Jun 19, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-20

இது இந்த seriesன் 20ஆம் போஸ்ட்!!! :))))))

அப்பரம் இன்னிக்கு யாரு புள்ள,அப்படினு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது!

இவர் தான்!! தொலைக்காட்சி தொகுப்பாளர் சந்தோஷ். பட விமர்சனம் செய்துள்ளார் (சில youtube வீடியோக்களை பார்த்துள்ளேன்.) 

இவர் பேசிய வீடியோக்களில் இது தான் செம்ம! 

சிறப்பு அம்சம்- தமிழ் பேசும் விதம். ச்சே....எவ்வளவு அழகா, எவ்வளவு சரளமா பேசுறாரு.

miss you na enna.... அதை பற்றி பேசினார். எனக்கு எதுவுமே கேட்கவில்லை! நான் ரொம்ப பிஸியா...:)))))))))))))))


Jun 18, 2012

bye bye லவ்.


''காதல தேடிகிட்டு போக முடியாது, அதுவா நடக்கனும். நம்மள போட்டு தாக்கனும். நம்மள போட்டு தலகீழா திருப்பனும்.

இதான் ஜெசி. அவ்வளவு அழகு, classy, well read. அவகிட்ட ஒரு style இருக்கு. and sexy too"

என்று தனது iphoneல் இருக்கும் youtube வீடியோ பார்த்து கொண்டிருந்தேன். இந்த trailer என்னுடைய favourite listல் எப்போதுமே இருக்கும்.

அதுக்கு காரணம் இருக்கு.

கடற்கரையில் நான் இந்த வீடியோவை பார்த்து கொண்டிருந்தேன்.

"விமல் என்னடா, இங்க தனியா உட்கார்ந்து இருக்க?" என்று சொல்லிகொண்டே என் அருகே உட்கார்ந்தாள் என் 'ஜெசி'

"ஒன்னுமில்ல நிர்மலா." புன்னகையித்தேன். தொடர்ந்தேன் நான்,
"so...ரொம்ப சந்தோஷமா இருக்கே right? friends... family.. birthday surprise.. celebration...." கடலை நோக்கி என் பார்வை இருந்தது.

அவளுக்கு இன்னொரு surpriseம் இருந்தது- என் காதலை இன்று அவளிடம் சொல்லிவிட என்று இருந்தேன்.

ஆனால் பயம்.

கடற்கரையின் மீது இருந்த எனது பார்வையை சற்று அவள் முகம் பக்கம் திருப்பி அவளை பார்த்து சொல்லிவிட வேண்டும் என்றபோது அவளது கண்களை பார்த்தேன். வார்த்தை வரவில்லை. மறுபடியும் கடற்கரையைப் பார்த்தேன்.

"of course da. i am so happy. i didn't know that my 25th birthday would be so awesome." என்று கூறிவிட்டு புன்னகையித்தபடி நிர்மலா,

"but one thing...." என இழுத்தாள். இவ்வளவு பெரிய சந்தோஷத்தில் என்ன குறை வந்துவிட்டது என்று மனம் ஒரு வினாடி பதறிபோய் அவளிடம் திரும்பி,

"என்ன ஆச்சு" என்றேன். அதற்கு நிர்மலா,

"நீ தான்."

"எனக்கு என்ன?"

"you are not yourself today. something is bothering you. but என்கிட்ட சொல்ல மாட்டேங்குற."

இது தான் நிர்மலாகிட்ட எனக்கு பிடிச்சது. ஒருத்தர் முகத்தை வைத்தே அவர்களின் மூட் என்னவென்று கண்டுபிடித்துவிடுவாள். அவ்வளவு அன்பு செலுத்துவாள் எல்லாரிடமும். முக்கியமா அவளது நண்பர்களிடம்.

"ஒன்னுமில்ல...just tired." பெருமூச்சுடன் சொன்னேன்.

 மின்னும் light pink lipstick உதடுகளின் புன்னகையுடன் நிர்மலா, "cheer up da. " என்று சொல்லிவிட்டு என் தலைமுடியில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டாள். நான் அவளை பார்த்தேன். அவள் அவளது கைபேசியை பார்த்து கொண்டிருந்தாள். பின்னாடியிருந்த கடற்கரை பங்களாவிலிருந்து அவள் அம்மா அழைத்தார்,

"வா நிமி! it's getting late. let's start the celebration."

"coming ma. give us another 10 more mintues." என்றுவிட்டு என் பக்கம் திரும்பினாள்.

எல்லா angleகளையும் அவள் angelபோல் தெரிந்தாள்.

