Jun 18, 2011

அப்பரம், இன்னிக்கு என்ன plan?-3

பகுதி 1
பகுதி 2

அலுவலகத்தில் சந்தோஷ் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த ரவி, "என்ன தம்பி, இங்க ஜெஸ்சி ஜெஸ்சின்னு சொல்லுதா?" என்று கிண்டல் செய்தான் சந்தோஷின் நெஞ்சில் அடித்து.

"அட போடா! காலைலேந்து சாப்பிடாம வயிறு பசி பசிங்குது டா." என்றான் பசி மயக்கத்துடன் சந்தோஷ். இருவரும் நடையை கட்டினர் பக்கத்து தெரு காபி ஷாப்பிற்கு.

இரண்டு cappuccino குவளையை மேசையில் வைத்தான் சர்வர். அதை குடித்தபடி ரவி, "இங்க பாருடா மச்சான். don't worry. உனக்கு கண்டிப்பா success தான். விதி பச்சை கொடி காட்டிடும்."

சந்தோஷ், "எத வச்சு சொல்ற?"

ரவி," விண்ணை தாண்டி வருவாயா படத்துல காலங்காத்தால திரிஷா தெருவுல நடந்து வந்ததுனால சிம்புவுக்கு பாத்தவுடனே லவ் வந்துடுச்சு. திரிஷாவுக்கு பதில் அன்னிக்கு பால் பாக்கெட் போடுற ஆயா வந்து இருந்துச்சுன்னா, கதையே மாறியிருக்கும் மச்சான்!" காபியை குடித்தபடி சொன்னான்.

சிரித்தான் சந்தோஷ்.

"hangover??" என்றான் சந்தோஷ்.

"இல்ல டா, விண்ணை தாண்டி வருவாயா?" பதில் அளித்தான் ரவி.

"அது இல்ல... நேத்திக்கு தண்ணி அடிச்சீயா? அதான் hangoverல உலறிகிட்டு இருக்கீயா?" சிரிப்பை அடக்க முடியாமல் சந்தோஷ்.

"ஹாலோ! அதலாம் ஒன்னும் இல்ல. listen to me. திரிஷா correct timeக்கு வந்தது தான் விதி! அது தான் உன் வாழ்க்கையிலும் நடந்து இருக்கு. எத்தனையோ போட்டிக்கு போய் இருக்கோம். ஏன் போன போட்டியில மட்டும் அவள பாக்கனும். உனக்கு புடிச்சு போகனும்? இது தான் டா விதி!" விளக்கினான் ரவி.

அலுவலகம் அடைந்ததும் சந்தோஷின் கேபினுக்குள் சென்றார்கள் இருவரும். facebookல் புது notification வந்து இருந்தது.

"ரவி!!!!!! அவ accept பண்ணிட்டா டா!" என்று சந்தோஷ் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்தான். அவளுடைய profileயையும் wall postகளையும் அலசி ஆராய்ந்தனர் தேவையான அந்த 3 கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க. பதில்களும் சந்தோஷுக்கு சாதகமாக அமைந்தன.

"இப்ப என்ன டா பண்றது? அவகிட்ட ஐ ல்வ் யூ சொல்லிட வா!" ஆனந்தத்தில் மிதந்தான் சந்தோஷ்.

சந்தோஷின் தோளில் கை வைத்த ரவி, "மச்சான், straw இல்லாத ஊரில் juice குடிக்க கூடாது."

முழித்தான் சந்தோஷ்.

"அந்த பொண்ணு single and available. அது மட்டும் தான் தெரியும். அத மட்டும் தெரிஞ்சுகிட்டு you cannot progress on the love track." புரிய வைத்தான் ரவி.

"அப்பரம் எப்படி டா?"

தொடர்ந்து விளக்கினான் ரவி. அவளை பற்றி மேலும் தெரிந்து கொண்டு அவளின் நம்பிக்கையை பெற்ற பிறகு தான் அவன் மனதில் இருப்பதை சொல்ல வேண்டும் என்றான். ரவி சொன்னதில் உள்ள நியாயம் புரிந்தது. மதியம் 12 மணி ஆனது. வேலைகளை வேண்டா வெறுப்பாக செய்து கொண்டிருந்தான். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவளின் profileயை பார்த்தான். இவ்வாறு செய்து கொண்டு இருக்கும் வேளையில் ஒரு புது chat window open ஆனது- மாயாவின் chat box அது.

