Apr 12, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 5

series 1 series 2


பகுதி 4

"ஹாய் சுதா. thank u so much. இன்னும் தூங்கலையா?" ரவியின் குரலை ஃபோனில் கேட்டதும் ரொம்ப சந்தோஷம் அடைந்தாள்.

சுதா, "இல்ல படிச்சுகிட்டு இருந்தேன்...."

"அப்பரம்" என்றான் அவன்.

"எத்தன மணிக்கு தூங்குவ, ரவி?"

"depends on the day... but normally 1 am போல ஆகும்."

சில நேரங்களில் குறுந்தகவல் உரையாடல்கள் தான் சுலபம். ஒருத்தரிடம் அதிகம் பேசுவோம் குறுந்தகவலில். ஆனால், நேரிலோ ஃபோனிலோ அதிகம் பேச வராது. அப்படி ஒரு சூழலில் தான் இருவரும் தவித்தனர்.

"நாளைக்கு காலேஜ் இல்லையா?"

"ம்ம்...இருக்கு... சரி ரவி நான் தூங்க போறேன். இன்னொரு நாளைக்கு பேசலாம்..." ஃபோனை வைக்க விருப்பமில்லை அதே சமயம் என்ன பேசுவது என்றும் தெரியவில்லை சுதாவிற்கு.

இரவு நடந்தவற்றை சுதா காலேஜ் வகுப்பில் விஜி, கலா, சசியிடம் சொல்லி கொண்டிருந்தாள்.

"அட பாவி, நீயும் ஒரு ட்ராக்ல போய்கிட்டு இருக்கீயா? ம்ம்...நடத்து நடத்து..." கலா சிரித்தாள். அப்போது வகுப்பிற்குள் ஆசிரியர் வந்தார். நால்வரும் மற்ற மாணவர்களும் சரியான இடத்தில் உட்காராமல் கண்டபடி வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து கொதித்து எழுந்தார்.

"what nonsense is this? no discipline. no manners." என்று கத்தி கொண்டே உள்ளே வந்தார்.

முணுமுணுத்து கொண்டே கலா, "காலையிலே பொண்டாட்டி கூட சண்டை போட்டு இருக்காரு."

விஜி, "எப்படி உனக்கு தெரியுமா?" என்றாள் சத்தமில்லாமல். மாணவர்கள் அவரின் கத்தலுக்கு பயந்து விரைந்து தங்களது இடங்களில் உட்கார்ந்து கொண்டனர்.

கலா, "அங்க போட முடியாத சத்தத்த இங்க வந்து போடும் போதே தெரியுல?" என்றாள்.

பாடத்தை நடத்தாமல் இவர்கள் உருபுடாமல் நாட்டின் முன்னேற்றத்தையும் தடுக்க வந்திருக்கும் 'தகறாருகள்' என விலாசி தள்ளிவிட்டார். தங்க விலை ஏறியதற்கும் இவர்கள் பொறுப்பில்லாமல் கண்டபடி உட்கார்ந்ததே காரணம் என்பதுபோல் முடித்தார் தனது 'பூஜையை'. காதில் இரத்தம் வராத குறையாய் வகுப்பை விட்டு வெளியே சென்றனர் மாணவர்கள் காலேஜ் மணி ஒலித்தபிறகு.

காலேஜ் cafeteriaவில் நால்வரும் அமர்ந்தனர். சசி சற்று சோகமாக இருந்தாள். சுதா, "ஓய் சசி, what happened? ஏன் இந்த சோகம்ஸ்?"

சசி, "இல்ல சார் சொன்னது சரி தான். நம்ம பொறுப்பில்லாம இருக்கோம்."

கலா 'விஜய்காந்தின்' அமைதியான குரலில், "எத்தன ஏழை பசங்க செருப்பில்லாம இருக்காங்களே அத பத்தி கவலப்பட்டு இருக்கீயா?" என்றது விஜியும் சுதாவும் சிரித்தனர்.

சசி, " கலா, stop it. நம்ம ஏற்கனவே ஒரு examல நல்லா பண்ணல்ல. இன்னும் 6 மாசத்துல காலேஜ் முடியும். அதுக்கு அப்பரம் graduation, வேலை...." என்று முடிப்பதற்குள் சுதா,

"அதுக்கு ஏன் இப்பவே கவலப்படுறே. நீ தான் நல்ல படிப்பீயா. கண்டிப்பா பெரிய இடத்துல வேலை கிடைக்கும். உன் வாழ்க்கை settled. இந்த கலா தான் கொஞ்சம் கவலப்படனும் ஆனா அவளே ஜாலியா இருக்கா." என்று கலாவை கலாய்த்தாள்.

