Jun 16, 2011

அப்பரம் இன்னிக்கு என்ன plan?- 2

பகுதி 1

மாயாவும் தன் குழு விவரத்தாளை நீட்டி, "silent tiger's team captain. for registration." என்றாள்.

"அந்த பிரச்சன தான் இங்க ஓடிகிட்டு இருக்கு." என்றான் சந்தோஷ் சற்று சோகத்துடன்.

"ஹாலோ. உங்களுக்கு எல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாதா? டைம் முடிச்சு போச்சு. no more registration." எல்லா தாட்களை அள்ளி தூக்கிப்போட்டார் ஏற்பாட்டாளர்.

" is this how an officer behaves? announcement one minuteக்கு முன்னாடி தான் சொன்னாங்க. so இன்னும் டைம் இருக்கு. moreover, if the time-off is at 9.15am, for your information it's still 9.14am. உங்க rules பேப்பரில், இந்த டைம்க்குள்ள தான் register பண்ணனும்னு ஒன்னும் போட்டு இல்லையே. ஒரு வாரத்துக்கு முன்னாடியே, என்னனென்ன குழுவோட விளையாடனும்னு ஒரு இமெயில் அனுப்புவீங்கன்னு சொன்னீங்க...அதுவும் வரல. right or not?" மாயா பொங்கி எழுந்தாள், தனது கடைசி கேள்விக்கு சந்தோஷ் பக்கம் திரும்பி கேட்டாள்.

"ஆமாங்க, we didn't receive any email." என்றான் சந்தோஷ் பவ்வியமாய்.

"ஒரு tournament நடக்கும்போது scoreboard ரெடியா இருக்கனும். where is it? ambulance standbyல இருக்கனும். where is it? சார்...முதல rules சரியா follow பண்ணுங்க நீங்க...அப்பரம் குத்தம் கண்டுபிடிக்கலாம்!" என்றாள் நக்கலாய் மாயா.

குழு ஏற்பாட்டாளருக்கு வேர்த்துவிருவிருத்து போய்விட்டது. இவ்வளவு கம்பீரமாய் பேசிய மாயாவின் பேச்சுக்கு, பதில் சொல்ல முடியாமல் திக்கமுக்காடினார்.

"சரி சரி... இனிமேலு இப்படி நடக்காம பாத்துக்குங்க." சமாளித்தார் ஏற்பட்டாளர்.

"நீங்க இந்த மாதிரி நடந்துக்காம பாத்துக்குங்க," சொல்லிவிட்டு ஏற்பட்டாளர் stamp குத்திய registration formயை வெடுக்கென்று எடுத்து கொண்டு சென்றாள் மாயா.

"thanksங்க." பின் தொடர்ந்த சந்தோஷ மெல்லிய குரலில் நன்றி கூறினான்.

"no problem." என பதில் அளித்தாள்.

காற்பந்தாட்டங்கள் ஆரம்பித்தன. ஒவ்வொரு ஆட்டம் 45 நிமிடங்கள். பல குழுக்கள் தங்களின் திறமையை காட்டின. சந்தோஷின் குழு கால் இறுதி சுற்றுவரை முன்னேறி தோல்வி அடைந்தது. தோல்வி அடைந்த நிலையில், "மச்சான், இனிமேலு இந்த guys விளையாடுறத்த பாத்து என்ன ஆக போகுது? அந்த side ladies விளையாடுறத போய் பாக்கலாம் டா" என்றான் சந்தோஷின் நண்பன், ரவி.

அப்போது மாயாவின் பெயர் கூட தெரியாத சந்தோஷும் அவள் விளையாடுவதை பார்க்க வேண்டும் என ஒரு சின்ன ஆவல் இருந்தது. இருவரும் நடையைக் கட்டினர் பெண்கள் திடலுக்கு. அப்போது விளையாடி கொண்டிருந்தது மாயாவின் குழு. திடல் ஓரத்தில் அமைந்திருந்த scoreboardல் பெயரை பார்த்தான் சந்தோஷ். 'silent tigers' captain maya என்பதை பார்த்து அவள் பெயரை அழகாய் தனக்குள் உச்சரித்தான், "மாயா".

half time முடிந்தது. கோபத்துடன் வெளியேறினர் மாயாவின் குழு. ஒரு தண்ணீர் பாட்டிலை திறந்தபடி மாயா, "who the hell invited the referee? this is atrocious." கடிந்துகொட்டினாள். சரியாக referee முடிவுகளை எடுக்காமல் விட்டார். எதிர் குழுவுக்கு சாதகமாக பணியாற்றினார்.

