Jun 13, 2011

இப்போதைக்கு சினிமா காலியா தான் இருக்கு!

producer-director kaamedy series

தயாரிப்பாளரின் மேசையில் எந்த டிவிடிகளுமே இல்லை. அச்சமயம், நம்ம இயக்குனர் பாரதி கௌதம் உள்ளே வருகிறார்.

இயக்குனர்: என்ன சார் காலியா இருக்கு மேசை. படம் எடுக்க போறது இல்லையா சார்?

தயாரிப்பாளர்: அட போயா? இப்போதைக்கு சினிமா காலியா தான் இருக்கு.

இ: ஏன் சார் அப்படி சொல்றீங்க?

த: எல்லாரும் கிரிக்கெட் விளையாட போயிட்டா அப்பரம் நான் யார வச்சு படம் எடுக்குறது?

இ: ஹாஹாஹா...ஐயோ சார் அதான் இந்த சோகமா!? இவங்க போனா என்ன? நம்ம கிரிக்கெட் வீரர்கள் தான் இப்போ டான்ஸ் போட்டி, பல்பொடி விளம்பரம் அப்படினு நடிக்க வந்துட்டாங்களே! இவங்கள வச்சு படம் எடுப்போம் சார்!

த: நீ சொல்றது உண்மை தான்! நம்ம virat kohli நல்லா அழகா smart இருக்குறார்... அவர வச்சு ஒரு படம் பண்ணலாமா பாரதி?

இ: ஹிந்தி படம் எடுக்க போறீங்களா?

த: இல்ல, தமிழ் படம் தான்!

இ: தமிழ் படத்துல நடிக்கறதுக்கு எதுக்கு சார் இவ்வளவு அழகு தேவை? இங்க பாருங்க இவர.... இவர் நடிச்சாருன்னா...படம் செம்ம ஹிட்!
(ஒரு ஃபோட்டோவை நீட்டுகிறார்!)

(ஃபோட்டோவை வாங்கி பார்த்து, முகம் சுழிப்புடன்)

த: யோவ்! யாருய்யா இது? shave பண்ணி 10 வருஷம் ஆனா மாதிரி! முடி என்னய்யா...விளக்கமாறு மாதிரி இருக்கு!

இ: என் தெருவுல இருக்கும் வளரும் ரவுடி.

த: வளரும் ரவுடியா???

இ: வளரும் கலைஞன் மாதிரி, வளரும் ரவுடி!!

த: இந்த மூஞ்சிய எப்படிய்யா படத்துல காட்டுறது!

இ: சார், என்ன சார் புரியாம பேசுறீங்க! இப்ப உள்ள trendஏ உங்கள தெரியாதா!? இந்த ரவுடி செம்ம ஹிட் ஹீரோவா வருவார் பாருங்க!

த: எப்படிய்யா சொல்றீங்க??

இ: சார், இந்த ஃபோட்டோவ படம் புடிச்சு உங்க மனைவிக்கும் பொண்ணுக்கும் mms அனுப்புங்க? அவங்க reaction பாத்த பிறகு நீங்களே சொல்வீங்க!

(இயக்குனர் சொன்ன படி செய்தார் தயாரிப்பாளர். சற்று நேரத்தில் இருவரிடமிருந்து பதில் வந்தது)

மனைவி: ஆபிஸ் நேரத்துல, இப்படி பயம் காட்டுற மாதிரி ஃபோட்டோ அனுப்புற?? வீட்டுக்கு வா, உங்க அம்மா ஃபோட்டோவ காட்டி பயம் காட்டுறேன் பாரு!

இ: என்ன சார்? உங்க மனைவி செம்ம டென்ஷனா ஆயிட்டாங்க போல!

த: யோ! என்னய்யா வம்புல மாட்டிவிட பாக்குறீயா?

இ: சார், பொறுங்க. உங்க பொண்ணு ஸ் எம் ஸ படிங்க

பொண்ணு: டாடி!! omg! who is this? so hot! so cute! semma rowdy look! awesome! super! you better fix him for your next movie. I'm going to share this picture with my collegemates!

த: (ஆச்சிரியத்துடன்) என்னய்யா நடக்குது?

