Aug 23, 2009

கந்தசாமி- நொந்து maggi noodlesaa போயிட்டேன் சாமி!

தமிழ் சினிமாவின் கஷ்டகாலமோ இல்ல என் கஷ்டகாலமோ நான் சமீபத்தில் பார்த்த எந்த படமும் நல்லாவே இருப்பதில்ல! (ஏன் கந்தசாமி..ஏன்? நான் கடவுள சொன்னேன்?)

நேத்திக்கு நைட் ஷோ பார்த்தேன். சாரி.... படத்து தூங்கிட்டேன். கடைசி ஒரு மணி நேரம் நல்லா தூங்கிட்டேன். படம் முடிஞ்சி அக்கா எழுப்பிவிட்டாள். படத்தைவிட பின்னாடி, ஏதோ அடிதடி நடந்துச்சு....அது இன்னும் சுவாரஸ்சியமா இருந்துச்சு!!

சில கேள்விகள்:

1) சுசி கணேசன், உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையா? முழு படத்தில் ஹீரோவா நடிக்கலாமே. இந்த படத்துல வந்த மாதிரி ஒரு சின்ன ரோல் பண்ணாம, முழு நீள படத்தில் நடிங்க, கலைப்புலி தாணுவே காசு போடுவாரு!

2) கலைப்புலி தாணு ஐயா, வெளியே போயிட்டு வர ஆட்டோ செலவுக்கு காசு ஏதேனும் வேணும்ன்னா சொல்லுங்க...... கந்தசாமி கடவுள்கிட்ட லெட்டர் எழுதி போடுவோம்!

3) சேவல் முருகன் அவதாரம்.... சரி ஏதோ ஒத்துகிறேன்....அப்பரம் ஏன்ய்யா மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாட்டு வந்துச்சு? பூனைக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?

4) அடுத்த படத்தில் ஸ்ரேயாவுக்கு (அப்படி அந்த வாய்ப்பு அவங்களுக்கு இருந்தா), தோழி வேடம் இருந்தால் என்னைய கூப்பிடுங்க. தோழி அவங்களுக்கு அறைவிடுற மாதிரி ஒரு சீன் வைங்க. நான் அந்த தோழி ரோல் செய்யுறேன்..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

5) ஸ்ரேயாவுக்கு சரியா payment கொடுக்கல்ல....டப்பிங் 'ஜகஜோதியா' இருக்கு!

6) விக்ரம் அங்கிள், ஆமா அங்கிள்....உங்க முகத்துல வயதான கலை தெரியுது... அதான் அப்படி கூப்பிட்டேன். அங்கிள் ப்ளீஸ், இனிமேலு இந்த மாதிரி சூப்பர்ஹீரோ படம் பண்ணாதீங்க. எனக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலைவலி இப்படி பன்றி காய்ச்சல் symptomsம் வருது!

7) மெக்சிகோ நாட்டுக்கு கதை ஏன் போனுச்சு? சரி கதையே இல்லேங்கிறீங்களா, சரி ரைட்டு விடுங்க.

8) வடிவேலு சார், நீங்க வேற ஏதாச்சு business செய்யுங்களேன்....அதான் காமெடி ஸ்டாக் முடிஞ்சு போச்சே!

9) பிரபு தாத்தா, உங்கள நினைச்சா எனக்கு சிப்பு தான் வருது. எங்க ஊருல ஒரு போலீஸ் வேலை இருக்கு. வந்து பாக்குறீங்களா?

10) கடைசி ஒன்னே ஒன்னு கேட்டுகிறேன். 'என் பெயரு மீனாகுமாரி' பாடலை பார்த்து முகம் சுளித்து வாய், மூக்கு எல்லாம் கோணிக்கிட்டு போச்சு. மருந்து அனுப்பி வைங்க, 'கந்தசாமி' படக்குழுவினரே!! அந்த பாடலை பார்த்து, அழ ஆரம்பிச்ச என் சித்தி பையன் இன்னும் அழுதுகிட்டு இருக்கான். மந்திரிச்சு விடனும்னு நினைக்குறேன். யாராச்சு சாமியார் கிடைப்பாங்களா?

சூப்பர்ஹீரோ படம் அடுத்து சூர்யா 'ஆதவன்' அப்படி பண்ணுறாராம். சூர்யா, பாத்து பண்ணுங்க!!

கந்தசாமி- நொந்து maggi noodlesஆ போயிட்டேன் சாமி!

26 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//விக்ரம் அங்கிள், ஆமா அங்கிள்....உங்க முகத்துல வயதான கலை தெரியுது... அதான் அப்படி கூப்பிட்டேன். அங்கிள் ப்ளீஸ், இனிமேலு இந்த மாதிரி சூப்பர்ஹீரோ படம் பண்ணாதீங்க. எனக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலைவலி இப்படி பன்றி காய்ச்சல் symptomsம் வருது!//

சிங்கப்பூர்லயுமா பன்றிக்காய்ச்சல் வருது?