தொடர்ந்தாள் மாயா தன் தோழிகளிடம், "ராதா, you play right midfielder. shilpa, you become the centre defender. this opposition is playing rough and breaking all the rules. referee எதுக்கு தான் அங்க சும்மா நிக்குதோ தெரியல. By right, we should never play aggressive but we have no choice now. let's go all out!" என்றாள் ஆக்ரோஷமாக.

மறுபடியும் விளையாட தொடங்கியது மாயாவின் குழு. எதிர் குழு வேண்டுமென்றே மாயாவின் குழு உறுப்பினர்களை தள்ளிவிட்டனர். எதிர் குழுவில் ஒருத்தி வேண்டுமென்றே வேகமாகப் பந்தை உதைத்தாள். பந்து மாயா குழு கோல்கிப்பர் முகத்தில் பட்டது. முகத்தில் ரத்தம் வடிய, அவள் வெளியேற்றப்பட்டாள். striker positionல் விளையாடி கொண்டிருந்த மாயா கோல்கிப்பர் இடத்திற்கு வந்து விளையாட தொடங்கினாள். ஆட்டம் 2-1 என்ற நிலையில் முடிந்தது. மாயாவின் குழு தோற்றது.

திடலில் விளையாடிய எதிர் குழு மாயாவின் குழு பக்கமாய் வந்து, "சின்ன பொண்ணுங்க எல்லாம் விளையாட வந்துட்டாங்க..." என்று நக்கலுடன் சிரித்தனர்.

கோபம் அடைந்த ஷில்பா, "ஹாலோ, காட்டுமிராண்டி மாதிரி விளையாடுறவங்க நல்ல பொண்ணுங்கள பத்தி பேசகூடாது." என்ற பதிலை வீசினாள். ஷில்பாவுக்கும் எதிர் அணிக்கும் வாக்குவாதம் எரிமலையாய் வெடித்தது. ஒரு கட்டத்தில் ஷில்பாவை தள்ளிவிட்டாள் எதிர் அணி தலைவி. பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களின் சண்டையை தடுக்க முயன்றனர். அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த சந்தோஷும் அவன் தோழனும் ஆச்சிரியத்தில் உரைந்துபோனார்கள்.

மாயா, "ஷில்பா, stop it. விடு விடு! you are making a scene out of nothing." சாந்தப்படுத்தினாள்.

ஷில்பா, " நீ தானே அவங்க aggressiveஆ விளையாடுறங்கன்னு சொன்னே. they started the fight not me." சீறினாள்.

"இல்ல ஷில்பா. listen. அது விளையாடும்போது நம்ம வெறிய காட்டனும். ஆனா, முடிஞ்ச பிறகு, விட்டுடனும். cool down ஷில்பா!" மாயா அமைதியாய் ஆறுதலாய் சொன்னதை பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ்.

அருகில் வந்த சந்தோஷ், " girls, நீங்க ரொம்ப நல்லா விளையாடினீங்க. very talented team. அவங்க செஞ்ச தப்பு தான். நீங்க போய் organiserகிட்ட ஒரு complain report கொடுங்க. they might help you." என்றான்.

"ஒரு மண்ணும் வேணாம். i am leaving this place!" ஷில்பா கோபத்துடன் கிளம்ப, அவளை தொடர்ந்து மற்ற தோழிகளும் சென்றனர்.

"hey girls, award ceremony இருக்கு. நம்ம participation certificates வாங்கனும். கொஞ்சம் வேட் பண்ணுங்க." அவர்களை தடுத்தாள் மாயா.