மாயா: ஹாய் சந்தோஷ்! how are you?

என்று எழுதியதும் அவனுக்கு விண்ணை தொட்ட பரவசம் ஏற்பட்டது.

சந்தோஷ்: ஹாய். எப்படி இருக்கீங்க?

மாயா: how is your day?

சந்தோஷ்: as usual boring.

மாயா: :)))))

சந்தோஷ்: உங்களுக்கு?

மாயா: same here. anyway cut the 'வாங்க போங்க' formality:)))

சந்தோஷ்: :))) அப்பரம்... என்னிக்கு football training உனக்கு?

மாயா: இந்த sunday.... வறீங்களா?

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இனிய சிலிர்ப்பாய் அவனை வருடியது.
கொஞ்ச நேரம் அவளது கேள்வியையே ரொம்ப நேரம் பார்த்து கொண்டிருந்தான்.

மாயா: சந்தோஷ், are you there?

சந்தோஷ்: sorry sorry, was busy.

மாயா: hey sorry. ஏன் நீங்க busyயா இருக்கீங்கன்னு சொல்லலே? நான் உங்கள disturb பண்ணியிருக்க மாட்டேன். sorry. you carry on with your work. bye. take care.

அவள் தனது chat boxயை மூடிவிட்டு offline சென்றாள். தான் தவறுதலாக 'busy' என்று சொல்லி பேசி கொண்டிருந்ததை தானே கெடுத்துவிட்டேனே என்று வருத்தத்துடன் நெற்றியில் அடித்து கொண்டான். ரவியிடம் நடந்ததை சொல்லி புலம்பினான்.

ரவி, "hahahaha யானைக்கும் அடி சறுக்கும். ஷங்கருக்கும் படம் தோற்கும்"

சந்தோஷ், "அட போடா, நானே கவலையா இருக்கேன். நீ வேற, காமெடி பண்ணிகிட்டு, " முகம் வாடி இருந்தது.

ரவி, "ஏன் டா கெட்ட விஷயத்த பத்தி நினைக்குற. நல்லத பத்தி யோசிக்கவே மாட்டீயா? she has asked you to join in her training session."

சந்தோஷ் மறுபடியும் நம்பிக்கையை பிறந்ததுபோல் உணர்ந்தான். தொடர்ந்தான் ரவி, "இங்க பாரு, facebook chatலேந்து அடுத்தது ஃபோன் chatக்கு promotion வாங்கனும்."

சந்தோஷ் புருவங்களை சுருக்கி, "எப்படி?"

"so simple. அவளுக்கு ஒரு facebook message அனுப்பு. உன் ஃபோன் நம்பர கொடுத்து training session பத்தி ஸ் எம் ஸ் அனுப்புங்க. ஏனா, நான் அவ்வளவா facebook பக்கம் போறது இல்லனு சொல்லு," ரவி சந்தோஷுக்கு ஐடியாக்களை அள்ளிவீசினான்.

"ரவி, எப்படி மச்சான்? உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது. you are great!" கட்டிபிடிக்காத குறையாய் சந்தோஷ். சந்தோஷும் உடனே ரவி சொன்னதை செய்தான். கொஞ்ச நேரத்தில் சந்தோஷுக்கு ஒரு புதிய குறுந்தகவல் வந்தது.

குறுந்தகவல்- training sessions this sunday 9-11am at sunshine stadium. - maya

இப்படி ஒரே நாளில், மாயாவைப் பற்றி facebookல் தெரிந்து கொண்டு, அவளிடம் பேசி, அவளின் ஃபோன் நம்பரை வாங்கிவிட்டோம் என பெருமிதத்தில் பெருமையாய் நின்றான் சந்தோஷ்.

சந்தோஷ், "எனக்கு ஒரு doubt. இப்படி உடனுக்குடன் அவளும் message அனுப்புறாளே? ஒரு வேளை அவளுக்கும் என் மேல லவ் இருக்குமோ?" என்று ரவியை பார்த்து கேட்டான்.

ரவி, "ஆமா டா, உனக்கு லவ் வந்தா, உலகத்தில இருக்குற எல்லாருமே லவ் பண்றாங்கன்னு சொல்வீயே. இத ஔவை பாட்டி கேட்டாங்கன்னா எவ்வளவு feel பண்ணுவாங்க தெரியுமா?

