Jun 12, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 8


பகுதி 7


விஜியின் அம்மா அனுப்பிய மாப்பிள்ளை படத்தை பார்த்தனர் அனைவரும். கலா கத்தினாள் அதிர்ச்சியால். பயந்துபோய் ஓடி வந்த கலாவின் அம்மா, அறை கதவை திறந்துகொண்டு பதறிபோய் நின்றார், "என்ன கலா ஆச்சு?"

இவ்வாறு reaction கொடுப்பாள் என்று தெரியாத மற்ற மூவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தனர். கலா, "ஓ...ஒன்னுமில்ல மா...சும்மா தான் கத்தினேன்." 

கலாவின் அம்மா, "அடி பாவி! நான் பயந்து போயிட்டேன். கீழே விழுந்துட்டேனு நினைச்சேன்." என்று சொல்லிகொண்டே அறையை விட்டு வெளியே சென்றார்.

கலா, "oh my godட் விஜி!! இது ஆவறத்துக்கு இல்ல!!! என்ன மச்சி, உன் வீட்டுல அநியாயம் பண்றாங்க. பார்த்த எனக்கே இப்படினா.....ஐயோ விஜி! உன்னைய நினைச்சா எனக்கு கவலையா இருக்கு! இந்த முகம் தெய்வீக முகமா??? " என மாப்பிள்ளை படத்தை பார்த்து கொதித்து எழுந்தாள். அதை கேட்டதும் விஜிக்கு இன்னும் சோகம் அதிகரிக்க, கண்கள் குளமாகின.

சசி சமாதானப்படுத்துகிறேன் என்று, " விஜி, என்னிக்கு இருந்தாலும், you wanna settle down right? so..why not? and looks வச்சு ஒருத்தர பத்தி தப்பா பேசகூடாது." என்று வெறுப்பேத்தினாள் கலாவை.  மேலும் தொடர்ந்தாள், "நம்ம யாரும் இங்க ஒன்னும் ashiwarya அழகு இல்ல. so.... ஒருத்தர இப்படிலாம் கிண்டல் பண்ணகூடாது டி."

"ashiwaryaயாவே இப்ப அழகு இல்ல..." என நகைச்சுவை பேசுவதாக சொல்லி அவள் மட்டும் சிரித்தாள். மற்ற யாருக்கும் சிரிப்பு வரவில்லை. same side கோல் போடுவதுபோல் பேசினாள் சசி.

கலா, "ஹாலோ ஹாலோ...இங்க யாரும் ஹாருக்கானையோ சல்மான் கானையோ கேட்கல. beauty is a subjective term. அதுவும் எங்களுக்கு தெரியும். விஜி விஷயமே வேற." என்று சசியை அடிக்காமல் அடித்து சொன்னாள்.

சுதா, "சரியா சொன்னே கலா. ஏய் லூசு சசி, that's not the issue here. marriage is a huge committment and விஜி வீட்டுல பண்றது ரொம்ப தப்பு. viji is still young.." சசிக்கு புரியும்படி சொன்னாள். சசி அமைதியாக இருந்தாள்.

கலா, "இந்த சித்தார்த் வந்ததுலேந்து நீ ஒரு மார்கமா தான் இருக்க. உனக்கு தனியா ஒரு treatment பார்த்தே ஆகவேண்டும். விஜி பிரச்சனை முடிஞ்சவுடனே உனக்கு தான் அடுத்த ஆபிரேஷன் 'ரெட்' பண்ணியாகனும்." சசியின் தலையில் கொட்டினாள்.

"idiot!" என்றபடி சசி, தலையணையை எடுத்து கலா மீது வீசினாள். ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அனைவரும் திண்டாடியபோது, திடீரென்று விஜி கண்களை துடைத்து கொண்டு,

"ஒகே. i have decided. i am going to say yes."

மற்றவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

விஜி, "முள்ள முள்ளால தான் எடுக்க முடியும்."