"நீயே வேட் பண்ணி வாங்கிட்டு வா!" பைகளை தூக்கி கொண்டு நடையைக் கட்டினர். சலிப்புடன் மாயா உட்கார்ந்து தனது காலணிகளை மாற்றினாள். சந்தோஷ் அவளிடம் பேச்சு கொடுத்தான். அவளது குழு திறமையை பற்றி பாராட்டு மழை பொழிந்தான். சந்தோஷ், ரவி, மாயா ஆகிய மூவரும் ரொம்ப நேரம் காற்பந்து பற்றி பேசினர், அவர்களது வேலையை பற்றி பேசினர். அந்த கொஞ்ச நேரத்திலேயே நண்பர்கள் ஆகினர்.

கோக் வாங்க சென்றனர் சந்தோஷும் ரவியும். coca cola vending machine அருகே நின்று கொண்டிருந்தான் சந்தோஷ்.

அந்த அழகிய காட்சியை பார்த்தபிறகு, அவனுக்குள் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பிறந்தது போல் இருந்தது.

4 வயது குட்டிபொண்ணு மாயாவிடம் சென்று ஒரு சின்ன பந்துடன் விளையாடி கொண்டிருந்தது. அவளிடம் பந்தை போட்டு விளையாடிய அந்த அழகிய காட்சி அவனுக்குள் என்னமோ ஒரு உணர்வை ஏற்படுத்தியது. மாயா அந்த சிறு குழந்தையை தூக்கி கொஞ்சுவது அவளின் கன்னங்களில் முத்தம் வைத்ததும் அவனை என்னமோ செய்தது. தூரத்தில் நின்று இதனை கவனித்த அவனுக்குள் ஒரு அழகிய மின்னல் வெட்டியது.

அதே சமயம், வானத்திலும் மின்னல் இடி.மழை பெய்ய தொடங்கியது. இயற்கையாய் வருவது காதல்! சந்தோஷுக்கு இயற்கையோடு வந்தது காதல். அந்த மழை சாரலும், அந்த குளிர் காற்றும் அவனை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றது.

அன்று இரவு முழுவதும், மாயா கம்பீரமாய் ஏற்பாட்டாளரிடம் பேசிய பேச்சு, ஆக்ரோஷமாய் விளையாடிய விளையாட்டு, திறமையை வெளிபடுத்திய விதம், தோழிகளுக்கு ஆதரவாய் பேசிய முறை, கொஞ்ச நேரத்திலேயே நண்பராய் பழகிய விதம், குழந்தையோடு கொஞ்சிய குணம்- அனைத்தும் அவனது மனத்திரையில் ஆயிரம் முறை ஒளிப்பரப்பாகியது.

இது காதலா? வேற என்ன? சும்மா ஒரு நாளில் பார்த்தவுடன் வந்துவிடுமா காதல்? இல்ல இது சும்மா ஒரு attractionஆ என்று தெரியாமல் குழம்பினான் சந்தோஷ்.

இரவு மணி 1145.

தோழனுக்கு ஃபோன் செய்தான்.

"மச்சான், i think i like maya." ஹாலோ கூட சொல்லாமல் சந்தோஷ் கூறிய வார்த்தைகளை கேட்ட ரவி தூக்க கலக்கத்திலிருந்து விழித்து கொண்டான்.

"மச்சான், என்ன சொல்ற?" மறுபடியும் கேட்டான் ரவி.

"தெரியலடா, ஒரு மாதிரியாவே இருக்கு. அவ நினைப்பாவே இருக்கு." சந்தோஷ் பாவமாய் அமைதியான குரலில் சொல்ல,

"மச்சான், பொண்ணுங்க விஷயத்துல ஒரு முடிவு பண்ணறதுக்கு முன்னாடி 3 கேள்விகள கேட்கனும். number 1 அவளுக்கு கல்யாணம் ஆச்சா? ஏனா, இப்ப உள்ள பொண்ணுங்க ரொம்ப health conscious. கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்க இருந்தாலும் ரொம்ப fit and trimஆ இருப்பாங்க. number 2 அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா? number 3 அவள் வேற யாராச்சயும் காதலிக்குறாளா? இந்த கேள்விகளுக்கு இல்லன்னு பதில் வந்தா, மச்சான் உனக்கு jackpot!!!" இரவு 12 மணிக்கு வாழ்க்கை பாடம் நடத்திகொண்டிருந்தான் ரவி.