"நிமி...." என்று என் வாயை திறந்தேன். ஓடிவந்த நிர்மலாவின் ஆபிஸ் தோழி நிர்மலாவின் கையை இழுத்தாள்,

"வா நிமி....lets play in the water..."

நிர்மலா, "விமல், வரீயா?"
 நான் வரவில்லை என்று தலையை ஆட்டினேன். அவள் சற்று முறைத்தாள்.

அவள், "நான் இன்னும் 10 minutesல திருப்பி வந்துடுவேன். நீ மட்டும் இப்படியே மூட் அவுட்ல இருந்த...." என்று செல்லமாய் மிரட்டிவிட்டு சென்றாள். அவள், தனது ஆபிஸ் தோழிகளுடன் கடலில் விளையாடுவதை ரசித்து கொண்டிருந்தேன். குழந்தை விளையாடுவதுபோல் விளையாடி கொண்டிருந்தாள்.

"she's so cute da" என்றது என் மனசாட்சி. தெளிவாக இருந்த வானம், கருமையாக மாறியது. மழை வருவது போல் இருந்தது. முழுவதாய் நனைந்திருந்த நிர்மலா என் அருகே வந்தாள்.

அவள், "it's so fun to be in the sea." என்றபடி அவளது shawlலை உதறினாள். தொடர்ந்தாள்,

"so இப்ப சாருக்கு, மூட் ஓகே ஆச்சா?" என்றவள் மணலில் உட்கார முற்பட்டபோது, அவளது கையை பிடித்தேன்.

நான், "வேணாம், மண்ணு ஒட்டிக்கும்."

நிர்மலா, "அப்பரம்..சார் மடியில உட்காரலாமா?" என்று சொல்லிவிட்டு சிரித்தாள். வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டு போகும். அவள் வாய்விட்டு சிரித்தால், எனக்குள் என்னெனமோ ஆகும். மேகங்கள் சிவப்பு நிறத்தில் மாறின.

நான், "வா... நம்ம பங்களாகுள்ள போயிடுவோம்." நிர்மலாவின் ஆபிஸ் தோழிகள் வித்தியாசமாக இருந்த சிவப்பு மேகங்களை படம் பிடித்து கொண்டிருந்தனர். நிர்மலா அவர்களை சீக்கிரம் பங்களாகுள்ள வர சொன்னாள். பங்களாவிற்குள் நுழைந்தனர். அங்கு நிர்மலாவின் மற்ற உறவினர்களும் குடும்பத்தாரும் அளவளாவி கொண்டிருந்தனர்.

ஒரு ஜன்னல் ஓரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த எனக்கு, நிர்மலா chocolate milkshake கொண்டு வந்தாள். நான் குடித்தேன். அவள் என்னைப் பார்த்துவிட்டு புன்னகையித்தபடி என் மேல்உதட்டில் படர்ந்த இருந்த chocolate milkshakeயை துடைத்தாள் அவளது விரல்களால்.

அவள் ஒவ்வொரு முறையும் தொடும்போது நான் இறந்து, புதிதாய் பிறந்தேன்.

நிர்மலா என்னைப் பார்த்து, "உன்கிட்ட இத ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன். but பயமாக இருக்கு." எனக்கு ஆச்சிரியம். எனது உணர்வுகளை அவள் பிரதிபலித்தாள். எனக்கு குழப்பமாய் இருந்தது.

நிர்மலா, "என்னை பத்தி என்ன நினைக்குற?"

நான், "you are one gem of a person."

அவள் புன்னகையித்தாள். மறுபடியும் அதே கேள்வியை வேறுவிதமாய் கேட்டாள்.

நிர்மலா, "என்னை பத்தி நீ என்ன நினைக்குற?"

நான், "friendly, jovial, my best buddie...." எனது காதலை சொல்லிவிட வேண்டும் என்பதுபோல் இருந்தது.

நிர்மலா, "விமல்....I..I..." என்றபோது பூலோகமே வெடிக்கும் சத்தம் கேட்டது.

*********************************************************
Year 0227 A.E.

"இருநூறு வருஷங்களுக்கு முன்னாடி உலகம் அழிந்த நாள் 23 dec 2012. அன்று ஒரு பெரிய சிவப்பு நெருப்பு பந்து மேகத்தை உடைச்சுகிட்டு வந்து உலகத்தை அழித்துவிட்டது....."- தொலைக்காட்சி பார்த்துகொண்டிருந்தார் கிஷ்ரே. அவரது குட்டி பையன் பள்ளி முடிந்து வீட்டினுள் நுழைந்தான்.

