Jun 18, 2012

bye bye லவ்.


''காதல தேடிகிட்டு போக முடியாது, அதுவா நடக்கனும். நம்மள போட்டு தாக்கனும். நம்மள போட்டு தலகீழா திருப்பனும்.

இதான் ஜெசி. அவ்வளவு அழகு, classy, well read. அவகிட்ட ஒரு style இருக்கு. and sexy too"

என்று தனது iphoneல் இருக்கும் youtube வீடியோ பார்த்து கொண்டிருந்தேன். இந்த trailer என்னுடைய favourite listல் எப்போதுமே இருக்கும்.

அதுக்கு காரணம் இருக்கு.

கடற்கரையில் நான் இந்த வீடியோவை பார்த்து கொண்டிருந்தேன்.

"விமல் என்னடா, இங்க தனியா உட்கார்ந்து இருக்க?" என்று சொல்லிகொண்டே என் அருகே உட்கார்ந்தாள் என் 'ஜெசி'

"ஒன்னுமில்ல நிர்மலா." புன்னகையித்தேன். தொடர்ந்தேன் நான்,
"so...ரொம்ப சந்தோஷமா இருக்கே right? friends... family.. birthday surprise.. celebration...." கடலை நோக்கி என் பார்வை இருந்தது.

அவளுக்கு இன்னொரு surpriseம் இருந்தது- என் காதலை இன்று அவளிடம் சொல்லிவிட என்று இருந்தேன்.

ஆனால் பயம்.

கடற்கரையின் மீது இருந்த எனது பார்வையை சற்று அவள் முகம் பக்கம் திருப்பி அவளை பார்த்து சொல்லிவிட வேண்டும் என்றபோது அவளது கண்களை பார்த்தேன். வார்த்தை வரவில்லை. மறுபடியும் கடற்கரையைப் பார்த்தேன்.

"of course da. i am so happy. i didn't know that my 25th birthday would be so awesome." என்று கூறிவிட்டு புன்னகையித்தபடி நிர்மலா,

"but one thing...." என இழுத்தாள். இவ்வளவு பெரிய சந்தோஷத்தில் என்ன குறை வந்துவிட்டது என்று மனம் ஒரு வினாடி பதறிபோய் அவளிடம் திரும்பி,

"என்ன ஆச்சு" என்றேன். அதற்கு நிர்மலா,

"நீ தான்."

"எனக்கு என்ன?"

"you are not yourself today. something is bothering you. but என்கிட்ட சொல்ல மாட்டேங்குற."

இது தான் நிர்மலாகிட்ட எனக்கு பிடிச்சது. ஒருத்தர் முகத்தை வைத்தே அவர்களின் மூட் என்னவென்று கண்டுபிடித்துவிடுவாள். அவ்வளவு அன்பு செலுத்துவாள் எல்லாரிடமும். முக்கியமா அவளது நண்பர்களிடம்.

"ஒன்னுமில்ல...just tired." பெருமூச்சுடன் சொன்னேன்.

 மின்னும் light pink lipstick உதடுகளின் புன்னகையுடன் நிர்மலா, "cheer up da. " என்று சொல்லிவிட்டு என் தலைமுடியில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டாள். நான் அவளை பார்த்தேன். அவள் அவளது கைபேசியை பார்த்து கொண்டிருந்தாள். பின்னாடியிருந்த கடற்கரை பங்களாவிலிருந்து அவள் அம்மா அழைத்தார்,

"வா நிமி! it's getting late. let's start the celebration."

"coming ma. give us another 10 more mintues." என்றுவிட்டு என் பக்கம் திரும்பினாள்.

எல்லா angleகளையும் அவள் angelபோல் தெரிந்தாள்.

"நிமி...." என்று என் வாயை திறந்தேன். ஓடிவந்த நிர்மலாவின் ஆபிஸ் தோழி நிர்மலாவின் கையை இழுத்தாள்,

"வா நிமி....lets play in the water..."

நிர்மலா, "விமல், வரீயா?"
 நான் வரவில்லை என்று தலையை ஆட்டினேன். அவள் சற்று முறைத்தாள்.

அவள், "நான் இன்னும் 10 minutesல திருப்பி வந்துடுவேன். நீ மட்டும் இப்படியே மூட் அவுட்ல இருந்த...." என்று செல்லமாய் மிரட்டிவிட்டு சென்றாள். அவள், தனது ஆபிஸ் தோழிகளுடன் கடலில் விளையாடுவதை ரசித்து கொண்டிருந்தேன். குழந்தை விளையாடுவதுபோல் விளையாடி கொண்டிருந்தாள்.

"she's so cute da" என்றது என் மனசாட்சி. தெளிவாக இருந்த வானம், கருமையாக மாறியது. மழை வருவது போல் இருந்தது. முழுவதாய் நனைந்திருந்த நிர்மலா என் அருகே வந்தாள்.

அவள், "it's so fun to be in the sea." என்றபடி அவளது shawlலை உதறினாள். தொடர்ந்தாள்,

"so இப்ப சாருக்கு, மூட் ஓகே ஆச்சா?" என்றவள் மணலில் உட்கார முற்பட்டபோது, அவளது கையை பிடித்தேன்.

நான், "வேணாம், மண்ணு ஒட்டிக்கும்."

நிர்மலா, "அப்பரம்..சார் மடியில உட்காரலாமா?" என்று சொல்லிவிட்டு சிரித்தாள். வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டு போகும். அவள் வாய்விட்டு சிரித்தால், எனக்குள் என்னெனமோ ஆகும். மேகங்கள் சிவப்பு நிறத்தில் மாறின.