குழப்பத்தில் இருந்த சந்தோஷ் ஒரு ஐடியா தோன்றியது, "இத கண்டுபிடிக்குறது ரொம்ப simple. facebook எதுக்கு இருக்கு?" என்றவன் உடனே ஃபோன்னை கட் செய்தான்.

மாயா என்ற பெயரில் பல்லாயிரம் profileகள் இருந்தன. silent tigers football team என்று டைப் செய்து பார்த்தான். அப்படி ஒரு பக்கம் இருந்தது. வெற்றி! வெற்றி!

அவளின் accountயை கண்டுபிடித்தான். ஆனால் என்ன பயன்? மாயா தனது profileலை private settingல் வைத்திருந்தாள். உடனே ஒரு friend request அனுப்பினான்.

வைதேகி காத்திருந்தாள் விஜய்காந்த் போல் சந்தோஷ் காத்திருந்தான் மாயாவின் பதிலுக்காக....

(பகுதி 3)

9 comments:

Anonymous said...

Hi Gayu,

Thanks for the message. =))

Anonymous said...

//பொண்ணுங்க விஷயத்துல ஒரு முடிவு பண்ணறதுக்கு முன்னாடி 3 கேள்விகள கேட்கனும்.//
Good!

//"இத கண்டுபிடிக்குறது ரொம்ப simple. facebook எதுக்கு இருக்கு?"//
I see =))

vijayroks said...

//இயற்கையாய் வருவது காதல்! சந்தோஷுக்கு இயற்கையோடு வந்தது காதல். //

semma semmaa lines....

story going in nice way...can't wait for the next part...

FunScribbler said...

@அனாமிகா:

hope you're feeling better now:)

//I see =))//

ஜெய் ஆஞ்நேயா!

@விஜய்:

thanks boss!

//story going in nice way...can't wait for the next part..//

ரொம்ப நன்றி தலிவா:)) எனக்கே இந்த பகுதி அவ்வளவு திருப்தியாய் இல்லாதது போல் உணர்ந்தேன். ஏன் என்று தெரியவில்லை. ஆனா, உங்க ஆதரவை பார்த்தபிறகு, சந்தோஷமா இருக்கு:)) thanks:)

ANaND said...

ஹாய் ....

இவங்க ரெண்டுபேரும் மேரேஜ் பண்ணிடங்கனு SJ. SURYA சொன்ன மாதிரி சொல்லிட்டிங்க

(குஷி படத்துல சொன்னாரே அத சொன்னேங்க )

இனி இதுல என்னா ட்விஸ்ட் வைக்கபோரிங்கனு காத்துகிட்டு இருகன்ங்க

FunScribbler said...

@ஆனந்த்

//இனி இதுல என்னா ட்விஸ்ட் வைக்கபோரிங்கனு காத்துகிட்டு இருகன்ங்க//

நான் எழுதுற கதைகளில் உங்களுக்கு ட்விஸ்ட் வேணுமா? ஏங்க, உங்களுக்கு இப்படி ஒரு பேராசை!:))

Anonymous said...

யா யா. நான் ஓக்கே. அப்புறம் ஜெய் ஆஞ்சநேயால ஏதோ இருக்குது. கதை நல்லாத்தான் இருக்கு. உங்க நகைச்சுவை மிஸ்ஸிங். மத்த படி, நல்ல ப்லோ ஆக வந்திருக்கு.

FunScribbler said...

@அனாமிகா

//உங்க நகைச்சுவை மிஸ்ஸிங்.//

அது லீவுல போயிட்டுங்க!!:)))

எவனோ ஒருவன் said...

Very interesting!!!!

தொடர்கதையை முழுதா படிக்கிற எனக்கு அடுத்த பகுதியை எப்ப வாசிப்போம்ன்னு ஆவல் வரும் போது ஒவ்வொரு பகுதியை வெயிட் பண்ணி படிச்சவங்க எவ்ளோ ஆவலா இருந்து இருப்பாங்களோ!

////இயற்கையாய் வருவது காதல்! சந்தோஷுக்கு இயற்கையோடு வந்தது காதல்.//// Nice :-)