மேசையில் இருந்த விஜியின் கோக் bottleயை எடுத்து சுதா மேல் விளையாட்டாய் எறிவதுபோல் பாசாங்கு செய்தாள். இருந்தாலும் சசி கவலையாக இருந்தால், இவர்கள் செய்த எந்த காமெடியையும் பொருட்படுத்தாமல். விஜி ,சுதாவையும் கலாவையும் சற்று அமைதியாக இருக்க சொன்னாள்.

விஜி, "hey girls, come on. sasi isn't liking this."

கலா, விஜியை பார்த்து, "டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர், என் சசியை காப்பாத்துங்க டாக்டர்!!" என்று அழுவதுபோல் நடித்தாள். அதை பார்த்து விஜியும் சுதாவும் புன்னகையித்தனர். அப்போது மேசையில் இருந்த சசியின் ஃபோன் அலறியது. பேசி கொண்டே இடத்தைவிட்டு தள்ளி போய் பேசினாள்.

கலா, "கவலப்படாதீங்க மச்சிஸ். treatmentக்கு போய் இருக்கா."

கொஞ்ச நேரம் கழித்து, முகம் முழுக்க சந்தோஷத்துடன் மறுபடியும் வந்த சசி, "அப்பரம் girls. வேற என்ன? வெளியே போவோமா?"

மற்ற மூவரும் முழித்துவிட்டு சிரித்தனர்.

சுதா, "எங்களுக்கு இந்த உலகத்துல தெரிஞ்ச ரெண்டே இடம். வீடு, காலேஜ்."

கலா, "அப்பரம் சசி, சித்தார்த் மச்சான் என்ன சொல்லுறாரு?"

சசி, "உனக்கு எப்படி தெரியும்?"

கலா, "இந்த மாதிரி விஷயத்துல நாங்க படிக்காமலேயே phd வாங்கியிருக்கோம். சொல்லு என்ன சொன்னுச்சு?"

சசி, "சொன்னாரு..." என்று திருத்தி கூறும்படி முறைத்தாள்.

கலா, "அடி பாவி! இது உனக்கே too muchஆ தெரியுல."

விஜி, "சரி விடு கலா. சின்ன சிறுசுங்க அப்படி தான் இருக்குங்க.." என்று கொதிக்கிற எண்ணெயில் அப்பளம் பொரித்தாள்.

சசி, "we are meeting this weekend."

சுதா, "dating again?"

சசி, "it's just an outing."

கலா, "குடும்பத்தோட போங்களேன்." இதை கேட்டதும் கண்கள் பயத்தால் விரிந்தன சசிக்கு.

சிரித்து கொண்டே கலா, "முடியாதுல. கண்டிப்பா அதுக்கு பெயர் dating தான்."

*************

விஜி வீட்டில் இருந்தாள் டிவி பார்த்து கொண்டு. திடீரென்று அறையில் இருந்த விஜியின் பாட்டி சத்தம்போட்டு கத்தினார். அறைக்கு விரைந்தனர். அங்கு பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுந்து கிடந்தார்.

(பகுதி 6)

6 comments:

ANaND said...

பொண்ணுங்களோட உலகம் எப்படி இருக்கும்னு புட்டு புட்டு வச்சிடீங்க ......

கலா பயங்கரமா கலாய்கிறாங்க ....


Really interesting....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Part 6 indha varusame varumaa illa 2013 thaanaa?...;) Super flow... write the next part soon

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

-

FunScribbler said...

//Part 6 indha varusame varumaa illa 2013 thaanaa?//
அப்பாவி தங்கமணி: ஹாஹா... வரும் வரும்!! நானும் தினமும் ஒரு பகுதி எழுதனும்னு தான் இருக்கேன். ஆனா, வேலை வந்து வேலாயுதம் மாதிரி குத்துதே!!!:(((

Bharathiraja said...

Can u provide correct link for daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 4 3 2 1"
because if i click the link 4 its going to so series 2

FunScribbler said...

@bharatiraja: hi boss! here is the link u asked for

http://enpoems.blogspot.com/2009/12/1.html