21 வயதாகியும் அவள்
எனக்கு இன்னும்
கைபொம்மையோடு
விளையாடும்
கைகுழந்தை தான்!
வீட்டில் இரண்டு தொலைபேசிகள்
இருந்த போதிலும்
ஒரு 'cordless' போன் வேண்டும்
என்று அடம்பிடித்து
வாங்கினாள்.
ஜீன்ஸ் டீ-ஷர்ட்
விரும்பி போடும் அவள்
திடீரென்று சேலை மீது
ஆசை கொண்டாள்.
தொலைக்காட்சியில்
காதல் காட்சிகள் பார்க்கும்போது
சோபா 'குஷன்னை'
இறுக்கிக் கட்டிபிடித்து
கொள்கிறாள்.
சமையல் கற்றுகொள்கிறாள்
வெள்ளிக்கிழமை கோயில் செல்கிறாள்
சுடிதார் கலருக்கு ஏற்ற
வளையல் மாட்டி கொள்கிறாள்
குறுந்தகவல் வந்தால்
அவள் அறைக்கு சென்றுவிடுகிறாள்
அளவோடு சாப்பிடுகிறாள்
தமிழ் கவிதை வாசிக்கிறாள்
இதையெல்லாம் ரொம்ப
நாளாக கவனித்த
என் மனம்
புன்னகையித்தபடி
சொல்லியது
"ம்ம்ம்.. என் மகள் காதலிக்கிறாள்!"
14 comments:
இத சொல்ல ரொம்ப துணிவு வேனும்....!!!!!
அழகான விடயங்களை(கவிதையாமல்ல!!), அழகிகள் சொன்னாலே அழகுதான்.
00..! nice poem.
;
ம்.. அம்மாவாச்சே. அம்மாக்கள் எல்லாரும் என்னவோ தெரியேலை. கடைசியில் சராசரி எல்லா அம்மாக்கள் மாதிரித்தான் என என் 13 வயது மகள் அடிக்கடி சொல்லுவாள். ஆனாலும் நான் நிறைய மாறுபாடு. நீங்கள்.???
அதெப்படி இதனாலெல்லாம் அவள் காதலிக்கிறாள் என சொல்லமுடியும்? மாற்றங்கள் இயற்கை தானே....
நல்ல கவிதை. நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
Thamizhmaagani உங்க கவிதையில் புதுமை, பறந்த மனப்பான்மை, சுதந்திரம், மகளாக இருந்தாலும் அவர்மீது நம்பிக்கை, அவரது மகிழ்ச்சியே உங்களது மகிழ்ச்சி என்கிற மன நிறைவும் தெரிகிறது, அவரது தன்நிறைவே உங்களுடைய தன் நிறைவு போன்ற உணர்வுகள் வெளிப்படுகின்றன.
நன்றாக வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நன்றி tbcd! ஏதோ கொஞ்சம் கற்பனை இருந்தால் போதுமுங்க..
நன்றி மருதமூரான்! கவிதையையும் கவிஞரையும் பாராட்டியதற்கு...
வாழ்த்துகளுக்கு நளாயினி! உங்க மகள் சொன்ன மாதிரி பொதுவா அம்மாக்கள் அப்படி தான்! ஆனால் எனக்கு தெரிந்த நிறைய பேர் சற்று வித்தாயாசம் தான்!
//நீங்கள்.???//
இந்த கேள்விக்கு பதில் சொல்ல இன்னும் பல ஆண்டுகள் ஆகம்..நான் அம்மாவான பிறகு.. ஹாஹாஹா..
ஆனால் கண்டிப்பா உங்களை போல் வித்தியாசமாக இருக்க முயற்சிப்பேன்!
மிகவும் நன்றி மாசிலா மற்றும் கோவி. கண்ணன். உங்கள் ஆதரவும் ஊக்கமும் என்னை உற்சாகப்படுத்துகின்றன! ரொம்ப நன்றிங்க!
//மாற்றங்கள் இயற்கை தானே....//
வணக்கம் மஞ்சூர் ராசா! காதலுனு வந்துட்டா சின்ன சின்ன விசயங்கள்கூட அதிசயமா (அழகாவும்) தெரியும். ஒரு அம்மா என்ற கோணத்திலிருந்த கவனித்து பார்த்தால்... மாற்றங்கள் இயற்கையாக இருந்தாலும்...அதிலும் ஒரு வித்தியாசம் இருக்கும்!
ம்ம்.... நடக்கட்டும்... நடக்கட்டும். லேசா புரியறா மாதிரி இருக்கு....
வாழ்த்துக்கள்.
புரியுது புரியுது. நல்லாவே புரியுது.
ஆனா.......... நீங்க சொன்ன எதுவுமே இல்லாம
நானும் ஒரு காலத்தில் காதலித்தேன்:-)
இப்போது என் மகளும் காதலில்:-))))
தாயைப்போல பொண்ணாமே! அப்படியா?
நன்றி துளசி கோபால், கவிதையை படித்ததற்கு!
நூல போல சேலை
தாயை போல புள்ள!!
அப்படிதான்!!
Post a Comment