சனிக்கிழமை இரவு 9 மணி ஆனது. சந்தோஷுக்கு தூக்கம் வரவில்லை. மறு நாள் காலையில் அவளை சந்திக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தான். அவள் நம்பர் அவனிடம் இருந்தாலும் அவன் அதை வைத்து எதையும் செய்யவில்லை. காதலில் பொறுமை ரொம்ப தேவை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்தது அவனுக்கு. படுக்கையில் படுத்தவாறு அவளின் நம்பரை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

ஒரு குறுந்தகவல் வந்தது- sorry guys, tmr's training session cancelled. - maya.

(பகுதி 4)

13 comments:

Anonymous said...

Let me read it first. he he

Anonymous said...

//"so simple. அவளுக்கு ஒரு facebook message அனுப்பு. உன் ஃபோன் நம்பர கொடுத்து training session பத்தி ஸ் எம் ஸ் அனுப்புங்க. ஏனா, நான் அவ்வளவா facebook பக்கம் போறது இல்லனு சொல்லு," ரவி சந்தோஷுக்கு ஐடியாக்களை அள்ளிவீசினான்.
//

Is this your idea. ?

Anonymous said...

//
ஒரு குறுந்தகவல் வந்தது- sorry guys, tmr's training session cancelled. - maya.
//
அடிப் பாவி. இதெல்லாம் ஓவர். நான் சந்தோசமான மூட்ல இருந்தால் இப்படியா கெடுப்பே. சை. ரொம்ப பீலிங்க்ஸாச்சு. நான் ஆஞ்சநேயர் கிளப்பில இருந்து விலகிக்கிறேன்.

Niroo said...

மரியாதையா storya continue pannu

FunScribbler said...

@அனாமிகா:

நான் யாருக்கும் எந்த ஐடியாவும் கொடுத்தது இல்ல. ஜெய் ஆஞ்ஜநேயா!:))

கதையில டிவிஸ்ட் இல்லேன்னா திட்டுறாங்க. இருந்தா, நீங்க கவலைப்படுறீங்க!! :))) ஆஞ்சநேய கிளப்புல நம்ம ரெண்டு பேர் தான் இருந்தோம். நீங்க கிளம்பிட்டீங்கன்னா, அப்ப நான் ஒன் மேன் ஷோ வா நடத்தறது???

FunScribbler said...

@niroo:

சின்ன புள்ளைய மிரட்டாதீங்க, boss!

ANaND said...

என்னா கேன்செலா ...?

டமால் ........

என்னா சத்தம்னு பாக்குறிங்களா

வெடிச்சது என் இதயம்ங்க

பின்ன என்னங்க ஒரு மனுஷன் எப்படா பொழுது விடயும்னு காத்துட்டு இருக்கும்போது கேன்சல்னு சொன்னா வெடிக்காத பின்னே

Anonymous said...

@ ANaND,

//பின்ன என்னங்க ஒரு மனுஷன் எப்படா பொழுது விடயும்னு காத்துட்டு இருக்கும்போது கேன்சல்னு சொன்னா வெடிக்காத பின்னே//
ha ha. Same blood.

Venkat said...

ஒரே ஒரு member- a வெச்சு club நடத்திகிட்டு இருதிருகீங்க, பெரிய ஆளுங்க நீங்க, இப்ப காதல் கதை எழுதி அவங்களையும் இழந்திடீங்க, பேசாம சங்கத்தை கெலச்சிட்டு நீங்களும்... :))

Venkat said...

அப்பறம் அடுத்த plan என்னிக்கு??

FunScribbler said...

@chinnapulla:

அடுத்த plan கூடியவிரைவில்..:)

கருணாகார்த்திகேயன் said...

nalla irukku ...

cont....

anbudan
karthikeyan

எவனோ ஒருவன் said...

நிறைய ஐடியா தர்றீங்க பேரை மட்டும் வச்சு ஒரு பொண்ணு ஜாதகத்தையே கண்டுபிடிக்க :-) Good :-)

////ஒரு குறுந்தகவல் வந்தது- sorry guys, tmr's training session cancelled. - maya.////

அச்சோ என்ன இப்படி ஆயிடுச்சு. சரி அடுத்த பகுதிக்கு போறேன்....