Aug 21, 2009

எனக்கே என்னை தெரியாமல்-3

பகுதி 1 

பகுதி 2

"ட்ட்ரீரீரீங்........ட்ட்ரீரீரீங்...." வாசல்மணி ஒலி எழுப்பியது. கதவை திறந்தாள் ரினிஷா.


"ஹாய்....கீதா...வல்கம்" புன்னகையுடன் ரினிஷா. வரும்வழியில் கற்பனை செய்ததைவிட பல மடங்கு அழகாய் இருந்தாள் ரினிஷா.


பதிலுக்கு கீதா நன்றி என்பதுபோல் சற்று தலையாட்டினாள். வீட்டை சுற்றிபார்த்தாள் கீதா. "வாவ்...so beautiful man! எப்படி இவ்வளவு அழகா வச்சு இருக்கீங்க வீட்ட? nice man...really nice." பூரிப்பு அடைந்தாள் கீதா.



மாறாத புன்னகையுடன் ரினிஷா, "நம்மள சுத்தி எல்லாமே அழகா இருக்கனும்னு நினைக்குற ஒரே இடம் வீடு தான். வெளியே போனோம்னா, அத எதிர்பார்க்க முடியாதுல.....அதான்....."



ரினிஷா சொன்னதில் உள்ள ஆழ்ந்த அர்த்தம் கீதாவிற்கு புரிந்தது. பிடித்தும் இருந்தது. "நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க.... i'll go freshen up. alrite?" என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் தேவி. அவள் சென்றபிறகு, கீதாவும் ரினிஷாவும் பேசிகொள்ளவில்லை. ஹால் ஒரே அமைதியாகவே இருந்தது. கீதாவிற்கு எப்படி, எதை கேட்பது என்று தெரியவில்லை. கீதாவின் முகத்தில் ஓடிய குழப்ப நிலைகளை அறிந்த ரினிஷா,



"என்னமோ கேட்கனும்னு இருக்க...ஆனா....சொல்ல கஷ்டப்படுற....." புன்னகையிட்டாள். தொடர்ந்தாள் ரினிஷா,



"don't worry.....எதுவா இருந்தாலும் சொல்லுங்க..... "



கீதா, "இல்ல....நீங்களும் தேவியும் எப்படி....."



ரினிஷா, "எப்படின்னா?...."



கீதா, "இல்ல...எப்படி ஒன்னா....ஒரே வீட்டுல.....actually how did u people got to know each other."

கொஞ்சம் சிரித்தாள் ரினிஷா. "இன்னிக்கு நைட் ஒரு flashback கேட்டே ஆகனும்னு இருக்க போல...." மறுபடியும் சிரித்தாள்.

***
சின்ன வயதிலிருந்தே 'tomboy' போல தான் திரிந்தாள் தேவி. இதற்கு காரணம் அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் என்று ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட முடியாது. பாட்டியிடம் வளர்ந்தவள். அப்பா இன்னொருத்தி வீட்டில். அம்மாவோ சூதாட்டாக்காரி. பல இடங்களில் கடன். தேவியின் இரண்டு அண்ணன்களும் தேவியை போட்டு அடித்து விளையாடுவதையே பொழுது போக்காக வைத்திருந்தார்கள். நிம்மதி இல்லாத சூழலில் இருந்து விடபட வேண்டும் என்று தேவி ஆசைப்பட்டாள்.

எது செய்வதாக இருந்தாலும் தனியாக செய்தாள். குடும்பத்தின் மீது வெறுப்பு. தனித்து வாழ வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்தாள். தன்னை தைரியமான நபராக மாற்றி கொள்ள கராத்தே, கிக்-பாக்சிங் போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டாள். பள்ளி ஹாக்கி குழுவில் இருந்தாள்.
தன் கிக் பாக்சிங் மாஸ்டர் தான் தேவிக்கு பெரிய inspiration. அவரின் mannerism, style, பேசும்விதம் இவற்றால் பெரிதும் கவரப்பட்டாள். ஆனால் சதாரண பெண் போல் அவரின் மீது ஆசை வரவில்லை. அதையும் தாண்டி ஒரு எண்ணம். அவரை போலவே இருக்க வேண்டும், அவரை மாதிரியே மாற வேண்டும் என்று பைத்தியம் போல் சுற்றினாள்.

அவர் செய்யும் உடற்பயிற்சிகளையும் weight-lifting பயிற்சிகளையும் தேவியும் பின்பற்றினாள். நீட்டமாக இருந்த முடியை வெட்டினாள். மாஸ்டர் வலது கையில் போட்டிருக்கும் வளையம் போலவே தானும் போட்டு கொண்டாள். தன் அறை அலமாரியில் நிறைய polo t-shirts தொங்க ஆரம்பித்தன. தனக்குள் ஏதோ ஒன்று மாறுவதை உணர்ந்தாள். இருப்பினும் அது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவளின் மாற்றங்கள் மற்ற யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் யாரேனும் கவனித்தால் தானே.

