Mar 27, 2008

இது தான் தல-கனம்!

ஆச்சிரியம் ஆனால் உண்மை! இவர் ஒரு கூலி! பேருந்தில் பொருட்களை ஏற்றுபவர். இவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். இப்போது பேருந்துகள் பெரிய பொருட்களைகூட ஏற்றுமதி செய்கின்றன. பொதுவாக பேருந்து கீழே இருக்கும் பெட்டியில்தான் பொருட்களை வைப்பார்கள். ஆனால், அங்கே இடம் இல்லை என்றால், பேருந்திற்கு மேல் இருக்கும் இடத்தில் வைப்பார்கள். ஆனால்.. இவர் எதை எப்படி வைக்கிறார் என்று பாருங்கள்!!

இந்த மோட்டார் வண்டியின் இடை 200kg
ஆனால் ஒரு வண்டியை மேலே வைப்பதற்கு இவருக்கு கொடுக்கப்படும் கூலி Rs20 மட்டுமே!!

தலக்கனம் பிடித்தவர்கள் ஒரு புறம் இருக்கு. இவர் அனுபவிக்கும் தல-கனம் என்னவென்பது??

4 comments:

Sanjai Gandhi said...

இது போன்று அடிக்கடி செய்ய வேண்டி இருக்காது காயத்ரி. யாரும் பைக்கை பேருந்தில் ஏற்றி செல்ல மாட்டார்கள். இது எங்காவது தூரமான இடத்திற்கு பயன்படுத்த எடுத்து செல்வதற்காக ஏற்றி இருப்பார்கள். இதை அவர் தினமும் செய்ய வேண்டி இருக்காது. ப்இறரின் உதவி இல்லாமல் தனியாக ஒருவர் பைக்கை ஏற்ற முடியாது. பேலன்ஸ் கிடக்காது. அல்லது கயிறு போன்று எதாவது கட்டி இருக்க வேண்டும்.

Dreamzz said...

//இது போன்று அடிக்கடி செய்ய வேண்டி இருக்காது காயத்ரி. யாரும் பைக்கை பேருந்தில் ஏற்றி செல்ல மாட்டார்கள். இது எங்காவது தூரமான இடத்திற்கு பயன்படுத்த எடுத்து செல்வதற்காக ஏற்றி இருப்பார்கள். இதை அவர் தினமும் செய்ய வேண்டி இருக்காது. ப்இறரின் உதவி இல்லாமல் தனியாக ஒருவர் பைக்கை ஏற்ற முடியாது. பேலன்ஸ் கிடக்காது. அல்லது கயிறு போன்று எதாவது கட்டி இருக்க வேண்டும்.//

repeatu :)

ரசிகன் said...

எறும்பு மட்டும்தான் தன்னை விட 5 மடங்கு எடையை தூக்கக் கூடிய வலிமை வாய்ந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.:)

இவரைப் பாத்தா 70 கிலோ தான் இருப்பார்.எப்டி 200 கிலோ?(அவ்ளோ இருக்குமா?)

வண்டி நின்ற நிலையில தலையில வைச்சு பேலண்ஸ் கூட செய்ய முடியாதுன்னு தோணுது.உண்மையா இருந்தா பரிதாபம் தான்.

பேசாம ஒலிம்பிக்குல,குறைந்த எடை உள்ளவங்களுக்கான பளுதூக்கும் போட்டிக்கு அனுப்பலாமே.

நிவிஷா..... said...

achchoooo paavum,
evlo kashtapatu lift panrar,
epdi ipdi heavy weight ellam thookuranga, paavuma iruku pictures partha(-:


natpodu
Nivisha.