ஓடி வந்து கிஷ்ரேவை கட்டிபிடித்து கொண்டான், "மா!!!"
பள்ளியில் நடந்து எல்லாவற்றையும் கூறினான். அவனது அம்மா, " உனக்கு ஒரு surprise இருக்கு. go to your room!" என்றதும் அவன் துள்ளி குதித்து ஓடினான். அறை கதவை திறந்து பார்த்தபோது அவனுக்கு ஆச்சிரியம். அவனது படுக்கையில் ஒரு சின்ன பெட்டி. அந்த பெட்டியில் எழுதியிருந்தது -

"this is for you! she's நிமி"

ஒரு நாய்குட்டி தூங்கிகொண்டிருந்தது அப்பெட்டியில்.

Jun 12, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 8


பகுதி 7


விஜியின் அம்மா அனுப்பிய மாப்பிள்ளை படத்தை பார்த்தனர் அனைவரும். கலா கத்தினாள் அதிர்ச்சியால். பயந்துபோய் ஓடி வந்த கலாவின் அம்மா, அறை கதவை திறந்துகொண்டு பதறிபோய் நின்றார், "என்ன கலா ஆச்சு?"

இவ்வாறு reaction கொடுப்பாள் என்று தெரியாத மற்ற மூவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தனர். கலா, "ஓ...ஒன்னுமில்ல மா...சும்மா தான் கத்தினேன்." 

கலாவின் அம்மா, "அடி பாவி! நான் பயந்து போயிட்டேன். கீழே விழுந்துட்டேனு நினைச்சேன்." என்று சொல்லிகொண்டே அறையை விட்டு வெளியே சென்றார்.

கலா, "oh my godட் விஜி!! இது ஆவறத்துக்கு இல்ல!!! என்ன மச்சி, உன் வீட்டுல அநியாயம் பண்றாங்க. பார்த்த எனக்கே இப்படினா.....ஐயோ விஜி! உன்னைய நினைச்சா எனக்கு கவலையா இருக்கு! இந்த முகம் தெய்வீக முகமா??? " என மாப்பிள்ளை படத்தை பார்த்து கொதித்து எழுந்தாள். அதை கேட்டதும் விஜிக்கு இன்னும் சோகம் அதிகரிக்க, கண்கள் குளமாகின.

சசி சமாதானப்படுத்துகிறேன் என்று, " விஜி, என்னிக்கு இருந்தாலும், you wanna settle down right? so..why not? and looks வச்சு ஒருத்தர பத்தி தப்பா பேசகூடாது." என்று வெறுப்பேத்தினாள் கலாவை.  மேலும் தொடர்ந்தாள், "நம்ம யாரும் இங்க ஒன்னும் ashiwarya அழகு இல்ல. so.... ஒருத்தர இப்படிலாம் கிண்டல் பண்ணகூடாது டி."

"ashiwaryaயாவே இப்ப அழகு இல்ல..." என நகைச்சுவை பேசுவதாக சொல்லி அவள் மட்டும் சிரித்தாள். மற்ற யாருக்கும் சிரிப்பு வரவில்லை. same side கோல் போடுவதுபோல் பேசினாள் சசி.

கலா, "ஹாலோ ஹாலோ...இங்க யாரும் ஹாருக்கானையோ சல்மான் கானையோ கேட்கல. beauty is a subjective term. அதுவும் எங்களுக்கு தெரியும். விஜி விஷயமே வேற." என்று சசியை அடிக்காமல் அடித்து சொன்னாள்.

சுதா, "சரியா சொன்னே கலா. ஏய் லூசு சசி, that's not the issue here. marriage is a huge committment and விஜி வீட்டுல பண்றது ரொம்ப தப்பு. viji is still young.." சசிக்கு புரியும்படி சொன்னாள். சசி அமைதியாக இருந்தாள்.

கலா, "இந்த சித்தார்த் வந்ததுலேந்து நீ ஒரு மார்கமா தான் இருக்க. உனக்கு தனியா ஒரு treatment பார்த்தே ஆகவேண்டும். விஜி பிரச்சனை முடிஞ்சவுடனே உனக்கு தான் அடுத்த ஆபிரேஷன் 'ரெட்' பண்ணியாகனும்." சசியின் தலையில் கொட்டினாள்.

"idiot!" என்றபடி சசி, தலையணையை எடுத்து கலா மீது வீசினாள். ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அனைவரும் திண்டாடியபோது, திடீரென்று விஜி கண்களை துடைத்து கொண்டு,

"ஒகே. i have decided. i am going to say yes."

மற்றவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

விஜி, "முள்ள முள்ளால தான் எடுக்க முடியும்."

கலா, "but பல்ல பல்லால எடுக்க முடியாது!! இந்த பிரச்சனைக்கு முள்ளு strategy எல்லாம் work out ஆகாது மச்சி!"