இ: நான் தான் சொன்னேன்ல. எந்த ஒரு ஹீரோ முகம் ஆண்ட்டிஸ்க்கு பிடிக்காம, அவங்க பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ, அந்த ஹீரோ தான் டாப் ஹீரோ!

த: என்னமோ போயா! இது எல்லாம் சரியா வருமானு தெரியல!

இ: சார், இவர் நல்ல கிரிக்கெட் ஆடுவாரு சார்! தமிழ் படம் ஹீரோவுக்கு இதவிட வேற என்ன தகுதி வேணும்!?

த: (சலிப்புடன்) புதுசா எதாச்சு செய்யுவோம்? ஒரு reality tv show பண்ணா என்ன?

இ: பின்னீட்டீங்க சார்! இப்ப அது தான் hot business.

த: என்ன நிகழ்ச்சி பண்ணலாம்?

இ: பாட்டு போட்டி! airtel வழங்கும் cute singer இம்முறை உலகத்தையும் தாண்டி!

த: நல்லா தான் இருக்கு!

(ஒரு வாரம் சென்றது, நிகழ்ச்சி தேர்வு சுற்று நடந்தது. தேர்வு சுற்று அறையில், இயக்குனரும் தயாரிப்பாளரும் காத்து கொண்டிருந்தனர்)

த: உன்னைய நம்பி இதுல இறங்குறேன், பாத்து பண்ணுய்யா!!

இ: கவலைய விடுங்க! தேர்வு சுற்றே 15 episode காட்டலாம்! அப்பரம் டாப் ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோக்களின் லவ் டூயட்ஸ், மொக்கை ஹீரோயின்களின் solo சுற்று, wildcard round 1, wildcard round 2, wildcard round 3, mega wildcard round, semi final 1, semi final version 2.0...இப்படி ஒவ்வொரு episode கணக்கு பண்ணாலே, பல கோடிய அள்ளிடலாம் சார்!

த: ஆமா, நமக்கு என்னமோ பாட்டு தெரிஞ்ச மாதிரி judge பண்ண வந்துட்டோமே, உனக்கு ஏதாச்சு சங்கீதத்த பத்தி தெரியுமா?

இ: மத்தவங்க பொண்டாட்டிய பத்தி நான் பேச மாட்டேன் சார்?

த: பொண்டாட்டியா????

இ: பாடகர் கிரீஷ் பொண்டாட்டி தானே சங்கீதா? அவங்கள பத்தி எனக்கு ஒன்னு தெரியாது சார்!

த: யோ! சங்கீதா இல்லையா? சங்கீதம்!!!!!!!

இ: (சிரித்து கொண்டே) அத பத்தி தெரியாம இருக்குமா? நான் எப்படி judge பண்றேன் மட்டும் பாருங்க!

(முதல் போட்டியாளர் வந்தார். பாடினார்)

இ: நீங்க பாடின மூன்றாவது வரில அந்த ரெண்டாவது வார்த்தையல கொஞ்சம் landing note தப்பா போயிட்டு!

த: (இயக்குனர் காது அருகே சென்று, மெதுவாய்) அவர் பாடினதே இரண்டு வரி தான். நீ என்னத்த மூன்றாவது வரிய கண்டு பிடிச்ச?

இ: (சமாளித்து கொண்டு) ஓகே, சார்! நீங்க அடுத்த ரவுண்டுக்கு selected.

(அடுத்த போட்டியாளர் பாடி முடித்தார்)

இ: சூப்பர்! சூப்பர்! இந்த சின்ன வயசுல....(கண் கலங்கினார்)

த: (இயக்குனரிடம் மறுபடியும் காது அருகே சென்று) அநியாயம் பண்ணாத டா! இவருக்கு 55 வயசு ஆச்சு! இது உனக்கு சின்ன வயசா? நல்லாவே பாடுல...reject him.

இ: (அமைதியான குரலில் தயாரிப்பாளரிடம்) சார், நல்லாவே பாடாம இருக்கறவங்கள தான் choose பண்ணனும். அது தான் புது rule.

