Dec 11, 2009
நான் சமைச்சா தாங்கமாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே!
உலக வரலாற்றில் முதன் முறையாக சமையல் அறை என் வீட்டில் எங்கே இருப்பது என்பதை கண்டுபிடித்துவிட்டேன். அங்கு சென்று நான் என் முதல் சாதனையை செய்துவிட்டேன். தோசை செய்தேன். (ஓய்...யாருப்பா அங்க சிரிக்குறது... இவ்வளவு ஈசியான சமையல்..இதுக்கா இந்த பில்டப்புன்னு நீங்க நினைக்கலாம். பெரியவங்க சீக்கிரம் நடப்பது சகஜமான ஒன்னு, ஆனா அதுவே ஒரு குழந்தை முதல் அடியை எடுத்து வைத்து நடக்கும்போது அது அதற்கு சாதனையாக தோன்றும். நான் குழந்தைப்பா!)
தோசை மாவு இருக்கு. சாதாரண தோசைய செஞ்சு சாப்பிட்டால், அது எப்படி முடியும்??...நம்ம எவ்வளவு பெரிய ஆளு! அதிரடியா செஞ்சு சாப்பிடனும்னு நினைச்சு சமையல் புத்தகத்தை எடுத்தேன். அதில் ' chilli mushroom thosai' செய்முறையை பார்த்தேன். ஆனா அதை செய்யவில்லை. அதை சற்று மாற்றி என் ஸ்டைலில் செய்தேன். (நாளைக்கு இந்த உலகம் என்னைய பாத்து ஈயடிச்சான் காபின்னு சொல்லிடகூடாது பாருங்க அதுக்கு தான்...)
என் தோசைக்கு நான் வைச்ச பெயர் 'chilli potatoe thosai'. (ஆமா பெரிய மாற்றம் அப்படின்னு உங்க mindvoice பேசுறது எனக்கு கேக்குது) இருந்தாலும் எதுக்கும் அசரமாட்டாள் இந்த அசுர சூறாவளி! சொந்தமா யோசிச்சு, கையில் கிடைத்த காய்கறிகளை போட்டு ஒரு கலவையா தோசையை செய்து முடித்தேன். முதல் ரெண்டு தடவை தோசை, தோசை மாதிரி வரவில்லை.
எனக்கு ஆண்டவன் கொடுத்த கிட்னியையும் சேர்த்து யோசிச்சேன். ஏன் தோசை இப்படி போகுதுன்னு. வேற தோசை கல்லை எடுத்தேன், எண்ணையை கொஞ்சமாக ஊற்றினேன், சரியா வந்துடுச்சு!
ஆப்ரேஷன் 'தோசை' வெற்றிகரமாக முடிந்ததால் மறுநாள் மதிய சாப்பாட்டையே தயாரிக்க முற்பட்டாள் இந்த சூறாவளி. 'sambal chicken sanjay', 'keerai kanchana' and 'fish cutlet gupta'. சிவப்பு மிளகாயை போட்டு செய்த கோழி, கீரை மற்றும் மீன் கட்லெட். சாதாரண உணவு தான்...இருந்தாலும் நம்ம என்ன செஞ்சாலும் அதில் ஒரு வித்தியாசம் வேண்டும், ஒரு பில்டப் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆக தான் ஒவ்வொரு பெயருக்கு பின்னால் ஒரு நார்த் இந்தியன் பெயர். கேட்டா, நான் செஞ்சது வட இந்திய சமையல்ன்னு சொல்லி பீலா விடதான்.
ரெண்டு நண்பர்களை சாப்பிட கூப்பிட்டேன். அவர்கள் தங்களது குலதெய்வங்களை நன்கு வேண்டிகொண்டு தான் வீட்டிற்கு வந்தார்கள். சாப்பிட்டார்கள். நல்லா இருக்குன்னு சொன்னாங்க! (அப்படி தான் சொல்லியாகனும் பாருங்க) நானும் சாப்பிட்டு பார்த்தேன். 'இப்படி ஒரு சூப்பரான சமையலை சாப்பிட்டதே இல்லை' என்று மனதார என்னையே நான் பாராட்டி கொண்டேன். காக்கையும் தன் குஞ்சும் பொன் குஞ்சும். எனக்கும் என் சமையல் சூப்பர் சமையலே!!
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
ஆனா அதுவே ஒரு குழந்தை முதல் அடியை எடுத்து வைத்து நடக்கும்போது அது அதற்கு சாதனையாக தோன்றும். ////
யப்பா, குழந்தயாம்பா! எ.கொ.ச.இ?
(நாளைக்கு இந்த உலகம் என்னைய பாத்து ஈயடிச்சான் காபின்னு சொல்லிடகூடாது பாருங்க அதுக்கு தான்...)///
ஈயடிச்சான் தோசைனு இல்ல சொல்லும்?
:))
//நல்லா இருக்குன்னு சொன்னாங்க!//-பொய்..பொய் :)
//எனக்கும் என் சமையல் சூப்பர் சமையலே!!//
சரி..சரி..நம்பிட்டோம்!!!
ungalukku comedy panrathe polappa pochi
hahaha
!!kitchen kanchana revolver reeta!!! titleaam balama irukay!! saapta jevangala enga adakkam panirukaanga??
