ஆஸ்திரேலியா பல்கலை கழகம் ஒன்று இயக்குனர் சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து' படத்தை பாடபகுதியில் சேர்த்துள்ளனர். ரொம்ப ரொம்ப சந்தோஷம் பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் பெருமை உண்டு. கீழே உள்ள துணுக்கு செய்தியை பாருங்கள்:
"தமிழ்க் கலாச்சாரம் இந்தப் படத்தில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் என்னைப் பாராட்டினர். ஒவ்வொரு மனிதனுக்கும் இது ஒரு பாடம் என்றும் பாராட்டினர் என்றார் சேரன்."
( http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/australian-varsity-includes-cheran-film-in-syllabus-070824.html இருந்து எடுக்கப்பட்டது)
ஆனால் இதை பார்த்தவுடன் எனக்கு பகீர் என்றது. இப்படத்தில் சேரனும் பத்மபிரியா கதாபாத்திரங்களும் காதலிப்பார்கள். ஒரு சூழ்நிலையில் வரம்பு மீறி செய்ய கூடாத ஒன்றை செய்துவிடவார்கள். காதலித்தவளை பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வார் சேரன்! இதுவா அவர்கள் சொல்லும் தமிழ்க் கலாச்சாரம்??
அவர்கள் இப்படத்தை தேர்ந்தெடுக்க மற்ற பல காரணங்கள் இருக்கலாம். அதை நான் தவறு என்று கூறவரவில்லை. இருந்தபோதிலும் என் மனதில் திடிக்கிட்ட ஒரு சிந்தனை இது!
இப்படத்தை வைத்து பாடம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் இதிலிருந்து தமிழ் கலாச்சாரத்தின் மீது தவறான எண்ணம் வருமா? வராதா?
எனக்கு தெரியல.... உங்களுக்கு தெரியுமா?
(முடிந்தவரை கருத்துகள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிறேன்)
7 comments:
//காதலித்தவளை பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வார் சேரன்! இதுவா அவர்கள் சொல்லும் தமிழ்க் கலாச்சாரம்??//
ஏன் இல்லீங்களா?
சங்கப் பாடல்களில் களவு மணம், கற்பு மணம் எனப்படுபவைகளை தேடிப் படித்து பாருங்கள்.
கலாச்சாரம் காலந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கிறது.
80களில் தமிழகப் பெண்களின் உடையான பாவாடை தாவணியை இன்று எங்காவது கண்ணில் தட்டுப்படுகிறதா?
‘தவமாய் தவமிருந்து’ படம் முக்கியமாகக் காட்டுவது தந்தை-மகன் உறவுகளை. நமது சமுதாயத்தில் தந்தையர் மகனுக்காற்றும் கடமைகளை அழகாகவே சித்தரித்திருந்தார் சேரன். அதைப் போலவே, மகன் தந்தையர்க்கு செய்யும் துரோகங்களையும் காட்டியிருந்தார். சேரன் – பத்மபிரியா உறவு அப்படிப்பட்ட துரோகங்களில் ஒன்றுதான் என்பதை தெளிவாகவும் வெளிப்படுத்தியிருப்பார். கூடவே, காதலர்களும், அவர்களது இருவரது குடும்பங்களும் அடையும் அவமானங்கள், வேதனைகள் – அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எந்த இடத்திலும் சேரன்-பத்மபிரியா திருமணத்திற்கு முன் கொண்ட உடலுறவு மாட்சிமைப்படுத்தப்படவில்லை. எனவே, உங்களது கருத்து தவறானது.
நான் அப்படி நினைக்க வில்லை. காரணம் இந்த படத்தில், அவர்கள் அவ்வாறு தவறு செய்து விட்டு எப்படி வேதனை படுகிறார்கள் என்பதைப் பார்த்தாலே தமிழ் கலாசாரம் புரிந்துவிடும். இயல்பாக உள்ள நல்ல கலாசாரத்தில் இருந்து, இவர்கள் எப்படி மாறு பட்டார்கள் , அதனால் இவர்கள் அடைந்த மன வேதனை என்ன, என்பதையும் உணர்வார்கள். மேலும் மகன் தந்தைக்காற்றும் உதவியை பற்றியும் அறிவார்கள்.
His film mayakannadi will soon become a lession in Sanskrit University
கருத்து தெரிவித்து எனது சிந்தனையை வேறு நோக்கத்தில் அழைத்து சென்ற அனைத்து கருத்துகளுக்கும் நன்றி!
//80களில் தமிழகப் பெண்களின் உடையான பாவாடை தாவணியை இன்று எங்காவது கண்ணில் தட்டுப்படுகிறதா?//
ம்ம்ம்... இல்லை என்று நீங்கள் நினைத்தால்.. நான் என்ன செய்ய?
// எனவே, உங்களது கருத்து தவறானது.//
அன்பு ஏவிஎஸ், சுட்டி காட்டியதற்கு நன்றி!
Post a Comment