(வெளியே வாக்குவாதம் நடந்தது. அதை சமாளிக்க ஓடினர் இருவரும்)

ஒரு அம்மா: எங்க புள்ள பாடனும்.

த: இல்ல மேடம். இது பெரியவங்க நிகழ்ச்சி.

ஒரு அம்மா: என் புள்ள, சின்னபுள்ள, இப்ப தான் 6 வயசு ஆகுது. சும்மா ஒரு guest appearance மாதிரி பண்ண வைங்க.

இ: மேடம், கவலைய விடுங்க! அடுத்த seasonல உங்க பையனுக்கு சான்ஸ் இருக்கு.

த: அடுத்த seasonக்குள்ளவா? இப்ப தான் பையனுக்கு 6 வயசு.

இ: சார், நம்ம ஒரு சீசன முடிக்கறதுக்குள்ள பையன் வயசுக்கு வந்து மேஜர் ஆயிடுவான் சார்.

(பிரச்சனையை சமாளித்த உற்சாகத்தில் உள்ளே வந்தனர் இருவரும். அடுத்த போட்டியாளர் பாடி கொண்டு இருக்கும் வேளையில்...)

இ: நிறுத்துங்க! (கத்தினார்)

த: (ஆச்சிரியம் அடைந்தார்)

இ: என்னங்க பண்றீங்க?? (போட்டியாளர் மிரண்டு போயிட்டார்)

த: (இயக்குனரிடம்) யோ! what's happening?

இ: அவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?

போட்டியாளர்: சாரி சார்! நான்....மறுபடியும் பாடவா?

இ: நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்!

(அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். போட்டியாளரின் சித்தி உள்ளே நுழைந்தார் கையில் ஒரு கேக். அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது. அனைவரும் கை தட்டினர்.)

சித்தி: இன்னிக்கு celebration time! எங்க கொள்ளு தாத்தா ஒருத்தர் இருந்தாரு. அவரோட நினைவு நாள் இன்னிக்கு. அதான்...(சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தார்கள் போட்டியாளரின் மொத்த குடும்பத்தினரும். இயக்குனரும் சேர்ந்து கொண்டார் கொண்டாடத்தில். கேமிரா மேன் ஒவ்வொரு angleலாய் படம் எடுத்தார்!)

த: (கோபத்துடன்) என்னய்யா நடக்குது!!! எல்லாரும் ஓடி போயிடுங்க!

(அனைவரையும் விரட்டினார்!!!)

இ: சார்... என்ன சார்?

த: நீ பேசாதய்யா!!??

இ: (புன்னகையித்து கொண்டே) சார், அங்க பாருங்க சார்?

த: என்ன?

இ: இப்ப பாடினாரே அவர் காதுல எத்தன தோடு போட்டு இருந்தார் தெரியுமா?

த: அவர சித்தியவிட அவருக்கு தான் நிறைய இருந்திருக்கும். அதுக்கு இப்ப என்ன?

இ: சார், ஒரு ஐடியா சார்? why not we start 'நம்ம வீட்டு காது குத்து' show?

த: உனக்கு இன்னிக்கு கும்மாங்குத்து தாண்டா!!! (விரட்டி கொண்டு ஓடினார் இயக்குனரை பிடிக்க!)

5 comments:

Anonymous said...

This is cheating. I need the story =))

Anonymous said...

பாத்திட்டே இரும்மா, கோலிவுட் ஆளுங்க வழக்கு போடப் போறாங்க. ரொம்பவே கலாய்க்கறே தலைவா.

vijayroks said...

ROFL:)...really nice one....

FunScribbler said...

@vijay:

thanks boss:)

எவனோ ஒருவன் said...

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஷோ மேல இவ்வளவு கோபமா உங்களுக்கு :-)

உங்க பதிவுல ஒவ்வொரு வரியையும் கண்டிப்பா பாராட்டியே ஆகணும். அசத்துறீங்க. என்ன உங்க பதிவை பாராட்டி கமெண்ட் போட்டா உங்க பதிவை விட கமெண்ட் நீளம் தான் அதிகமா வரும்.

இந்த பதிவை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிக்காம யாராலையும் இருக்க முடியாது. Enjoyed a lot :-) Thanks.