//'chilli potatoe thosai'//
ithukku peru "masala dosai" :P
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.. (போட்டோவெல்லாம் எந்த ஓட்டல்ல எடுத்ததுன்னு ரகசியமா சொல்லுங்க)
பதிவோட டைட்டில்ல தெரியற நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :))
//pappu said...
ஈயடிச்சான் தோசைனு இல்ல சொல்லும்?
LOL...:)))
nice title....dosai nice ah sapitathan solla mudiyum
எங்க பேச்சுலர் சமையல்ல எனக்கு இன்னைக்கும் வராத ஒரு விசயம் தோசைதாங்க.
சுடு தண்ணீர் போட்ட அலப்பரை எப்ப பதிவா வரும்?
@பப்பு, நம்ம எல்லாருமே குழந்தை தான்!(சரி..ஓகேயா?)
@ பூங்குன்றன், நம்பி தான் ஆகவேண்டும்!:)
@லிங்கம், ஏன் சொல்ல மாட்டீங்க!
@கில்ஸ், எல்லாரின் உயிருக்கு எந்தவித சேதமும் இல்லை!
@நாதஸ், அட நம்ம கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு சொல்லிடகூடாதே!!
@asfer, நன்றிங்க!
@கேபிள் சங்கர், என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, இந்த பச்சை புள்ள மனசு வலிக்குது (நான் தான் அந்த பச்ச புள்ள)
@கார்த்திக், ஓவர் குசும்பு உடம்புக்கு ஆகாதுய்யா!
@அண்ணாமலையான், சுடு தண்ணி போடுவது என்று நான் வெளியிட்ட புத்தகத்தை வாங்கி படியுங்கள்!
//ரெண்டு நண்பர்களை சாப்பிட கூப்பிட்டேன். அவர்கள் தங்களது குலதெய்வங்களை நன்கு வேண்டிகொண்டு தான் வீட்டிற்கு வந்தார்கள்//
என்ன ஒரு தைரியம் உங்கள் நண்பர்களுக்கு. சிங்கப்பூரில் உடனே போலீஸ் வந்துடுமாமே.
கோழியின் வண்ணமே கண்ணைக்கட்டுதே..... கேஎப்சி மாதிரியில் முயற்சி செய்தீங்களோ..
கொஞ்சம் எங்களுக்கும் தந்துட்டு சாப்பிட்டிருக்கலாம் ...........................
great attempt....
நல்லவேளை சென்னைக்கு வந்த வாட் புயல் உங்க சமையலைப் பார்த்து பயந்து போய்டுச்சு. ஆனா தோசை பார்க்க நல்லா இருக்கு. சுவையாகவும் இருக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி.
நீங்களும் சிங்கையா, பதிவர் கூட்டம் எல்லாம் வருவது இல்லையா?. நன்றி.
யாரும்மா அது? ரெண்டு தோசை பார்சல் பிளிஸ்.
பதிவோட டைட்டில் சூப்பர்... படங்கள் அழகா இருக்கு ... ஒரு வரி சேர்த்து எழுதிருக்கலாம் ... அழகை பார்த்து மட்டும் ரசி,
அப்படியே உள்ள (வயதுக்குள்ள தாங்க) தள்ள நினச்சா அம்பேல்.. என்று போட்டிருகாலம்.
சரி நார்த்துக்கு போறதாத்தான் முடிவு பண்ணிடீங்க.. அப்போ பார்டர் கிராஸ் செஞ்சு இன்னும் வரைட்டியா பேரு வச்சிருக்கலாமே..
எனி ஹொவ் பதிவு நல்லா இருக்கு ..
//நான் சமைச்சா தாங்கமாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே! //
சாப்பிட்டாலா????? இல்ல படத்துல பார்த்தாலவே??????????
அய்யோ ஓட்டு போட மிரட்டாலா?
நான் போட்டு ட்டேன் ,,,,, அவ்வ்வ்வ்வ்வ்வ்
எல்லா சமையல் படங்களும் ரொம்ப அருமை
இப்பதான் தோசை மொருகலா வர என்ன செய்யலானு சொல்லிட்டு வந்தேன், என் பக்கமும் வந்து பாருங்கள்.
நம்ம ப்ளாக்க எட்டிப்பாக்கறது?
தலைப்பையும் கட்டுரையும் பார்த்து ஒரு நிமிடம் உங்கள் வருங்கால கனவருக்காக அனுதாப பட்டேன். ஒரு நாள் சாப்பிட்டா நாலு மாசம் தூங்க முடியாதுன்னா,,,, அவரு தினம் சாப்பிட்டா என்ன ஆவது? அய்யே பாவம்.
எதுக்கும் சமைக்கத் தெரிந்த மாப்பிள்ளையாக இருந்தால் பரவாயில்லை. நன்றி.
epdiyo antha rendupaerayum olichukattitinga... annikku sonna maathiriyae.... adutha target yaaru..... ?
yenga poitinga
hotel yethavathu start pannitingala singapore la??
இப்போ நல்லா நிபுணத்துவம் ஆகி இருப்பிங்க இல்ல.
by
mcxmeega
Post a Comment