Aug 10, 2009

எனக்கே என்னை தெரியாமல்-1

தேவி தன் வேலையை முடித்துவிட்டு 'அக்னி' மன்றத்திற்கு சென்றாள். வேலை இடத்திலிருந்து 20 நிமிடங்கள் தூரம் தான். பைக் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். முடி கலைந்திருந்தது. சீப்பை எடுத்து சரியாய் சீவி கொண்டாள். பைக்கை ஸ்டார்ட் செய்து 80km/hr வேகத்தில் ஓட்டினாள். மன்றத்தை அடைந்ததும் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அலுவலக ஃபோன் மணி ஒலித்தது. தேவி எடுத்தாள்.

"ஹேலோ இது அக்குனியா??....." மறுமுனையில் இருந்தவன் பீர் அடித்துவிட்டு உளறுகிறான் என்பதை அறிந்து கொண்டாள் தேவி.

பொறுமையாக தேவி, "ஆமா...சொல்லுங்க"

"நாங்க இங்க 10 பசங்க இருக்குறோம்.... ஜாலியா இருக்க பொண்ணுங்க வேணும்... அனுப்ப முடியுமா? என்ன ரேட்டு?" என்று உளறிகொண்டே சிரிக்க, அவன் பின்னாடி இருந்தவர்களும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்டது தேவிக்கு. உடனே ஃபோனை வைத்தாள். மறுபடியும் ஃபோன் ஒலித்தது.

"hey you f***ing bitc***..... என்னடி உனக்கு இவ்வளவு கொழுப்பு....வா டி பேசாம?" என்றான் அதே குடிக்காரன்.

பொறுமையை இழந்த நேரத்தில் தேவி ஃபோனில் கத்தலாம் என்று வாயை திறக்கும்போது அங்கு வந்தாள் விம்ஸ். புருவங்கள் சுருங்கி, கோபத்தில் கன்னம் சிவக்க, காட்சியளித்த தேவியிடம் விம்ஸ், "என்ன ஆச்சு?"

ஃபோன் ரிசீவரை கையில் பொத்தியபடி நடந்தவற்றை விம்ஸிடம் கூறினாள். விம்ஸ் உடனே ஃபோனை வாங்கி கொண்டாள், போதையில் உளறியவனின் அட்ரஸை வாங்கிகொண்டாள் நாசுக்காய். அடுத்த நொடி காவலர்களுக்கு ஃபோன் செய்து புகார் செய்தாள்.

"இந்த பொறுக்கி பசங்கள இப்படி தான் டீல் பண்ணனும் தேவி! take it easy man! cool..." என்று தேவியின் தோளில் தட்டினாள்.

"do you want coffee?" காபி dispenser பக்கத்தில் சென்ற விம்ஸ். வேண்டாம் என்பதுபோல் தலை அசைத்தாள் தேவி. சிறிது நேரத்தில் மன்றத்திற்கு 10 பேருக்கு மேல் வந்தனர். அலுவலக conference அறையில் மீட்டிங் ஆரம்பித்தது 645 மணி அளவில். மன்ற தலைவர் ஒரு கோப்பை மேசையில் வைத்தார்.

கோப்பில் அச்சடிக்கப்பட்ட வார்த்தைகள்- Agni Welfare Organisation for Lesbians. அங்கு அறையில் இருந்த அனைவரும் லெஸ்பியன்கள் தேவி உட்பட.

"அக்னி" பாதிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட லெஸ்பியனுகளுக்காக உருவாக்கப்பட்ட மன்றம். இதில் பல உறுப்பினர்கள் உள்ளனர். இன்று வந்திருந்த 10 பேர் மன்றத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். பல கஷ்டங்களுக்கு நடவே சிரமப்பட்ட இந்த மன்றத்தை நடத்தி வருகிறார்கள். முழு நேரமாக வேறு வேலைகள் செய்தாலும் பகுதி நேரமாக மன்றத்திற்காக வேலை செய்கிறார்கள்.