பள்ளி இறுதியாண்டில் பாட்டின் இறப்பு அவளை பாதித்தது. இருந்த ஒரு துணையும் இல்லை. அண்ணன்கள் அவளின் உடை மாற்றங்களை பார்த்து, "டேய் எனக்கு தங்கச்சி இல்லடா. தம்பி பொறந்து இருக்கான்." என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள். அப்போது தான் உணர்ந்தாள் தான் செய்யும் விஷங்கள் மற்றவர்கள் கண்களில் தென்படுவதை.
அழுது புரள ஒரு மடி இல்லை. ஆறுதலுக்கு அவ்வளவாக தோழிகளும் இல்லை. பாலைவானத்தில் தண்ணீர் தேடினாள் தேவி. மற்றவர்களின் கேலி பேச்சுக்கு ஆளாகினாள். வகுப்பு மாணவர்களிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தாள்.

ஒரு நாள் ஹாக்கி பயிற்சி முடிந்து உடை மாற்றுவதற்காக அனைத்து பெண்களும் changing roomகளுக்கு சென்றன. அப்போது தனியாக உட்கார்ந்து காலணிகளை கழற்றிகொண்டிருந்தாள். குளித்துவிட்டு வந்தனர் சில பெண்கள்; உடம்பில் துண்டுகளை மட்டும் கட்டி கொண்டு. தேவி உட்கார்ந்திருக்கும் எதிர்புரத்தில் தான் அந்த 4 பெண்கள் பேசி சிரித்து கொண்டிருந்தனர். தாங்கள் பேசும் சுவாரஸ்சியத்தில், அதில் இருந்த ஒரு பெண் தன் துண்டு அவிழ்ந்துவிடும் நிலையில் இருப்பதைகூட கவனிக்கவில்லை. துண்டின் நிலையை கண்ட தேவி அந்த பெண்ணிடம் சொல்வதற்காக அவளை நோக்கி ஓடினாள்.

தேவி அந்த துண்டை பிடித்தாள்; அவிழ்ந்துவிட்டது!

தேவி தான் வேண்டும் என்றே துண்டை அவிழ்த்துவிட்டாள் என்று ஒருத்தி கத்தினாள். அனைவருக்கும் அதிர்ச்சி! அந்த பெண் தேவியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். பெற்ற பெண்கள் தேவியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். வலி, வேதனை, அவமானம்!
பள்ளி நிறுவனத்திற்கு செய்தி தெரிந்துவிட்டது. தேவி ஒரு பெண்ணாக இல்லாமல் வேறு ஒருவிதமாக நடந்துகொள்வதை குற்றம் என்றனர்.தேவியின் இந்த சிந்தனை தான் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள அவளை தூண்டியது என்றனர்.

உண்மை எனவென்று தெரியாமல் பேசுகிறார்களே என்று தேவி வடித்த கண்ணீர் துளிகள் எல்லை இல்லை. தேவியை பள்ளியில் இருந்து நீக்கினார்கள். பள்ளியில் பிரச்சனை எல்லாம் முடிந்து வீட்டிற்கு போகும்போது மணி 11. கயிறா? தலைவலி மாத்திரையா? கீழே விழுவதா? என்று பல யோசனைகள். மரண வலியை விலை கொடுத்து வாங்கினாள்.
"சார், மூன்னு பாக்கெட் தலவலி மாத்திர கொடுங்க...." பணத்தை நீட்டினாள் கடைக்காரரிடம்.

(தொடரும்)

பகுதி 4

பகுதி 5

11 comments:

VISA said...

jet vegam

G3 said...

Default comment for this thodar ;-)

//Eppadinga konjamum viruviruppu koraiyaama continue pandreenga !!! paaratukkal :)))

Defaulta indha qn.um koodave varudhu :)) adutha part eppo release? ;)//

Ella episodekkum idhae comment repeat loopla podanum pola ;)))

Karthik said...

hey superb part ya...

waiting for the next part... soon plzzz...

sri said...

adhutha paartu seekram podunga :) sema tight narration

gils said...

!!! sounds like real life story!! semma original narration

Sundari said...

sekaramae thodarum pota madhiri irukuu..Sekaram next part potunga..

ivingobi said...

adhu eppadi correct a oru Thrill point la Thodarum poadaringa.... ? adhigam serials parppingalo.... any how oru thriller film parkkurathu poala irukku..... very good Gaayu keep it up....
apppuram intha Question kaetkaama irukka mudiyala....
adutha part eppo.... ?

Prabhu said...

ம்ஹூம்.... இது ஆவுறதுக்கு இல்ல. தொடருக்கு ஒருக்கா எல்லாம் நல்லாருக்கு சொன்னா கமெண்டுக்கு மரியாத கிடையாது. மொத்தமா முடிஞ்சதும் வச்சுக்கலாம்/

FunScribbler said...

@அனைவருக்கும்

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்ல! :) உண்மையாகவே இந்த பகுதி இன்னும் நல்லா எழுதியிருக்கலாமேன்னு தோணிச்சு. விறுவிறுப்பு இல்லையேன்னு தான் கருத்து சொல்வாங்கன்னு நினைச்சேன். ஆனா, இவ்வளவு பெரிய ஆதரவு வரும்னு கொஞ்சம்கூட நினைக்கல்ல! நன்றி நன்றி:)

FunScribbler said...

@விசா, நன்றி
@ஜி3, உங்க default comment நான் save பண்ணி வச்சு இருக்கேன். மத்தவங்க கதைய படிச்சுட்டு இதே போட்டு விடலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க? ஹிஹி...

FunScribbler said...

@karthik, sri, gils,sundari, gopi anna,pappu thambi,

thanks alot for your encouragement. am really really fortunate to have such a support! thanks a million!