Cable Sankar said...

தூங்கிட்டேன்னு.. கடைசி பாட்டு வரைக்கும் பாத்திருக்கீங்க..? அவ்வவளவ்வூவூவூ.. நல்லாஆஆஆஆஆஆஆவா.. இருக்கூஊஊஊஊஊஊஊஊ

Mãstän said...

hehehe...

nice post.

if u slept, how could u say film rating? ;)

கலையரசன் said...

இங்க வாய்கிழிய பேசுங்க.. படத்தை முதல் நாளே பாத்துடுங்க!

goma said...

நல்ல வேளை காப்பாத்தினீங்க...
VCD எங்கே எப்போ கிடைக்கும்னு தேடிட்டு இருந்தேன்
அப்படிப் பார்க்கக் கூட லாயக் நஹி ந்னு சொல்லீட்டீங்க...

நிஜமா நல்லவன் said...

எல்லா படத்தையும் முதல் நாளே பார்த்திட்டு புலம்புறதே வேலையா போச்சு:)))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அடுத்த படத்தில் ஸ்ரேயாவுக்கு (அப்படி அந்த வாய்ப்பு அவங்களுக்கு இருந்தா), தோழி வேடம் இருந்தால் என்னைய கூப்பிடுங்க. தோழி அவங்களுக்கு அறைவிடுற மாதிரி ஒரு சீன் வைங்க. நான் அந்த தோழி ரோல் செய்யுறேன்..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!///

ஏன் இந்தக் கொலை வெறி..? ஸ்ரேயா என்ன பாவம் பண்ணுச்சு.. பாவம்.. பச்சப் புள்ளை.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம ஆடிட்டு போயிருக்கு..!

Vijay said...

"எல்லா படத்தையும் முதல் நாளே பார்த்திட்டு புலம்புறதே வேலையா போச்சு:)))))"
என்னையப் பத்தியா சொல்றாரு ? :))))

”ஸ்ரேயா என்ன பாவம் பண்ணுச்சு.. பாவம்.. பச்சப் புள்ளை.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம ஆடிட்டு போயிருக்கு.”
ஆடிட்டா போயிருக்கு??? காட்டி...போன மாதிரில இருக்கு ;)

அப்புறம்... “ஒய் ப்ளட்?? ஓகே ஓகே சேம் ப்ளட்” ;)

pappu said...

யாருப்பா அது சூப்பர் ஹீரோன்னு சொன்னது? அதெல்லம் டுபாகூருங்க!

ஸ்ரேயா பத்தி தப்பா சொல்லாதீங்க! கெட்ட கோபம் வரும். எங்கள மாதிரி பசங்களுக்கு அவங்க பண்ணின தியாகம் தெரியுமா? பாதி டிரஸ்! பாவம்!

அப்புறம் நெஜமாலவே விக்ரம் சரியில்லன்னா சொல்லுறீங்க! படத்துல விக்ரம் ஒருத்தர் தான் உருப்படி.அவரப் போய்....

Thamizhmaangani said...

@வசந்த, சிங்கப்பூர்லயும் இருக்கு! 20,000 பேருக்கு மேல தாண்டிடுச்சு

@கலையரசன், நீங்க உண்மைய பேசுறீங்க. i like it.

@ஸ்ரேயா ரசிகர்களே, இதுக்காகவே anti-shriya club ஆரம்பிக்க போறேன். ஹிஹி...:)

பிரியமுடன் பிரபு said...

அடுத்த படத்தில் ஸ்ரேயாவுக்கு (அப்படி அந்த வாய்ப்பு அவங்களுக்கு இருந்தா), தோழி வேடம் இருந்தால் என்னைய கூப்பிடுங்க. தோழி அவங்களுக்கு அறைவிடுற மாதிரி ஒரு சீன் வைங்க. நான் அந்த தோழி ரோல் செய்யுறேன்..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

////

இதை வன்மையாக கண்டிக்கிறேன் , அந்த க்கொழந்தபுள்ள என்ன செஞ்சுச்சு?? பாவம்
10 டாலர் கொடுத்து படம் பார்கிறேம் அம்மனி இல்லாட்டி எப்படி????

பிரியமுடன் பிரபு said...

ஏன் இந்தக் கொலை வெறி..? ஸ்ரேயா என்ன பாவம் பண்ணுச்சு.. பாவம்.. பச்சப் புள்ளை.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம ஆடிட்டு போயிருக்கு..!
///

அதே அதே

Srivats said...

haha nanbargal ellam nethikkey ponumnu sonnanga, review parthuttu polamennu thonichu, nalla velaikka ticket kedaikala, thapichen saami :) thanks for ur review :))

Srivats said...