கலா, "but பல்ல பல்லால எடுக்க முடியாது!! இந்த பிரச்சனைக்கு முள்ளு strategy எல்லாம் work out ஆகாது மச்சி!"

விஜி, "shhhhhhhhhhhh....." அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி, தனது  ஐடியாவை கொட்டினாள்.

***************************************************************

காலேஜ் கடைசி வகுப்பு முடிந்து அனைவரும் வகுப்பைவிட்டு வெளியேறினர்.

"நேத்திக்கு உன் வீட்டுல yes சொல்லிட்டு எங்களுக்கு sms அனுப்புற வரைக்கும் எங்களுக்கு தூக்கமே வரல...." பையை எடுத்து கொண்டபடி சுதா.

விஜி புது உற்சாகத்துடன், " கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிடாங்களே!!" என சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

சசி, "அடுத்த step என்ன?" என்று விஜியை பார்த்து கேட்டு கொண்டே, நால்வரும் ground floorக்கு செல்லும்போது,

"இங்க தான் அந்த steps வரும். இப்படியே அந்த walkway போட்டுடலாம்" என்று ஒருத்தர் கல்லூரி முதல்வரிடம் பேசி கொண்டு இருந்தார்.

முதல்வர், "ok good. thanks mr siddarth. வேலைய சீக்கிரமா முடிங்க" என்று கூறிவிட்டு சென்றார். நால்வரும் முதல்வருக்கு 'good evening' சொன்னார்கள்.

சித்தார்த்துக்கு சசியை பார்த்தவுடன் அதிர்ச்சி. சசியும் எதிர்பார்க்கவில்லை.
சசி, அன்று நடந்ததை பற்றி பேசாமல், "hey siddarth என்ன இந்த பக்கம்?"

அவனும், "உங்க காலேஜ் building extension பத்தி பேச வந்தேன். எங்க கம்பெனி தான் இந்த contractட்ட எடுத்து இருக்கோம்."

சசி, "hey anyway, this is கலா, சுதா and விஜி." என்று அறிமுகப்படுத்தினாள். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் முழிக்க, கலா

"அப்பரம் சித்தார்த் வாழ்க்கையலாம் எப்படி போகுது?" என்றாள் கொஞ்சம் கிண்டலாய்.

"nice" ஒற்றை வார்த்தையில் பதில்.

"come let's go for some coffee..." என்று சுதா, அவனையும் அழைத்தாள்.

"இல்ல பரவாயில்ல...நீங்க போங்க. i got some work." என்று சொல்லிவிட்டு சசியை பார்த்து ஒரு சின்ன புன்னகையை வீசிவிட்டு சென்றான்.

விஜி, "ஏய் போய் பேச வேண்டியது தானே!! you guys are not in talking terms?" என்று கூறி முடிக்க, கலா

"இப்ப பாரு. சசிக்கு ஒரு ஃபோன் call வரும். carparkகிட்ட வர சொல்வான்..ஐ மின் சொல்வாரு அவரு!" என்று  காலால் கோலம் போட்டு நக்கல் செய்தாள்.

*********************************************************

சசிக்காக காத்திருந்தான் சித்தார்த். அவளை பார்த்ததும், அவனுக்கு கொஞ்சம் சந்தோஷம். அவள் அவனை நோக்கி நடந்து வந்தாள்.

"எப்படி இருக்க?" என்றான்.

"நான் எத்தன தடவ உனக்கு ஃபோன் பண்றது?" என்றாள் சசி.

"சாரி...ஏதோ கோபத்துல..."

சசி எதுவும் பேசாமல் கையை கட்டி கொண்டு கார்பார்க்கில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து கொண்டிருந்தாள்.

"i love you!! no மட்டும் சொல்லிடாத. என்னால தாங்க முடியாது." என்ற கெஞ்சலை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் சசி. சசி அன்று என்ன சொல்ல வந்தாள் என்பதை விலாவரியாக சொல்லி முடித்தாள். கேட்டபிறகு, அவனும் சிரித்தான்,

"ஓ மை காட். இத தான் சொல்ல வந்தீயா? oh how stupid I am..."

