISA said...

//சைவ், நீங்க ஏன் ஏதோ vibrating mobile phoneயை முழுங்கிவிட்ட மாதிரி ஆடுறீங்க? //

AVARU VEARA ENNATHA MUZHUNGITU AADINAAROA :)

kannada padam paathu vimarsanam pana poareengala......mudiyala :)

pappu said...

உங்களுக்கு பிடிச்ச படம் என்னன்னு எனக்கு சொல்லுங்க்ளேன். பாவம், ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்து என்ன கெரகமோ, உங்களுக்கு பிடிக்காத படமா பாக்குறீங்க!

இராயர் அமிர்தலிங்கம் said...

நாங்க தான் அப்பவே சொன்னோம்ல பாக்கதிங்கனு ,,அப்புறம் பாத்துட்டு இங்க வந்து பொலம்பறது ..ஓகே கூல் மேடம்

நல்ல ஹிந்தி படம் எல்லாம் இருக்குங்க ,,அத பாருங்க ..மொக்க படத்த பாக்காதிங்க,,

அன்புடன்
இராயர்

Karthik said...

thanks for the review but im gonna see anyway. :)

Karthik said...

LOL @ pappu's comment. :)))

Srivats said...

//சைவ், நீங்க ஏன் ஏதோ vibrating mobile phoneயை முழுங்கிவிட்ட மாதிரி ஆடுறீங்க?//

Ur classic nachu touch!! haha , I am not seeing regional movies, unless they are exceptionally good. so I am safe :)

Thamizhmaangani said...

@பப்பு,

//உங்களுக்கு பிடிச்ச படம் என்னன்னு எனக்கு சொல்லுங்க்ளேன்//

நிறைய ஹிந்தி படம் பிடிக்கும்ப்பா! "rab ne bana di jodi", "new york" படமெல்லாம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு:)

Thamizhmaangani said...

@இராயர்

//நல்ல ஹிந்தி படம் எல்லாம் இருக்குங்க ,,அத பாருங்க ..மொக்க படத்த பாக்காதிங்க,,//

சரிங்க ஐயா!:)

Thamizhmaangani said...

@கார்த்திக்

//thanks for the review but im gonna see anyway. :)//

கண்டிப்பா கண்டிப்பா, ஒருத்தர் சொல்லியும் நீங்க போறீங்கன்னா, அப்ப கண்டிப்பா நீங்க ஒரு யூத் தான்!(cos youth breaks the rules)

Thamizhmaangani said...

@srivats

//Ur classic nachu touch!! haha , I am not seeing regional movies, unless they are exceptionally good. so I am safe :)//

thanks for the compliments. pple like us are saving you guys by our reviews!( we are the unofficial velu nayakars!)

இராம்/Raam said...

என்னது இந்த படமும் பிடிக்கலையா?? ஒன்னியும் பண்ணமுடியாது... :)

கம்பத் இஷ்க் போயி பாருங்க.. ஒங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கும்... :)

Cable Sankar said...

/நிறைய ஹிந்தி படம் பிடிக்கும்ப்பா! "rab ne bana di jodi", "new york" படமெல்லாம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு:)//

என்னது ரப்னே பனாதே ஜோடி பிடிச்சிருந்திச்சா.. ? ஓகே.. ரைட்டு நான் வர்ரேன்.

யாசவி said...

u mean jab we met u don't like?

யாசவி said...

r u going to see kannada movies?

wow! think twice

swetha said...

hey friends have you seen aavakay briyani (telugu movie) too good we can see that for camera itself (kathaiku naan porupu illai ) please antha padam paarthuvitu vimarsanam podungal please

வழிப்போக்கன் said...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன்...
வாழ்த்துகள்...