மீட்டிங்கில் பலவற்றை பேசி ஆராய்ந்தனர். இந்த மாதம் மன்றத்திற்கு உதவி கேட்டு வந்தவர்களின் எண்ணிக்கை, மன்றத்தை பற்றி எவ்வாறு பொது மக்களிடம் தெரிவிக்கலாம் ஆகியவற்றை பற்றி பேச்சு நடக்கையில் விமஸ் அந்த குடிக்காரன் பிரச்சனையை சொன்னாள். மன்றத்தலைவர்,

"நம்ம ஒரு நல்லது பண்றதுக்காக, ரயில்வேஸ், பஸ், சூப்பர்மார்க்கேட்ல brochures வைக்குறோம்...ஆனா இந்த மாதிரி ஆளுங்க அதுல இருக்குற நம்பர பாத்து...ச்சே..." தலையில் கைவைத்தார்.

“இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியாதா?” என்றார் ஒருவர்.

“இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்குற வரை அது கஷ்டம்.” புன்னகையித்தார் இன்னொருவர்.

கையில் இருந்த மாத ரீப்போர்ட்டை படித்தார் தலைவர், “இந்த மாதம் உதவிக்கு வந்தவங்க 87 பேர். இவங்கள 42 உறுப்பினரா சேந்துட்டாங்க. இவங்கள 37% வேலை பாக்குறாங்க. 41% படிச்சுகிட்டு இருக்காங்க. 22% பேர் 55 வயதை தாண்டியவங்க."

மீட்டிங் தொடர்ந்தது. மணி 8. விடைபெற்று கொண்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

போகும் வழியில் விம்ஸ், "தேவி, நாங்கலாம் டினர் சாப்பிட போறோம். join us man!"

தேவி, "இல்ல..... ரினிஷா எனக்காக வேட் பண்ணிக்கிட்டு இருப்பா...i got to go." புன்னகையித்தாள்.

விமஸ், "no problem then. you take care dude. see you soon!"



தனது பைக்கை ஸ்ட்டார்ட் பண்ண போகும்போது ரினிஷாவிடமிருந்து ஒரு ஸ் எம் ஸ், 'dear, get some cheese and a loaf of bread.' குறுந்தகவலை படித்துமுடித்த தேவி தனது பையில் கைபேசியை போட்டாள். சூப்பர்மார்க்கெட்டுக்கு நடையை கட்டினாள். பொருட்களுக்கு காசு கட்டுவதற்காக கியூவில் நின்றபோது ஒன்றை கவனித்தாள் தேவி-'அக்னி' மன்ற தகவல்களை கொண்ட information paperகள் கை துடைக்கவும் பொட்டலம் மடிக்கவும் பயன்படுத்தப்படுவதை. அவளுக்கு கோபம் வந்தது. இருந்தாலும், ஒன்றும் சொல்லவும் முடியவில்லை, ஏதேனும் செய்யவும் முடியவில்லை.



கொஞ்ச நேரம் அதையே கவனித்து கொண்டிருந்தாள். சிறு பிள்ளைகள் அந்த தாட்களை எடுத்து பேப்பர் விமானம் செய்வதை பார்த்தாள். அச்சமயம் ஒரு பெண்மணி, சுமார் 20 வயது இருக்கும் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து ஒரு பேப்பரை தன் பையில் திணித்தாள். அந்த பெண்மணியின் கண்கள் திருதிருவென்று முழித்தன. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்ய சுற்றும்முற்றும் பார்த்தாள்.

அந்த பெண்மணி ஒரு மூலைக்கு சென்று தகவல் பேப்பரிலிருந்த ஃபோன் நம்பரை தனது கைபேசியில் குறித்துகொண்டாள். தேவி அந்த பெண்மணியின் கண்களை பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்தன. தேவி அவளை நோக்கி நடந்தாள். திரும்பி நின்றுகொண்டிருந்தவளின் தோளில் கைவைத்தாள் தேவி.....

(பகுதி 2)

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

24 comments:

G3 said...

me the firstae :)))))

gils said...

whoa!!! enna oru plot..eagerly looking for next part

gils said...

avvvvvvvv..alugini alugini...g3 down down

Cable சங்கர் said...

என்னவோ சொல்ல வர்றீங்க..

G3 said...