//கடைசி ஒன்னே ஒன்னு கேட்டுகிறேன். 'என் பெயரு மீனாகுமாரி' பாடலை பார்த்து முகம் சுளித்து வாய், மூக்கு எல்லாம் கோணிக்கிட்டு போச்சு//

Endha paata ella dance showleyum supera aadi amarkala padutharangelay , padathula dhaan bussu ayidacha

Srivats said...

//இனிமேலு இந்த மாதிரி சூப்பர்ஹீரோ படம் பண்ணாதீங்க. எனக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலைவலி இப்படி பன்றி காய்ச்சல் symptomsம் வருது!
//

ahaha nenachen anniyan style maari theriyudhennu

gils said...

same blud on the movie...naanum nite show thaan ponen.. :(( kodurram padam..thangala :( 225 busssu...refund venumnu marathula paper katti vaka poren...

☀நான் ஆதவன்☀ said...

//0) கடைசி ஒன்னே ஒன்னு கேட்டுகிறேன். 'என் பெயரு மீனாகுமாரி' பாடலை பார்த்து முகம் சுளித்து வாய், மூக்கு எல்லாம் கோணிக்கிட்டு போச்சு. மருந்து அனுப்பி வைங்க, //

கடைசி ஒரு மணி நேரம் தூங்கிட்டு க்ளைமாக்ஸ்கு பத்து நிமிடத்திற்கு முன் வரும் பாடலுக்கு மட்டும் எப்படி முழிச்சீங்க? :)

எனிவே நானும் பாதிக்கப்பட்டவன்ற முறையில உங்க ஃபீலிங்ஸ் புரியுது :)

//சூப்பர்ஹீரோ படம் அடுத்து சூர்யா 'ஆதவன்' அப்படி பண்ணுறாராம். சூர்யா, பாத்து பண்ணுங்க!! //

அவ்வ்வ் இந்த படமும் இந்த மாதிரி இருந்தா எல்லோரும் ஆதவன் ஆதவன்னு என்னைய திட்ட ஆரம்பிச்சிருவாங்க. பேசாம என் பேரை அப்ப “நான் இல்லை ஆதவன்”னு மாத்திக்கிறேன்.

Karthik said...

ஹா..ஹா. கலக்கல் விமர்சனம். :)))

Sundari said...

Theatre poi padam parkara asayae poidum pola iruku..ennum Nalu padam epadi release panina

Divyapriya said...

haa haa...rotfl :D paavam neenga :)

Thamizhmaangani said...

@பிரபு,

//10 டாலர் கொடுத்து படம் பார்கிறேம் அம்மனி இல்லாட்டி எப்படி????//

100 டாலர் கொடுத்து பரவை முனியம்மா ஹீரோயின்னா நடிச்ச படமா இருந்தாலும் பாப்பேனோ தவிர, இனிமேலு ஸ்ரேயா நடிச்ச படத்த ஓசில கூட பாக்கமாட்டேன்.

Thamizhmaangani said...

@ஸ்ரீ,

//ahaha nenachen anniyan style maari theriyudhennu//

சனியன தூக்கி பனியனுக்குள போட்ட கதையா போச்சு.

@கில்ஸ், அந்த மரத்த நானும் தேடிகிட்டு இருக்கேன்.

@ஆதவன்

//எனிவே நானும் பாதிக்கப்பட்டவன்ற முறையில உங்க ஃபீலிங்ஸ் புரியுது :)//

நன்றிங்கண்ணா!

ஆதவன் பட பாடல்கள் எல்லாம் கேட்டேன். இப்பவே நீங்க 'நான் இல்லை ஆதவன்' அப்படின்னு மாத்திக்கலாம்னு நினைக்குறேன். ஏனா, பாட்டு ஒன்னும் சரியா இல்ல!:)

Thamizhmaangani said...

@karthik, don't watch this movie.

@sundari, இப்பவே அப்படி தான் தோணுது. இனி எந்த படத்தையும் பாக்ககூடாதுன்னு.

@திவ்யாபிரியா,மெகா பாவம்ன்னு சொல்லுங்க!

பிரியமுடன் பிரபு said...

////
//10 டாலர் கொடுத்து படம் பார்கிறேம் அம்மனி இல்லாட்டி எப்படி????//

100 டாலர் கொடுத்து பரவை முனியம்மா ஹீரோயின்னா நடிச்ச படமா இருந்தாலும் பாப்பேனோ தவிர, இனிமேலு ஸ்ரேயா நடிச்ச படத்த ஓசில கூட பாக்கமாட்டேன்.
////


ஏன் இந்த கொலைவெறி

kanagu said...

enanaya maariye neengalum poi yemathuntu vandhurukeenga.. :))

iniku anandha vikatan vimarsanam paarunga... padatha vida sema comedy..

action scenes ellam super am...

ungalaya maariye padathula thoongitu.. kanavu kandutu irundhanga pola irukku :P

saravana said...

tataindiaxenon@gmail.com
Tata Safari Kanthaswamy Contest
participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com