சசி, "yes you are!"

சித்தார்த் அவள் அருகே நகர்ந்து சென்று அவள் கையை பிடிக்க முயன்றபோது,

சசி, "ஏய் என்ன பண்ணுற? i don't like all this." என்று விலகி சென்றாள்.

"hey sorry sorry. cool cool...."அவனும் சற்று பயந்துபோய் தள்ளி சென்றான்.

சசி, "friends வேட் பண்ணுறாங்க..."

சித்தார்த், "yes yes sure. carry on. thanks for coming. விஜிக்கு ஏதாச்சும் உதவி வேணும்னா சொல்லு. சேர்ந்து help பண்ணுவோம்." புன்னகையித்தான். சசி நடந்து போனாள். பின்னாடியிலிருந்து ஒரு முறை சித்தார்த், "சசி ஐ லவ் யூ!" என கத்தினான். அவள் தனது வெட்கத்தை மறைத்தாள், மூக்கு கண்ணாடியை சரிசெய்வது போல்.

*****************************************************

காத்திருந்த கலா, "என்ன சசி, முடி கலைஞ்சு இருக்கு. உதடு வீங்கி இருக்கு...என்ன ஒரே ஜல்சாவா?"

சசி, "காலேஜ் compoundல் கன்னி பெண் கொலை-னு நாளைக்கு நியூஸ்ல வரும் பரவாயில்லையா?"

இவ்வாறு பேசி கொண்டே நால்வரும் தெருவில் நடந்து போய் கொண்டிருந்தனர். விஜியின் தெருவை அடைந்ததும், அத்தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒரு சின்ன பையன்

"என்ன அக்கா? இவ்வளவு lateஆ போறீங்க?" என்றான். அவன் சொன்ன பிறகு நால்வரும் வேகமாய் நடந்து விஜியின் வீட்டை அடைந்தனர்.

*தொடரும்*

6 comments:

gils said...

thodarum again!!! this is too much..seekram adutha part pleaseee

ANaND said...

@ கில்ஸ் ...

ஏங்க அவங்களே ஒரு மாசமா சாப்டாம தூங்காம உயிரை குடுத்து இந்த கதையே எழுதிருக்காங்க ..

நீங்க என்னடான படக்குன்னு நெக்ஸ்ட் போஸ்ட் எப்போ னு கேக்குரிங்க

கதைய பத்தி எதாவது நல்லதா நாலு வரி சொல்லுங்க பாஸ்

ANaND said...

"அடுத்த step என்ன?" என்று விஜியை பார்த்து கேட்டு கொண்டே, நால்வரும் ground floorக்கு செல்லும்போது,

"இங்க தான் அந்த steps வரும். இப்படியே அந்த walkway போட்டுடலாம்"


முடிகிற வரியில் ஆரம்பம் ... சில ஆங்கில படங்களில் அப்பறம் மணிரத்தனம் படத்தில் கூட இப்படி முடிஞ்ச சீனில் இருந்து அடுத்த சீன் ஆரம்பிக்கும் .....

கதைக்காக நெறைய home work பண்ணுவிங்க போலிருக்கு.. வாழ்த்துகள் அக்கா ...

அப்பறம் இந்த கதையை இன்னும் 80 போஸ்ட் கொண்டு போகலாம் னு plan பண்ணிருக்கிங்க போலிருக்கு

FunScribbler said...

@anand

//கதைக்காக நெறைய home work பண்ணுவிங்க போலிருக்கு.. வாழ்த்துகள் அக்கா ...//

அட நீங்க வேற!!! ஏதோ மனசுக்கு வந்தத எழுதுகிட்டு இருக்கேன்!

// 80 போஸ்ட் கொண்டு போகலாம் னு//

உடம்பு தாங்காது ஐயா!!!

priyamudanprabu said...

nice

Anonymous said...

thodarum again!!! this is too much..seekram adutha part pleaseee