நான், "வா... நம்ம பங்களாகுள்ள போயிடுவோம்." நிர்மலாவின் ஆபிஸ் தோழிகள் வித்தியாசமாக இருந்த சிவப்பு மேகங்களை படம் பிடித்து கொண்டிருந்தனர். நிர்மலா அவர்களை சீக்கிரம் பங்களாகுள்ள வர சொன்னாள். பங்களாவிற்குள் நுழைந்தனர். அங்கு நிர்மலாவின் மற்ற உறவினர்களும் குடும்பத்தாரும் அளவளாவி கொண்டிருந்தனர்.

ஒரு ஜன்னல் ஓரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த எனக்கு, நிர்மலா chocolate milkshake கொண்டு வந்தாள். நான் குடித்தேன். அவள் என்னைப் பார்த்துவிட்டு புன்னகையித்தபடி என் மேல்உதட்டில் படர்ந்த இருந்த chocolate milkshakeயை துடைத்தாள் அவளது விரல்களால்.

அவள் ஒவ்வொரு முறையும் தொடும்போது நான் இறந்து, புதிதாய் பிறந்தேன்.

நிர்மலா என்னைப் பார்த்து, "உன்கிட்ட இத ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன். but பயமாக இருக்கு." எனக்கு ஆச்சிரியம். எனது உணர்வுகளை அவள் பிரதிபலித்தாள். எனக்கு குழப்பமாய் இருந்தது.

நிர்மலா, "என்னை பத்தி என்ன நினைக்குற?"

நான், "you are one gem of a person."

அவள் புன்னகையித்தாள். மறுபடியும் அதே கேள்வியை வேறுவிதமாய் கேட்டாள்.

நிர்மலா, "என்னை பத்தி நீ என்ன நினைக்குற?"

நான், "friendly, jovial, my best buddie...." எனது காதலை சொல்லிவிட வேண்டும் என்பதுபோல் இருந்தது.

நிர்மலா, "விமல்....I..I..." என்றபோது பூலோகமே வெடிக்கும் சத்தம் கேட்டது.

*********************************************************
Year 0227 A.E.

"இருநூறு வருஷங்களுக்கு முன்னாடி உலகம் அழிந்த நாள் 23 dec 2012. அன்று ஒரு பெரிய சிவப்பு நெருப்பு பந்து மேகத்தை உடைச்சுகிட்டு வந்து உலகத்தை அழித்துவிட்டது....."- தொலைக்காட்சி பார்த்துகொண்டிருந்தார் கிஷ்ரே. அவரது குட்டி பையன் பள்ளி முடிந்து வீட்டினுள் நுழைந்தான்.

ஓடி வந்து கிஷ்ரேவை கட்டிபிடித்து கொண்டான், "மா!!!"
பள்ளியில் நடந்து எல்லாவற்றையும் கூறினான். அவனது அம்மா, " உனக்கு ஒரு surprise இருக்கு. go to your room!" என்றதும் அவன் துள்ளி குதித்து ஓடினான். அறை கதவை திறந்து பார்த்தபோது அவனுக்கு ஆச்சிரியம். அவனது படுக்கையில் ஒரு சின்ன பெட்டி. அந்த பெட்டியில் எழுதியிருந்தது -

"this is for you! she's நிமி"

ஒரு நாய்குட்டி தூங்கிகொண்டிருந்தது அப்பெட்டியில்.

8 comments:

gils said...

enaku ending purila :(

FunScribbler said...

gils: புரியாத மாதிரி கதை எழுதினால், பெரிய writerனு அர்த்தம் தானே!!

அப்ப, நானும் writer தான். நானும் writer தான் (நானும் rowdy தான், நானும் rowdy தான்)

ANaND said...

சத்தியமா புரியல தாயீ

Unknown to myself said...

ஒரு தடவைக்கு மூணு தடவையா படிச்சு பார்த்தேன்..ஒரு வேளை கதை புரிஞ்சிடிச்சோனு லைட்டா தோணுச்சு ..ஆனா உண்மையிலே கதை சுத்தமா புரியலை :) Ending different இருக்கணும்னு புகுத்துன மாதிரி feeling!

ஆனாலும் ரெண்டு வரி ரொம்ப பிடிச்சது.

//எல்லா angleகளையும் அவள் angelபோல் தெரிந்தாள்.

அவள் ஒவ்வொரு முறையும் தொடும்போது நான் இறந்து, புதிதாய் பிறந்தேன்//

அதுலாம் சரி Dec 21, 2012 ல தானே உலகம் அழியப் போகுதுனு சொன்னாங்க..நாள் நல்லா இல்லைனு ரெண்டு நாள் தள்ளி வைச்சுட்டாங்களா?

vijayroks said...

why why why.... why this tragic ending and what does that nimmy dog part tels in story...


anyway this piece of story resembles a sujatha kind of short stories....good job

FunScribbler said...

anand:அவ்வளவு மோசமாவா இருந்துச்சு??:)))

unknown to myself: மூணு தடவையா? சார், நானே என் கதைய அத்தன தடவ படிச்சதில்லையே! இதுக்காகவே உங்களுக்கு அவார்ட் கொடுக்கனும்!!

dec 23னு நினைச்சு தான் கதைய எழுதினேன்!!

FunScribbler said...

vijayroks: it means that nirmala was now re-born as a puppy. and the small boy is vimal:)))

sujatha stories? oh man, thanks for the compliment! it's huge compliment. thank you thank you!

ANaND said...

ஒ .... இந்த ஜென்மத்துல சேராதவங்க பல ஜென்மங்களுக்கு பிறகு சேர்ந்துட்டாங்க...


சரியா புரிஞ்சிகிட்டேனா ....?