Nov 17, 2009

2012- படமா இது?

நேற்று 2012 படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பரிட்சை இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள படமா? அப்படின்னு சில பேர் நினைக்கலாம். பொறுங்க பொறுங்க மேட்டருக்கு வரேன். டிக்கெட் இலவசமா கிடைச்சா போகாம இருப்பீங்களா? அமிராமி மாலில் இருக்கும் 350 ரூபாய் டிக்கெட் வாங்கி படுத்துகிட்டே படம் பார்க்கலாமே, அந்த மாதிரி இங்கயும் படுத்துகிட்டே படம் பார்க்கும் தியேட்டர் இருக்கு.

அக்கா ஒரு ஃபோட்டோ எடுக்கும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு சினிமா டிக்கெட்டுகளை ஜெயிச்சாங்க. அந்த டிக்கெட்டுகளை வச்சு தான் படம் பார்க்க போனோம். ஒரு டிக்கெட் விலை (S$36. ரூபாய்க்கு கணக்கு பண்ணால்...ம்ம்ம்..abt Rs 800) இப்படி ஒரு அருமையான வாய்ப்பை நழுவுவிடுவோமா??

சரி படத்துக்கு வருவோம். "படமா இது? இல்ல நான் கேட்குறேன்...படமா இது" அப்படின்னு என்னைய புலம்ப வச்ச எத்தனையோ படம் இருக்க...இந்த படம் என்னைய பிரமிக்க வைத்துவிட்டது. "இது படம் இல்லைய்யா...பாடம். a threatening wake up call."

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்திலேயே ஐக்கியம் ஆயிட்டேன். (இன்னும் மீள முடியாது நிலைமையில் தான் இருக்கேன்). படத்துல தண்ணியை தண்ணி மாதிரி செலவு பண்ணியிருக்கானே...அப்போ காச எந்த மாதிரி செலவு பண்ணியிருப்பான். கிராபிக்ஸில் புகுந்து விளையாடி இருக்காங்க. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இந்த உலகமே பாக்க வேண்டிய படம். படத்துல பிடிச்ச வசனம் "the moment we stop fighting for each other, that's the moment we ruined humanity."

கடைசி வரைக்கும் போராடி பாக்கோனும். உலகம் உண்மையாகவே 2012 அழிய போகுதா? என்ற கேள்விக்கு நம்மை இப்பவே தயார் நிலையில் இருக்க சொல்லுது படம். பல காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு இழுத்து செல்லும். ' life is fair yet it is cruel.' என்பதை அழகாய் ஒரே ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். ரஷிய விமானத்தை ஓட்டி செல்பவன் மற்றவர்களை தப்பிக்க சொல்லிவிடுவான். காரணம் விமானத்தில் உள்ள எஞ்ஜீன் கெட்டுபோய்விடும். மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள். இவன் விமானத்தை கஷ்டப்பட்டு நிறுத்துவான். மலை உச்சியில் நின்றுவிடும். யப்பாடா என்று பெருமூச்சு விடும் நேரத்தில், விமானம் balance செய்ய முடியாமல் கீழே விழுந்து நொறுங்கிவிடும்.

அப்போ படத்துல குறையே இல்லையா என்று நினைக்கலாம். இருக்கு இருக்கு.... அமெரிக்கா ஜனாதிபதியை ரெம்ம்ம்ம்ம்ப நல்லவராய் காட்டிய விதம் எனக்கு கொஞ்சம் சிரிப்பா இருந்தது. ஹீரோவின் குடும்பம் மட்டும் எல்லாவற்றையும் கடந்து தப்பித்து போகும் விதம். இவ்வாறு, கூர்ந்து பார்த்தால் லாஜிக் இடிக்கும். இருந்தாலும், படத்தின் பிரமாண்டத்தில் இவையெல்லாம் தூசியாய் போய்விட்டது.

மனதில் எழுந்த வியப்பு: அப்படி உலகம் அழிந்தால், பணக்காரன் spaceshipல் ஏறி தப்பித்து விடுவான், அப்போ ஏழைகள்?

சீனாவில் உள்ளவர்களுக்கு மூளை எப்படிய்யா வேலை செய்யுது?

ஆக மொத்தத்தில் படம் சூப்பர்!! கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

10 comments:

Prabhu said...

பணக்காரன் தப்பி போகத்தான் செய்வான். பள்ளத்தில இருந்தா உயரமானவன் ஈஸியா வெளிய வந்திடறதில்ல. அப்ப்டித்தான்.

எம்மரிச் படத்தில எல்லாம் பிரசிடண்ட் ரெம்ப நல்லவரா இருப்பாரு.

இது பரவாயில்ல, இண்டிபெண்டன்ஸ் டெ படத்துல பிரசிடண்ட் விமானத்துல வந்து ஏலியனோட சண்டை போடுவாரு. அதையே வாயப் பிளந்து பாத்தோம் நாங்க.

gils said...

was waiting for ur review :) ok..padam appo sakkiaya irukum pola :) intah vaaram pathira vendi than :)

VISA said...

2012ல உலகம் அழிஞ்சிடுமாம். அதுக்குள்ள பிளஸ் டூ பாஸ் பண்ற வழிய பாருங்க....:)

விக்னேஷ்வரி said...

ஓசி டிக்கெட்ல படம் பார்த்திட்டு விமர்சனம் வேற ;) .
படம் பார்க்கலாம்ங்குறீங்க. பார்த்திடுவோம்.

sri said...

oc ticket! wow! endha theater edhu ?
me too same blood . pappu comment was comical!

Raja Subramaniam said...

nice movie but how long r v going to see the same story.... v can watch it once thats all... aana OCla ticket kidacha rendu thadava kuda parkalam tappu illa

மணி said...

படம் நல்ல படம் தான் , சீனா , இந்தியாலாம் வியாபார யுக்திக்காக சேர்த்திருக்காங்க வேற ஒன்னும் இல்லை. எப்பவுமே மேற்கத்திய நாடுகள் லாப நோக்குல தான் இந்த மாதிரி செய்யுவாங்க.

Soin said...

2012=sarva nasam.. oru mudivoda thaan velaila yerangirukanga..free

Anonymous said...

என்ன 36 வெள்ளியா எந்த சினிமா கொட்டகை தாயே
hari singapore

Anonymous said...

you like "BIG" car huh!!!! :):)

We like cars with small door and big headlights..