Wow.. adutha thodara.. supera start aagi aagi irukku.. kalakkareenga :)))

adutha part eppo poduveenga?

Sundari said...

Wow..

Gr8 start....waiting for next part...

Karthik said...

ஆரம்பிச்சாச்சா? கலக்குங்க. :))

23-C said...

superabu!

next part seekram podunga

சப்ராஸ் அபூ பக்கர் said...

கை வைத்ததோட கட் பண்ணிட்டீங்களே மாஸ்டர்.....

அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....

ivingobi said...

ippo thaana start paninnga athukkulla Jet vaegam..... when is next part.... am waiting pa....

FunScribbler said...

@ஜி3, நன்றி யக்கோவ்.

@gils, கொஞ்சம் ஒரு sensitive-issue related plot தான், இருந்தாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா எழுத பாக்குறேன்.

@cable sankar, ஆமாங்க, இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வறேன். அட போங்க சார், நான் என்ன அந்நியனா?

FunScribbler said...

@சுந்தரி, கார்த்திக், 23-C, அபூ பக்கர்,கோபி அண்ணா

அனைவருக்கும் என் நன்றிகள். உங்களது ஆதரவு என் உற்சாகத்திற்கு தீனி! :)

VISA said...

செம ஸ்பீடு கதை. விறுவிறுப்பா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள். அப்புறம் லெஸ்பியன் உறவு பற்றி ஏதாவது ஸ்வாரஸியமாக ஆழமாக சொல்ல போகிறீர்களா இல்லை அதிரடியான ஒரு கதை சொல்ல போகிறீர்களா? எதுவாக இருந்தாலும் படிக்க ஆவலோடு

விசா

ivingobi said...

Thamizhmaangani said...
உங்களது ஆதரவு என் உற்சாகத்திற்கு தீனி!
aaamaaaaa aaaamaaaaaa.......
{ intha ponnu en name a yumsaerthuduche... enga yaar kitta ellam adi vaangi vaikka pogutho.... kaappaathu please.... kaappathitta na intha GAAYU thalaila 100 Coconut udaichu abisheam pannuren.... just for LOL yaa }

FunScribbler said...

@VISA

//லெஸ்பியன் உறவு பற்றி ஏதாவது ஸ்வாரஸியமாக ஆழமாக சொல்ல போகிறீர்களா இல்லை அதிரடியான ஒரு கதை சொல்ல போகிறீர்களா//

seriously i have no idea of how the story should progress. still thinking of how to move on to the next part. thanks alot for your words and encouragement.

sri said...

ahaa konjam asandhu erundha neram pathu epdi oru kadhai pottu kalakareengaley.. hmm ennama plot pogudhu.. sari adutha part podunga apparam commentikaren :)

sri said...

Anniyan remo maari edhavadhu website devi open panna poraangala ?

FunScribbler said...

@sri

//Anniyan remo maari edhavadhu website devi open panna poraangala ?//

அட நீங்க வேற.. ஒரு ப்ளாக் வச்சு சமாளிக்கவே பெரும்பாடா இருக்கு. இதுல website வேறய்யா...முடியாதுப்பா சாமி!

துபாய் ராஜா said...

வித்தியாசமான களம்.விறுவிறுப்பான எழுத்துநடை.வாழ்த்துக்கள்.

Prabhu said...

ஹேய், ப்ரவயில்லயே, என்னவோ வித்தியாசமா எழுதப் போற மாதிரி இருக்கு! 377 செக்சன் ரிமூவல் பத்தியும் சேத்து எழுதுங்க!

அப்புறம் இன்னும் மேட்டரே ஆரம்பிக்கல. கதைக்குள்ள வந்ததும் கதைய பத்தி சொல்றேன்.

Unknown said...

Very Good Start.....waiting for next part....Keep Rocking...

இராயர் said...

hello
gents pathi kevalama sollathinga
why u r mentioned fucking and sucking??

antha varthai yellam thevaiya?

yellam hollywood padam panra vela?

kova padathinga

FunScribbler said...

@துபாய் ராஜா, பாப்பு,விஜயராஜ்,

நன்றிகள் பல! :)

FunScribbler said...
This comment has been removed by the author.