Aug 3, 2007

அஜித்த கவிழ்த்த விஜய்

எல்லாரும் அவங்கவங்க பங்குக்கு தலைய பத்தி பேசிதீர்த்துட்டாங்க. சரி.. அவ்வளவு மோசமாவா இருக்கு படம் கீரிடம்னு சொல்லி... ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தேன். அப்பரம் தான் தெரிஞ்சுது பெரியவங்க பேச்ச கேட்கலைனா எப்படிப்பட்ட பின்விளைவுகள் எல்லாம் வருமுனு.... உஷ்ஷ்.... தாங்கல சாமி படம்!

கடைசி கிளைமெக்ஸ் மாத்துபோறாய்ங்களாம்....அட படத்தையே வேற மாதிரி எடுத்தா தேவலாம் போல இருக்கு. கிளைமெக்ஸ் காட்சியில் தல அழுவும்போது எப்ப்டி இருந்துச்சு தெரியுமா "நான் ஏன் இப்படிப்பட்ட படங்களையல்லாம் ஒத்துக்கிறேனே" அஜித் 'வீல்' (feel) பண்ணி...அழுவுற மாதிரி இருந்துச்சு. போதாதிற்கு ராஜ்கிரன் சரண்யா.. பெற்றோர்கள் ஜோடி. அட கொடுமைகளா..... எவ்வளவு!! (யப்பா....). இன்னும் எத்தனை தடவ! அஜித் எப்படியாவது ஜெயிச்சுடுனும் நினைக்கும்போதுலாம் இப்படி ஒரு படத்தை கொடுத்து அதுவே அது வாயில் மண்ண வாரி போட்டுகுது. (யம்மா ஷாலினி... சும்மா badminton விளையாட போகாமே...கொஞ்சம் தலைக்கு எடுத்து சொல்லுமா! )

படத்தின் இயக்குனர் பெயர் விஜய். அப்பவே தல உஷாரா இருந்திருக்க கூடாதா... கீரிடம் போடுறேனு இப்படி கவிழ்த்துப்புட்டான்ய்யா விஜய்!!
என்ன கொடுமை சார் இது!

11 comments:

நந்தா said...

நான் விமர்சனத்தை பத்தி எல்லாம் எதுவும் சொல்ல விரும்ப வில்லை. ஏற்கனவே போக்கிரியைப் பத்தி நீங்க கொடுத்த விமர்சனத்துலயே நீங்க தீவ்வ்வ்வ்வ்வ்வ்விர விஜய் ரசிகர்னு தெரிஞ்சிடுச்சு.

போக்கிரியை எவ்வளவுக்கெவ்வளவு கேவலமான படம்னு நான் நினைச்சேனோ அதுக்கு அப்படியே எதிர் நிலைல நீங்க இருக்கீங்க. அது இந்த படத்திலயும் தொடர்கிறது.

என்னைப் பொறுத்த வரை இந்த படம் எல்லாம் ரொம்ப கேவலம்னா, தமிழ் சினிமாவில் நல்ல படம் வருவதற்கு இன்னும் 20 வருஷங்கள் ஆகும்.

உங்கள் விருப்பம் உங்களிற்கு, எனது விருப்பம் எனக்கு.

மீண்டும் வேறு எப்போதாவது ஒரு விஷயத்தில், ஒன்றாய் சிந்திக்கையில் இணைவோம்.

http://blog.nandhaonline.com

hai said...

Hai Madam

Naan Ajith Fan

Unga Profile Parthen
Neenga Vijay Fan Ok Fine

Kreedom Pidikalana Vitrungs.

Enga Ajithayum Unga Vijay Mathiri Mathidatheenga Please

Manasatchiyodu Parungal

Kreedom Kreedom Than

senthilkumar said...

உங்களுக்கு உன்மையாவே படம் பார்க்க தெரியுமா, இல்ல விஜய் படம் மாதிரி மொக்க படம்தான் பாக்க தெரியுமா.
நல்ல படம் பார்த்து பழகுங்க, சிவகாசி,திருப்பாச்சி படம் மாதிரி பாத்தீங்கன்னா, உங்களுக்கு இந்த படம் புடிக்காது.

பழூர் கார்த்தி said...

அய்யய்யோ, அவ்ளோ மோசமாவா படம் இருக்கு...

எங்கள வார்னிங் கொடுத்து காப்பாத்தி விட்டதுக்கு ரொம்ப நன்றி சாமி...

//கடைசி கிளைமெக்ஸ் மாத்துபோறாய்ங்களாம்....அட படத்தையே வேற மாதிரி எடுத்தா தேவலாம் போல இருக்கு.//

விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விட்டீர்கள் :-)))))))

கிரீடம், என்ன கொடுமை சார் இது ???

Thamizhmaagani said...

அன்பு நந்தா, உங்க கருத்துக்கு நன்றி.

//போக்கிரியை எவ்வளவுக்கெவ்வளவு கேவலமான படம்னு நான் நினைச்சேனோ அதுக்கு அப்படியே எதிர் நிலைல நீங்க இருக்கீங்க. அது இந்த படத்திலயும் தொடர்கிறது.//

அப்ப நீங்க தல ரசிகனாகதான் இருக்கவேண்டும்!