விஜி, "shhhhhhhhhhhh....." அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி, தனது  ஐடியாவை கொட்டினாள்.

***************************************************************

காலேஜ் கடைசி வகுப்பு முடிந்து அனைவரும் வகுப்பைவிட்டு வெளியேறினர்.

"நேத்திக்கு உன் வீட்டுல yes சொல்லிட்டு எங்களுக்கு sms அனுப்புற வரைக்கும் எங்களுக்கு தூக்கமே வரல...." பையை எடுத்து கொண்டபடி சுதா.

விஜி புது உற்சாகத்துடன், " கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிடாங்களே!!" என சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

சசி, "அடுத்த step என்ன?" என்று விஜியை பார்த்து கேட்டு கொண்டே, நால்வரும் ground floorக்கு செல்லும்போது,

"இங்க தான் அந்த steps வரும். இப்படியே அந்த walkway போட்டுடலாம்" என்று ஒருத்தர் கல்லூரி முதல்வரிடம் பேசி கொண்டு இருந்தார்.

முதல்வர், "ok good. thanks mr siddarth. வேலைய சீக்கிரமா முடிங்க" என்று கூறிவிட்டு சென்றார். நால்வரும் முதல்வருக்கு 'good evening' சொன்னார்கள்.

சித்தார்த்துக்கு சசியை பார்த்தவுடன் அதிர்ச்சி. சசியும் எதிர்பார்க்கவில்லை.
சசி, அன்று நடந்ததை பற்றி பேசாமல், "hey siddarth என்ன இந்த பக்கம்?"

அவனும், "உங்க காலேஜ் building extension பத்தி பேச வந்தேன். எங்க கம்பெனி தான் இந்த contractட்ட எடுத்து இருக்கோம்."

சசி, "hey anyway, this is கலா, சுதா and விஜி." என்று அறிமுகப்படுத்தினாள். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் முழிக்க, கலா

"அப்பரம் சித்தார்த் வாழ்க்கையலாம் எப்படி போகுது?" என்றாள் கொஞ்சம் கிண்டலாய்.

"nice" ஒற்றை வார்த்தையில் பதில்.

"come let's go for some coffee..." என்று சுதா, அவனையும் அழைத்தாள்.

"இல்ல பரவாயில்ல...நீங்க போங்க. i got some work." என்று சொல்லிவிட்டு சசியை பார்த்து ஒரு சின்ன புன்னகையை வீசிவிட்டு சென்றான்.

விஜி, "ஏய் போய் பேச வேண்டியது தானே!! you guys are not in talking terms?" என்று கூறி முடிக்க, கலா

"இப்ப பாரு. சசிக்கு ஒரு ஃபோன் call வரும். carparkகிட்ட வர சொல்வான்..ஐ மின் சொல்வாரு அவரு!" என்று  காலால் கோலம் போட்டு நக்கல் செய்தாள்.

*********************************************************

சசிக்காக காத்திருந்தான் சித்தார்த். அவளை பார்த்ததும், அவனுக்கு கொஞ்சம் சந்தோஷம். அவள் அவனை நோக்கி நடந்து வந்தாள்.

"எப்படி இருக்க?" என்றான்.

"நான் எத்தன தடவ உனக்கு ஃபோன் பண்றது?" என்றாள் சசி.

"சாரி...ஏதோ கோபத்துல..."

சசி எதுவும் பேசாமல் கையை கட்டி கொண்டு கார்பார்க்கில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து கொண்டிருந்தாள்.

"i love you!! no மட்டும் சொல்லிடாத. என்னால தாங்க முடியாது." என்ற கெஞ்சலை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் சசி. சசி அன்று என்ன சொல்ல வந்தாள் என்பதை விலாவரியாக சொல்லி முடித்தாள். கேட்டபிறகு, அவனும் சிரித்தான்,

"ஓ மை காட். இத தான் சொல்ல வந்தீயா? oh how stupid I am..."

சசி, "yes you are!"

சித்தார்த் அவள் அருகே நகர்ந்து சென்று அவள் கையை பிடிக்க முயன்றபோது,

சசி, "ஏய் என்ன பண்ணுற? i don't like all this." என்று விலகி சென்றாள்.

"hey sorry sorry. cool cool...."அவனும் சற்று பயந்துபோய் தள்ளி சென்றான்.

சசி, "friends வேட் பண்ணுறாங்க..."