//என்னைப் பொறுத்த வரை இந்த படம் எல்லாம் ரொம்ப கேவலம்னா, தமிழ் சினிமாவில் நல்ல படம் வருவதற்கு இன்னும் 20 வருஷங்கள் ஆகும்.//

தமிழ் சினிமாவில் நல்ல படங்களே வரவில்லை என்பது யாராலும் ஏற்று கொள்ள முடியாது. எத்தனையோ நல்ல படங்கள் வந்தன, வருகின்றன, இன்னமும் வரும்! எத்தனையோ தமிழ் படங்கள் உலகளாவிய வகையில் பேசப்பட்டது. எத்தனையோ விருதுகள்! உங்களுக்கு தெரியுமா.. நம்ம தமிழ் படம் 'நாயகன்', உலக திரைப்படங்களின் வரிசையில் 100 சிறந்த படங்களில் ஒன்று என்பதை..

//மீண்டும் வேறு எப்போதாவது ஒரு விஷயத்தில், ஒன்றாய் சிந்திக்கையில் இணைவோம்.//

கண்டிப்பா நந்தா.. நானும் எதிர்ப்பார்க்கிறேன்!

Thamizhmaagani said...

hi 'HAI', thanks for ur views.

//Naan Ajith Fan//
so am sure, u are going to be bias in ur opinions. that's alrite..

//Enga Ajithayum Unga Vijay Mathiri Mathidatheenga Please//

of course not.. both are different. it is no point making ajit into a vijay! but wait.. if ajit wants to sustain himself in the field for a long time.. then he has to take his selection of movies seriously.

//Manasatchiyodu Parungal//
yea of course i did.. and that's y this post was a constructive one in terms of projecting my opinions.

//Kreedom Kreedom Than //
yes of course i would have agreed with that.. but is that the true fact? hmmm....

Thamizhmaagani said...

@senthilkumar

வணக்கமுங்கோ.
//உங்களுக்கு உன்மையாவே படம் பார்க்க தெரியுமா//

சத்தியமா தெரியுங்க.. என் இரண்டு கண்ணாலதான் பார்த்தேன்!

//நல்ல படம் பார்த்து பழகுங்க, //

ஓ... நல்ல படம்னா, அப்பரம் ஏன்னுங்க கடைசி கிளைமெக்ஸ் மாற்ற ஏற்பாடு செய்யுறாங்க.. சில தியெட்டர்களில் இந்த படத்தையே எடுத்துட்டாங்கனு கேள்விபட்டேன்..

Thamizhmaagani said...

//எங்கள வார்னிங் கொடுத்து காப்பாத்தி விட்டதுக்கு ரொம்ப நன்றி சாமி...//

இருக்கட்டும் கார்த்தி, பரவாயில்ல. யான் பெற்ற துன்பம் இவ்வயகம் பெறவேண்டாம் என்ற நல்லாசை தான்!

//விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விட்டீர்கள் :-)))))))//

ஹாஹா...:))

Vijay said...

ஹலோ தமிழ்,

நான் ஒரு பக்கா விஜய் ரசிகன். ஆனால் இந்த கிரீடம் படத்தை கொஞ்சம் ரசித்து தான் பார்த்தேன். படம் வேண்டுமானால் சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் படத்தின் இயல்பான கதையோட்டம், கதாபாத்திரங்களின் உயிரோட்டம் போன்றவற்றை கண்டிப்பாய் ரசிக்கத்தான் வேண்டும். மிகவும் கேவலமாய் இருக்கிறது என்பதை எவரும் ஒப்புக்கொள்ள முடியாது.

இன்னொரு விஷயம் சிந்தித்தீர்களானால், இது போன்ற தொரு கதையை ஏற்று நடிப்பதற்கு தைரியம் வேண்டும். நடிகன் என்றால் எதையும் ஏற்று நடிக்க வேண்டும். விஜய் இம்மாதிரியான கதையை ஏற்று நடிக்கவே மாட்டார். அதாவது ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாதவர்.

உங்களின் விமர்சனம், நடுநிலையாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
ஆனால் இதில் துளி கூட இல்லை என்றே கூறுவேன்.

- விஜய்.

Thamizhmaagani said...

நன்றி விஜய், உங்க கருத்துக்கு!

//இயல்பான கதையோட்டம், கதாபாத்திரங்களின் உயிரோட்டம்//

நான் அப்படி எதையும் பார்த்த மாதிரி தெரியல்லை.

//உங்களின் விமர்சனம், நடுநிலையாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
ஆனால் இதில் துளி கூட இல்லை என்றே கூறுவேன்.//

அவங்கவங்களுக்கு ஒரு taste இருக்கும்... அது மாதிரி தான் இதுவும்! உங்க கருத்தை நீங்க சொன்னீங்க.. என் கருத்தை நான் சொல்லுறேன்! அம்புட்டுதான்!

நந்தா said...

ரொம்ப லேட்டாதான் நீங்க கொடுத்த பதிலைப் பார்க்கிறேன். அதனால்தான் இப்போ பதிலைப் போடுறேன்.

//அப்ப நீங்க தல ரசிகனாகதான் இருக்கவேண்டும்!//

ஏங்க இப்படி ஒரு முடிவுக்கு வர்றீங்க. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. மாற்றுக் கருத்து சொன்னா உடனே இப்படி சொல்றீங்களே.

அஜீத்தோட இதற்கு முன்னாடி கடைசி 3 மொக்கை படத்தையும் நான் பார்க்கவே கிடையாது.

ஆனால் இந்த படம் அந்தளவுக்கு மோசமான படம் இல்லை.

ஏற்கனவே நான் எழுதிய ஒரு பதிவைப் பாருங்கள். நான் எதனடிப்படையில் உங்கள் விமர்சனத்தை அணுகுகிறேன் என்று புரியும்.

http://blog.nandhaonline.com/?p=11

பி.கு:
நான் உங்கள் ரசனையை மாற்ற முயல வில்லை. எனது தரப்பைச் சொன்னேன்.