சித்தார்த், "yes yes sure. carry on. thanks for coming. விஜிக்கு ஏதாச்சும் உதவி வேணும்னா சொல்லு. சேர்ந்து help பண்ணுவோம்." புன்னகையித்தான். சசி நடந்து போனாள். பின்னாடியிலிருந்து ஒரு முறை சித்தார்த், "சசி ஐ லவ் யூ!" என கத்தினான். அவள் தனது வெட்கத்தை மறைத்தாள், மூக்கு கண்ணாடியை சரிசெய்வது போல்.

*****************************************************

காத்திருந்த கலா, "என்ன சசி, முடி கலைஞ்சு இருக்கு. உதடு வீங்கி இருக்கு...என்ன ஒரே ஜல்சாவா?"

சசி, "காலேஜ் compoundல் கன்னி பெண் கொலை-னு நாளைக்கு நியூஸ்ல வரும் பரவாயில்லையா?"

இவ்வாறு பேசி கொண்டே நால்வரும் தெருவில் நடந்து போய் கொண்டிருந்தனர். விஜியின் தெருவை அடைந்ததும், அத்தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒரு சின்ன பையன்

"என்ன அக்கா? இவ்வளவு lateஆ போறீங்க?" என்றான். அவன் சொன்ன பிறகு நால்வரும் வேகமாய் நடந்து விஜியின் வீட்டை அடைந்தனர்.

*தொடரும்*

Jun 11, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-19

லீவு நாள்ல என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இதுல interest போகுது..:)))))
சரி விடுங்க...


big fm பாலாஜி அடிக்குற லூட்டி இருக்கே...ஹாஹாஹா..... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க!

இத கேளுங்க- http://soundcloud.com/balajipatturaj/92-7-big-fms-best-of-cross-56
இவரின் cross talk நிகழ்ச்சி செம செம செம காமெடி!! மனசு ரொம்ப சோகமா இருக்கும்போது (அதவாது வேலை நாட்களில்) இவரது நிகழ்ச்சியைக் கேட்பது வழக்கம் ஆகிவிட்டது!

'சைட்' அடிக்கும் அளவுக்கும் இவர் அந்த காலத்து அரவிந் சாமி இல்ல.... ஆனா, இவரது நகைச்சுவை உணர்வு தான் இவர் பக்கம் பல பெண்கள் ரசிகர் கூட்டத்தை   இழுத்து உள்ளது!!

பாலாஜி டாடாடாடாடா!!!!!

Jun 7, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-18

முந்தைய 'சைட்'கள்

முந்தைய 'தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்' போஸ்ட் போன வருஷம் போட்டது. ஒரு வருஷம் ஆச்சு!

(இதலாம் ஒரு பொழப்பா அப்படினு நீங்க துப்பினாலும், துடைச்சுகிட்டு தொடர்வோம்ல..ஹிஹிஹி)

இந்த ipl சீசனை தான் ரொம்ப ஆர்வமா பல ஆட்டங்களை பார்த்தேன். கிரிக்கெட் வீரர்கள் அழகா பிறந்தவர்களா இல்ல...கிரிக்கெட் விளையாடினால் அழகா ஆயிடுவாங்களா?- அப்படி ஒரு கேள்வி கேட்டால் கோபி நாத் கூட இத வச்சு நிகழ்ச்சி பண்ண வாய்ப்பு இருக்கு. இந்த கேள்வி ரொம்ப நாளா மனசுல இருந்துகிட்டே இருக்கு.

இந்த வருட ஐபிஎல் சீசனில் என் கண்களுக்கு அழகாய் தெரிந்தவர்கள்.

மூன்றாவது நிலையில் ankit sharma. இவரின் கண்கள் தான் highlight!!


     

அடுத்த நிலையில்,

யோ யோ யோ யோ.... (விரட்டுறேனு நினைச்சுடாதீங்க!)

yo mahesh. வடிவமான முக அமைப்பு தான் இவரின் highlight. தாடி இல்லாமல் இருப்பது தான் இவருக்கு அழகு!



முதல் நிலையில்........ நம்ம முரளி விஜய். (என்னது நம்ம முரளி விஜயா? சரி ரைட்டு விடுங்க...என் முரளி விஜய்)



பாருங்க சார் பாருங்க சாரி..... கண்கள் சிரிக்கின்றன! and கன்னத்தில் குழி அழகு!!




(பின் குறிப்பு- நான் இப்ப தான் கொஞ்சம் வேலை tensionலிரிந்து மீண்டு வந்துகிட்டு இருக்கேன். டாடி மம்மி தொடர்கதையை தொடருமாறு பல அன்பு கொலைமிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கு! அப்படி மிரட்டல்கள் அனுப்புவோருக்கு, சார்/மேடம்....மிரட்டாதீங்க!! எழுதுறேன் கண்டிப்பா!)